உதவி

அமைத்தல்

Prime Video தலைப்புகளைப் பதிவிறக்குதல்

ஆஃப்லைனில் பார்ப்பதற்கான Prime Video தலைப்புகளைப் பதிவிறக்க, உங்களிடம் Fire டேப்லெட் அல்லது iOS, Android, macOS அல்லது Windows 10 மற்றும் 11-க்கான Prime Video செயலி இருக்க வேண்டும்.

Prime Video தலைப்புகளைப் பதிவிறக்க, உங்கள் சாதனத்தில் Prime Video செயலியைத் திறந்து, பதிவிறக்க விரும்பும் தலைப்பைக் கண்டறியவும். Android மற்றும் Windows-க்கான Prime Video செயலியில், பதிவிறக்கம் செய்யப்படும் தலைப்புகளை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். USB இணைக்கப்பட்ட டிரைவ்களில் பதிவிறக்கங்கள் சேமிக்கப்படுவதை நாங்கள் பரிந்துரைப்பதில்லை.

  • திரைப்படங்களுக்கு: விவரப் பக்கத்திலிருந்து தலைப்பைப் பதிவிறக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • டிவி நிகழ்ச்சிகளுக்கு: ஒட்டுமொத்த சீசனையும் பதிவிறக்குவதற்கான விருப்பம் உள்ளது. தனிப்பட்ட எப்பிசோடுகளைப் பதிவிறக்க, எப்பிசோடுகளின் பட்டியலில் உள்ள பதிவிறக்கு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
    பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை Chromecast அல்லது Airplay வழியே பிளேபேக் செய்வது அனுமதிக்கப்படவில்லை. பொருத்தமான அடாப்டர்களைப் பயன்படுத்தும்போது, ஆதரிக்கப்படும் சாதனங்களில் தொலைக்காட்சிக்கான ஆஃப்லைன் இயக்கத்தைச் செய்ய முடியும்.

கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: