Prime Video
  1. உங்கள் கணக்கு

உதவி

சிக்கல் தீர்த்தல்

ONE Championship - ஆதரவு

Prime Video-இல் ONE Championship-இன் நேரலை ஒளிபரப்பைப் பார்ப்பதில் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்வது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் & பதில்கள்

1) Prime Video நிகழ்வுகளில் ONE Fight Night-ஐப் பார்க்க நான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள Prime உறுப்பினர்கள் Prime Video-இல் ONE Fight Night-ஐக் கூடுதல் கட்டணமின்றிப் பார்க்க முடியும். நீங்கள் Prime உறுப்பினராக இல்லை என்றால், www.amazon.ca/prime ஆகிய தளங்களுக்குச் சென்று Prime வழங்கும் 30 நாள் இலவசப் பயன்பாட்டுக் காலத்தைத் தொடங்கலாம்.

2) Prime Video நிகழ்வுகளில் ONE Fight Night-ஐ நான் எங்கே பார்க்கலாம்?

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள Prime உறுப்பினர்கள் Prime Video-இல் ONE Fight Night-ஐப் பார்க்க முடியும். ஐக்கிய அமெரிக்க பிரதேசங்கள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், U.S உள்ளிட்ட குடியரசு நாடுகள் விர்ஜின் தீவுகள், வடக்கு மரியானா தீவுகள், அமெரிக்க சமோவா, அமெரிக்கா. மைனர் அவுட்லையிங் தீவுகள். மற்ற அனைத்து சர்வதேச இடங்களும் ஆதரிக்கப்படவில்லை.

3) Prime Video-இல் Prime Video நிகழ்வுகளில் ONE Fight Night-ஐ நான் எவ்வாறு பார்ப்பது?

நீங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்தால், உங்கள் சாதனத்தில் உள்ள Prime Video செயலிக்குச் செல்லவும், "நேரலை மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள்" என்பதன் கீழ் நிகழ்வுகள் காட்டப்படும். Amazon முகப்புப் பக்கத்திற்குச் சென்று Prime Video என்பதைக் கிளிக் செய்யவும், "நேரலை மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கான" இணைப்பையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

4) Prime Video நிகழ்வுகளில் எந்த நாட்கள் மற்றும் நேரங்களில் ONE Fight Night நடைபெறும்?

ஆகஸ்ட் 2022 முதல், மாதத்திற்கு ஒரு Prime Video நிகழ்வில் குறைந்தபட்சம் ஒரு ONE Fight Night நேரலை ஒளிபரப்பு ஸ்ட்ரீம் செய்யப்படும்.

நிகழ்வின் சமீபத்திய திட்டமிடல் மற்றும் நேர விவரங்களைத் தெரிந்து கொள்ள, www.amazon.com/onechampionship அல்லது www.amazon.com/b?node=24051829011 பக்கத்தைப் பார்வையிடவும்.

தேதிகள் மற்றும் நேரங்கள் மாறுதலுக்குட்படக்கூடியவை.

5) பயணிக்கும் போது நான் நிகழ்வுகளை பார்க்க முடியுமா?

அமெரிக்கா மற்றும் கனடா Prime உறுப்பினர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவிற்குள் Prime Video-இல் ONE Fight Night-ஐப் பார்க்க முடியும். ஐக்கிய அமெரிக்க பிரதேசங்கள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், U.S உள்ளிட்ட குடியரசு நாடுகள் விர்ஜின் தீவுகள், வடக்கு மரியானா தீவுகள், அமெரிக்க சமோவா, அமெரிக்கா. மைனர் அவுட்லையிங் தீவுகள். மற்ற அனைத்து சர்வதேச இடங்களும் ஆதரிக்கப்படவில்லை.

6) பார்க்கத் தவறிய நிகழ்வுகளை நான் எப்படிப் பார்ப்பது?

ஒவ்வொரு நிகழ்வும் முடிந்த சிறிது நேரத்திற்குப் பின்பு, ரீபிளேக்களைப் பார்க்க முடியும்.

7) நான் எல்லா சாதனத்திலும் நிகழ்வுகளைப் பார்க்க முடியுமா?

