Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198922 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - குறிப்பு
    17 செப்டம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஒரு சிறந்த மஸாஜை இலவசமாக பெற திட்டமிடும் ஜெர்ரி , ஜார்ஜ், எலினா மற்றும் ஜெர்ரிக்கு மருத்துவ காரணங்களால் தகுதியான வல்லுநர் மூலம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம் என ஒரு குறிப்பை எழுதி கையெழுத்திட்டு தருமாறு பல்மருத்துவ நண்பரிடம் கேட்டுகிறான். பின்னர் அவர் காப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும்போது அவரின் பெயரையும், வேலையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறான் ஜெர்ரி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - உண்மை
    24 செப்டம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஒரு புதிய காதலியுடன் ஒரு கொடூர மாலையை கழித்தபின்னர், தாங்கள் இருவரும் பிரிந்துவிடவேண்டும் என அவளிடம் கூறுகிறான் ஜார்ஜ். பிரிவதற்கு என்ன காரனம் என சொல்லவேண்டும் என அவள் வலியுறுத்தும்போது , அதற்கு ஒத்துக்கொள்ளும் தவறை செய்கிறான் ஜார்ஜ். இதற்கிடையில் எலைனின் அறையில் வசிக்கும் பெண்ணுடன் கிராமரின் காதல் சூடு பிடிக்க பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்கிறாள் எலைன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பேனா
    1 அக்டோபர், 1991
    22நிமி
    TV-PG
    ஜெர்ரியும், எலைனும் ஃபுளோரிடாவிலுள்ள ஜெர்ரியின் பெற்றோரை சந்திக்கின்றனர். அங்கு ஜெர்ரியின் தந்தைக்கு அந்த குடியிருப்பு பகுதி சங்கத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அன்றைய இரவு விருந்தில் சங்க உறுப்பினர்கள் ஒருவரிடம் இருந்த வின்வெளி வீரர்களுக்கான பேனாவை ரசிக்கிறான். பின்னர் அந்த பேனாவை ஜெர்ரி பரிசாக ஏற்றுக்கொள்வது அவனது குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - நாய்
    8 அக்டோபர், 1991
    22நிமி
    TV-PG
    ஜெர்ரி வீட்டில் மாட்டிக்கொள்கிறான். அங்கு நாயை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்படுகிறது. ஜெர்ரி இல்லாவிட்டால் தங்களுக்குள் எதுவும் பொதுவாக இல்லை என்பதை ஜார்ஜும் எலைனும் உணர்கின்றனர். இதற்கிடையில் இதுவே தனக்கும் தனது காதலிக்குமான இறுதி என்றும் கிராமர் சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - நூலகம்
    15 அக்டோபர், 1991
    22நிமி
    TV-PG
    1971ம் ஆண்டு இரவல் பெற்ற புத்தகத்தை திரும்பத் தருமாறு நூலகம் ஜெர்ரியை தொடர்பு கொள்கிறது. ஒரு நாளைக்கு 5 செண்ட் வீதம் 20 வருடங்களுக்கு அபராதம் 50,000 டாலர்களாக இருக்கலாம் என கிராமர் கூறுகின்றான். ஜெர்ரியும் ஜார்ஜும் வளர் இளம்பருவத்தினராக இருந்த காலகட்டத்தில் ஜெர்ரி மிகச்சரியாக எப்போது அந்த புத்தகத்தை திரும்ப கொடுத்தான் என்பதை நினைவுகூற ஜெர்ரி முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - வாகன நிறுத்துமிடம்
    29 அக்டோபர், 1991
    22நிமி
    TV-PG
    வாகன நிறுத்துமிடத்தில் ஜெர்ரி மற்றும் நண்பர்கள் வழி தவறிவிடுகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - காபி கடை
    5 நவம்பர், 1991
    22நிமி
    TV-PG
    தனது குடியிருப்புப் பகுதியின் காபி கடையில் சிலரே உணவருந்துவதை பார்த்து கடை உரிமையாளருக்காக பரிதாபப்படுகிறான் ஜெர்ரி. வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி என அவன் ஆலோசனைகளை வழங்குகிறான்.ஆனால் அதனால் உணவகம் முன்பைவிட மோசமான நிலையை எட்டுகிறது. தனது காதலியின் ஆய்வின் புத்திசாலித்தனத்தை அளவீடும் சோதனைக்கு ஒப்புக்கொள்கிறான். ஆனால் தான் புத்திசாலி இல்லை என தெரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறான் ஜார்ஜ்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஒளிப்பதிவு கருவி
