உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

6.420136 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்

டிவியின் விருப்பமான ஜோடிகளுள் ஒன்றுக்கு திருமணம். சீசன் 3ன் நகைச்சுவை பகுதிகளில் வேடிக்கையான, மனதை அள்ளும் மைக் & மாலியின் காதல் கதை மெல்ல அவிழ்கிறது. குடும்பப்பாங்கான திருமண வாழ்க்கையின் பேரின்பம் குறித்து அவனும் அவளும் கொண்டுள்ள கண்ணோட்டங்கள் 3வது சீஸனின் மையக் கருவாக உள்ளன. இதில் சிரிப்பலைகள், காதல், அவர்கள் மாட்டிக்கொண்டு விழிக்கும் இலேசான நகைச்சுவைக்கு காட்சிகள் என அனைத்தும் அடங்கும்.

நடித்தவர்கள்
ரெனோ வில்சன், ஸ்வூஸி குர்ட்ஸ், மெலிஸ்ஸா மக்கார்த்தி
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (23)

 1. 1. தேனிலவு முடிந்தது

  20 நிமிடங்கள்23 செப்டம்பர், 201216+சப்டைட்டில்

  மூன்றாவது சீசன் ப்ரீமியரில், மைக் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவும், உலகத்தை பயணிக்கவும் அவர்களின் தேனிலவு அவனுக்கு ஊக்கமளிக்கிறது. அதே நேரத்தில் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தாங்கள் இல்லாமல் எப்படியெல்லாம் சமாளித்தார்களோ என்று மாலி கவலைப்படுகிறாள்.

 2. 2. வின்ஸ் ஒரு குளியல் எடுக்கிறான்

  18 நிமிடங்கள்30 செப்டம்பர், 201216+சப்டைட்டில்

  வின்ஸ் தண்டுவடம் பிரண்டதால் ஏற்பட்ட முதுகு வலியில் அவதிப்படும்பொழுது, ஜாய்ஸ் அங்கிருந்து மறைந்துவிடுகிறாள் - மைக், மாலி இருவரையும் அவனைக் கவனிக்க விட்டுவிட்டு. இதற்கிடையில், புதிய திருமண ஜோடி தங்கள் திருமணப் பரிசளிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் குறிப்பெழுதத் தவிக்கிறார்கள்.

 3. 3. மைக்குக்கு கேக் பிடிக்கும்

  19 நிமிடங்கள்7 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  மாலி தனது திருமணப் புகைப்படங்களை மறுபரிசீலனை செய்யும்பொழுது அதிர்ச்சியடைகிறாள். ஒவ்வொரு புகைப்படத்திலும் மைக் தனது வாயைத் திறந்துகொண்டிருக்கிறான் அல்லது கண்களை மூடிக்கொண்டிருக்கிறான்.

 4. 4. நடுவில் மாலி

  20 நிமிடங்கள்14 அக்டோபர், 201216+சப்டைட்டில்

  மைக், மாலி இருவரும் ஒரு குழந்தைக்காக முயற்சி செய்யத் துவங்குவதற்குச் சரியான நேரம் இது என்று தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையில், தங்கள் உறவு முறிந்த பின்பும் கிறிஸ்டினாவுடன் மாலி நேரம் செலவழிக்கிறாள் என்பதை அறிந்து கார்ல் மனமுடைகிறான்.

 5. 5. மைக்கின் பாஸ்

  21 நிமிடங்கள்4 நவம்பர், 201216+சப்டைட்டில்

  மைக்கின் தாய் அவன் பல முறை தடுத்தும் கூட அவனுடைய பாஸுடன் டேட்டிங் செய்யத் தொடங்குவது மைக்கை ஒரு சங்கடமான சூழ்நிலையில் வைக்கிறது. மைக்கின் பாஸ், போலீஸ் கேப்டன் பாட்ரிக் மர்ஃபியாக ஜெரால்ட் மெக்ரானி கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

 6. 6. முற்றத்தில் விற்பனை

  21 நிமிடங்கள்11 நவம்பர், 201216+சப்டைட்டில்

  வீட்டில் பொருட்கள் குவிந்துவிட்டதால் அடைசலான உணர்வு ஏற்படுகிறது. மாலி முற்றத்தில் ஒரு விற்பனைக்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். அதே நேரத்தில் கிறிஸ்டினாவுடனான உறவில் ஏற்பட்ட முறிவை கார்ல் மறக்க உதவுவதற்கு மைக்கும் தோழர்களும் அவனை ஒரு மீன்பிடிக்கும் பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறார்கள்.

