Amazon Prime Video Terms of Use - Global
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: மே 15, 2025
Amazon Prime Video -க்கான பயன்பாட்டு விதிமுறைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த விதிமுறைகள் உங்களுக்கும், உங்களுக்கு Amazon Prime Video சேவையை வழங்கும் நிறுவனம், ஆகியவற்றுக்கு இடையிலானதாகும், அது உங்களது அமைவிடத்தைப் பொறுத்து, Amazon.com Services LLC, Amazon Digital UK Limited அல்லது அவர்களின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கலாம் ( “அமேசான்” , “ நாங்கள்” அல்லது “எங்களுடையது” ). பின்வரும் www.primevideo.com/ww-av-legal-home என்ற இணைய முகவரிக்கு வருகைதந்து உங்களுக்கு Amazon Prime Video சேவையை வழங்கும் Amazon துணை நிறுவனத்தையும், உங்கள் அமைவிடத்தின் அடிப்படையில் பொருத்தமான பிற விதிமுறைகளையும் கண்டறியவும் வருகை தருக. உங்களது Amazon Prime Video சேவை வழங்குனர், முன்கூட்டிய அறிவிப்புடன் அல்லது அறிவிப்பு இல்லாமல் (சட்டத்தால் தேவைப்படாத வரை) அவ்வப்போது மாறக்கூடும். தயவுசெய்து இந்த விதிமுறைகளுடன், உங்களுக்குப் பொருந்தக்கூடிய தனியுரிமை அறிவிப்பு, பயன்பாட்டு நிபந்தனைகள், மற்றும் Amazon Prime Video பயன்பாட்டுச் சட்டங்கள் மற்றும் Amazon Prime Video சேவையுடன் தொடர்புடைய பிற அனைத்து விதிகள் மற்றும் கொள்கைகளைப் படிக்கவும் ( Amazon Prime Video சேவைக்கான ஏதாவது உதவி அல்லது பிற தகவல் பக்கம் அல்லது ஏதாவது தயாரிப்பு விளக்கப் பக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஏதாவது விதிகள் அல்லது பயன்பாட்டு விதிகள் ஆகியவை உட்பட, ஆனால் அவை மட்டுமே அல்ல) (ஒட்டுமொத்தமாக, இந்த “ஒப்பந்தம்” )படிக்கவும். நீங்கள் UK, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரேசிலில் வசிப்பவராக இருப்பின், தனியுரிமை அறிவிப்பு, குக்கீஸ் அறிவிப்பு மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலான விளம்பர அறிவிப்பு ஆகியவை உங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகாது. உங்களுக்குப் பொருந்தும் இந்தக் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகளின் பதிப்புகள் ஆகியவை, நாங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக உங்கள் சீராய்வுக்குக் கிடைக்கிறது. நீங்கள் ஒவ்வொரு முறையும் Amazon Prime Video சேவையைப் பார்வையிடும்போது, உலாவும்போதும் அல்லது பயன்படுத்தும் போதும், உங்கள் சார்பாகவும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும், உங்கள் கணக்கின் கீழ் சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் சார்பாகவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
1. சேவை
Amazon Prime Video (“சேவை”) என்பது ஒரு தனிப்பட்ட சேவையாகும், அது இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளவாறு டிஜிட்டல் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற காணொளிகளை (ஒட்டுமொத்தமாக, “டிஜிட்டல் பொருளடக்கம்” ) பரிந்துரைக்கிறது மற்றும் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறது. இந்தச் சேவையையும், டிஜிட்டல் பொருளடக்கத்தையும் அணுகுவதற்குப் பல வழிகள் உள்ளன, Amazon Prime மூலம் அணுகுதல் உட்பட, மேலும் நீங்கள் பிற Prime அனுகூலங்கள் மற்றும் Amazon சேவைகளைப் பயன்படுத்துதல், நீங்கள் அந்தச் சேவைகளை அணுகப் பயன்படுத்தும் செயலிகள், இணைய தளங்கள் அல்லது சாதனங்களில் கிடைக்கப்பெறும் தனிப்பட்ட விதிமுறைகள் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும். நீங்கள் 18 வயதுக்கு அல்லது உங்கள் அமைவிடத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களின் வயதுக்கு உட்பட்டவராக இருப்பின், உங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தலையீட்டுடன் மட்டுமே உங்களால் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். இந்தச் சேவைகளின் ஒரு பகுதியாக பொருளடக்கம் மற்றும் அம்சங்களை நாங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக்குவோம், உங்களுக்கு ஆர்வமான டிஜிட்டல் பொருளடக்கம், அம்சங்கள் மற்றும் சேவைகளின் பரிந்துரைகளை உங்களுக்குக் காட்டுவது உட்பட. அமேசான் சாதனங்கள் மற்றும் சேவைகள் மற்றும் அவற்றுடனான உங்களது அனுபவம் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக மேம்படுத்தவும் நாங்கள் முயற்சிப்போம்.
2. இணங்கத்தக்க சாதனங்கள்
டிஜிட்டல் பொருளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய அல்லது பதிவிறக்கம் செய்ய, ஒரு தனிக்கணினி, கையடக்க மீடியா பிளேயர் அல்லது நாங்கள் அவ்வப்போது நிறுவும் கணினி மற்றும் இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிற சாதனத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் (ஒரு “இணங்கத்தக்க சாதனம்”). எந்தெந்த சாதனங்கள் ஆதரிக்கப்படுகின்றன என்பது பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்: US, UK, ஜெர்மனி, ஜப்பான், மற்ற அனைத்து நாடுகளும். சில இணங்கத்தக்க சாதனங்களை டிஜிட்டல் பொருளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும், சிலவற்றை டிஜிட்டல் பொருளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும், மற்றும் சிலவற்றை டிஜிட்டல் பொருளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் பயன்படுத்தலாம். இணங்கத்தக்க சாதனங்களுக்கான தேவைகளை நாங்கள் அவ்வப்போது மாற்றுவோம், மற்றும் சில நிகழ்வுகளில் ஒரு சாதனம் இணங்குவது (அல்லது இணங்கத்தக்கதாக இருப்பது), அந்தச் சாதனத்தின் தயாரிப்பாளர் அல்லது பிற மூன்றாம் நபர்களால் வழங்கப்படும் மென்பொருள் அல்லது அவர்களால் வழங்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் கணினிகள் ஆகியவற்றைப் பொருத்து அமையும். அதற்கேற்ப, ஒரு சமயம் இணங்கத்தக்கதாக இருக்கும் சாதனங்கள், எதிர்காலத்தில் இணங்கத்தக்க சாதன்மாக இல்லாமல் போகலாம். Amazon Prime Video செல்பேசி செயலியை உங்களுக்கு வழங்கும் நிறுவனமும், உங்களுக்கு இந்தச் சேவையை வழங்கும் நிறுவனமும் வேறுவேறாக இருக்கலாம்.