பொதுவான வழிகாட்டலுக்கு, இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். இணக்கமான கேம் கன்சோல்கள் (PS3, PS4, Xbox One), செட் டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள் (Google Chromecast, Virgin TV, Roku மற்றும் Apple TV போன்றவை), Smart TVகள், ப்ளூ-ரே பிளேயர்கள், iOS அல்லது Android-இல் இயங்கும் டேப்லெட்கள் மற்றும் மொபைல்கள் உள்பட, Fire TV மற்றும் Fire டேப்லெட் போன்ற Amazon சாதனங்கள், வலை உலாவிகளில் Prime Video செயலியின் வழியாக 650-க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட சாதனங்களில் நேரலை விளையாட்டு ஆதரிக்கப்படுகிறது. ONE தொடர்பான Prime Video நிகழ்வுகள் அனைத்தையும் HD தரத்தில் பார்க்கலாம்.

8) எனது சாதனத்தில் பின்நகர்த்து, இடைநிறுத்து மற்றும் வேகமாய் முன்நகர்த்து வசதிகளைப் பயன்படுத்த முடியுமா?

ரீவைண்ட், இடைநிறுத்துதல், ஃபாஸ்ட் ஃபார்வர்டு ஆகிய வசதிகள் Android/iOS மொபைல், வலை (Chrome, FireFox, Edge), Fire TV, Apple TV (3வது தலைமுறை மற்றும் புதியவை) & குறிப்பிட்ட Smart TVகளில் உள்ளன. இந்த அம்சங்கள் அனைத்துச் சாதனங்களிலும் ஆதரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

9) சப்டைட்டில்களை எவ்வாறு இயக்கலாம் அல்லது அணைக்கலாம்?

உங்கள் இயக்கக் கட்டுப்பாடுகளில் "CC" ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சப்டைட்டில்களை இயக்கலாம் அல்லது அணைக்கலாம். சில சாதனங்களுக்கு, சப்டைட்டில்கள் ஐகான் செய்திப் பெட்டியாகத் தோன்றும் அல்லது வீடியோவின் விவரப் பக்கத்தில் "சப்டைட்டில்களின்" கீழ் மெனு விருப்பமாக இருக்கும்.

10) முந்தைய ONE Fight Night நிகழ்வுகளை நான் பார்ப்பது எப்படி?

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள Prime Video நிகழ்வுகளில் முந்தைய ONE Fight Night நிகழ்வுகளைப் பார்க்க, நீங்கள் ONE Championship தொகுப்புப் பக்கத்தைப் பார்வையிடலாம். அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள பகுதிகளில், உங்கள் பகுதிக்கான பட்டியல்களைப் பார்க்கவும். அனைத்து ONE Championship நிகழ்வுகளுக்கான, நிகழ்வு ஹைலைட்களை ONE Championship சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பார்க்க முடியும்.

11) ONE Championship என்றால் என்ன?

ONE Championship உலகின் மிகப்பெரிய தற்காப்புக் கலை அமைப்பாகும், கலப்புத் தற்காப்புக் கலை, முவே தாய், குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற அற்புதமான போட்டிகள் அதில் நடைபெறும்.

12) ONE Championship-இல் எடைப் பிரிவுகள் எவ்வாறு உள்ளன?

கலப்புத் தற்காப்புக் கலை, முவே தாய், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய ஒவ்வொரு தற்காப்பு கலையிலும் அதே எடைப் பிரிவில் உள்ள எதிராளிகளுக்கு எதிராக போட்டியிடும் வகையில் விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள். ஆட்டம்வெயிட்: 115 பவுண்ட் (52 கிலோ), ஸ்ட்ராவெயிட்: 125 பவுண்ட் (56.7 கிலோ), ஃப்ளைவெயிட்: 135 பவுண்ட் (61.2 கிலோ), பாண்டம்வெயிட்: 145 பவுண்ட் (65.8 கிலோ), ஃபெதர்வெயிட்: 155 பவுண்ட் (70.3 கிலோ), லைட்வெயிட்: 170 பவுண்ட் (77.1 கிலோ), வெல்டர்வெயிட்: 185 பவுண்ட் (83.9 கிலோ), மிடில்வெயிட்: 205 பவுண்ட் (93 கிலோ), லைட் ஹெவிவெயிட்: 225 பவுண்ட் (102.1 கிலோ), ஹெவிவெயிட்: 265 பவுண்ட் (120.2 கிலோ).

13) விளையாட்டு வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் அல்லது எடைப் பிரிவுகளில் போட்டியிட முடியுமா?

ONE Championship அதன் விளையாட்டு வீரர்கள் பல தற்காப்புக் கலைப் பிரிவுகளில் போட்டியிடுவதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் உறுதியாகக் கருதினால் அனுமதிக்கிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கேற்ற உடல் ஆரோக்கியம், உடற்தகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், அவர்கள் பல எடைப் பிரிவுகளில் கலந்துகொள்ள முடியும்.

