உதவி

அமைத்தல்

Chromecast-இல் Prime Video பார்த்தல்

Prime Video உடன் Google Chromecast-ஐப் பயன்படுத்துவதற்கு, iOS அல்லது Android-க்கான Prime Video செயலியின் மிகச் சமீபத்திய பதிப்பு தேவை.

  1. Prime Video செயலியில், Cast ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் Chromecast சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    உங்கள் iOS மற்றும் Android சாதனம் உங்கள் Chromecast இணைக்கப்பட்டிருக்கும் அதே Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் Chromecast சாதனம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்துகொள்ளவும். மேலும் உங்கள் Prime Video செயலி, iOS அல்லது Android சாதம் இன்று வரை புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் ஒரு Android சாதனத்தைப் பயன்படுத்தினால், Google Play சேவைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். Fire டேப்லெட்டில் உள்ள Prime Video செயலியை Chromecast உடன் இணைக்க முடியாது.
  3. நீங்கள் பார்க்க விரும்பும் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும். இந்தத் தலைப்பு Chromecast உடன் இணைக்கப்பட்டுள்ள திரையில் காண்பிக்கப்படும்.
    Chromecast-இலும், iOS சாதனங்களிலும் சப்டைட்டில் அமைப்புகளை மாற்ற விரும்பினால், அந்தச் சாதனத்திற்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அதன் பின்னர், அமைப்புகள் (Settings) > அணுகல் (Accessibility) > சப்டைட்டில்கள் மற்றும் கேப்ஷனிங் (Subtitles and Captioning) > ஸ்டைல் (Style) என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சப்டைட்டில்களுக்கான ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கவும். Android சாதனங்களில், தலைப்பு அனுப்பப்படும்போது, திரையில் உள்ள மூன்று புள்ளி மெனுவைத் தட்டவும். சப்டைட்டில் ஸ்டைல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, கேப்ஷன்களைக் காட்டு என்பதை இயக்கவும். அந்த மெனுவில் உள்ள கேப்ஷன் அளவு மற்றும் ஸ்டைல் (Caption size and style) தேர்வுகளையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

குறிப்பு: Google TV சாதனத்தைக் கொண்ட Chromecast (2020-ம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது) எனில், நீங்கள் அந்தச் சாதனத்தின் ரிமோட் மற்றும் அந்த சாதனத்தில் உள்ள Prime Video செயலியைப் பயன்படுத்தலாம், கூடுதலாக அனுப்புதல் விருப்பத்தையும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய உதவித் தலைப்புகள்