Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

Prime Video சுயவிவரங்கள்

உங்கள் Prime Video சுயவிவரத்தைப் பூட்டுதல்

சுயவிவரப் பூட்டின் மூலம், உங்கள் தனிப்பட்ட Prime Video சுயவிவரத்திற்கான அணுகலை PIN மூலம் கட்டுப்படுத்தலாம்.

கணக்கு வைத்திருப்பவர் என்ற ரீதியில், நீங்கள் கணக்கு PIN-ஐ அமைத்து, பின்வருவனவற்றுக்கு அதை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • உங்கள் சுயவிவரத்தைப் பூட்டுதல்.
  • மற்ற எல்லா சுயவிவரங்களிலும் வாங்குதல் மற்றும் பார்க்கும் கட்டுப்பாடுகளைத் தவிர்த்தல்.
  • புதிய சுயவிவரங்களை உருவாக்குவதைக் கட்டுப்படுத்துதல்.
  • எல்லா சுயவிவரப் பூட்டின் PINகளையும் தவிர்த்தல்.

கணக்கின் PIN-ஐ அமைப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு, வலையில் Prime Video கணக்கின் PIN-ஐ அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

சுயவிவரப் பூட்டை அமைக்க, ‘உங்கள் சுயவிவரங்கள்' என்பதற்குச் சென்று இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. ‘சுயவிவரத்தைத் திருத்து’ என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பூட்ட விரும்பும் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
  2. சுயவிவரத்தைத் திருத்தும் பக்கத்தில், சுயவிவர / கணக்கின் PIN மற்றும் பூட்டுகள் என்பதற்கு அடுத்துள்ள நிர்வகி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  3. கேட்கப்பட்டால், உங்கள் Amazon கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  4. உங்கள் சுயவிவர / கணக்கின் PIN-ஐ உள்ளிட்டு, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சுயவிவர / கணக்கின் PIN மற்றும் பூட்டுகள் பக்கத்தில், சுயவிவரப் பூட்டை ஆன் என்பதற்கு மாற்றி, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    இப்போது உங்கள் சுயவிவரத்தை அணுக, உங்கள் சுயவிவர / கணக்கின் PIN-ஐ உள்ளிட வேண்டும்.