Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

நோவெலா

சீசன் 1
இசபெல் ஒரு திரைக்கதை எழுத்தாளர். அவர் தனது வாழ்க்கையை, ஒன்பது மணி சோப் ஓபராவின் ஆசிரியராக அர்ப்பணித்தார். இறுதியாக வாய்ப்பு வரும்போது, ​​அவளுடைய வழிகாட்டியான லாரோ டினிஸ்ஸால் ஏமாற்றப்படுகிறார். தொடரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில், இசபெல் அவரை எதிர்கொள்ள முடிவு செய்யும் போது, மாயமாக ​​அந்த சோப் ஓபராவில், அவர் கதாநாயகி ஆகிறார். சோப் ஓபராவில், இசபெல் தனது படைப்புத் திறன்களைக் காட்ட ஒரு வாய்ப்பை பெறுவார்.
IMDb 6.620238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - புவர் ரிச் கேர்ள்
    27 ஜூலை, 2023
    31நிமி
    16+
    ரீபவுண்ட் ஆஃப் ஃபேட்டின் முதல் காட்சியில், எழுத்தாளர் லாரோ வாலண்டே தனது சோப் ஓபராவை எவ்வாறு திருடினார் என்பதை வெளிப்படுத்த, இசபெல் விருந்துக்குச் செல்கிறார். இசபெல் அதிகமாகவே குடிக்கிறார். அவர் ஒரு மேஜிக் மானிட்டருக்குள் உறிஞ்சப்பட்டபோது, பழிவாங்கும் திட்டம் அவர் மீதே திரும்புகிறது. இசபெல் ஒரு தொழிற்சாலையின் நர்சரியில் கண் விழிக்கிறார். பைத்தியமாகும் அளவு குடித்தாரா அல்லது போதை இறங்கவில்லையா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - லேயர் ஆன் லேயர்
    27 ஜூலை, 2023
    25நிமி
    13+
    சோப் ஓபரா வர்த்தக இடைவேளையின் போது என்ன நடக்கிறது என்பதை இசபெல் கண்டுபிடிக்கிறார். நெட்வொர்க்கில், லாரோவும் குழுவும் யார் கண்ணிலும் படாமல் எப்படி எல்லா பிரச்சினைகளும் வந்தன என்பதைக் கண்டு பிடிக்க முயல்கின்றனர். இசபெல், போர்டோ கரேரோ குடும்பத்தின் உறுப்பினர்களைச் சந்திக்கிறார். அவர் சதித்திட்டத்தில் எவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அவ்வளவு தூரம் அங்கிருந்து வெளியேறும் வழியை விட்டு விலகி இருக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - தி இம்பாசிபல் கேன்னாட் பி பாசிபல்
    27 ஜூலை, 2023
    28நிமி
    13+
    பிரீமியரின் மறு நாள், அலுவலகத்தில் எழுந்த லாரோ, மார்ட்டாவால் எச்சரிக்கப்படுகிறார்: நெட்வொர்க்கின் உரிமையாளரான வால்டர் பேச விரும்புவதாக. அவரைத் தவிர, இசபெலால் மாற்றப்பட்ட கிராஸியை, லாரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இசபெல், குழுவினரால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். சோப் ஓபராவில், இசபெல் இனாசியோவின் ஈமச்சடங்கிற்கு முன் தினம், அவர்கள் கற்பனையில் வாழ்கிறார்கள் என்று குடும்பத்தை நம்ப வைக்க முயல்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி ரிட்டர்ன் ஆஃப் தோஸ் ஹூ நெவெர் லெஃப்ட்
    27 ஜூலை, 2023
    29நிமி
    13+
    எக்ஸ்ட்ராவுடனான இசபெலின் சந்திப்பு உண்மையில் ஒரு வழி பாதையாக மாறுகிறது. ரீபவுண்டின் முடிவை விரைவுபடுத்தும் ஒரு திட்டத்தை அவர் யோசிக்கிறார். அது ஜோவா மார்செலோ என்ற நல்லவனை மயக்கி, திருமண மேடையில் நிறுத்துவது. சோப் ஓபராக்கள் அப்படித்தான் முடியும். காதல் ஜோடியின் பிணைப்பு, லாரோவை, இனாசியோவின் இரட்டை சகோதரரும் இசபெலின் தந்தை எனவும் கூறப்படும் ஜெரால்டோவை புகுத்தி கதையை மாற்றக் கட்டாயப்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - யு பை வாட் யு ஸோ
