Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பேங் பேங் பேபி

சீசன் 1
1986. 16 வயது சிறுமி அலீச்செ, இத்தாலியின் வடக்கில் ஒரு சிறுநகரில் வசிக்கிறாள். என்றோ இறந்ததாக எண்ணியிருந்த தந்தை உயிரோடிருப்பதை அறிந்ததும், அவள் வாழ்க்கை திடீரென மாறுகிறது. தன் தந்தை மீதுள்ள பாசத்தால் அலீச்செ மிலானின் பயங்க கிரிமினல் உலகமான, 'நித்ராங்கெட்டா'விற்குள் இறங்குகிறாள். அவ்வுலகை விட்டு வெளியேற அவள் முயலும் நேரம், மிகவும் காலதாமதமாகி இருக்கலாம்.
IMDb 6.8202210 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மரணம் வேடிக்கையல்ல
    30 ஜூன், 2022
    52நிமி
    16+
    அலீச்செ டிவியில் சூயிங் கம் விளம்பரத்தை கண்டாலும், குமிழிகளால் மக்களைக் கொல்ல முடியாது என அவளுக்குத் தெரியும். அலீச்சே ஜெமத்தையோ, 16, தாயோடு அமைதியான நகரான வெனெட்டோவில் வசிக்கிறாள். என்றோ இறந்ததாக நம்பிய தந்தை சாந்தோ மரியா உண்மையில் உயிரோடும், ஒரு குற்றவியல் குடும்பத்தின் அங்கமாகவும் இருப்பதைக் கண்டுபிடிக்கையில், கூச்ச சுபாவமுள்ள, நயமற்றவளாக இருந்த அவள் வாழ்க்கை ஒரு திருப்பத்தை எடுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பரோனேக்கள்
    30 ஜூன், 2022
    56நிமி
    16+
    குழந்தைப் பருவத்தில், தந்தையின் குடும்பத்தைக் குஷியான அமெரிக்கக் குடும்பங்களில் ஒன்றாக அலீச்செ நினைவு கூர்கிறாள்... ஆனால் அது அப்படியா?அலீச்சேவின் தந்தை சாந்தோ, ஊ டாமரினோவின் சடலத்தை அப்புறப்படுத்தும் பணியை அவளுக்குத் தரும் அதே சமயம் அலீச்செவின் பாட்டி நோனா லீனாவும், தயவு தாட்சண்ணியமற்ற ஃபெரோ உறவினர்களும் இறந்த மனிதனைத் தேடுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஒரு பயோனிக் இதயம்
    27 ஏப்ரல், 2022
    51நிமி
    18+
    பயோனிக் வுமனைப் போலவே, ஒரு இரும்பு இதயத்தைப் பெறுவதாக அலீச்செ கனவு காண்கிறாள். அந்த இதயமும் அவள் தந்தையின் இதயமும் ஒன்றா? அலீச்சே தந்தைக்கு உதவ, அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ள அவளுக்கு உதவுவதாக அவர் உறுதியளிக்கிறார். நெரயோ ஃபெரோவும், அவன் உறவினர் அசுன்தாவும், சாந்தோவை கடினமான சூழ்நிலையில் தள்ளும் ஆச்சரியமான ஒன்றைக் கண்டுபிடிக்கும் அதே சமயம், காணாமல் போன டாமரினோவைப் பற்றியும் விசாரிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - விதியின் விளையாட்டு
    30 ஜூன், 2022
    52நிமி
    16+
    யாராக இருக்கிறோமோ அதுவே நாம், அனைவரும் அவரவர் விதியை பின்பற்ற வேண்டும். டாமரினோ காணாமல் போனதில் சதித் திட்டம் இருப்பதாகச் சந்தேகிக்கும் நித்ராங்கெட்டா சாந்தோவின் வேற்றிடச் சான்றைச் சரி பார்க்க முடிவு செய்கிறது. சாந்தோ மீண்டும் தன் மகளிடம் உதவி கேட்கிறார். இதற்கிடையில், லாஸ்ஸி என்ற இனிமையான கோலி வகை நாய் ஒரு பயங்கரத்தைக் கண்டுபிடிக்கிறது…
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஆட்டம் முடிந்தது
    30 ஜூன், 2022
    49நிமி
    16+
    சில சமயம் அலீச்செவின் வாழ்க்கை பாக்மேனை போலவே. இருவருக்குமே முக்கிய குறிக்கோள், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவது. டாமரினோவின் ஒரு கை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அலீச்செவின் நிலைமை விரைவில் மோசமடைய, அவர்கள் ஜ்யுசெப்பினாவோடு தப்பி ஓட வேண்டும் என்று சாந்தோவை கூறத் தூண்டுகிறது. ஆனால் நேரயோவும், அசுன்தாவும் அவர்களின் பாதையில் இருக்கும் போது, ​​அவர் திட்டமிட்டபடி எதுவும் சரியாகப் போகாது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - வியக்கதகும் ஒன்று
    30 ஜூன், 2022
    44நிமி
    16+
    ப்ரூஸ் பேனரா, ஹல்கா? அலீச்சே யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நேரம் வந்தது... சாந்தோ, நெரயோவால் காயப்பட்டு, பிழைக்க முடியாமல் போகலாம். இருப்பினும், இறுதியாக தன் தந்தையின் உண்மையான சொரூபத்தைப் பார்த்த போதிலும், அலீச்செ அவரது உயிரைக் காப்பாற்ற முடிவு செய்து முயல்கிறாள். ஆனால் நெரயோவின் அச்சுறுத்தலுடன், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - பூம்!
    30 ஜூன், 2022
    56நிமி
    18+
    "தி டே ஆஃப்டர்" போல, அலீச்செ ஒரு பேரழிவுக்குப் பின் டிஸ்டோபியாவில் என்ன செய்ய முடியும் எனத் தன்னையே கேட்டுக்கொள்கிறாள். சாந்தோ, கேப்ரியலாவின் தொழிற்சாலையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நிலைமையைச் சரி செய்ய, அலீச்செ ஒரு முக்கிய நித்ராங்கெட்டா தலைவரின் சந்திப்புக்கு ஒப்புக்கொள்கிறாள்: மர்மமான திரு. ஃப்ரிட்ஸ். இதனிடையே நோனா லீனா ஃபெரோஸுடன் திட்டமிடப்படாத, விரும்பத்தகாத சூழ்நிலையில் ஈடுபட்டுள்ளார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஏஞ்சல்ஸ்
    30 ஜூன், 2022
    54நிமி
    16+
    பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதை சார்லீ'ஸ் ஏஞ்சல்ஸ் அலீச்செவிற்கு நினைவூட்டுகிறது. ஏன் தெரியுமா? ஏனெனில் அது உண்மை. நெரயோ ஃபெரோ இப்போது சாந்தோவின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முன்பைவிட நெருக்கமாக உள்ளான். இதையறிந்த அலீச்செ, தன் தந்தையை காலாப்ரியாவிற்குப் பாதுகாப்பாகவும் நலமாகவும் கொண்டு செல்ல நோனா லீனாவிடம் உதவி கேட்கிறாள். அப்படிச் செய்யத் தன்னை ஆபத்தான சூழ்நிலையில் பணயம் வைக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - சரியான நகர்வைச் செய்
    30 ஜூன், 2022
    48நிமி
    16+
    ரூபிக் க்யூபின் கடைசி நகர்வு மிகவும் கடினமானது, மேலும் அலீச்செ இந்த புதிரைத் தீர்க்க கவனமாகச் சிந்திக்க வேண்டும். அலீச்செவின் புண்ணியத்தால், அவளுடைய தந்தை நெரயோவிடமிருந்து தப்பிக்க முடிகிறது. காலாப்ரியாவுக்குச் செல்வது தனக்கு மரண தண்டனை விதிக்கும் என்று உறுதியாக நம்பிய சாந்தோ, தன் மகளோடு தப்பியோட முயல்கிறார். அங்கு சென்றதும், அலீச்செ நோனா லீனாவை நம்பியதில் தவறு செய்ததை உணர்ந்தாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ1 எ10 - பேங் பேங்!
