அபிமன்யு ராய் (ஆயுஷ்மான் குர்ரானா) என்ற எழுத்தாளன், 3 ஆண்டுகளாக அவன் மனதில் உருவான ஒரு காதல் கதையை எழுத முனைகிறான். அவனுக்குச் சவாலாக இருப்பவள் பிந்து (பரிநீதி சோப்ரா). இந்த மின்னல் கீற்றை எப்படி ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்குள் அடக்குவது? அவர்களுக்குப் பிடித்த பாடல்கள் அடங்கிய ஒரு பழைய ஆடியோ அவன் நினைவலைகளைக் கிளர்ந்தெழச் செய்ய, அவன் எழுத விரும்பிய புதினம் தானே உருவாகத் துவங்குகிறது.