Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பாஷ்

ஒரு மருத்துவ இயற்பியலாளர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த அபாயமான கதிரியக்கப் பொருள் காணாமல் போன பின்பு, தான் சேவை செய்யவும் காக்கவும் சபதம் எடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவு அபாயம், ஒரு சிக்கலான எஃப்பிஐ புலனாய்வு, மற்றும் ஒரு சிக்கலான கொலை வழக்கு – இவற்றின் மத்தியில் தான் நிற்பதை அறிகிறார் துப்பறிவாளர் ஹாரி பாஷ்.
IMDb 8.5201410 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - த ஓவர்லுக்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    48நிமி
    18+
    கிட்டதட்ட ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், டெய்ஸி க்ளெய்ட்டன் கொலை வழக்கில் அதிகமாக உழைத்து வரும் பாஷ், மருத்துவ இயற்பியலாளர் ஸ்டான்லி கென்ட்டின் கொலையை விசாரிக்க லேக் ஹாலிவுட் ஓவர்லுக்குக்கு அழைக்கப் படுகிறார். தனது துறையில் ஊழல் அதிகாரிகளைப் பிடிக்க எட்கர் வலைவீசுகிறார், மேடி புதிய பயிற்சிப்பணியைத் தொடங்குகிறாள், மேயர் பதவிக்கான தனது பிரச்சாரத்தைத் தலைவர் இர்வின் இர்விங் தொடங்குகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ6 எ2 - குட் பீப்பிள் ஆன் போத் சைட்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    44நிமி
    18+
    கென்ட்டின் விதவையின் ஒரு தகவலானது, ஓவர்லுக் கொலையுடனும் திருடப்பட்ட கதிரியக்க சீஸியத்துடனும் தொடர்புள்ளவர்களாக இறையாண்மை குடிமக்களின் குழுவை பாஷும் எஃப்பிஐயும் சந்தேகிக்க செய்கிறது. ஆனால் அவர்கள் செயல்பாட்டு முறையில் கருத்து வேற்றுமை எழுகிறது. விசாரணைக் கோப்பில் ஒரு குழப்பமான நீக்கத்தை மேடி கண்டுபிடிக்கிறாள். தான் பில்லெட்ஸின் ‘செல்லப் பிள்ளை’ என்றறிந்து டிடெக்டிவ் வேகா அசௌகரியமாக உணர்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ6 எ3 - த்ரீ விடோஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    42நிமி
    18+
    கதிரியக்க காயங்கள் நிறைந்த வீடற்றவன் பிணத்தை போலீஸ் கண்டெடுத்தபின் சீஸியத்துக்கான வேட்டை தீவிரமாகிறது. ஆனால் குற்றத்தைப் பற்றிய தங்கள் யூகங்கள் முற்றிலும் தவறோ என பாஷும் எட்கரும் திகைக்கின்றனர். மேடியின் கண்டுபிடிப்பு சாண்ட்லரின் பாராட்டைப் பெறுகிறது. எட்கர் விசாரிக்கும் ஊழல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய ஜமைக்கன் போதைக் கடத்தலாளர்களுடனான தன் உறவை டிஇஏ அதிகாரி சார்லீ ஹோவன் வெளியிடுகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ6 எ4 - பார்ட் ஆஃப் தெ டீல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    45நிமி
    16+
    அலிஷியா கென்ட் கூறும் கதையில் மர்மம் இருப்பதாக பாஷ் கண்டுபிடிக்கிறார். தன் மகளின் தீர்க்கப்படாத வழக்கை மீண்டும் உயிர்பெற வைக்கும் செய்தியுடன் எலிஸபெத் க்ளெய்ட்டன் அழைக்கிறாள். ஆவ்ரிலை நெருங்குவதற்கு எட்கரும் ஹோவனும் ஒரு திட்டமிடுகின்றனர், க்ரேட்டும் ஒரு பழைய நண்பரும் திருப்பம் நிறைந்த இரவை அனுபவிக்கின்றனர், தன்னை பாஷிடம் அறிமுகம் செய்யுமாறு மேடியைக் கேட்கிறான் ஆன்ட்டோனியோ.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ6 எ5 - மனி, ஹனி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    47நிமி
    16+
    டெய்ஸி க்ளெய்ட்டனின் பிரச்சனை நிறைந்த கடந்த காலத்துக்குள் பாஷ் ஆழமாக இறங்குகிறார். கென்ட் வழக்கில் பாஷின் சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்யும் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எட்கர் விரைகிறார். ஆவ்ரிலின் குற்றச் செயல்களைப் பற்றி அதிகம் அறிய ஹோவன் மாறுவேடத்தில் போகிறார். க்ரேட்டும் பேர்ரெலும் கொலைப்பிரிவுக்குத் திரும்புகின்றனர், ஆனால் அவர்களது கொண்டாட்டம் கெட்ட செய்தியால் மறைக்கப் படுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ6 எ6 - த ஏஸ் ஹோட்டெல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    42நிமி
