Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

அமைத்தல்

உங்கள் Prime Video பரிந்துரைகளைத் தனிப்பயனாக்குதல்

பிடித்திருக்கிறது மற்றும் பிடிக்கவில்லை பொத்தான்களைப் பயன்படுத்தி உங்களுக்கான உள்ளடக்கப் பரிந்துரைகளை மேம்படுத்தலாம்.

உங்கள் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்குதல்

  • திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களின் விவரப் பக்கத்தில் இருக்கும் பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
  • வீடியோவில் நீங்கள் 'பிடித்திருக்கிறது' அம்சத்தைப் பயன்படுத்தினால், அந்த வீடியோவைப் போன்ற கூடுதல் உள்ளடக்கத்தைக் காண்பிப்போம். வீடியோவில் நீங்கள் 'பிடிக்கவில்லை' அம்சத்தைப் பயன்படுத்தினால், இனி அதை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். இருந்தாலும், நீங்கள் அந்த வீடியோவைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
  • 'பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை' அம்சத்தை நீங்கள் தவறுதலாகத் தேர்ந்தெடுத்திருந்து அதைச் செயல்தவிர்க்க விரும்பினால், அதே பொத்தானை மீண்டும் பயன்படுத்தி நீங்கள் தேர்வு செய்ததைத் திரும்பப் பெறலாம் அல்லது உங்கள் விருப்பத்தேர்வை மாற்ற, அதற்கு எதிரான பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தனிப்பயனாக்கப்பட்ட 'பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை' விருப்பங்கள் ஒவ்வொரு சுயவிவரத்திலும் சேமிக்கப்படுவதால், ஒரு சுயவிவரத்தில் உள்ள பரிந்துரைகள், கணக்கில் உள்ள மற்ற சுயவிவரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
  • குழந்தைகளின் சுயவிவரங்கள் மூலம் 'பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை' விருப்பத்தேர்வுகளைச் சமர்ப்பிக்க முடியாது.
குறிப்பு: சில பழைய சாதனங்களில், 'பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை' அம்சம் காண்பிக்கப்படாமல் போகக்கூடும். உங்கள் விருப்பங்களைச் சமர்ப்பிக்க, Prime Video வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது புதிய சாதனத்தில் முயன்று பார்க்கவும்.