3. மாறுபட்ட புவியியல் அமைப்பு
டிஜிட்டல் பொருளடக்கத்தைத் தரும் வழங்குனர்கள் விதிக்கும் தொழில்நுட்ப ரீதியான மற்றும் பிற கட்டுப்பாடுகளின் காரணமாக, இந்தச் சேவையானது குறிப்பிட்ட சில அமைவிடங்களில் மட்டுமே கிடைக்கும். டிஜிட்டல் பொருளடக்கமும் (டிஜிட்டல் பொருளடக்கத்தின் வசனஉரை மற்றும் மொழிமாற்ற பதிப்பு உட்பட), உங்களுக்கு டிஜிட்டல் பொருளடக்கத்தை நாங்கள் எவ்வாறு வழங்குகிறோம் என்பது காலத்துக்கு ஏற்ப, அவ்வப்போது மாறுபடும். உங்களது புவியியல் ரீதியான அமைவிடத்தைச் சரிபார்க்க தொழில்நுட்பங்களை அமேசான் பயன்படுத்தும் உங்களது அமைவிடத்தை புலப்படாமல் செய்ய அல்லது மாற்றிக்காட்ட நீங்கள் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக்கூடாது.
4. டிஜிட்டல் பொருளடக்கம்
a. பொதுவானது. இந்தச் சேவை பின்வருவனவற்றுக்கு உங்களை அனுமதிக்கலாம்: (i) சந்தா செலுத்தும் சமயத்தில் சந்தாவின் அடிப்படையில் டிஜிட்டல் பொருளடக்கத்தை குறிப்பிட்ட காலவரையறையில் காண்பதற்காக அணுகுவதற்கு (உதாரணத்துக்கு, அமேசான் பிரைம் அல்லது பிற சந்தா அல்லது தனிப்பட்ட காணொளிக்கான சந்தா வழங்கும்) (“சந்தா டிஜிட்டல் பொருளடக்கம்”), (ii) டிஜிட்டல் பொருளடக்கத்தை காண்பதற்காக குறிப்பிட்ட காலவரையறைக்கு, தேவையின் அடிப்படையில் வாடகைக்கு எடுத்தல் (“வாடகை டிஜிட்டல் பொருளடக்கம்”), (iii) தேவையின் அடிப்படையில் காலவரம்பின்றிக் காண்பதற்கு டிஜிட்டல் பொருளடக்கதை வாங்குதல் (“வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம்”), (iv) குறிப்பிட்ட காலவரையறையில் ஒவ்வொரு முறையும் காண்பதற்கு கட்டணம் செலுத்து வகையில் டிஜிட்டல் பொருளடக்கத்தை வாங்குதல் (“PPV டிஜிட்டல் பொருளடக்கம்”), மற்றும்/அல்லது (v) இலவசமாக, விளம்பரதாரர் வழங்கும் அல்லது விளம்பர அடிப்படையில் குறிப்பிட்ட காலவரையறையில் காண்பதற்கு டிஜிட்டல் பொருளடக்கத்தை அணுகுதல் (“இலவச டிஜிட்டல் பொருளடக்கம்”). டிஜிட்டல் பொருளடக்கமானது சந்தா செலுத்தும் டிஜிட்டல் பொருளடக்கம், வாடகை டிஜிட்டல் பொருளடக்கம், வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம், PPV டிஜிட்டல் பொருளடக்கம், இலவச டிஜிட்டல் பொருளடக்கம் அல்லது அவற்றின் ஏதாவது இணைவாகக் கிடைக்கலாம், மேலும் இவை ஒவ்வொன்றிலும் கீழே வழங்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட உரிமத்துக்கு உட்பட்டது.
b. பயன்பாட்டுச் சட்டங்கள். டிஜிட்டல் பொருளடக்கத்தை நீங்கள் பயன்படுத்துவது Amazon Prime Video பயன்பாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாகும் (பயன்பாட்டுச் சட்டங்கள்). பயன்பாட்டு சட்டங்களானது, பல்வேறு வகையான டிஜிட்டல் பொருளடக்கங்களை நீங்கள் காண்பதற்கு அனுமதிக்கப்பட்ட காலகட்டம் ( “காணும் காலம்”) மற்றும் ஒவ்வொரு வகையான டிஜிட்டல் பொருளடக்கமும் பதிவிறக்கம், ஸ்ட்ரீமிங் மற்றும் காணப்படக்கூடிய இணங்கத்தக்க சாதனங்களின் எண்ணிக்கை மற்றும் வகை மீதான கட்டுப்பாடுகள் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
c. சந்தா/உறுப்பான்மைகள். சந்தா, சந்தா சேவைகள், சந்தா அடிப்படையிலான டிஜிட்டல் பொருளடக்கம் கிடைக்கும் அளவு மற்றும் சந்தா சேவைகள் மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட தலைப்புகள் ஆகியவை காலப்போக்கிலும், அமைவிடத்தின் அடிப்படையிலும் முன்னறிவிப்பின்றி மாறக்கூடும் (பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர). வேறுவிதமாக்க் குறிப்பிடப்படாதவரை, கட்டணத்தில் ஏற்படும் எவ்வித மாறுபாடும், அடுத்த சந்தா காலத்தின் தொடக்கம் முதல் அமுலுக்கு வரும். சந்தாவில் ஏற்படும் மாறுதலுக்கு நீங்கள் உடன்படவில்லை எனில், கீழே உள்ள பிரிவு 4(ஈ)ன் படி நீங்கள் உங்கள் சந்தாவை இரத்து செய்யலாம். சந்தா அல்லது உறுப்பான்மைக்கான விலை வாட் மற்றும்/அல்லது பிற வரிகளை உள்ளடக்கலாம். பொருத்தமான இடங்களில், அத்தகைய வரிகள் நீங்கள் பரிவர்த்தனை செய்யும் தரப்பினரால் வசூலிக்கப்படலாம், அது அமேசான் நிறுவனமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மூன்றாம் தரப்பாக இருக்கலாம். குறிப்பிட்ட சந்தா டிஜிட்டல் பொருளடக்கம் கிடைக்கும் என்பதற்கு அல்லது எதாவது ஒரு சந்தாவில் குறைந்தபட்ச டிஜிட்டல் பொருளடக்கம் கிடைக்கும் என்பதற்கோ நாங்கள் எவ்விதமான உத்தரவாதமும் தரவில்லை. ஒரு சந்தாவுக்குப் பொருந்தும் கூடுதல் விதிமுறைகள் (பொருத்தமான இரத்து மற்றும் திரும்ப வழங்கல் கொள்கை போன்று), உங்கள் அமைவிடத்துக்கான முதன்மை சேவை இணையதளத்தில் அந்த சந்தாவுக்கான தகவல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இங்கே (உங்களது “காணொலி சந்தையிடம்” ).
