Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

எல் ப்ரெசிடென்தே

சீசன் 1
செர்ஹியோ ஹாதுவே, சிலியின் ஒரு சின்ன ஊரின் சாக்கர் க்ளப்பின் சாதாரண இயக்குனர், எதிர்பாராமல் சிலியன் சாக்கர் கழகத்தின் தலைவராகிறார். அதிகார போதையில், அவர் சாக்கர் ஞானத்தந்தையான ஹூலியோ க்ரன்தோனாவின் மாணாக்கராகிறார், கூடவே சாக்கர் உலகின் பெரிய ஊழல் திட்டத்தை உடைக்கவும் அனைத்து தென் அமெரிக்க சாக்கர் கழகங்களின் தலைவர்களை கைது செய்யவும் எஃப்பிஐயின் முக்கிய நபராகவும் ஆகிறார்.
IMDb 7.220208 எப்பிசோடுகள்
X-Ray18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - காட்டிக்கொடுக்கிறவன் இல்லை
    4 ஜூன், 2020
    52நிமி
    16+
    பண்பாடு மற்றும் சிக்கல்களால் ஆள ஒரு குடும்பம் தென் அமெரிக்க சாக்கரை கட்டுப்படுத்துகிறது: கான்மெபால். ஆனால் ஒரு நாள், தவறான நபரை தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றனர்: செர்ஹியோ ஹாதுவே, எதையுமே வெல்லாத நாட்டின் சின்ன சாக்கர் க்ளப்பின் தலைவர். அதிகார போதையில், அவர் சாக்கர் ஞானத்தந்தையான ஹூலியோ க்ரன்தோனாவின் மாணவனாகி ஃபிஃபா கேட் எனப்படும் ஊழல் வலையை தகர்க்கும் எஃப்பிஐயின் முக்கிய நபராகவும் ஆகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ரோசாரிடோ
    4 ஜூன், 2020
    60நிமி
    16+
    சாக்கரில், ஏமாற்றுவதும் பாசாங்கும் ரசித்து கைதட்டப்படுகிறது, ஆனால் ஒரு பிரச்சினை: அதை செய்ய முடியாவிட்டால், பெரும் ஏளனத்திற்கு ஆளாவோம். செர்ஹியோ ஹாதுவே வாழ்நாளில் செய்திராத பாசாங்கை செய்யப்போகிறார், ஆனால் ஏதோ தவறாகிறது. ஒரு எஃப்பிஐ ஏஜென்டின் அழுத்தத்தினால், அவருக்கு இரண்டு தேர்வுகளே உள்ளன: விசாரணைக்கு ஒத்துழைப்பது அல்லது சிறைக்கு போகலாம். அவர் வெள்ளைக்காரர்களோடு இருக்கலாம் அல்லது தனக்கெதிராகலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - பந்துகள்
    4 ஜூன், 2020
    56நிமி
    16+
    அதிர்ஷ்டம் தோற்பவர்களுக்கு. உண்மையான வெற்றியாளன் முடிவுக்கு காத்திருக்க மாட்டான்: அதை உருவாக்குவான். இதை மனதில் கொண்டு, தன் நாட்டில் நடத்தப்படவிருக்கும் போட்டிக்கு முன்னோடியாக, செர்ஹியோ ஹாதுவே கோபா அமெரிக்காவின் குழு ட்ராவை உலகம் முழுதும் ஒளிபரப்ப நினைக்கிறார். ஆனால் தீவிரமாக இருக்க எந்த காரணமும் இல்லை: முதலில் வருகிறது ஒரு கான்மெபால் குடும்பக் கொண்டாட்டம், பார்ட்டியில் எஃப்பிஐயும் ஊடுருவுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - செயல்படுத்த ஆயத்தம்
    4 ஜூன், 2020
    48நிமி
    16+
    பணம் பரபரப்பானது. பிடித்து பத்திரப்படுத்து: புது கார், கேவியர், ஏன் ஒரு சாக்கர் அணியே வாங்கலாம். இதை பிங்க் ஃப்ளாய்ட் கூறினார், ஹாதுவே இல்லை. பார்த்திராத பணம் வங்கிக் கணக்கில் புரள, லா கலேராகாரர் ஆடம்பரத்தில் திளைக்க, ஒரு பத்திரிக்கையாளர் கவனத்தை ஈர்க்கிறது. இதற்கிடையில், வலுவான ஆதாரம் அளிக்க எஃப்பிஐ அவரை அழுத்துகிறது: காட்டிக்கொடுக்கும் நேரமானது, அல்லது புத்திசாலி விலங்கான குரங்காவதற்கு எனலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - பரமபிதா
