Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - 3, 2, 1… போங்க!ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202045நிமிவேர்ல்ட்ஸ் டஃபஸ்ட் ரேஸ்: ஈகோ சேலன்ஞ் ஃபீஜியை கைப்பற்றும் முயற்சியில் தீவு நாடான ஃபீஜியில் வந்திறங்கும் 66 அணிகளை பேர் கிரில்ஸ் வரவேற்கிறார். முதல் நாள், பந்தய அணிகள் சவாலான கடல் பயணத்தை முடித்த பிறகு செங்குத்தான மலையேற்றத்தை எதிர்கொள்கின்றன. தீவிரமான வெப்பம் ஒரு அணியின் பந்தயத்தையே முடிவுக்கு கொண்டுவருவது போல அச்சுறுத்தும் நிலையில் உயரடுக்கு மற்றும் புதுமுக அணிகள் இரண்டுமே ஒன்றாக பயணிகின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - நாங்கள் பின்னால் செல்லவும் முடியாது, முன்னேறவும் முடியாதுஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202054நிமிஇரவு முழுதும் பந்தயம் தொடர, வெப்ப முயற்சியோடு போராடிய ஒரு வீரர் தாக்குப்பிடித்து பந்தயத்தில் நீடிக்கிறார். முன்னணிகள் விடி லெவுவுக்கு திரும்பும் அதே சமயம், தீவு மலையேற்றத்தில் புதிய அணிகள் தொடர்ந்து போராடுகின்றன. அணிகளின் பெரும்பகுதி 2 ஆம் நாள் விட்டி லெவுவுக்குத் திரும்பியது, ஆனால் கடுமையான ஒரு புயல் பந்தயத்தை ஆபத்தாக்குகிறது, இதனால் பந்தய மேலாண்மை வேறு வழியின்றி ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - இந்தப் பந்தயம் மீண்டும் ஆரம்பித்ததுஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202048நிமிஅடை மழையால் போட்டி நிறுத்தப்பட, மீதி அணிகள் பின்னர் போட்டியைத் தொடர தயாராகின்றனர். வானிலை சுமாராக, முன்னணிகள் தம் முன்னிலையை தக்க வைத்து முகாம் 2 ஐ அடைய கடினமாக முயற்சிக்கின்றனர். இதற்கிடையில் பெரும்பாலான அணிகள் கரடுமுரடான நிலப்பகுதியில் முகாம் ஒன்றை அடைய சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். மூன்றாம் நாள் கெடுவை நெருங்க, சோர்வு, நோய் மற்றும் மோசமான முடிவுகளால் அணிகள் மிகவும் மெதுவாகப் பயணிக்கின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - பந்தயம் தொடங்கியதுஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202046நிமிநியூசிலாந்து அணியைத் துரத்தும் அணிகளுக்கு நம்பிக்கையைத் தந்து, காட்டாற்று துடுப்புப் பிரிவு திறக்கக் காத்திருந்து இரவைக் கழிப்பதால் அனைத்து முன் அணிகளும் சமமாகின்றன. பந்தயத்தில் பின்னால் உள்ள அணிகள் பிலிபிலி தெப்பத்தை உருவாக்கி நீரோட்டத்தோடு மிதக்கின்றன. அவுட் தேர் அணி மேலடுக்கில் மீண்டும் வரப் போராடுகிறது. ஒரு அணியின் சைக்கிள் உடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம் என பயப்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - முதலில் அவர்கள் நம்மை பிடிக்க வேண்டும், பின்னர் அவர்கள் நம்மை கடந்து செல்ல வேண்டும்ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202043நிமிமேலடுக்கு அணிகள் பயமுறுத்தும் வுவா நீர்வீழ்ச்சியின் கயிற்றில் ஏறும்போது, ஒரு அணி மற்றவர்களிடமிருந்து தங்களைத் தூரப்படுத்த ஒரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்கிறது, ஆனால் அது பலனளிக்குமா? மத்தியத்திலுள்ள மெதுவான அணிகள் மலையில் சைக்கிளில் செல்லும்போது சேற்றில் சிக்கி அவதிப் பட, மற்றவை விரைவாய் காட்டாற்றுப் பகுதிக்குச் செல்கின்றன. சைக்கிள் விபத்தால் ஒரு அணியின் பந்தய எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - செத்தால் தான் நிற்கும்ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202047நிமிவிழுந்ததில் கடுமையாக காயம் அடைந்த வீரருக்கு மருத்துவச் சிகிச்சை பெற ஒரு அணி வெளியேற வேண்டும். உயரடுக்கு அணிகள் வுவா நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள ஆற்றுக் குளங்களின் குளிரால் பாதிக்கப்படுகின்றன, எப்படியோ 4 ஆம் பகுதி துடுப்பு பலகை பகுதியை அடைகின்றன. கடுமையான தாழ்வெப்ப நிலையால் ஒரு விரர் அவதிப்பட, அந்த அனுபவமிக்க அணி முன்னிலை வகிப்பவரிடமிருந்து பின்தங்கி, அவர்களது முழு பந்தயமும் ஆபத்துக்குள்ளாகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - இந்த பந்தயம் முழுவதும் இதைச் செய்ய நான் காத்திருந்தேன்ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202048நிமிஒரு