நாங்கள் வழங்கும் சில சந்தா சேவைகள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து கிடைப்பவை. சந்தா சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர் (உதாரணத்துக்கு, Prime Video கூடுதல் சந்தா மூலம்) தங்களது சேவைகளின் அம்சங்களை அல்லது அதன் பொருளடக்கத்தை மாற்றவோ, கைவிடவோ கூடும். மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் எந்தவொரு சந்தா சேவையிலும் உள்ள பொருளடக்கம் அல்லது அத்தகைய சேவைகளின் அம்சங்களுக்கு Amazon பொறுப்பாகாது.
நீங்கள் ஜெர்மனி அல்லது ஆஸ்திரியாவில் வசிக்கிறீர்கள் என்றால் (அல்லது ஜெர்மன் அல்லது ஆஸ்திரிய சட்டம் வேறு காரணங்களுக்காகப் பொருந்தும்), இந்தப் பிரிவு 4(c) -இல் உள்ள வாக்கியம் 1 பொருந்தாது, இந்தப் பிரிவு 4(c) -இன் மீதமுள்ள பகுதி அதற்குப் பதிலாகப் பொருந்தும். நீங்கள் உறுப்பினராக உள்ள சேவையின் செலவுகளைப் பாதிக்கும் செலவு அதிகரிப்புகள் மற்றும்/அல்லது செலவு சேமிப்புகளை எங்களுக்கு வழங்குவதற்காக, சந்தா கட்டணம் அல்லது மெம்பர்ஷிப் கட்டணம் (ஒவ்வொன்றும் ஒரு "மாற்றம்" மற்றும் கூட்டாக "சந்தா கட்டணத்தில் மாற்றங்கள்" அல்லது "உறுப்பினர் கட்டணத்தில் மாற்றங்கள்") அதிகரிக்கலாம் மற்றும் குறையலாம். நாங்கள் கருத்தில்கொள்ளும் குறிப்பிட்ட செலவு காரணிகளில் உள்ளடங்குபவை: உள்ளடக்கத்தின் உற்பத்தி, உரிமம், கையகப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான செலவுகள்; தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்புடன் தொடர்புடைய செலவுகள்; எரிசக்தி செலவுகள்; வெளிப்புற சேவை வழங்குநர்களின் செலவுகள்; தொழிலாளர் செலவுகள்; சட்டங்கள், ஒழுங்குமுறைகள், அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் வரிகள் தொடர்பான செலவுகள். எங்கள் சொந்த செலவுகள் குறையும் அல்லது மொத்தத்தில் அதிகரிக்கும் அளவிற்கு மட்டுமே சந்தா அல்லது மெம்பர்ஷிப் கட்டணங்கள் மாற்றப்படும், மேலும் சந்தா அல்லது மெம்பர்ஷிப் கட்டணங்களில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும், உங்களுக்கு சேவை வழங்குவதில் ஏற்படும் மொத்த செலவு குறைப்பு அல்லது அதிகரிப்பின் நிதி தாக்கத்தின் அடிப்படையில் இருக்கும். சேவைக்கும் உங்கள் சந்தா கட்டணங்கள் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்திற்கும் இடையிலான ஒப்பந்த சமநிலையைப் பாதிக்கும் சந்தா கட்டணங்கள் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தில் எந்த மாற்றங்களையும் நாங்கள் செய்ய மாட்டோம். சந்தா கட்டணத்தில் அல்லது மெம்பர்ஷிப் கட்டணத்தில் நாங்கள் மாற்றம் செய்தால், மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 30 நாட்களுக்குள், மாற்றம், மாற்றத்திற்கான காரணம்(கள்) மற்றும் மாற்றம் நடைமுறைக்கு வரும் தேதி குறித்து உரை வடிவில் (உதாரணமாக மின்னஞ்சல் மூலம்) உங்களுக்குத் தெரிவிப்போம். கருதப்படும் ஒப்புதலின் விளைவு (நீங்கள் நிராகரிக்கவில்லை என்றால்), நிராகரிக்க வேண்டிய காலத்தின் தொடக்கம் மற்றும் கால அளவு மற்றும் விலகலுக்கான உங்கள் விருப்பம் ஆகியவற்றையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். நீங்கள் மாற்றத்தை நிராகரிக்கலாம் அல்லது உங்கள் சந்தா அல்லது மெம்பர்ஷிப் நிலையை ரத்து செய்யலாம். தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் நீங்கள் மாற்றத்தை நிராகரிக்கவில்லை என்றால், மாற்றத்திற்கான உங்கள் ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த விதிமுறைகளின்படி சந்தாக்களில் அல்லது மெம்பர்ஷிப் பட்டியலில் முன்னர் செய்யப்பட்ட எந்த மாற்றங்களும் பாதிக்கப்படாமல் இருக்கும். நீங்கள் ஜெர்மனியில் வசிக்கிறீர்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஜெர்மன் சட்டம் பொருந்தினால் ஜெர்மன் சிவில் கோட் பிரிவு 315 பாதிக்கப்படாது.
d. சந்தா / மெம்பர்ஷிப்பை ரத்து செய்தல் எங்கள் மூலமாக நேரடியாக உங்களது காணொளிக்கு மட்டுமான சந்தா அல்லது மெம்பர்ஷிப்பிற்காக நீங்கள் பதிவுசெய்திருந்தால், நீங்கள் எந்தவொரு நேரத்திலும் உங்களது Amazon கணக்குக்கு வருகை தந்து, உங்கள் மெம்பர்ஷிப் அமைவுகளை மாற்றுதல் மூலமாகவும், Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வது மூலமாகவும், அல்லது உங்களது காணொளி சந்தையிடத்தில் நாங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் ஏதாவதொரு ரத்து செய்தல் படிவத்தைப் பயன்படுத்துவது மூலமாகவும், ( இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது) அல்லது, பொருந்தக்கூடிய Amazon சந்தா அல்லது மெம்பர்ஷிப் சேவைக்கு நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் மூலம் பரிவர்த்தனை செய்தால், அத்தகைய மூன்றாம் தரப்பினருடன் நீங்கள் வைத்துள்ள கணக்கு மூலமாக ரத்து செய்யலாம். அதற்காகப் பதிவு செய்த அல்லது இலவச சோதனையிலிருந்து கட்டணம் செலுத்தும் மெம்பர்ஷிப்பாக மாறிய 3 வேலை நாட்களுக்குள் (அல்லது, UK மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சேவை அல்லது மெம்பர்ஷிப் சேவை உறுதி கிடைக்கப்பெற்ற 14 நாட்களுக்குள்) நீங்கள் ரத்து செய்தால், உங்கள் மெம்பர்ஷிப் கட்டணம் முழுவதையும் நாங்கள் திருப்பிக் கொடுத்துவிடுவோம்; அந்தக் காலகட்டத்தில் உங்கள் கணக்கின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சேவையின் மதிப்புக்கான கட்டணத்தை விதிப்போம் (அல்லது உங்களுக்குத் திருப்பித் தரும் தொகையிலிருந்து பிடித்தம் செய்வோம்). இந்தச் சேவையானது உங்கள் ரத்து செய்தல் காலகட்டத்துக்குள் தொடங்கும் என்பதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். வேறு எந்த நேரத்திலும் நீங்கள் ரத்து செய்தால், உங்களின் சமீபத்திய மெம்பர்ஷிப் கட்டணத்திலிருந்து, உங்கள் வீடியோ மட்டும் மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக டிஜிட்டல் உள்ளடக்கம் அணுகப்படவில்லை என்றால் மட்டுமே உங்களின் முழு உறுப்பினர் கட்டணத்தையும் திருப்பித் தருவோம். Prime மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் இந்தச் சேவையை அணுகினால், உங்களுக்குப் பொருந்தும் ரத்து மற்றும் திருப்பித் தருதல் விதிமுறைகள் உங்கள் காணொளி சந்தையிடப் பயன்பாட்டுக்கான Prime விதிமுறைகளில் கூறப்பட்டிருக்கும் ( இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது ). Amazon சந்தா அல்லது மூன்றாம் தரப்பினர் பரிவர்த்தனை ஒன்றின் மூலமான மெம்பர்ஷிப் மூலமாக நீங்கள் இந்தச் சேவையை அணுகினால், உங்களுக்குப் பொருந்தும் ரத்து மற்றும் திருப்பித் தருதல் விதிமுறைகள் மாறுபடலாம், அவை மூன்றாம் தரப்பினரால் கூறப்படுமாறு அமையும், மற்றும் நீங்கள் மூன்றாம் தரப்பினரின் கொள்கையின் கீழ் உங்கள் சந்தாவை அல்லது திருப்பித் தருதலை ரத்து செய்யஅவர்களை தொடர்பு கொள்ளலாம்.
e. வாங்குதல் மற்றும் வாடகை பரிவர்த்தனைகள்; இரத்துசெய்தல். இந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளவாறு தவிர, வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம், வாடகை டிஜிட்டல் பொருளடக்கம் மற்றும் PPV டிஜிட்டல் பொருளடக்கம் ஆகியவை இறுதியானவையாகும், அத்தகைய டிஜிட்டல் பொருளடக்கங்களைத் திருப்பித் தருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம் அல்லது வாடகை டிஜிட்டல் பொருளடக்கத்துக்கான ஆர்டரை வாங்கிய அல்லது வாடகைக்குப் பெற்ற 48 மணி நேரத்துக்குள் (அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாங்கிய அல்லது வாடகைக்குப் பெற்ற 14 நாட்களுக்குள்), உங்களது காணொளி சந்தையிடத்தில் உங்களது டிஜிட்டல் ஆர்டர்களில் உள்ள அல்லது காணொளி விவரிப்பு பக்கத்தில் ஒரு மூன்றாம் தரப்பினர் மூலமாக இரசீது செய்யப்பட்ட கொள்முதல்களுக்காக “உங்கள் ஆர்டரை ரத்து செய்க” என்பதன் மீது கிளிக் செய்வதன் மூலம் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது) அல்லது Amazon வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் ரத்து செய்யலாம்; நீங்கள் அத்தகைய டிஜிட்டல் பொருளடக்கத்தைக் காண அல்லது பதிவிறக்கம் செய்யத் தொடங்கியிருந்தால் மட்டும் வாங்கப்பட்ட அல்லது வாடகைக்குப் பெறப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கத்துக்கான ஆர்டரை ரத்து செய்ய இயலாது. வாங்கிய டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது வாடகை டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான முன்கூட்டிய ஆர்டரை எந்த நேரத்திலும் வெளியீட்டுத் தேதிக்கு முன் ரத்து செய்யலாம். PPV டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான ஆர்டரை, திட்டத்தின் திட்டமிடப்பட்ட தொடக்கத்திற்கு முன்பு எந்த நேரத்திலும் நீங்கள் ரத்து செய்யலாம். முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கத்தின் வெளியீட்டுத் தேதியானது மாற்றத்துக்கு உட்பட்டது. ஒரு அமேசான் சந்தா அல்லது உறுப்பான்மையின் ஒரு பகுதியாக ஒருமூன்றாம் தரப்பினர் மூலமாக நீங்கள் பரிவர்த்தனை செய்து நீங்கள் ஒரு டிஜிட்டல் உள்ளடக்கத்தைவாங்கி இருந்தால், பொருந்தக்கூடிய திருப்பி தருதல் விதிமுறைகள் இத்தகைய மூன்றாம் தரப்பினரால் அமைக்கப்படும்.
f. கட்டண முறைகள். நீங்கள் உங்கள் காணொளி மட்டுமே ஆன சந்தா அல்லது உறுப்பான்மைக்காக எங்கள் மூலமாக பதிவு செய்து, இரசீது செய்யப்பட்டிருந்தால், கீழே விளக்கப்பட்டுள்ள இரசீது விதிமுறைகள் உங்கள் சந்தா அல்லது உறுப்பான்மைக்கு பொருந்தும்:
- உங்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டண முறை மூலம் உங்கள் கட்டணத்தைச் செயலாக்கம் செய்ய எங்களால் இயலவில்லை எனில், எங்களிடம் உள்ள எந்தக் கட்டண முறையையும் உங்கள் மீது விதிப்பதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.