 7. 7. தாங்க்ஸ்கிவிங் ரத்து செய்யப்படுகிறது

  20 நிமிடங்கள்18 நவம்பர், 201216+சப்டைட்டில்

  தாங்க்ஸ்கிவிங் தினத்தின்போது மைக் உடல் நலமின்றி இருக்கிறான். மாலி ரகசியமாகப் பூரிப்படைகிறாள் - காரணம், வின்ஸ் அவனுடைய சகோதரன் ஃப்ராங்கியை அழைக்கும்வரை அவள் உணவு தயாரிக்கவேண்டிய அவசியம் இருக்காது.

 8. 8. மைக் ஆலோசனைகளை விரும்புகிறான்

  20 நிமிடங்கள்25 நவம்பர், 201216+சப்டைட்டில்

  குழந்தை பெற முயற்சித்த பல வாரங்களுக்குப் பிறகும் மாலி கர்ப்பமடையவில்லை. மைக் பதட்டமடைந்து, கார்ல் மற்றும் சாமுவேலிடம் ஆலோசனை கேட்கிறான்.

 9. 9. மைக் பரிசோதனை செய்துகொள்கிறான்

  19 நிமிடங்கள்2 டிசம்பர், 201216+சப்டைட்டில்

  படையில் ஒரு துப்பறியும் பதவிக்கு முயலுமாறு மாலி மைக்கை ஊக்குவிக்கிறாள். ஆனால் தகுதித் தேர்வுக்கு அமர்வதால் ஏற்படும் மன அழுத்தம், அவர்களது உறவைப் பெரிதும் பாதிக்கிறது.

 10. 10. கராஓக்கே கிறிஸ்துமஸ்

  21 நிமிடங்கள்16 டிசம்பர், 201216+சப்டைட்டில்

  மைக் சான்ட்டா போல் ஆடை அணிந்துகொள்கிறான். ஆனால் மாலியின் கிறிஸ்துமஸ் செலவினம் குறித்த மன உளைச்சலில் கிரின்ச் போன்ற உணர்வுதான் அவனுக்கு மேலிடுகிறது.

 11. 11. காலை உணவுக்கு மீன்

  18 நிமிடங்கள்13 ஜனவரி, 201316+சப்டைட்டில்

  கர்ப்பம் தயாரிப்பதற்கான தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில், காஃபெய்னைக் கைவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில் மைக் தன்னுடன் சேர்ந்துகொள்ள மாலி ஊக்கப்படுத்துகிறாள். இதனால் இருவரும் பெரிய அளவில் உள்ளுக்குள் முடங்கிப் போகிறார்கள்.

 12. 12. மாலியின் பிறந்தநாள்

  19 நிமிடங்கள்20 ஜனவரி, 201316+சப்டைட்டில்

  மாலியின் பிறந்தநாளன்று அவளை மகிழ்ச்சியில் திளைக்கவைக்க மைக் தயாராகிறான். ஆனால் விக்டோரியாவின் நண்பன் டாம் தயாரித்த சைக்கடெலிக் ஜெலாட்டோவைச் சுவைத்தபின் எதிர்பாராத ஒரு பயணத்தை மேற்கொள்கிறான். அவனுடைய திட்டங்கள் ஏடாகூடமாக மாறுகின்றன.

 13. 13. கார்லுக்கு ஓர் அறை நண்பன் கிடைக்கிறான்

  19 நிமிடங்கள்3 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  மைக் தன்னுடைய பேஸ்மெண்ட் குடியிருப்பைத் தானும் மாலியும் வாழ்வதற்கான வீடாக மாற்றியமைக்கத் தொடங்குகிறான். ஆனால் கட்டுமான வேலை அவனோ - அவனுடைய புருவங்களோ - சமாளிக்கக்கூடியதைவிட மிக அதிகமாக இருக்கிறது!

 14. 14. இளவரசியும் பூதமும்

  21 நிமிடங்கள்10 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  காதலர் தினத்திற்காக விக்டோரியாவை டேட்டிங் அழைத்துச் செல்லுமாறு ஹாரியை மைக், மாலி இருவரும் ஊக்குவிக்கிறார்கள். அவள் ஏற்றுக்கொள்ளும்பொழுது அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

 15. 15. மைக் த டீஸ்

  20 நிமிடங்கள்17 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  மைக் ஆண்மை பற்றிப் படித்தறிந்து, ஒரு மருத்துவமனைக்குச் செல்கிறான் - தன்னுடைய "நீச்சல் வீரர்கள்" மாலியுடன் ஒரு குடும்பத்தைத் துவங்குவதற்கான பணிக்குத் தகுதியாக இருக்கிறார்களா என்பதை அறிய.

 16. 16. மாலியின் புதிய ஷூக்கள்

  18 நிமிடங்கள்24 பிப்ரவரி, 201316+சப்டைட்டில்

  மாலி சிறிது சில்லறை சிகிச்சையை அனுபவித்தபடி ஷாப்பிங் செய்யத் தொடங்கிவிடுகிறாள். ஒரு கருத்து வேறுபாட்டிற்குப் பின், மைக் கோபம்கொண்டு புயல் வேகத்தில் அங்காடியை விட்டு மறைந்துசென்றுவிடுகிறான்.

 17. 17. புனித பாட்ரிக் தினம்

  19 நிமிடங்கள்17 மார்ச், 201316+சப்டைட்டில்

  சில அதிர்ஷ்டசாலிப் பெண்களை ஈர்க்கும் நம்பிக்கையில் கார்ல், சாமுவேல் இருவரும் ஒரு செயின்ட் பேட்ரிக்ஸ் தின விழாவை நடத்துகின்றனர். இதற்கிடையில், மோலி தனது முந்தைய செயின்ட் பாட்ரிக்ஸ் தினச் சுற்றுலாக்களிலிருந்து சில கிளுகிளுப்பூட்டும் இரகசியங்களை மைக்கிடம் வெளிப்படுத்துகிறாள்.

 18. 18. வசந்தகால இடைவேளை

  20 நிமிடங்கள்24 மார்ச், 201316+சப்டைட்டில்

  விக்டோரியாவின் ஜுனியர் கல்லூரி நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக மாலி தன்னுடைய சகோதரியுடன் ஒரு ஸ்ப்ரிங் ப்ரேக் சாலைப் பயணத்தில் கலந்துகொள்கிறாள். அதே சமயம், மைக் தன் முதலாளியைத் தாஜா செய்து சில ஓவர்டைம் பணிகளைப் பெற முயற்சிக்கிறான்.

 19. 19. பார்ட்டி திட்டமிடுபவர்கள்

  20 நிமிடங்கள்14 ஏப்ரல், 201316+சப்டைட்டில்

  மைக்கின் பிறந்தநாள் ஆசை அவனுடைய மனைவியும் தாயும் ஒருவரை ஒருவர் நல்லவிதமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது. என்றாலும் மோலி, பெக்கி இருவரும் சேர்ந்து அவனுடைய பிறந்தநாள் விழாவைத் திட்டமிட முயற்சிக்குபொழுது, அவர்கள் அவ்வளவு நன்றாக ஒத்துப்போவதுபோல் தெரியவில்லை.

 20. 20. மைக்கால் படிக்க முடியாது

  20 நிமிடங்கள்28 ஏப்ரல், 201316+சப்டைட்டில்

  ஜாய்ஸ் தாயான பின் தன்னுடைய கலைத்திறமைகளைக் கைவிட்டதை அறிந்த பிறகு, தானும் மைக்கும் பெற்றோராக மாறுவதற்கு முன்பு புதிய பொழுதுபோக்குகளை மேற்கொள்ளவேண்டும் என்று மாலி முடிவு செய்கிறாள்.

 21. 21. மாலி ஊரில் இல்லை

  21 நிமிடங்கள்5 மே, 201316+சப்டைட்டில்

  மாலி காணாமல்போன ஏக்கத்தைச் சமாளிக்க மைக் ஜங்க் உணவுகளில் இறங்குகிறான். இதற்கிடையில் ஜேம்ஸிடமிருந்து வந்த மனமுடைக்கும் செய்தியைக் கேட்டபின் கார்ல் ஷிகாகோவை விட்டுச் செல்வது பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறான்.

 22. 22. பள்ளி இசை நிகழ்ச்சி

  20 நிமிடங்கள்12 மே, 201316+சப்டைட்டில்

  மாலி ஒரு பள்ளி இசை நிகழ்ச்சியை இயக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாள். சக ஆசிரியை தன்னை இடித்துப் பேசியத்தைக் கூட அவள் உணரவில்லை. இதற்கிடையில், ஒரு அசாதாரணமான பணம் சம்பாதிக்கும் திட்டத்தில் சேர்ந்துகொள்ளுமாறு வின்ஸ் மைக்கிடம் பேசிக் சம்மதிக்கவைக்கிறான்.

 23. 23. காற்றடிக்கும் நகரம்

  19 நிமிடங்கள்29 மே, 201316+சப்டைட்டில்

  மூன்றாவது சீசன் முடிவில், மைக், கார்ல் இருவரும் ரினேஸான்ஸ் ஃபேரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதலாளி, கேப்டன் மர்ஃபி மைக்கின் தாயால் புறக்கணிக்கப்பட்ட பிறகு அவர்கள் அங்கு மாட்டிக்கொள்கிறார்கள்.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Katy Mixon, Nyambi Nyambi, Cleo King, Louis Mustillo, Rondi Reed, Swoosie Kurtz