    12 நவம்பர், 1991
    22நிமி
    TV-PG
    தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் டேப் ரிகார்டரில் கிசுகிசுத்துவைத்த மர்மப் பெண் யார் என தெரிந்துகொள்ள ஜெர்ரி பரபரப்பாக தேடுகிறான். ஆனால் அது தனது குரல்தான் என எலைன் ஜார்ஜிடம் சொல்லும்போது ஜார்ஜ் அவளை காதல் கொண்ட கண்களுடன் பார்க்கிறான். அவளை கவர திட்டமிட்டு தலைமுடி வளர பயன்படும் ஒரு பழங்கால மருந்தை அவன் வாங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - மூக்கு
    19 நவம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஒரு கவர்ச்சியான நடிகையை தொடர்ந்து வெளியில் அழைத்துச்செல்வதா என்பதில் ஜெர்ரியின் உணர்வுகளுக்கும் அவனது மூளைக்கும் ஒரு பெரிய விவாதமே ஏற்பட்டது. இதற்கிடையில் நல்ல அழகான ஒரு பெண்ணின் பெரிய மூக்கை உற்றுப்பார்ப்பதை ஜார்ஜால் தவிர்த்த்க்கொள்ள முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தவிப்பு
    26 நவம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஜார்ஜ் தன்னுடன் வெளியே வந்த பெண்ணுடன் புறப்பட்டு சென்றுவிட, எலைனும் ஜெர்ரியும் பார்ட்டி அரங்கில் மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - மற்றொரு பக்கம்
    3 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஒரு வயதானவருடன் நட்பு பாராட்டுவதில் உள்ள சிறப்புகளை ஜெர்ரியிடம் விவரித்த பின்னர், தனது 66 வயது காதலனுடன் உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறாள் எலைன். ஜெர்ரியின் அப்பார்ட்மெண்ட் முன்பாகவே அவருக்கு மாரடைப்பு வருவது மேலும் பல பிரச்னைகளை கிளப்புகிறது. நிலவரத்தை மேலும் மோசமாக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தும் புதிய பணியில் ஜார்ஜ் சொதப்ப , போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - சிவப்பு புள்ளி
    10 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    குடிபழக்கத்தை விட்டு திருந்திய எலைனின் காதலன் மீண்டும் குடிக்கத் தொடங்கும்போது எலைனும் அவனும் பிரிய ஜெர்ரி காரணமாகிவிடுகிறான். தனக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்ததற்காக எலைனுக்கு தள்ளுபடி விலையில் ஒரு ஸ்வெட்டரை வாங்கி பரிசளித்து தனது நன்றியை காட்டுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - சுரங்க பாதை
    7 ஜனவரி, 1992
    23நிமி
    TV-PG
    சுரங்க ரயிலை பயன்படுத்துவது ஜெர்ரிக்கும்ன், அவனது நண்பர்களுக்கும் சாதமாகவும் இருக்கிறது, பாதகமாகவும் அமைந்துள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - வினையான வேடிக்கை பேச்சு
    14 ஜனவரி, 1992
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி செய்யும் குறும்பு ஜார்ஜுக்கும் அவனது புதிய காதலிக்கும் இடையே பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - தற்கொலை
    28 ஜனவரி, 1992
    23நிமி
    TV-PG
    கோமாவில் இருக்கும் தனது அண்டைவீட்டுக்காரன் விழித்து வந்து அவனுடைய காதலியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதை தெரிந்துகொள்வான் என கவலை கொள்கிறான் ஜெர்ரி. ஒரு அல்சர் சோதனைக்காக பட்டினி கிடந்து புத்தி பேதலிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் எலைனா. விமானம் நொறுங்கிவிடும் என தனக்கு ஏற்பட்டுள்ளா பயம் தொடர்பாக ஜோதிடரிடம் கேட்க விரும்பி தனது கரீபியன் பயணத்தை தள்ளிப்போடுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - சரி செய்