- நீங்கள் ஒரு சந்தாவை வாங்கினால் அல்லது ஒரு சந்தாவுக்கான இலவச வெள்ளோட்டத்தைத் தொடங்கினால், உங்களது சந்தா தானாகவே தொடரும், மேலும் நீங்கள் அந்தச் சமயத்தில் விதிக்கத்தக்க சந்தா கட்டணத்தை, வரிகள் உட்பட, உங்களுக்கென எங்களிடம் உள்ள ஏதாவது கட்டண முறைகொண்டு, உங்களிடமிருந்து வசூலிக்க எங்களை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் (மேற்கொண்டு அறிவிப்பு எதுவும் இன்றி,பொருந்தும் சட்டங்களின்படி தேவைப்பட்டால் தவிர).
- நீங்கள் ஒரு வசூலிப்பிற்கு முன்னதாக இரத்துசெய்யவேண்டும் அல்லது ஒரதானியங்கி புதுப்பித்தல் வேண்டாம் என்று எங்களுக்குத் தெரிவித்தால் அன்றி, உங்கள் சந்தா தானாகவே தொடரும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் மற்றும் நாங்கள் உங்களுக்காக கோப்பிடப்பட்ட ஏதேனும் பணம்செலுத்தல் முறையை பயன்படுத்தி,(பொருந்தக்கூடியசட்டம் தேவைப்பட்டால் அன்றி, உங்களுக்குஅறிவிக்காமல்) ஏதேனும் வரிகள் உள்ளிட்ட பின்-பொருந்தும் கால சந்தா கட்டணத்தை சேகரிக்க எங்களை அங்கீகரிக்கிறீர்கள்.
- உங்களுக்கென எங்களிடம் உள்ள கட்டண முறைகள் அனைத்தின் மூலமும் உங்களுக்கான சந்தா கட்டணத்தை பெற முடியவில்லை எனில், நீங்கள் மாற்று கட்டண முறை ஒன்றை வழங்கும் வரை, உங்களது சந்தா இரத்து செய்யப்படும். நீங்கள் புதிய கட்டண முறை ஒன்றை வழங்கி, உங்களது சந்தா இரத்து செய்யப்படும் முன் வெற்றிகரமாக கட்டணம் செலுத்தப்பட்டால், உங்களுக்கான புதிய சந்தா காலம், உண்மையில் பில்லிங் செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் அமையும், வெற்றிகரமாக கட்டணம் செலுத்தப்பட்ட தேதியின் அடிப்படையில் அமையாது. உங்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டண முறை(களை) மேற் சேர்க்கை செய்ய “உங்களது கணக்கு” அமைவுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் உங்கள் காணொளி-மட்டுமேயான சந்தா அல்லது உறுப்பான்மையை ஒரு மூன்றாம் தரப்பினர் மூலமாக பதிவு செய்து,எங்களிடம் நேரடியாக இரசீது பெறாவிட்டால், உங்கள் சந்தாஅல்லது உருப்பான்மைகளுக்கு மூன்றாம் தரப்பினர் வழங்கும் இரசீது விதிமுறைகள் பொருந்தும்.
g. ஊக்குவிப்பு வெள்ளோட்டம். தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சில சமயங்களில் பல்வேறு விதமான வெள்ளோட்ட அல்லது ஊக்குவிப்பு உறுப்பான்மைகளை வழங்குவோம், ஊக்குவிப்புச் சலுகைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்படாதவரை அவை இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்டது. முற்றிலும் எங்கள் விருப்பத்துக்கு உட்பட்டு, உங்களுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். வெள்ளோட்டத்துக்கான உறுப்பினர்கள், வெள்ளோட்ட காலத்தின் இறுதியில் கட்டண உறுப்பான்மையைத் தொடராதிருக்க எந்தச் சமயத்திலும் (உங்கள் கணக்கின் மூலம்) முடிவெடுக்கலாம்.
h. பொருளடக்கத்துக்கான வரையறுக்கப்பட்ட உரிமம். வாடகை, வாங்குதல் அல்லது டிஜிட்டல் பொருளடக்கத்துக்கான அணுகுதல் ஆகியவற்றுக்கான ஏதாவது கட்டணங்களை செலுத்துதல் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் அனைத்துடனும் இணங்குதல் ஆகியவற்றுக்கு உட்பட்டு, பொருந்தத்தக்க காணும் காலத்தில், பயன்பாட்டு சட்டங்களுக்கு ஏற்ப டிஜிட்டல் பொருளடக்கத்தை அணுகவும், காணவும், தனிப்பட்ட, வணிகரீதியில் அல்லாத, அந்தரங்கப் பயன்பாட்டுக்காக அமேசான் உங்களுக்கு பிரத்தியேகம் அல்லாத, மாற்றத்தக்கது அல்லாத, துணை உரிமம் வழங்க இயலாத, வரையறுக்கப்பட்ட உரிமத்தை வழங்குகிறது. டிஜிட்டல் பொருளடக்கத்தின் காணும் காலத்தின் இறுதியில் உங்களது இணங்கத்தக்க சாதனத்திலிருந்து நாங்களாகவே அதை அகற்றலாம்.
i. வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம் கிடைத்தல். பொதுவாக, வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கமானது பதிவிறக்கம் செய்ய அல்லது சேவையிலிருந்து ஸ்ட்ரீமிங் செய்வதற்கு உங்களுக்கு பொருத்தமானவாறு, தொடர்ந்து கிடைக்கும், ஆனால் பொருளடக்கத்தை வழங்குபவரின் உரிமக் கட்டுப்பாடுகள் அல்லது மற்ற பிற காரணங்களால் கிடைக்காமல் போகலாம், மேலும் வாங்கப்பட்ட டிஜிட்டல் பொருளடக்கம் மேற்கொண்டு பதிவிறக்கம் செய்யப்பட அல்லது ஸ்ட்ரீமிங் செய்வதற்குக் கிடைக்காமல் போனால் அதற்கு அமேசான் பொறுப்பாகாது.
