இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்
prime

இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்

சீசன் 1
"இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்" என்பது தீவிரவாதி ஜராரை எதிர்த்துப் போராடும் டெல்லி காவல்துறை அதிகாரி கபீர் மாலிக்கின் திருப்பங்கள் நிறைந்த தொடராகும். இந்த தொடர் ஒரு பரபரப்பான துரத்தலையும், நீதிக்கான இடைவிடாத தேடலையும், கடமையின் போது செய்யப்படும் தியாகங்களையும் விவரிக்கிறது.
IMDb 5.020247 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டில்லி போலீஸ் ரேஸிங் டே

    18 ஜனவரி, 2024
    35நிமி
    13+
    இந்தியாவின் தலைநகரமான் டில்லியில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் ஏற்படுகிறது. பரபரப்பும் பயமும் அங்கு வாழும் அனைவரையும் அச்சுருத்தும் போது, அந்த நகரத்தின் அமைதியை நிலை நிறுத்த, அந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் பொறுப்பு டெல்லி போலீஸின் கைகளில் விழுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஒன் ராங் கால்

    18 ஜனவரி, 2024
    48நிமி
    13+
    குஜராத் ஏடிஎஸ் தலைவி தாரா ஷெட்டியின் உதவியுடன், கபீர் மற்றும் விக்ரம் ஆதாரங்களை ஆய்வு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் விசாரணை முட்டுக்கட்டைகளைச் சந்திக்க, அவர்களின் ஏமாற்றம் அதிக்கரிக்கிறது. எதிபாராவிதமாக தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அவர்களின் இருப்பிடத்தைக் டெல்லி போலீஸுக்கு தெரிவிக்க, அவர்களைப் பிடிக்க அது உதவலாம்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - த ஹன்ட்

    18 ஜனவரி, 2024
    31நிமி
    16+
    தீவிர தேடுதலுக்குப் பிறகு, கபீர் மற்றும் விக்ரம் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். டெல்லி போலீஸ் பயங்கரவாதிகளை கடுமையாக துப்பாக்கி சூட்டினால் எதிர்கொள்ள இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - த கோஸ்ட் இஸ் பேக்

    18 ஜனவரி, 2024
    49நிமி
    13+
    ஜரார், ஜெய்ப்பூர் நகரில் மீண்டும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துகிறான். இது போன்ற பல பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சாதித்தவன். குண்டுவெடிப்புகளைப் பற்றி அறிந்த கபீர், ஜெய்பூரில் யாருக்கும் தெரியாமல் ஒரு சட்டவிரோத விசாரணையை நடத்துகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - த லாஸ்

    18 ஜனவரி, 2024
    33நிமி
    13+
    கபீர் மற்றும் போலிசார் கோவாவில் விசாரணைகளை நடத்துகையில், ஒரு திருப்புமுனையை சந்திக்கின்றனர். இதற்கிடையில், ஜராரும் அவன் சகோதரன் சிக்குவும் நகரத்தின் மீது குண்டு வெடிப்பு நடத்த தயாராகிறார்கள். இந்த எபிசோட் முடிவடையும் தருவாயில், நஃபீசாவின் தாயார் குறித்த தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது. ஜராரின் உண்மை முகத்தை அறியும் நோக்கில் விசாரணையை முன்னெடுத்துச் செல்கின்றது போலிஸ் ஃபோர்ஸ்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - த ட்ரூத்

    18 ஜனவரி, 2024
    36நிமி
    16+
    கபீர் தர்பங்காவை அடைந்து, ஜராரின் உண்மையான அடையாளத்தைப் பற்றி நஃபீசாவைவிடம் விவரிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஃபீசா மயக்கமடைய, கபீர் அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார். ஜராரின் சுய ரூபத்தை அறிந்த நஃபீசா போலீசில் சரணடைந்து ஜரார் பங்களாதேஷில் இருப்பதை வெளிப்படுத்துகிறார். கபீர், தாரா ஷெட்டியுடன் ஜராரை எல்லை தாண்டி பிடிக்க, உள்துறை அமைச்சரிடம் அனுமதி பெற டெல்லி விரைகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ஹோம் கம்மிங்

    18 ஜனவரி, 2024
    37நிமி
    16+
    உள்துறை அமைச்சரின் ஒப்புதலோடு ஜராரைக் கண்டுபிடிக்க கபீர் பங்களாதேஷ் செல்கிறார். ஜக்தாப் மற்றும் ராணாவின் உதவியுடன், ஜராரை ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு, கபீர் இறுதியில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியை கைது செய்து மீண்டும் இந்திய மண்ணிற்கு கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறான்.
    Prime-இல் சேருங்கள்