    4 பிப்ரவரி, 1992
    23நிமி
    TV-PG
    வேலையில்லாமல், காதலி இல்லாமல் இருக்கும் ஜார்ஜுக்கு தகுந்த இணையை தேடும் பொறுப்பை ஜெர்ரியும் எலைனும் எடுத்துக்கொள்கின்றனர். எலைனின் தோழி ஒருத்தியுடன் ஜார்ஜை சேர்த்து வைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - காதலன் 1 & 2
    11 பிப்ரவரி, 1992
    46நிமி
    TV-PG
    தனது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும்போது பேஸ்பால் வீரர்களில் ஒருவரான கீத் ஹெர்னாண்டெஸ்ஸை சந்திக்கிறான் ஜெர்ரி. எலைனுடன் கீத் நட்பாக பழக தொடங்க ஜெர்ரியால் எலைனுடன் நேரம் செலவழிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு அளிக்கும் உதவிகளை மேலும் தொடர ஒரு அரசு அதிகாரியின் அழகில்லாத மகளை அழைத்துக்கொண்டு வெளியே சுற்றுவது உள்ளிட்ட எதைவேண்டுமானாலும் செய்ய தயாரகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - கார் ஓட்டுநர்
    25 பிப்ரவரி, 1992
    23நிமி
    TV-PG
    விமானநிலையத்தில் ஜார்ஜின் கார் பழுதடைந்துவிட, வேறு யாருக்கோ காத்திருக்கும் ஓட்டுநரிடம், அவன் அழைத்துச் செல்ல வந்திருப்பது தங்களைத்தான் என நம்பச்செய்கிறான் ஜெர்ரி. ஆனால் அந்த காரில் உண்மையிலேயே பயணம் செய்யவிருந்தது ஒரு நவீன நாஜி என அறியும் போது இது அபாயமான பயணம் என உணர்கின்றனர். அவர்க்ளை போராட்டம் நடைபெறும் இடத்திற்குஅழைத்துசெல்லப்பட காத்திருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - நல்ல சமாரியன்
    3 மார்ச், 1992
    23நிமி
    TV-PG
    விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் ஒரு வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கிறான் ஜெர்ரி. வாகனத்தை ஓட்டியது ஒரு அழகான் பெண் என தெரியவரும் போது அவன் காரை ஓட்டியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கத்தையே மறந்துவிடுகிறான் அவன். வேறொருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானவுடன் ஜார்ஜ் வேறு நகருக்கு இடம்பெயர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - உறவு முறிப்பு
    24 மார்ச், 1992
    24நிமி
    TV-PG
    ஜெர்ரியின் நண்பர்களான எலைன், ஜார்ஜ் மற்றும் கிராமர் யாங்கீஸ் பேஸ்பால் போட்டியை முக்கியஸ்தர்கள் பகுதிலிருந்து பார்பதற்கு ஏற்பாடுகளை செய்கிறாள் ஜெர்ரியின் புதிய காதலி. ஆனால் அந்த மூவரும் ஒரு சாதாரண சண்டைக்காக தூக்கி எறியப்படும்போது ஜெர்ரி தனது நண்பர்களுக்காக குரல் கொடுத்து அந்த பெண்னுடனான உறவை முறித்துக்கொள்வதாக கூறுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - வாகனம் நிறுத்துமிட பிரச்சனை
    21 ஏப்ரல், 1992
    23நிமி
    TV-PG
    தொலைக்காட்சியில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை கண்டு ரசிக்கிறான் ஜெர்ரி. அவனிடமிருந்து இரவல் பெற்ற காரை திரும்ப ஒப்படைக்கும் ஜார்ஜும் எலைனும், அந்த காரிலிருந்து வெளிப்படும் விநோத சத்தங்களுக்கு நம்பமுடியாத ஒரு விளக்கத்தை கூறுகின்றனர். இது போதாதென ஜார்ஜும் வாகனங்களை பார்க் செய்வது குறித்து மற்றொரு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - சாவி
    5 மே, 1992
    23நிமி
    TV-PG
    கிராமர் அடிக்கடி ஜெர்ரியின் வீட்டுக்கு வருவதால், கிராமரிடம் அளிக்கப்பட்ட கூடுதல் சாவியை திரும்ப தர வலியுறுத்துகிறான் ஜெர்ரி. இதனால் அவர்களிடையே இருந்த திறந்த நட்பு முடிவுக்கு வருகிறது. இதனால் வருத்தமடையும் கிராமர் கலிபோர்னியாவுக்கு சென்று அங்கு பல சுவாரஸ்யமான மனிதர்களை சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Andy AckermanTom Cherones
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.