Prime Video - ஏற்றுக்கொள்ளப்படும் பேமெண்ட் முறைகள்
Prime Video சந்தாக்கள் மற்றும் வாங்குதல்களுக்குப் பணம் செலுத்த, பல்வேறு பேமெண்ட் முறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
Prime Video வாடிக்கையாளர்கள் தங்களின் Amazon Prime மெம்பர்ஷிப், Prime Video சந்தா, Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள், Prime Video விளம்பரமில்லாச் சந்தாக்கள் மற்றும் Prime Video வாடகைகள் மற்றும் வாங்குதல்களுக்குப் பின்வரும் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தலாம்.
Amazon Prime மெம்பர்ஷிப்களுக்கு:
- ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ, கனடா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், சிங்கப்பூர், UAE, சவுதி அரேபியா, எகிப்து, லக்சம்பர்க், போலந்து மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஏற்கப்படும்.
- ஃபிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் SEPA-ஐப் பயன்படுத்தலாம்.
- ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மெக்ஸிகோ, கனடா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, லக்சம்பர்க் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் கிஃப்ட் கார்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புரமோஷனல் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் (PrimeVideo.com-இல் பதிவுசெய்யும்போது தவிர).
- நெட்பேங்கிங், Amazon Pay பேலன்ஸ், UPI மற்றும் POD ஆகியவை இந்தியாவில் கிடைக்கின்றன.
- Zip Pay (BNPL) ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது (Amazon.com.au-இல் பதிவுசெய்யும்போது).
- Pay with Cash மெக்ஸிகோவில் கிடைக்கிறது.
- iDEAL நெதர்லாந்தில் கிடைக்கிறது.
- போலந்தில் Blik மூலம் வருடாந்திரத் திட்டங்களை வாங்க முடியும்.
- பிரேசிலில் உள்ள வாடிக்கையாளர்கள் வருடாந்திர Amazon Prime மெம்பர்ஷிப்களுக்குக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, தவணைகளில் பணம் செலுத்தலாம்.
Prime Video/Prime Video ஆட்-ஆன் சந்தாக்களுக்கு:
- இந்தியா, பிரேசில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மெக்ஸிகோ, கனடா, சிலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், போலந்து, UAE, சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி, லக்சம்பர்க் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஏற்கப்படும்.
- கிஃப்ட் கார்டுகளை ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் பயன்படுத்தலாம்.
- இந்தோனேஷியா, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் டிஜிட்டல் வாலட் பேமெண்ட்கள் கிடைக்கின்றன.
- இந்தியாவில் UPI கிடைக்கிறது.
- Pay with Cash மெக்ஸிகோவில் கிடைக்கிறது.
- iDEAL நெதர்லாந்தில் கிடைக்கிறது.
- பிரேசிலில் உள்ள வாடிக்கையாளர்கள் வருடாந்திர Amazon Prime Video ஆட்-ஆன் சந்தாக்களுக்குக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, தவணைகளில் பணம் செலுத்தலாம்.
- கனடாவில் Shop with Points ஏற்கப்படும்
கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி Prime Video விளம்பரமில்லாச் சந்தாக்களுக்குப் பணம் செலுத்தலாம். கூடுதலாக, பின்வரும் பேமெண்ட் முறைகளையும் பயன்படுத்தலாம்:
- இந்தியாவில் UPI கிடைக்கிறது.
- பிரேசிலில் குறியீடு இல்லாமல் டெபிட் ஆகும் வசதி கிடைக்கிறது.
- iDEAL நெதர்லாந்தில் கிடைக்கிறது.
Prime Video வாங்குதல்கள் மற்றும் வாடகைகளுக்கு:
- இந்தியா, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், மெக்ஸிகோ, கனடா, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, ஸ்வீடன், பெல்ஜியம் மற்றும் போலந்து நாடுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஏற்கப்படும்.
- பிரேசிலில் கிரெடிட் கார்டுகள் மட்டுமே பணம் செலுத்தும் முறையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
- கிஃப்ட் கார்டுகளை ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் பயன்படுத்தலாம்.
- iDEAL நெதர்லாந்தில் ஏற்கப்படும்.
- கனடாவில் Shop with Points ஏற்கப்படுகிறது.
கிடைக்கும் பேமெண்ட் முறைகள், செக்-அவுட் செயல்முறையின் போது காட்டப்படும் – ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் கார்டை Amazon Wallet-இல் அமைத்திருக்க வேண்டும்.
Prime Video வாங்குதல்கள் மற்றும் வாடகைகளுக்குப் பணம் செலுத்த, எந்தவொரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் வாடிக்கையாளரின் ஸ்டோரில் பொருந்தக்கூடிய முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு, Prime Video பயன்பாட்டு விதிமுறைகளைப் பார்க்கவும்.