Prime Video மொழியை மாற்றுதல்
நீங்கள் விரும்பும் மொழியில் PrimeVideo.com இணையதளம் மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம்.
PrimeVideo.com வலைத்தளம் மற்றும் Prime Video செயலியின் பயனர் இடைமுகம் பல மொழிகளில் கிடைக்கின்றது. விரும்பும் மொழி அமைப்புகளைத் தேர்ந்தெடுக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
PrimeVideo.com வலைத்தளத்தில்:
- கணக்கு மற்றும் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
- மொழி என்ற தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
- விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
Prime வீடியோ மொபைல் செயலிகள்:
- Prime Video செயலியைத் திறக்கவும்.
- என்னுடையவை என்பதற்குச் சென்று, கியர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
- மொழி என்பதைத் தேர்ந்தெடுத்து, விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற ஆதரிக்கப்படும் சாதனங்களில்:
- Prime Video செயலியைத் திறக்கவும்.
- Prime Video அமைப்புகள் விருப்பத்தை அணுகவும்.
- மொழி என்பதன் கீழ், விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
கூடுதலாக, Prime Video வாடிக்கையாளர்கள் ஆடியோ மற்றும் சப்டைட்டில்களுக்கான, தங்களுக்கு விருப்பமான மொழி/மொழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களுக்கான பரிந்துரைகளைத் தனிப்பயனாக்கலாம். வாடிக்கையாளர்கள் 35-க்கும் மேற்பட்ட மொழி விருப்பங்களில் இருந்து ஐந்து மொழிகளைத் தேர்வு செய்யலாம்.
PrimeVideo.com வலைத்தளத்தில்:
- ‘சுயவிவரங்களை நிர்வகி’ என்பதற்குச் செல்லவும்.
- ‘சுயவிவரத்தைத் திருத்து’ என்பதற்குச் சென்று தொடர்புடைய சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்ட்ரீமிங் மொழிகளை நிர்வகிக்கவும்.
- விரும்பும் ஸ்ட்ரீமிங் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
Prime வீடியோ மொபைல் செயலிகள்:
- Prime Video செயலியைத் திறக்கவும்.
- ‘சுயவிவரங்களைத் திருத்து’ என்பதற்குச் சென்று தொடர்புடைய சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்ட்ரீமிங் மொழிகளை தேர்ந்தெடுக்கவும்.
- பிரத்தியேகமான, விரும்பும் ஸ்ட்ரீமிங் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற ஆதரிக்கப்படும் சாதனங்களில்:
- Prime Video செயலியைத் திறக்கவும்.
- தொடர்புடைய சுயவிவரத்தின் கீழ், ‘திருத்து’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்ட்ரீமிங் மொழிகளை தேர்ந்தெடுக்கவும்.
- பிரத்தியேகமான, விரும்பும் ஸ்ட்ரீமிங் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.