லொரேனா
freevee

லொரேனா

சீசன் 1
நிர்வாக தயாரிப்பாளர், ஜோர்டன் பீலின் இந்த நான்கு பகுதி ஆவண தொடர், 1993ஆம் வருடம் லொரேனா பாபிட் பல வருடம் சித்ரவதை அனுபவித்து தன் கணவரின் ஆண்குறியை வெட்டியதை பற்றி ஆராய்கிறது. ஜான் மற்றும் லொரேனா பாபிட்டின் கதை 24 மணி நேர பரபரப்பு செய்தி ஆனது. அவளை நாடு முழுக்க கேலி செய்தார்கள். ஆணாதிக்க ஊடகங்கள் அவள் வேதனையை புறக்கணித்தது. ஆனால் ஜானின் வீழ்ச்சி துடங்கிய போது, லொரேனா தன் காயங்களில் பலத்தை கண்டாள்.
IMDb 7.220194 எப்பிசோடுகள்X-RayTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அந்த இரவில்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 பிப்ரவரி, 2019
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    ஒரு ஜூன் நள்ளிரவு 1993ஆம் ஆண்டு, இளம் பெண்ணொருத்தி கடுங்கோபத்தில் தன் கணவனின் ஆண்குறியை வெட்டினாள். ஜான் மற்றும் லொரேனா பாபிட்டின் சர்ச்சைக்குரிய விளக்கங்கள் உலக செய்தியாக வெடித்து நீதிமன்றத்தில் சிதறியது. தேசம் இருபாலராக பிரிந்து மோதி தீரா பசித்திருக்கும் 24 மணி செய்திக்கு தீனியானது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - சிக்கலில் ஒரு பெண்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 பிப்ரவரி, 2019
    1 ம 5 நிமிடம்
    TV-MA
    ஜான் குற்றமற்றவனாக, பிரபலனாக ஜொலிக்கையில், லொரேனா வருட கணக்கு சிறை தண்டனை அச்சுறுத்தலுடன் வழக்கை எதிர்நோக்கினாள். டீவி கேமராக்கள் அவள் துயரங்களை பதிவு செய்ய, எதிர்த்தரப்பு விடாது அவளை-பெறாமை கொண்ட கோபக்காரி, பொய் சொல்பவள், திருடி என குற்றம்சாட்டியது. ஜான் மோசமான சாட்சியாக, வக்கீல்கள் பல காலமாக நடக்கும் வீட்டு வன்மையை சுட்டிக்காட்டினர். சம்பவ இரவன்று மனநிலை பாதித்திருந்தாள் என நிரூபிக்க திணறினர்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - தடுக்க இயலா தூண்டுதல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 பிப்ரவரி, 2019
    1 ம 3 நிமிடம்
    TV-MA
    லொரேனா வழக்கின்போது, அவள் பாதிக்கப்பட்டவள் என அனைவருமே ஒப்பு கொண்டனர். ஆனால் ஜானை தாக்கியபோது சட்டப்படி மனநிலை பாதித்திருந்தாளா? தன் முழு கட்டுப்பாடும் இழந்த துரதிர்ஷ்ட இரவுபற்றி சான்றளிக்கையில் கோடிக்கணக்கானவர் டிவி முன் இருந்தனர். அரிதாக நிரூபிக்கும் வாதத்தை கொண்டு வக்கீல்கள் தவிர்க்க முடியாத தூண்டுதலால் இதை செய்ததாக நிரூபிக்க வேண்டும். தீர்ப்பு ஊசலாடுகையில் ஆச்சரியமாக ஒரு சாட்சி கூண்டு ஏறினார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - தொடரும் கொடுமை

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 பிப்ரவரி, 2019
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    லொரேனாவின் தலையெழுத்தைக் காண கோடிக்கணக்கான பார்வையாளர்கள் டீவி முன் இருந்தனர். அவள் குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப் படுவாளா? குற்றமற்றவள் என்றால் மீண்டு வர வாய்ப்பு கிடைக்குமா? ஜானும் லொரேனாவும் வெவ்வேறு பாதைகளில் முன்னேறினர்-ஜான் சுயவீழ்ச்சியில் புகழை காண, லொரேனா தீர்ப்பு எதுவாக இருப்பினும் தன் சோதனையின் காயங்களில் ஒரு பிடிப்பைக் கண்டாள்.
    இலவசமாகப் பாருங்கள்