j. பிளேபேக் தரம்; ஸ்ட்ரீமிங் உங்களுக்குக் கிடைக்கும் டிஜிட்டல் பொருளடக்கத்தின் தெளிவு மற்றும் தரம் ஆகியவை நீங்கள் டிஜிட்டல் பொருளடக்கத்தை அணுகும் இணங்கத்தக்க சாதனத்தின் வகை, உங்களது அலைவரிசை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமையும், உங்கள் அலைவரிசையானது நீங்கள் காணும் சமயத்தில் அதிகரிக்க அல்லது குறையக்கூடும். நாங்கள் உங்களுக்கு ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் பொருளடக்கம் தடைபடக்கூடும் அல்லது அலைவரிசை தடங்கல்களால் சரியாகக் காட்டப்படாமல் போகக்கூடும் என நாங்கள் கண்டறிந்தால், தடங்கலற்ற காணும் அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் டிஜிட்டல் பொருளடக்கத்தின் தெளிவுத்தன்மை மற்றும் கோப்பின் அளவு ஆகியவற்றை நாங்கள் குறைக்கலாம். உயர்தரமான காணும் அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்யும் அதே சமயம், ஸ்ட்ரீமிங் செய்யும் சமயத்தில் நீங்கள் பெறும் டிஜிட்டல் பொருளடக்கத்தின் துல்லியத்தன்மை அல்லது தரம் குறித்து நாங்கள் எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை, நீங்கள் உயர் துல்லியமான, மிக உயர் துல்லியமான அல்லது உயர்-இயக்க-வரம்பு பொருளடக்கத்தை அணுகுவதற்காக நீங்கள் கூடுதலாகக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் கூட.
k. பொதுவான கட்டுப்பாடுகள் நீங்கள் செய்யக்கூடாதவை (i) இந்த ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர டிஜிட்டல் பொருளடக்கத்தை மாற்றம் செய்தல், பிரதியெடுத்தல் அல்லது காட்சிப்படுத்தல்; (ii) டிஜிட்டல் பொருளடக்கத்துக்கான எந்தவொரு உரிமையையும் விற்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, விநியோகிப்பது அல்லது ஒளிபரப்புவது; (iii) டிஜிட்டல் பொருளடக்கம் மீதுள்ள உரிமை சார்ந்த அறிவிப்புகள் அல்லது முத்திரைகள் ஏதும் இருப்பின் அகற்றுவது; (iv) இந்தச் சேவையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட ஏதாவது டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை அல்லது பிற பொருளடக்கப் பாதுகாப்பு அமைப்பை இயலாததாக்குவது, புறக்கணிப்பது, மாற்றுவது, விஞ்சுவது அல்லது வேறு வகையில் தந்திரமாக மீற முயற்சிப்பது; அல்லது (v) இந்தச் சேவை அல்லது டிஜிட்டல் பொருளடக்கதை ஏதாவது வணிகரீதியான அல்லது சட்டத்துக்குப் புறம்பான நோக்கத்துக்குப் பயன்படுத்துவது.
5. மென்பொருள்
a. மென்பொருளின் பயன்பாடு. இந்தச் சேவை தொடர்பான உங்கள் பயன்பாட்டுக்காக உங்களுக்கு மென்பொருளை நாங்கள் கிடைக்கச் செய்யலாம். (மென்பொருள்). உங்கள் காணொலி சந்தையிடத்துக்கான பயன்பாட்டுக்கான நிபந்தனைகள் கொண்டுள்ள விதிமுறைகள் ( இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது) குறிப்பிட்ட மூன்றாம்-தரப்பினர் மென்பொருளுக்குப் பொருந்தும் கூடுதல் விதிமுறைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்.
b. Amazon மற்றும் வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள். உங்களுடைய பயன்பாடு மற்றும் இந்தச் சேவை மற்றும் மென்பொருளின் செயல்பாடு தொடர்பாகவும், நீங்கள் இந்தச் சேவை மற்றும் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் சாதனங்கள் தொடர்பான தகவல்களை Amazon -க்கு இந்தச் சேவை மற்றும் மென்பொருள் வழங்கும். உதாரணத்துக்கு, இந்த மென்பொருளானது நீங்கள் பதிவிறக்கம் செய்து, ஸ்ட்ரீம் செய்யும் டிஜிட்டல் பொருளடக்கம் தொடர்பான தகவல்களையும், அந்த டிஜிட்டல் பொருளடக்கத்தின் பயன்பாடு தொடர்பான தகவல்களையும் அமேசானுக்கு வழங்கும் (அந்த டிஜிட்டல் பொருளடக்கத்தை நீங்கள் பார்த்தீர்களா, எப்பொழுது பார்த்தீர்கள் போன்றவை, அவை பிற தகவல்களோடு, வாடகை டிஜிட்டல் பொருளடக்கத்தின் காணும் காலத்தை அளவிட எங்களுக்கு உதவும்). நாங்கள் பெறும் எந்தத் தகவலும் உங்கள் காணொளி சந்தையிடத்துக்கான Amazon தனியுரிமை அறிவிப்புக்கு உட்பட்டது (இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது). Prime Video கூடுதல் சந்தாக்கள் மூலம் சந்தா சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர் போன்ற வீடியோ உள்ளடக்க வழங்குநர்களுக்கு, உங்கள் சந்தா நிலை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பயன்பாடு, பார்வை வரலாறு உட்பட சில தகவல்களை நாங்கள் வழங்கக்கூடும். இந்தத் தகவலை உங்களை அடையாளம் காண முடியாத வகையில் நாங்கள் வழங்குவோம் (குறிப்பிட்ட வீடியோ உள்ளடக்க வழங்குநருடன் அடையாளம் காணக்கூடிய தகவலைப் பகிர்வதற்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்காத வரை).
6. கூடுதல் விதிமுறைகள்
a. இடை நிறுத்தம். எங்கள் விருப்பத்தின்படி, முன்னறிவிப்பின்றி, இந்தச் சேவையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறும் ஏதாவது சந்தா உட்பட, இந்தச் சேவைக்கான உங்கள் அணுகுதலை நாங்கள் இடை நிறுத்தம் செய்யலாம் (பொருந்தும் சட்டத்தின்படி தேவைப்பட்டால் தவிர). நாங்கள் அவ்வாறு செய்தால், உங்கள் சந்தா கட்டணம் (ஏதும் இருப்பின்) கணக்கீடு செய்து உங்களுக்குத் திரும்ப வழங்கப்படும்; இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் ஏதாவது விதிமுறைகளை நீங்கள் மீறினால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்களுக்கான உரிமைகள் அறிவிப்பின்றித் தானாகவே முடிவுக்கு வரும், மேலும் அமேசான், தனது விருப்பத்தின்படி, கட்டணம் எதையும் திருப்பித் தராமல், இந்தச் சேவை மற்றும் டிஜிட்டல் பொருளடக்கத்துக்கான உங்கள் அணுகுதலை உடனடியாக இரத்து செய்யலாம். அத்தகைய நிகழ்வில், நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள டிஜிட்டல் பொருளடக்கத்தின் பிரதிகள் அனைத்தையும் நீங்கள் கட்டாயம் அழித்துவிட வேண்டும்.
