உங்கள் Prime Video சுயவிவரம் அல்லது கணக்கின் PIN-ஐ மீட்டமைத்தல்
உங்கள் சுயவிவர / கணக்கின் PIN-ஐ மாற்றவோ மீட்டமைக்கவோ, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
உங்கள் Prime Video PIN-ஐ நிர்வகிக்க, 'உங்கள் சுயவிவரங்கள்' என்பதற்குச் சென்று, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
உங்கள் PIN-ஐ மாற்ற:
- ‘சுயவிவரத்தைத் திருத்து’ என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் புதுப்பிக்கும் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
- கேட்கப்பட்டால், உங்கள் Amazon கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- சுயவிவரத்தைத் திருத்தும் பக்கத்தில், சுயவிவர / கணக்கின் PIN மற்றும் பூட்டுகள் என்பதற்கு அடுத்துள்ள நிர்வகி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- ‘கணக்கு / சுயவிவர PIN மற்றும் பூட்டுகள்' பக்கத்தில், Prime Video கணக்கு / சுயவிவர PIN என்பதற்கு அடுத்துள்ள நிர்வகி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- புதிய PIN-ஐ உள்ளிட்டு, அதை உறுதிப்படுத்த, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
மறந்துபோன PIN-ஐ மீட்டமைக்க:
‘சுயவிவரத்தைத் திருத்து’ என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் PIN-ஐ மீட்டமைக்க விரும்பும் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
'சுயவிவர PIN-ஐ உள்ளிடுக' எனும் திரையில், ‘PIN மறந்ததா?' என்பதைக் கிளிக் செய்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
கேட்கப்பட்டால், உங்கள் Amazon கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
'சுயவிவர PIN-ஐ உருவாக்குக' எனும் திரையில், புதிய PIN-ஐ உள்ளிட்டு, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.