சில Prime Video தலைப்புகளுக்கு நான் ஏன் பணம் செலுத்த வேண்டும்?
'Prime உடன் கிடைக்கிறது' பிரிவில் உள்ள தலைப்புகளுடன் சேர்த்து, நீங்கள் எண்ணிலடங்கா டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலிருந்து தலைப்புகளை வாடகைக்குப் பெறலாம் அல்லது வாங்கலாம்.
திரையரங்கில் வெளியிட்ட பிறகான புதிய திரைப்பட வெளியீடுகள் உட்பட, உங்கள் சந்தாவின் ஒரு பகுதியாகக் கிடைக்காத தலைப்புகளின் பெரிய கேட்டலாகில் இருந்து டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வாடகைக்குப் பெறவும், வாங்கவும் Prime Video ஸ்டோர் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு தலைப்பை வாங்கியதும், 'என்னுடையவை' பிரிவில் அதற்கான உடனடி அணுகலைப் பெறுவீர்கள். மேலும் அறிய, Prime Video தலைப்புகளை வாடகைக்குப் பெறுதல் மற்றும் வாங்குதல் பிரிவைப் பார்க்கவும்.
சில நேரங்களில், உள்ளடக்கத்தின் உரிமையாளர்களால் செய்யப்பட்ட மாற்றங்களால், 'Prime உடன் கிடைக்கிறது' பிரிவில் உள்ள டிவி தொடர்கள் அல்லது திரைப்படங்களை வாங்கும் தேவை ஏற்படலாம். உள்ளடக்கத்திற்கான உரிமைகள் எங்களிடம் இல்லாத வரையில், ஒரு டிவி தொடர் அல்லது திரைப்படத்தை வாங்கும் தேவை எப்போது ஏற்படும் என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது.
டிஜிட்டல் பேமெண்ட்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள பேமெண்ட் முறையில் Prime-இல் சேர்க்கப்படாத, Prime Video ஸ்டோரில் மேற்கொள்ளும் வாங்குதல்களுக்குத் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் பேமெண்ட் முறையைப் புதுப்பித்தல் பக்கத்திற்குச் சென்று, இதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆர்டர் நிறைவு பெற்றவுடன், "என்னுடையவை" என்பதில் உங்கள் ‘வாங்குதல்கள் & வாடகைகள்’ பிரிவில் வாங்கியவற்றைப் பார்க்கலாம்.
கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: