Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

மொபைலுக்கான Prime Video (PVME) அல்லது Prime Lite சந்தா வழியாக உள்ளடக்கத்தை இந்தியாவில் இயக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்

Prime Video-இல் "உங்கள் தற்போதைய சந்தா அதிகமான சாதனங்களில் பார்ப்பதை ஆதரிக்கவில்லை" அல்லது “சாதனங்களின் வரம்பை எட்டிவிட்டது” என்ற செய்தியைப் பார்த்தால் என்ன செய்வது?

இந்தியாவில் உள்ள மொபைலுக்கான Prime Video உறுப்பினர்கள் ஒரே ஒரு மொபைல் சாதனத்தில் மட்டுமே Prime Video உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். பதிவுசெய்த பிறகு, எந்த மொபைல் சாதனத்தில் நீங்கள் Prime Video உள்ளடக்கத்தை முதலில் பார்க்கிறீர்களோ, அதுவே உள்ளடக்கத்தை அணுகக்கூடிய ஒரே சாதனமாக மாறிவிடும்.

இந்தியாவில் இருக்கும் Prime Lite உறுப்பினர்கள், Prime Video உள்ளடக்கத்தை ஒரே ஒரு சாதனத்தில் மட்டுமே பார்க்க முடியும் (மொபைல் அல்லது டிவி). பதிவுசெய்த பிறகு, எந்தச் சாதனத்தில் நீங்கள் Prime Video உள்ளடக்கத்தை முதலில் பார்க்கிறீர்களோ, அதுவே உள்ளடக்கத்தை அணுகக்கூடிய ஒரே சாதனமாக மாறிவிடும்.

இந்தியாவில் இருக்கும் Prime Lite கொண்ட Jio உறுப்பினர்கள், Prime Video உள்ளடக்கத்தை இரண்டு சாதனங்களில் மட்டுமே பார்க்க முடியும் (மொபைல் அல்லது டிவி). பதிவுசெய்த பிறகு, எந்த இரண்டு சாதனத்தில் நீங்கள் Prime Video உள்ளடக்கத்தை முதலில் பார்க்கிறீர்களோ, அவையே உள்ளடக்கத்தை அணுகக்கூடிய சாதனங்களாக மாறிவிடும்.

கூடுதல் சாதனம்/சாதனங்களில் Prime Video உள்ளடக்கத்தைப் பார்க்க, primevideo.com/upgrade பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் மெம்பர்ஷிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் தற்போதைய சாதனத்தை/சாதனங்களை அகற்றிவிட்டு, புதிய சாதனத்தில் உள்ளடக்கத்தைப் பார்க்க, Prime Video கணக்கு மற்றும் அமைப்புகள் பக்கத்தின் சாதனங்கள் பிரிவைப் பார்வையிடவும்.