14) ONE Championship-இல் வீரர்களின் தரவரிசை எவ்வாறு உள்ளது?

ONE Championship அதன் 13 தடகளப் பிரிவுகளுக்கான முதல்-ஐந்து போட்டியாளர் தரவரிசைகளைக் கொண்டுள்ளது. கலப்பு தற்காப்புக் கலையில் ஆறு, முவே தாயில் நான்கு, குத்துச்சண்டையில் மூன்று, இவை ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் புதுப்பிக்கப்படும். யார் என்று குறிப்பிடாத வகையில் உள்ள விளையாட்டு ஊடக உறுப்பினர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய குழுவால் வாக்களிப்பதன் மூலம் தரவரிசைப் பட்டியல் தீர்மானிக்கப்படும். ONE Championship அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தரவரிசையைப் பார்க்க முடியும்.

15) ONE Championship-இல் உள்ள போட்டிகள் எவ்வளவு நேரம் நடைபெறும்?

கலப்புத் தற்காப்புக் கலையில் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து நிமிடங்கள் உள்ள மூன்று சுற்றுகளும், ஒவ்வொரு சுற்றுக்கு நடுவிலே ஒரு நிமிட இடைவேளையும் இருக்கும். முவே தாய் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று நிமிடம் உள்ள மூன்று சுற்றுகளும், ஒவ்வொரு சுற்றுக்கும் நடுவிலே ஒரு நிமிட இடைவேளையும் இருக்கும். உலக சாம்பியன்ஷிப்க்கான கலப்புத் தற்காப்புக் கலை, முவே தாய் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் ஐந்து நிமிடங்கள் உள்ள ஐந்து சுற்றுகளும், ஒவ்வொரு சுற்றுக்கு நடுவிலே ஒரு நிமிட இடைவேளையும் இருக்கும். மல்யுத்தப் போட்டிகள் அனைத்தும் 10 நிமிடங்கள் உள்ள ஒரே சுற்றாக இருக்கும்.

16) ONE Championship போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் யாவை?

கலப்புத் தற்காப்புக் கலையில் வெற்றியானது, நாக்அவுட், தோல்வியை ஒப்புக்கொள்ளுதல், டெக்னிக்கல் முறை நாக்அவுட், டெக்னிக்கல் முறை தோல்வியை ஒப்புக்கொள்ளுதல், நடுவர்/மருத்துவர்/முடியாமல் நிறுத்துதல், நிறுத்துவதற்கான வீரரின் கோரிக்கை அல்லது தீர்ப்பாளரின் முடிவு ஆகிய முறைகளில் தீர்மானிக்கப்படும். முவே தாய் அல்லது குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றியானது, நாக்அவுட், டெக்னிக்கல் முறை நாக்அவுட், நிறுத்துவதற்கான வீரரின் கோரிக்கை அல்லது தீர்ப்பாளரின் முடிவு ஆகிய முறைகளில் தீர்மானிக்கப்படும். மல்யுத்தப் போட்டிகளில் வெற்றியானது, தோல்வியை ஒப்புக்கொள்ளுதல், நடுவர்/முடியாமல் நிறுத்துதல், நிறுத்துவதற்கான வீரரின் கோரிக்கை, அல்லது தீர்ப்பாளரின் முடிவு ஆகிய முறைகளில் தீர்மானிக்கப்படும்.

17) ONE Championship போட்டிகளில் எவ்வாறு ஸ்கோர் குறிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும்?

ஒவ்வொரு சுற்றுகளுக்கும் மட்டுமின்றி, முழு போட்டியின் அடிப்படையில் மூன்று தீர்ப்பாளர்கள் ஸ்கோரைக் குறிப்பார்கள். போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க, நீதிபதிகள் முக்கிய தகுதிகளின் அடிப்படையில் இறங்கு வரிசையில் ONE தீர்ப்பு அளவீடுகளைப் பயன்படுத்துவார்கள். அனைத்து அளவீடுகளையும் ONE Championship அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்க முடியும்.

18) நான் எப்படி ONE Championship பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்?

மேலும் அறிய, ONE Championship-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது Facebook, Instagram, YouTube, Twitter, TikTok அல்லது Snapchat ஆகியவற்றில் ONE Championship-இன் அதிகாரப்பூர்வச் சமூக ஊடக கணக்குகளைப் பார்வையிடவும்.

19) வேறு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?

எங்கள் உதவிப் பக்கங்களுக்கு, இங்கே செல்லவும் அல்லது கூடுதல் உதவிக்கு, எங்களைத் தொடர்பு கொள்க.