Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

காஸ்மிக் லவ்

சீசன் 1
இந்த தனித்துவமான பரிசோதனையில், நான்கு ஒற்றையர்கள் ஜோதிடப்பொருத்தம் மூலம் வாழ்க்கைத்துணையை தேட முயல்கின்றனர். அவர்களது காதல் சாகசம் நடைபெறும் இடம், மாய வழிகாட்டி ஆஸ்ட்ரோ சேம்பர் நடத்தும் ஓய்விடம். அவர்கள் பழகுகின்றனர், பொருந்துகின்றனர், டேட் செய்கின்றனர், வெளியேற்றுகின்றனர், இறுதியாக வாழ்வின் மிகப்பெரிய முடிவெடுக்கின்றனர்…வெறும் ஜோதிடப்படி தங்களுடன் பொருந்தியவரை மணப்பார்களா?
IMDb 3.9202210 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜோதிடப் பொருத்தம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    1 ம 4 நிமிடம்
    16+
    நான்கு கூறுகளும் காஸ்மிக் வளாகம் வருகின்றனர், அங்கே தகுதிவாய்ந்த ஒற்றையர்களை சந்திக்கின்றனர். பொருத்தங்கள் அறிவிக்கப்படும் முன் டேட்டில் செல்கின்றனர்; சிலர் ஜோதிட ஆலோசனையை பின்பற்றுகின்றனர், சிலர் பழைய பழக்கங்களுக்கு செல்கின்றனர். பொறிகள் தட்டுகின்றன, ஒவ்வொரு கூறின் முதல் பொருத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு முந்தைய பிணைப்புகள் சோதனைக்குள்ளாகின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - பௌர்ணமியாக இருக்க வேண்டும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    57நிமி
    16+
    ஒரு குழு பணியின் போது கூறுகள் புதிய பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர், அதனால் குழப்பம் நிலவுகிறது. ஆஸ்ட்ரோ சேம்பரின் ஆலோசனையை கேட்பதில் மரியா திணறுகிறாள், பரிசோதனை, தீயணைப்பு வீரர் கானரை, அழுத்துகிறது. கூறுகளின் அடுத்த பொருத்தம் அறிவிக்கப்படுகிறது, ஒரு கடற்கரை பார்ட்டியில், ஃபீபி தான் தவறாக வழி நடத்தப்பட்டதை அறிகிறாள், நிலைமை சூடேறுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - மெர்குரி பின்னோக்கி செல்கிறது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    52நிமி
    16+
    ஆஸ்ட்ரோ சேம்பர் தொடர்ந்து வழிநடத்துகிறது, இதற்கிடையில் கூறுகள் தங்களது பொருத்தங்களை மறுபரிசீலணை செய்ய வளாகத்தின் மற்ற பிணைப்புகள் தூண்டுகின்றன. நோயெல் தன் பல பிணைப்புகளை சமாளிக்க முயல்கிறான், ஃபீபியோ ஒரு பிணைப்பாவது ஏற்படாதா என்று தேடுகிறாள். மரியாவிற்கு வருத்தமளிக்கும் செய்தி கிடைக்கிறது, ஆனால் ஒரு எதிர்பாராத பொருத்தம் அறிவிக்கப்பட்டு ஆச்சரியப்படுகிறாள், அதனால் மீண்டு எழுகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - இரு க்ரிஸ்களின் கதை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    54நிமி
    16+
    ஃபீபி கஷ்டமான உண்மைகளை உரைக்கிறாள், அதனால் ஃபில்லுடன் விவாதம் ஏற்படுகிறது, இதற்கிடையில் மரியாவின் பொருத்தங்களில் ஒருவர் அவளது கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறார். பின், ஏற்கனவே உள்ள பதட்ட சூழ்நிலையில், கூறுகள் தங்களது நான்காவது மற்றும் இறுதி பொருத்தத்தை அறிகின்றனர். பொருத்தங்கள் விஷயத்தில் காஸ்மிக் வளாகத்தில் எல்லாருக்கும் மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது, முக்கியமாக க்ரிஸ் ஆருக்கு.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - இதய கிரகணம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    52நிமி
    16+
    இப்பொழுது நான்கு பொருத்தங்களும் கூறுகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை நன்கு புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது… ஒரு குழு டேட். தான் காதலிக்க மீண்டும் தயார் என்று ஃபீபி தன் பொருத்தங்களிடம் அறிவிக்கிறாள், பிறகு ஆஸ்ட்ரோ சேம்பர் ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது, அதனால் கூறுகள் நிதானம் இழக்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - ஸ்கார்பியோ சீசன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    57நிமி
