“முழு உறுதியுடன்: மக்களாட்சிக்கான போராட்டம்” அமெரிக்காவில் நடக்கும் வாக்காளர் ஒடுக்குமுறையை ஆராய்கிறது. நமது நாட்டை தொடக்கத்தில் இருந்தே சிதைத்துள்ள ஒரு பிரச்சினையை அம்பலப்படுத்த, செயல்முனைப்போடு தனிப்பட்ட அனுபவங்களையும், வரலாற்று பார்வையையும் ஒன்றிணைத்து காட்டுகிறது. ஸ்டேஸி ஆப்ராம்ஸின் நிபுணத்துவத்துடன், வாக்களிப்பதில் உள்ள தடைகள் குறித்து இதுவரை அறியப்படாத தகவல்களை இத்திரைப்படம் தெரிவிக்கிறது.