    27 ஜூலை, 2023
    25நிமி
    13+
    இசபெல், அவர்கள் உடன்பிறந்தவர்கள் அல்ல என்பதை ஜோவா மார்செலோவிடம் நிரூபிக்க முயல்கிறார். லாரோ அந்த நல்லவனைத் திரும்பும் தேதி ஒன்றும் இல்லாமல் ஐரோப்பா வணிக பயணத்திற்கு அனுப்புகிறான். நேரத்தைக் கடக்க, இசபெல் கதைகளில் மூழ்கி , சோப் ஓபராவின் அனைத்து தயாரிப்புகளிலும் கதாநாயகி ஆகிறார். செட்டில், டெனிஸ் மற்றும் காசியா மோதல் மற்றும் வாக்குவாதம் புகழ்பெற்ற நடிகைக்குத் தனிப்பட்ட நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மை லவ், மை நெமிசிஸ்
    27 ஜூலை, 2023
    27நிமி
    13+
    ஜோவா மார்செலோவின் வருகை இசபெலுக்கு சோப் ஓபராவை விட்டு வெளியேறி விடலாம் என்ற நம்பிக்கையை எழுப்புகிறது. ஜோவா ஆச்சரியம் வைத்திருக்கிறார். இசடோரா, ஃபிரெஞ்சு நாட்டை சேர்ந்த அவரது வருங்கால மனைவி. நெட்வொர்க்கில், க்ராஸி, இசடோராவை புதிய கதாநாயகியாக்க லாரோவை அழுத்துகிறார். இசபெல் கதையின் முக்கிய கட்டத்திலிருந்து விலக்கப்படுவதை உணர்ந்து, ஜோவா மார்செலோவை மீண்டும் வெல்வதற்காக கியாராவுடன் நெருக்கமாகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - கேட்ஸ் அண்ட் மௌஸஸ்
    27 ஜூலை, 2023
    29நிமி
    13+
    லாரோ மற்றும் லூபியின் உறவை இசபெல் கண்டுபிடித்தது சோப் ஓபராவிற்குள் அவரது நிலைமையை மாற்றுகிறது, ஆனால் அங்கிருந்து வெளியேறுவதற்காக ஜோவா மார்செலோவை திருமணம் செய்து கொள்ளும் இலக்கை அவர் மறக்கவில்லை. இருப்பினும், அவர்கள் இருவரும் கடத்தலில் சிக்கிக் கொள்கிறார்கள், இது அவர்களின் காதலை மட்டுமல்ல, முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - எவ்ரிதிங் எண்ட்ஸ் வென் இட் இஸ் ஓவர்
    27 ஜூலை, 2023
    31நிமி
    13+
    ரீபவுண்ட் ஆஃப் ஃபேட்டின் உள்ளேயும் வெளியேயும், எல்லாமே அவற்றின் உச்சக்கட்டத்தை நோக்கி செல்கின்றன. கடத்தலின் போது, ​​அல்ட்ராலக்ஸ் மற்றும் மாரிஸ்டெலாவை கொன்ற விபத்து பற்றிய உண்மையை ராபர்டோ வெளிப்படுத்துகிறார். ஆனால் இசபெல் தனது பரம்பரைச்சொத்தை பெறுவதற்காக சோதனையில் வெற்றி பெற வேண்டும் என்கிறார். ஆனால் இசபெல் எந்த முடிவுக்கும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு இந்த கட்டத்தில் உள்ளார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EspañolPortuguêsPortuguês [Descrição do áudio]
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil) [SDH]Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜீஜி சுவாரிஸ்ரெனாட்டா பின்யெய்ரோ
தயாரிப்பாளர்கள்
போர்டா டோஸ் ஃபண்டோஸ்
நடித்தவர்கள்
மோனிகா இயோசிமிகுவல் ஃபலபெல்லாமார்செலோ ஆண்டனி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.