    30 ஜூன், 2022
    49நிமி
    16+
    உங்கள் வாழ்க்கை ஒரு ஜப்பானிய கார்ட்டூன் போல என என்றாவது உணர்ந்திருக்கிறீரா? அலீச்செவிற்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரியும்: அப்படி இருந்தால், அற்புதமாக இருக்கும். சாந்தோ அலீச்செவை எல்லாம் இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளார். ஒன்று, சாட்சிப் பாதுகாப்பிற்காக அவரோடு செல்லலாம் அல்லது சிறைக்குப் போகலாம். ஆனால் அலீச்செ தனக்கு மூன்றாவதாக, ஒரு தீர்க்கமான தீவிர தெரிவைக் காண்கிறாள். அதைச் சமாளிக்க அவள் தயாரா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பேங் பேங் பேபி - பருவம் 1 : அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
பேங் பேங் பேபி - பருவம் 1 : அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
1நிமி18+
1986. 16 வயது சிறுமி அலீச்செ, இத்தாலியின் வடக்கில் ஒரு சிறுநகரில் வசிக்கிறாள். என்றோ இறந்ததாக எண்ணியிருந்த தந்தை உயிரோடிருப்பதை அறிந்ததும், அவள் வாழ்க்கை திடீரென மாறுகிறது. தன் தந்தை மீதுள்ள பாசத்தால் அலீச்செ மிலானின் பயங்க கிரிமினல் உலகமான, 'நித்ராங்கெட்டா'விற்குள் இறங்குகிறாள். அவ்வுலகை விட்டு வெளியேற அவள் முயலும் நேரம், மிகவும் காலதாமதமாகி இருக்கலாம்.
1986. 16 வயது சிறுமி அலீச்செ, இத்தாலியின் வடக்கில் ஒரு சிறுநகரில் வசிக்கிறாள். என்றோ இறந்ததாக எண்ணியிருந்த தந்தை உயிரோடிருப்பதை அறிந்ததும், அவள் வாழ்க்கை திடீரென மாறுகிறது. தன் தந்தை மீதுள்ள பாசத்தால் அலீச்செ மிலானின் பயங்க கிரிமினல் உலகமான, 'நித்ராங்கெட்டா'விற்குள் இறங்குகிறாள். அவ்வுலகை விட்டு வெளியேற அவள் முயலும் நேரம், மிகவும் காலதாமதமாகி இருக்கலாம்.
1986. 16 வயது சிறுமி அலீச்செ, இத்தாலியின் வடக்கில் ஒரு சிறுநகரில் வசிக்கிறாள். என்றோ இறந்ததாக எண்ணியிருந்த தந்தை உயிரோடிருப்பதை அறிந்ததும், அவள் வாழ்க்கை திடீரென மாறுகிறது. தன் தந்தை மீதுள்ள பாசத்தால் அலீச்செ மிலானின் பயங்க கிரிமினல் உலகமான, 'நித்ராங்கெட்டா'விற்குள் இறங்குகிறாள். அவ்வுலகை விட்டு வெளியேற அவள் முயலும் நேரம், மிகவும் காலதாமதமாகி இருக்கலாம்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiItaliano [descrizione audio]ItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Türkçe日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano [CC]日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மிக்கேலே அல்ஹைக்மார்கரிட்டா ஃபெர்ரிஜுசெப்பே பொனிட்டோ
தயாரிப்பாளர்கள்
லோரேன்சோ மியலி
நடித்தவர்கள்
அரியானா பெக்கரோனிஆத்ரியானோ ஜனீனிஅந்தோனியோ ஜெரார்டி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.