    16+
    மரியா தன் முடிவை எடுக்கிறாள், மொத்த வளாகமும் அதிர்ச்சியில். நோயெலும் மரியாவும் தங்களது உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர், கானர் முதல் கியரிலேயே மாட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு குழு பணி ஆச்சரியமிக்க உணர்ச்சிமிகுதியான தருணத்தை ஏற்படுத்துகிறது, ஆஸ்ட்ரோ சேம்பரின் ஆலோசனையை கேட்க கடைசி முறையாக ஃபீபி முயற்சிக்கிறாள், ஆனால் துரோகம் அவள் கண்களை மறைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - விண்வெளி வினாக்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    58நிமி
    16+
    எந்த பொருத்தத்துடன் நிச்சயம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகள் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது, ஆனால் முதலில் ஆஸ்ட்ரோ சேம்பருக்கு வந்த புதிய நபரால் ஆச்சரியத்திற்கு உள்ளாகின்றனர். மணமுடிக்க கேட்பது நெருங்கிக் கொண்டிருக்க, தன் சமீபத்திய பொருத்தத்துடன் நோயெலின் பிணைப்பு வலுக்கிறது, மரியா தனக்கான தேர்வுகளை அலசுகிறாள், கானர் தன் மிகப்பெரிய பயத்தை சந்திக்கிறான்… மாபெரும் முடிவை எடுக்க வேண்டுமா?
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - சேர்ந்து உருவாக்குவோம் எதிர்காலம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    50நிமி
    16+
    மணமுடிக்க கேட்டதும் முக்கிய தருணங்கள் நிகழ்கின்றன, பிறகு மீதமுள்ள கூறுகள் தங்களது வுட்பிக்களுடன் சேர்ந்து இருக்க வழிசெய்கின்றனர். நிச்சயதார்த்தத்திற்கான விறுவிறுப்பு குறைகையில், கூறுகளும் அவர்களது துணைகளும் நிலைமையின் யதார்த்தத்தை, ஒருவரையொருவர் எவ்வளவு அறிந்திருக்கின்றனர், சமீபத்தில் ஏற்படுத்திக்கொண்ட உறவில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், என்பதை பற்றிய சிந்தனைகளுடன் போராடுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ1 எ9 - புகுந்த வீட்டாரை சந்திக்க காஸ்மிக் வழிகாட்டல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    45நிமி
    16+
    திருமணங்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், கூறுகளும் அவர்களின் வுட்பிக்களும் பெற்றோர்களை சந்திக்கும் நேரம் இது. முதல் சந்திப்பேலேயே எப்படி ஈர்க்கலாம் என்று ஆஸ்ட்ரோ சேம்பர் ஆலோசனை அளிக்கிறது, ஆனால் இவர்கள் திருமணத்திற்கு தயார் என்று இவர்களது மாமனார், மாமியார்களை சம்மதிக்க வைக்க ஜோதிடம் போதுமானதா? இறுதியில், கானர் முடிவெடுத்தாக வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ1 எ10 - கிரகங்களில் காதல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 ஆகஸ்ட், 2022
    53நிமி
    16+
    திருமண உடை வாங்கவும், பேச்சிலர், பேச்சிலரெட் பார்ட்டி கொண்டாடவும் மீதமுள்ள தம்பதிகள் வளாகத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடைசி நிமிட சந்தேகங்கள் நிச்சயமானவர்களை நிலைகுலையச் செய்கிறது, எடுக்கப்போகும் முடிவின் தீவிரத்தை உணர்வதால். பின், ஒவ்வொரு ஜோடியும் மணப்பந்தலில் இறுதி முடிவை எடுக்கின்றனர்… “சம்மதம்” என்று சொல்லி காஸ்மிக் லவ்வை ஏற்பார்களா அல்லது தங்களது காதல் விதியிலிருந்து விலகிச் செல்வார்களா?
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மைக்கேல் ஷெய்
தயாரிப்பாளர்கள்
ராஜா அஹ்மத்ஜேம்ஸ் பார்க்கர்விகி காச்சியடோர்ஜெஸிக்கா காஸ்ட்ரோநேத்தன் காயில்மைக்கேல் ரூர்க்ஹஷீம் வில்லியம்ஸ்
நடித்தவர்கள்
க்ரீ சம்மர்மரியா ராட்ரிகெஸ்நோயெல் ஆலென்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.