    18+
    சாண்ட்லரின் பேர ஒப்பந்தத்தால் விளையும் ஒப்புதல் வாக்குமூலம், கென்ட்டின் கொலையாளியைப் பிடிக்கத் தேவையானதை பாஷுக்கும் எட்கருக்கும் தருகிறது. டெய்ஸி ஈடுபட்ட தெரு மோசடியை ஆழமாக விசாரிக்கிறார் பாஷ், ஆனால் தனியாக துப்பை விசாரிக்கும் எலிஸபெத்தால் பிரச்சனை வருகிறது. வீடின்மையை சமாளிக்க புதிய செயற்குழுவை இர்விங் திட்டமிடுகிறார், வேகாவையும் பியர்ஸையும் ஒரு அசௌகரியமான நிலையில் ஆழ்த்துகிறார் பில்லெட்ஸ்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ6 எ7 - ஹார்ட் ஃபீலிங்க்ஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    43நிமி
    18+
    எஃப்பிஐ உளவாளியின் கொலை வழக்கை முடிக்க உழைக்கும்போது, பாஷும் எட்கரும் ஒரு அதிரடி துப்பை வெளியிடுகின்றனர். தன் மகனைக் கொன்றவர்களை தண்டிக்க அதிகம் உழைக்க எட்கருக்கு அழுத்தம் தருகிறார் ட்வைட். தலைவர் இர்விங்குக்கு அரசியல் சேதம் தரக்கூடிய பழைய ஒலிப்பதிவைப பெறுகிறார் பேர்ரெல். தன் புதிய செயற்குழுவில் பழகிய முகத்தை இணைக்கிறார் பில்லெட்ஸ், நெருக்கடியாக்கும் புகாரை கேப்டன் கூப்பரிடம் அளிக்கிறார் பியர்ஸ்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ6 எ8 - காப்பி கேட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    44நிமி
    16+
    ஆறு வாரங்களுக்குப் பின்னர், அலிஷியா கென்ட்டுக்கு எதிரான பாஷின் முக்கிய ஆதாரத்துக்கான சாண்ட்லரின் மறுப்புகளை நீதிபதி சோபெல் கேட்கிறார். ஆவ்ரிலை வீழ்த்தும் விளிம்பில் ஹோவனும் எட்கரும் நிற்கின்றனர். உள்துறை விவகாரத்துறையிலிருந்து பில்லெட்ஸ் அழைக்கப் படுகிறார். டெய்ஸி க்ளெய்ட்டன் வழக்கில் புதிய சந்தேக நபர்கள் பட்டியலைப் பார்க்கையில், ஒரு அதிர்ச்சிகர தொடர்பை பாஷ் கண்டுபிடிக்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ6 எ9 - டார்க் சேக்ரட் நைட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    46நிமி
    18+
    டெய்ஸி க்ளெய்ட்டன் கொலையில் ஒரு சந்தேக நபரை பாஷ் நெருங்கும்போது, எலிஸபெத் தன்னிலையை இழக்கிறாள். ஆவ்ரில் எப்போதும் கபடவாதி என்றறிந்து, அவன் தப்புவானோ என கவலைப்படுகிறார் எட்கர். இர்விங்கை மேயர் பதவிப் போட்டியிலிருந்து வெளியேற்ற கார் அரசன் உழைக்கிறான். பில்லெட்ஸ் மீதான புகாரை உள்துறை விவகாரத்துறை விசாரிக்கிறது. பாஷின் கிடுக்கிப்படியில் டெய்ஸியின் கொலையாளி ஒரு அதிர்ச்சிகர வாக்குமூலம் அளிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ6 எ10 - சம் மெஷர் ஆஃப் ஜஸ்டிஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    16 ஏப்ரல், 2020
    45நிமி
    16+
    தங்களது எதிர்காலங்களைப் பற்றிய பெரிய முடிவுகளை இர்விங்கும் மேடியும் எடுக்கின்றனர். எதிர்பாராத சோகங்களை சமாளித்த பாஷும் எட்கரும், தங்களை வீழ்த்திவிட்ட அமைப்பைப் பற்றிய அதிருப்தியைப் பகிர்கின்றனர். ஆனால் கென்ட் கொலை வழக்கின் ஆதார விசாரணையின்போது, இருவரும் தேர்வு செய்ய வேண்டியது: விஷயங்களைக் கைவிடுவதா அல்லது தாங்களே கையில் எடுத்துக் கொள்வதா என்பதுதான்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
English [CC]DeutschEspañol
இயக்குநர்கள்
எர்னெஸ்ட் டிக்கர்ஸனஆலெக்ஸ் ஸாக்ர்ஸ்யூஸ்கிஸெட்னா ஃபுயென்டெஸடெய்ஸி வான் ஷெர்லர் மேயரபேட்ரிக் கேடிமைக்கேல் மெக்டொனோட்ரே பாட்செலரஹேகர் பென்-ஆஷரடாரா நிக்கோல் வெய்ர
தயாரிப்பாளர்கள்
ஹோல்ட் ஃபாஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் எல்எல்சிஎரிக் ஓவர்மயரடேனியல் பைனமைக்கேல் கானெல்லிஹென்ரிக் பாஸ்டினபீட்டர் ஜான் ப்ருகஹென்ரிக் பாப்ஸ்டபோ ஸ்டேமயரஜேம்ஸ் பேக்கரடாம் பெர்னார்டோஜெஃப்ரி ஃபிஸ்கினடைட்டஸ் வெல்லிவரஜேமி போஸ்கார்டின் மார்டினமார்க் டக்ளஸஃப்ரான்செஸ்கோ டிக்னீனி
நடித்தவர்கள்
டைட்டஸ் வெல்லிவரஜேமி ஹெக்டரஏமி அக்வீனோ
ஸ்டுடியோ
amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.