    4 ஜூன், 2020
    58நிமி
    16+
    ஹாதுவே தன் தர்மசங்கடத்தினால் தெய்வத்தின் குறுக்கீடு கிடைக்குமாவென எண்ணுகிறார்: பாவம் செய்த கான்மெபால் குடும்பத்தை ஏற்க கடவுளிடம் இடமிருக்குமா, அல்லது அவர் பலத்த தண்டனை அளிப்பாரா? கடவுளின் ஆடாக தன் தியாகம் பாவங்களைக் கழுவும் என்று ஹாதுவே நம்புகிறார், ஆனாலும் அனைத்தின் முடிவிலும் அவர் சிலுவையில் அறையப்படலாமெனவும் பயப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஃபிஃபாகேட்
    4 ஜூன், 2020
    1ம
    16+
    ஹாதுவேக்கு தீர்ப்பளிக்கும் தினம் வந்தது, ஆனால் ஏஜென்ட் ஹாரிஸ் சரியான நேரத்தில் வந்து கான்மெபால் குடும்பத்தை சுற்றித்திரியும் வல்லூறுகளிடமிருந்து தலைவரை காப்பாற்றுகிறாள். நேரமே இல்லாமல், ஹாதுவே சிறந்த வக்கீல்களை தேட வேண்டும் – நேனே கண்டுபிடிக்கப்போகும் விஷயத்திலிருந்து அவர்களாலும் அவரை காப்பாற்ற முடியாது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - பொய்
    4 ஜூன், 2020
    54நிமி
    16+
    கோபா அமெரிக்கா போட்டி கொண்டு வந்த மகிழ்ச்சி சிலி முழுவதும் பரவ, ஒரு இருண்ட நிழல் ஹாதுவே ஃபாகூஸே குடும்பம் மற்றும் கான்மெபால் மீது விழுகிறது. இந்த குழப்பத்திலிருந்து குறைந்த காயங்களோடு வெளியேற செர்ஹியோ ஹாதுவே தன் இறுதி சீட்டை விளையாட வேண்டும். டனலின் கோடியில் வெளிச்சம் இருக்குமென சொல்வார்கள், ஆனால் சில டனல்கள் முட்டுச்சந்துகளாக இருக்குமென யாரும் இவரிடம் கூறவில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - எல்லாம் கடந்து போகும்
    4 ஜூன், 2020
    1 ம 4 நிமிடம்
    18+
    ஹூலியோ க்ரன்தோனா கூறுவது போல, “எல்லாம் கடந்து போகும்.” பொய்களால் ஏற்படும் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் கடக்கும். பணப்பிரச்சினைகள் கடக்கும். தேசிய சங்கடங்கள் கடக்கும். பெரும் வெற்றிகள், ஒரு நொடிக்கு, தெரியாத நாடுகளை பெரும் உச்சிக்கு கொண்டு போகும் – அவையும் கடக்கும். பணம் கடக்கும். நியாயம் கடக்கும். ஆனால் செர்ஹியோ ஹாதுவேக்கு என்ன நடந்த்து? எல்லாமே.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiEspañol (Latinoamérica) [descripción de audio]ItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةDanskDeutschEspañol (Latinoamérica) [CC]Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)РусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
அர்மான்டோ போகேப்ரியல் டியாஸநடாலியா பெரிஸ்டெய்ன
தயாரிப்பாளர்கள்
பாப்லோ லாரெய்னஹுவான் த டியோஸ் லாரெய்னலூகாஸ் ரெய்நெல்லிஅகஸ்டின் சாகாநெல
நடித்தவர்கள்
ஆன்ட்ரேஸ் பாராபாலினா கெய்டானகார்லா சூசா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.