இந்தியாவில் உள்ளடக்கம் பற்றிய குறைகளைப் புகாரளித்தல்
Prime Video, MGM+, Prime Video ஆட்-ஆன் சந்தா, Amazon MX பிளேயர் மற்றும் Amazon MX Hub ஆகியவற்றின் இந்தியப் பயனர்கள் உள்ளடக்கம் தொடர்பான புகாரைத் தாக்கல்/பதிவு செய்யலாம்.
Prime Video, MGM+, Prime Video Add-on சந்தா, Amazon MX பிளேயர் மற்றும் Amazon MX Hub வாடிக்கையாளர்கள் வயது மதிப்பீடுகள், உள்ளடக்க விளக்கங்கள், தலைப்புச் சுருக்கம், அணுகல் கட்டுப்பாடுகள், மனதைப் புண்படுத்தும் உள்ளடக்கம் அல்லது பிற உள்ளடக்கம் தொடர்பான புகார்கள் தொடர்பாக உள்ளடக்கப் புகாரை (ஏதேனும் இருந்தால்) தாக்கல்/பதிவு செய்யலாம்.
- நீங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் Prime Video, MGM+ ஆகியவற்றை அணுகினால், உங்கள் புகாரைச் சமர்ப்பிக்க, இங்கே கிளிக் செய்யவும். நீங்கள் ஏற்கனவே செய்திருக்காவிட்டால், உங்கள் Prime Video கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
- மொபைல் சாதனத்தில் Prime Video, MGM+ ஆகியவற்றை அணுகுகிறீர்கள் என்றால், உங்கள் புகார் தொடர்பான குறை தீர்க்கும் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ (விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன) அல்லது அதற்கு மாற்றாக, உங்கள் மொபைல் உலாவியில் பின்வரும் இணைப்பிற்குச் சென்றோ உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கலாம்: https://www.primevideo.com/contact-us.
- Prime Video ஆட்-ஆன் சந்தா உள்ளடக்கத்தைப் பற்றி நீங்கள் புகாரளிக்க விரும்பினால், குறை தீர்க்கும் அதிகாரியின் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு (விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன) உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும்.
உள்ளடக்கம் பற்றிய குறைகளைப் புகாரளித்தல் ஆதரவானது தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கிறது. உங்கள் குறை பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கவும்.
குறை தீர்க்கும் அதிகாரி குறித்த விவரங்கள்
பெயர்: திரு. அன்ஷுமான் மயின்கார் (Mr. Anshuman Mainkar)
மின்னஞ்சல் (Prime Video, MGM+): grievanceofficer-primevideo@amazon.com
மின்னஞ்சல் (Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள்): grievance-primevideoaddonsubscriptions@amazon.com
மின்னஞ்சல் (Amazon MX பிளேயர்): grievanceofficer-amazon-MX-Player@amazon.com
மின்னஞ்சல் (Amazon MX Hub): grievanceofficer-MX-Hub@amazon.com
உங்கள் புகாரில் இருக்க வேண்டியவை:
- உங்கள் பெயர்
- உங்கள் Amazon கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரி
- திரைப்படம் அல்லது டிவி தொடர்களின் பெயர் (சீசன் & எப்பிசோடு எண் உட்பட)
- சேவையின் பெயர் (புகார் பPrime Video, MGM+ அல்லது Amazon MX பிளேயருடன் தொடர்புடையதாக இருந்தால்)
- Prime Video ஆட்-ஆன் சந்தாவின் பெயர் (புகாரானது, Prime Video ஆட்-ஆன் சந்தாக்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே) அல்லது Amazon MX Hub வெளியீட்டாளரின் பெயர் (புகாரானது, Amazon MX Hub உடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே)
- பார்க்கும் நாடு:
- பார்க்கும் தேதி:
- குறையின் வகைப்பிரிவு (வயது தரநிலைகள், உள்ளடக்க விளக்கங்கள், தலைப்புக் கதைச்சுருக்கம், அணுகல் கட்டுப்பாடுகள், பிற மனதைப் புண்படுத்தும் உள்ளடக்கம்)
- குறை பற்றிய விவரங்கள் (நேர முத்திரை உட்பட, பொருந்தினால்)
ஒப்புதல்: 24 மணி நேரத்திற்குள் உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி, புகாரை டிராக் செய்வதற்கான குறிப்பு எண்ணை உங்களுக்கு வழங்குவோம்.
பதில்: உங்கள் புகாரைச் செயல்படுத்தி, பொருத்தமான சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் தகுந்த பதிலளிப்போம்.
- மேலே உள்ள குறைதீர்க்கும் செயல்முறையானது, இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்கம்படியும், மேம்படுத்தக்கூடிய வகையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
- Prime Video ஆட்-ஆன் சந்தா: Prime Video எந்த உள்ளடக்கத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை அல்லது Prime Video ஆட்-ஆன் சந்தாக்களில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் மீது எந்தப் படைப்பு அல்லது தலையங்கக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.. ஒரு சேவை வழங்குநர்/இடைத்தரகராக, இந்த உள்ளடக்கத்தை அணுகக்கூடிய சேவையை வழங்குவதில் Prime Video-இன் பங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Prime Video ஆட்-ஆன் சந்தாக்களில் கிடைக்கும் உள்ளடக்கமானது, அந்தந்த வெளியீட்டாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டவை, டெவலப் செய்யப்பட்டவை, தயாரிக்கப்பட்டவை, சொந்தமாக்கப்பட்டவை மற்றும்/அல்லது கிடைக்குமாறு செய்யப்பட்டவை. Prime Video ஆட்-ஆன் சந்தாக்களில் கிடைக்கும் உள்ளடக்கம் குறித்து சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரை நீங்கள் நேரடியாக அணுகலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம்.
- Amazon MX Hub : Amazon MX பிளேயர் எந்த உள்ளடக்கத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை அல்லது Amazon MX Hub-இல் கிடைக்கும் உள்ளடக்கத்தின் மீது எந்தப் படைப்பு அல்லது தலையங்கக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சேவை வழங்குநர்/இடைத்தரகராக, இந்த உள்ளடக்கத்தை அணுகக்கூடிய சேவையை வழங்குவதில் Amazon MX பிளேயரின் பங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. MX Hub-இல் கிடைக்கும் உள்ளடக்கமானது, அந்தந்த வெளியீட்டாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டவை, டெவலப் செய்யப்பட்டவை, தயாரிக்கப்பட்டவை, சொந்தமாக்கப்பட்டவை மற்றும்/அல்லது கிடைக்குமாறு செய்யப்பட்டவை. Amazon MX Hub-இல் கிடைக்கும் உள்ளடக்கம் குறித்து சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரை நீங்கள் நேரடியாக அணுகலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ட்ரீமிங்/செயலிச் சிக்கல்கள், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்தல், தலைப்பு இல்லாதிருத்தல், அம்சம் தொடர்பான கோரிக்கைகள், ரீஃபண்டு, பில்லிங்/சந்தாச் சிக்கல்கள் போன்ற உள்ளடக்கம் பற்றிய குறைகளைத் தவிர்த்து உங்கள் Prime Video அனுபவம் தொடர்பாக வேறு ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க, Prime Video உதவிப் பக்கத்தின் மூலமாக நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்: www.primevideo.com/help.
ஸ்ட்ரீமிங்/செயலிச் சிக்கல்கள், தொழில்நுட்பச் சிக்கலைத் தீர்த்தல், தலைப்பு இல்லாதிருத்தல், அம்சம் தொடர்பான கோரிக்கைகள், பில்லிங் சிக்கல்கள் போன்ற உங்கள் Amazon MX Player அனுபவம் தொடர்பாக வேறு ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க, நீங்கள் https://amazon.in/contact-us மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.