வீரர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, அந்த முன் அணி மேலும் பின்னால் செல்கிறது. உயரடுக்கு அணிகள் பந்தயத்தின் இறுதிக் கோட்டுக்கு அருகில் நெருங்கும் அதே நேரத்தில், பின்தங்கிய அணிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றன. மேலும் தொடர உந்து சக்தியைத் தேடி பல வீரர்கள் தங்கள் குடும்பங்களை நினைத்து பார்க்கிறார்கள். ஒரு முன் அணி "அபயக்குரல்" அழைப்பு விட, அவர்களுக்கு ஒருவேளை அது எதிர்பாராத முடிவாகவும் இருக்கக் கூடும்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - தீவிர பற்றாளர்களே விவேகமுள்ளவர்கள்ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202051நிமிஒரு குழு நள்ளிரவில் பசிஃபிக் பெருங்கடலின் திறந்த நீரிலிருந்து மீட்கப்படுகிறது. முதல் அணி இறுதிக் கோட்டிற்கு வந்து சாம்பியனாக முடிசூட்டிக்கொள்ள, அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3 வது இட அணிகள் வருகின்றன. மெதுவான அணிகள் பல பந்தயத்தின் கடினமான பகுதியை எதிர்கொள்கின்றன, அனைவராலும் பந்தயத்தைத் தொடர முடியவில்லை, மேலும் 2 அணிகள் ஹெலிகாப்டர் மீட்பு மூலம் பந்தயத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ9 - நாம வேகமாக போகவில்லை என்றால், நம்ம கதை முடிந்துவிடும்.ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202046நிமிபந்தயத்தின் எட்டாவது நாளில், மேலும் சிறந்த அணிகள் இறுதிக் கோட்டை அடைகின்றன. மெதுவான அணிகள், இப்போது பந்தயத்தின் கடினமான பகுதியை எதிர்கொண்டு, உலகின் கடினமான பந்தயத்தை முடிக்கத் தேவையான கடும் துன்பங்களைத் தாங்கும் உந்துதலைக் கண்டறிய வேண்டும்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ10 - போ, ஃபீஜி போ!ஆதரவான சாதனங்களில் காண்க13 ஆகஸ்ட், 202049நிமி"உலகின் கடினமான பந்தயத்தின்" இறுதி நாட்களில் 29 அணிகள் இன்னும் இறுதி கோட்டுக்கு முன்னேற முயற்சிக்கின்றன. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தங்கள் வரம்புகளுக்கு மேல் தள்ளப்படுவதால், இறுதி கோட்டை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அடைய அவர்கள் சோர்வு, களைப்புடன் போராட வேண்டும். ஈகோ-சேலன்ஞ் ஃபீஜி முடிவுக்கு வரும் வேளையில் சில அணிகள் இதயம் நொறுங்கி தோற்க அல்லது களிப்புடன் வெற்றியை எதிர்கொள்கின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
அறுபத்தியாறு குழுக்கள், யாரும் முயலாத, உலகளாவிய சாகச போட்டிக்காக, ஃபீஜிக்கு வந்திறங்கின. போட்டியாளரின் உடல் மற்றும் மன வலிமையை வெளிக் கொணரும் இந்த பதினோரு நாள் பயணத்தை பேர் க்ரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அனுபவமுள்ளவர்களுக்கு, வெற்றி பெறுவது தான் இலக்கு. இதை முடித்து, உலகின் கடினமான போட்டியில் தங்களாலும் நீடிக்க முடிந்ததென தங்களுக்கும் உலகிற்கும் நிரூபிப்பது தான் அனேகரின் கனவு.
அறுபத்தியாறு குழுக்கள், யாரும் முயலாத, உலகளாவிய சாகச போட்டிக்காக, ஃபீஜிக்கு வந்திறங்கின. போட்டியாளரின் உடல் மற்றும் மன வலிமையை வெளிக் கொணரும் இந்த பதினோரு நாள் பயணத்தை பேர் க்ரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அனுபவமுள்ளவர்களுக்கு, வெற்றி பெறுவது தான் இலக்கு. இதை முடித்து, உலகின் கடினமான போட்டியில் தங்களாலும் நீடிக்க முடிந்ததென தங்களுக்கும் உலகிற்கும் நிரூபிப்பது தான் அனேகரின் கனவு.
அறுபத்தியாறு குழுக்கள், யாரும் முயலாத, உலகளாவிய சாகச போட்டிக்காக, ஃபீஜிக்கு வந்திறங்கின. போட்டியாளரின் உடல் மற்றும் மன வலிமையை வெளிக் கொணரும் இந்த பதினோரு நாள் பயணத்தை பேர் க்ரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அனுபவமுள்ளவர்களுக்கு, வெற்றி பெறுவது தான் இலக்கு. இதை முடித்து, உலகின் கடினமான போட்டியில் தங்களாலும் நீடிக்க முடிந்ததென தங்களுக்கும் உலகிற்கும் நிரூபிப்பது தான் அனேகரின் கனவு.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டேவிட் சார்ல்ஸ
- தயாரிப்பாளர்கள்
- மார்க் பர்னெடஎரிக் வான் வாகனெனலிசா ஹென்னெஸ்ஸிபாரி போஸ்னிகபேர் கிரில்ஸடெல்பர்ட் ஷூப்மென
- நடிகர்கள்
- பேர் கிரில்ஸ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.