இரண்டு குழந்தைகள் பற்றிய கதை எதை பற்றியும் கவலைப்படாத, எதுவும் அறியாத பில்லி, மற்றும் வக்ரமான பாவங்களே காட்டாத மேண்டி இருவரும் கிரிம் ரீப்பரை ஒரு சாதாரண விளையாட்டில் தோற்கடித்த பின் அவருடன் நண்பர்களாகிறார்கள். இம்மூவரும், இயல்பான புறநகரப் பிரச்சினைகளை கையாளுகிறார்கள் - பள்ளி, குடும்பம் மற்றும் நிழல் உலகிலிருந்து மற்றும் அதையும் தாண்டி வரும் விருந்தினர்கள் வரை அனைத்தையும் சமாளிக்கின்றனர்.