b. பொருந்தாத பொருளடக்கம். இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், மனதைப் புண்படுத்தும், அநாகரீகமான அல்லது ஆட்சேபகரமான பொருளுடைய காணொளிகளை நீங்கள் காண நேரலாம். இந்தக் காணொளிகள் பொருந்தாத பொருளடக்கம் அல்லது பிற விஷயங்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம், குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் இந்தச் சேவையை, முற்றிலும் உங்கள் தனிப்பட்ட அபாயத்துக்கு உட்பட்டே பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், அத்தகைய பொருளடக்கம் எதற்கும் அமேசான் பொறுப்பு ஆகாது. பொருளடக்க வகைகள், வடிவங்கள், பிரிவுகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவை வசதிக்காகவே வழங்கப்பட்டுள்ளன, அவற்றின் துல்லியத்தன்மைக்கு அமேசான் உத்தரவாதம் வழங்காது.
c. தகவல் தொடர்புகள். நாங்கள் உங்களுக்கு விளம்பர சலுகைகளை அனுப்பலாம் அல்லது மின்னணு ரீதியாக உங்களிடம் தொடர்புகொள்ளலாம், அவை மின்னஞ்சல், புஷ் அறிவிப்புகள், அல்லது உங்களுடைய Amazon தகவல் மையத்துக்கான பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கலாம், மேலும் நீங்கள் இத்தகைய தகவல்தொடர்புகளைப் பெற இதன் மூலம் சம்மதிக்கிறீர்கள் (நீங்கள் UK, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி அல்லது பிரேசிலில் வசிக்கும் வாடிக்கையாளர் இல்லை என்றால் மேலுள்ள வாக்கியம் உங்களுக்குப் பொருந்தாது). இந்தத் தகவல்தொடர்புகள் உங்கள் காணொளி சந்தையிடத்தின் Amazon தனியுரிமை அறிவிப்புகளின்படி இருக்கும் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது). சந்தைப்படுத்தல் தொடர்பான தகவல்களை Amazon Prime Video மூலம் பெறுவதை நிறுத்த, உங்களது கணக்கிலிருந்து சந்தைப்படுத்தலுக்கான தகவல்தொடர்பு முன்னுரிமைகளைப் புதுப்பிக்கவும்.
d. சேவையின் புதுப்பிப்புகள் மற்றும் மாற்றம். Amazon அவ்வப்போது சேவை (எந்தவொரு சந்தா உட்பட), எந்தவொரு டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும்/அல்லது மென்பொருளை மாற்றியமைக்கலாம் (i) ஏற்கனவே உள்ளதை மேம்படுத்த அல்லது புதிய, செயல்பாடு மற்றும்/அல்லது அம்சங்களைச் சேர்க்க, (ii) பயனர் அனுபவத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க, (iii) செயல்பாட்டு அல்லது தொழில்நுட்ப காரணங்களுக்காக, (iv) சேவையில் சேர்க்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் தரம் மற்றும் அளவைப் பராமரிப்பதை ஆதரிக்க, அல்லது (v) சட்ட அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக. நீங்கள் EU அல்லது UK -இல் வசிக்கிறீர்கள் என்றால் (அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி வேறுவிதமாகத் தேவைப்பட்டால்) அத்தகைய மாற்றங்கள் சேவைகளின் பயன்பாட்டினைப் பெரிதும் மற்றும் மோசமாகப் பாதித்தால் ("பொருள் மாற்றங்கள்") a) அவை நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்பே, பொருள் மாற்றத்திற்கான நோக்கம், நேரம் மற்றும் காரணம் குறித்து மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தொடர்பு மூலம் உங்களுக்கு அறிவிப்போம். b) பொருள் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்த 30 நாட்களுக்குள் நீங்கள் எந்த நேரத்திலும் சேவையை ரத்து செய்யலாம், மேலும் பொருந்தினால், உங்கள் மெம்பர்ஷிப் பில்லிங் காலத்திற்கு செலுத்தப்பட்ட எந்தவொரு கட்டணத்திற்கும் விகிதாசாரத் தொகையை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இந்தச் சேவை அல்லது சேவையின் ஏதாவது ஒரு பகுதியை, எந்தச் சமயத்திலும், முன்னறிவிப்பு எதுவும் இன்றி மாற்ற, நிறுத்தி வைக்க அல்லது கைவிடுவதற்கான உரிமையை Amazon பெற்றுள்ளது (பொருந்தக்கூடிய சட்டத்தின் தேவை அல்லது மேலே குறிப்பிடப்பட்டவை தவிர), மேலும் அத்தகைய உரிமைகளை நீங்கள் பயன்படுத்தினால் Amazon அதற்குப் பொறுப்பேற்காது, அந்த மாற்றத்தால் டிஜிட்டல் பொருளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உங்கள் திறன் பாதிக்கப்பட்டாலும்கூட.
e. திருத்தங்கள். சட்ட அல்லது ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய; பாதுகாப்பு காரணங்களுக்காக; ஏற்கனவே உள்ள அம்சங்களை மேம்படுத்த அல்லது சேவையில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க; தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைப் பிரதிபலிக்க; சேவையில் நியாயமான தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய; மற்றும் சேவையுடன் தொடர்புடைய திருத்தப்பட்ட விதிமுறைகளை அல்லது உங்கள் காணொளி சந்தைப் பகுதியில் ( இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது) இடுகையிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் சேவையின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிசெய்ய Amazon உரிமை கொண்டுள்ளது. உங்கள் மெம்பர்ஷிப்பை எந்த நேரத்திலும் ரத்து செய்வதன் மூலம் இந்த மாற்றங்களை நீங்கள் ஏற்காமல் இருக்க முடியும். சட்டத்தால் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் வரை, ஏதாவது மாற்றங்களுக்குப் பிறகு, நீங்கள் இந்தச் சேவை அல்லது மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது, நீங்கள் அத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். இருப்பினும், , சந்தா கட்டணம் அதிகரித்தால், அது உங்களது சந்தா புதுப்பிக்கப்படும் வரை பொருந்தாது.
f. பெற்றுள்ள உரிமைகள் ; தள்ளுபடி. இந்தச் சேவை, மென்பொருள் மற்றும் டிஜிட்டல் பொருளடக்கம் ஆகியவை அறிவுசார் சொத்தை அமைக்கிறது, அது சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. டிஜிட்டல் பொருளடக்கத்தின் காப்புரிமை பெற்றவர்கள் இந்த ஒப்பந்தத்தின்கீழ் நன்மையடையும் மூன்றாம் தரப்பினர் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துடன் நீங்கள் கண்டிப்பாக இணங்குவதை வலியுறுத்த அல்லது அமுல்படுத்த நாங்கள் தவறுவது, எங்கள் உரிமைகள் எதையும் தள்ளுபடி செய்வதாக அமையாது.
g. சர்ச்சைகள்/பயன்பாட்டு நிபந்தனைகள். இந்த ஒப்பந்தத்திலிருந்து அல்லது அது தொடர்பாகவோ, இந்தச் சேவை தொடர்பாகவோ ஏற்படும் ஏதாவது பிரச்சனை அல்லது கோரிக்கை எதுவும், கட்டுப்படுத்தும் சட்டம், உத்தரவாதங்களின் பொறுப்புத்துறப்பு மற்றும் பொறுப்பைக் கட்டுப்படுத்தல், கட்டுப்படுத்தும் நடுவர் குழு, மற்றும் வகை செயல்பாடு விலக்கு (பொருந்துமென்றால்) உங்கள் காணொளி சந்தையிடத்தின் பயன்பாட்டுக்கான Amazon நிபந்தனைகளில் உள்ள பிற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டது ( இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது). உங்கள் சார்பாகவும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும், சேவையைப் பயன்படுத்தி உங்கள் கணக்கின் கீழ் சேவையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் சார்பாகவும் நீங்கள் அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கின்றீர்கள். உங்களது உள்ளூர் சட்டங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டு, சில நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளும் உங்களுக்கு இருக்கலாம்.
h. பொறுப்பைக் கட்டுப்படுத்தல். உத்தரவாதங்களின் பொறுப்புத்துறப்பு மற்றும் உங்கள் காணொளி சந்தையிடத்தின் பயன்பாட்டுக்கான அமேசான் நிபந்தனைகளில் உள்ள பொறுப்பைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாமல் (இங்கேகுறிப்பிடப்பட்டுள்ளது) : (i) எந்தவொரு நிகழ்விலும் உங்களது மென்பொருள் பயன்பாடு அல்லது அதைப் பயன்படுத்த இயலாமை காரணமாக ஏற்படும் சேதங்கள் அனைத்துக்கும் நாங்கள் அல்லது எங்களது மென்பொருள் உரிமைதாரர்கள் உங்களுக்கு தரவேண்டிய பொறுப்பு ஐம்பது டாலர்கள் தொகையைவிட அதிகமாகாது($50.00); and (ii) எந்தவொரு நிகழ்விலும், நீங்கள் இந்தச் சேவை, டிஜிட்டல் பொருளடக்கம், அல்லது தகவல்கள், பொருட்கள் அல்லது உள்ளடங்கிய தயாரிப்புகள் அல்லது இந்தச் சேவை மூலம் வேறுவிதமாக உங்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டவற்றின் பயன்பாடு காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் எங்களுடைய அல்லது எங்களது டிஜிட்டல் பொருளடக்கத்தை வழங்குனர்களின் மொத்தப் பொறுப்பு, சேதம் நீங்கள் இழப்பீடு கோரும் சேதத்துடன் தொடர்புடைய டிஜிட்டல் பொருளடக்கத்தை வாங்குவதற்கு, வாடகைக்குப் பெறுவதற்கு, அல்லது பார்ப்பதற்காகக் கடந்த 12 மாதங்களில் நீங்கள் எங்களுக்குச் செலுத்திய தொகையைவிட அதிகமாகாது. தீர்வுகள் அவற்றின் முதன்மை நோக்கத்தை நிறைவேற்றத் தவறினாலும்கூட, இந்தப் பிரிவில் உள்ள கட்டுப்பாடுகள் உங்களுக்குப் பொருந்தும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அதிகார வரம்புகள் உட்பட சில அதிகார வரம்புகள், கூறப்பட்டுள்ள உத்தரவாதங்களுக்கு விலக்கு அளிப்பதை அல்லது குறிப்பிட்ட வகை சேதாரங்களுக்கான பொறுப்பைக் கட்டுப்படுத்துவது அல்லது விலக்கு அளிப்பதை அனுமதிக்காது. இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தினால், மேலுள்ள பொறுப்புத்துறப்புகள், விலக்குகள் அல்லது கட்டுப்பாடுகளில் ஒரு சில அல்லது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம், அதனால் உங்களுக்குக் கூடுதல் உரிமைகள் இருக்கலாம். ஜப்பானின் சட்டங்கள் உங்கள் சேவையைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தினால், இந்தப் பிரிவில் உள்ள பொறுப்பு வரம்பு Amazon -இன் தெரிந்தே செய்யப்படும் தவறு அல்லது கடுமையான அலட்சியத்திற்குப் பொருந்தாது.
i. தொடர்புத் தகவல். இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்தொடர்புகளுக்கு, தயவுசெய்து இங்கேபட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான அறிவிப்பு முகவரிக்கு எழுதவும்.
j. தனிப்பட்டு பொருள் விளங்குதல். இந்த ஒப்பந்தத்தின் ஏதாவது ஒரு விதிமுறை அல்லது நிபந்தனை, செல்லுபடியாகாதபட்சத்தில், பலனற்றதாக அல்லது ஏதாவது காரணத்தினால் அமுல்படுத்த முடியாததாகக் கருதப்பட்டால், அந்தப் பகுதி தனிப்பட்டதாகக் கருதப்பட்டு, மீதியுள்ள விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளின் செல்லுபடித்தன்மை மற்றும் அமுல்படுத்தலைப் பாதிக்காது.
k. உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள். இந்த ஒப்பந்தத்தின்படி சேவை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வழங்குவதற்கு எங்களுக்கு சட்டப்பூர்வ கடமை உள்ளது. சேவையில் அல்லது ஏதேனும் டிஜிட்டல் உள்ளடக்கத்தில் சிக்கல் இருந்தால், உங்கள் நாட்டின் சட்டங்கள் உங்களுக்கு கூடுதல் உரிமைகளையும் தீர்வுகளையும் வழங்கக்கூடும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்கள் உரிமைகளுக்கு கூடுதலாக இதுபோன்ற சட்டங்கள் பொருந்தும்.