உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

பில்லி கார்டெல் மற்றும் மெலிசா மெக்கார்த்தி நடிக்கும் மைக் & மாலியின் நான்காவது சீசன் ஆச்சரியங்கள் பொதிந்தது. சீசனின் ப்ரீமியரில், எழுத்தாளர் என்ற தன் கனவைப் பின்பற்றுவதற்காக ஆரம்பப்பள்ளி ஆசிரியை வேலையைத் திடீரென்று விட்டுவிடுகிறாள் மாலி. துடிப்பான போலீஸ் கணவன் மைக் மற்றும் தனது குடும்பத்தினரின் தொடர்ந்த ஆதரவுடன், தான் கனவுகண்டு வந்த இலட்சியப் பெண்ணாக மாற மாலி புறப்படுகிறாள்.

நடித்தவர்கள்
ரெனோ வில்சன், ஸ்வூஸி குர்ட்ஸ், மெலிஸ்ஸா மக்கார்த்தி
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. மாலி கட்டவிழ்த்துவிடப்படுகிறாள்

  Not available20 நிமிடங்கள்3 நவம்பர், 201316+சப்டைட்டில்

  நான்காவது சீசன் பிரீமியர் பகுதியில், மாலி (மெலிஸ்ஸா மக்கார்த்தி) தன தொழில்வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்கிறாள். பின் ஆசிரியையாக இருப்பதை விட்டுவிட்டு எழுத்தாளராக மாறுவது என்ற முக்கிய முடிவை எடுக்கிறாள்.

 2. 2. முதல் மற்றும் கடைசி சவாரி

  Not available20 நிமிடங்கள்10 நவம்பர், 201316+சப்டைட்டில்

  தான் எழுத விரும்பும் ஒரு குற்ற நாவலை ஆய்வு செய்வதற்காக மைக், கார்ல் (பில்லி கார்டெல் மற்றும் ரெனோ வில்சன்) இருவருடன் சவாரி செல்கிறாள்.

 3. 3. செக்ஸ் மற்றும் இறப்பு

  Not available20 நிமிடங்கள்17 நவம்பர், 201316+சப்டைட்டில்

  விக்டோரியாவின் பணியிடத்திற்கு, அதாவது ஒரு ஈமச்சடங்கு நிலையத்திற்குச் சென்று பார்க்கும்பொழுது மோலிக்கு ஒரு "அசரவைக்கும்" அனுபவம் கிட்டுகிறது. இதற்கிடையில், மாலி வீட்டில் இல்லாதபோது அவளுடைய விறுவிறுப்பான, சற்றே கிளுகிளுப்பான எழுத்துக்களை நோட்டமிடுகிறான்.

 4. 4. நீ தேடும் விஷயத்தில் கவனம்

  Not available21 நிமிடங்கள்24 நவம்பர், 201316+சப்டைட்டில்

  மாலி தன் இலக்கிய முன்மாதிரியான ஜே.சி. ஸ்மாலின் (கௌரவ வேடம் சூசன் சரன்டன்) ஆலோசனை பெறுகிறாள். ஆனால் அது அவளுடைய குடும்பத்தின் பெயரை அவளே கெடுப்பதாக அமைந்துவிடுகிறது.

 5. 5. முன்னால் தூண்டிவிட்டு, பின்னால் வேடிக்கை பார்ப்பவன்

  Not available20 நிமிடங்கள்1 டிசம்பர், 201316+சப்டைட்டில்

  மாலி தனது சந்தேகப்பிராணியான அடுத்தவீட்டுக்காரரை உளவு பார்க்க ஜாய்ஸை நியமிக்கிறாள். அதே சமயம், மைக் மற்றும் தோழர்கள் ஒரு போக்கர் ஆட்டத்திற்காகக் கூடுகின்றனர். தங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

 6. 6. ஷூ இல்லாத மாலி ஃப்ளின்

  Not available18 நிமிடங்கள்8 டிசம்பர், 201316+சப்டைட்டில்

  மைக்குடனான தனது திருமணத்தில் இணக்கத்தைப் பராமரிக்க விரும்பினால், மாலி ஷூக்களுக்காகச் செலவழிக்கும் தனது பழக்கத்தை நெகிழ்த்திக்கொள்ளவேண்டும்.

 7. 7. அவர்கள் கழுதைகளைச் சுடுகிறார்கள், இல்லையா?

  Not available18 நிமிடங்கள்15 டிசம்பர், 201316+சப்டைட்டில்

  ஒரு கொள்ளைச் சம்பவத்தின்போது சுடப்பட்ட பின், ஒவ்வொரு நாளையும் ஏதோ தன்னுடைய கடைசி நாள் போல் வாழவேண்டும் என்று மைக் முடிவு செய்கிறான். இதன் விளைவாக, தான் காவல்துறையை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டதாக அவன் கார்லிடம் கூறுகிறான்.

 8. 8. மாலி செய்தது

  Not available20 நிமிடங்கள்12 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  மாலி தனது நாவலை எழுதுவத்திலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கிறாள். வின்ஸின் கிடங்கில் ஒரு ஃபோர்க்லிஃப்ட் டிரைவராக வேலையை ஏற்றுக்கொள்கிறாள். கலவையான விளைவுகள் ஏற்படுகின்றன.

 9. 9. மைக் & மாலியின் அற்புத சாகசம்

  Not available19 நிமிடங்கள்19 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  மைக்கை அவனுடைய வழக்கமான செயல்களை விட்டு விலகச் செய்வதில் மாலி உறுதியாய் இருக்கிறாள். வாழ்க்கையில் அவர்கள் விரும்பும் எதையும் ஏற்றுக்கொள்ள அவனை ஊக்குவிக்கிறாள். அவர்கள் புதிய விஷயங்களை முயற்சி செய்கிறார்கள் - உண்மை நிலையை உணர்ந்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் நேரம் வரும் வரை.

 10. 10. பெக்கியுடன் வார இறுதி

  Not available19 நிமிடங்கள்26 ஜனவரி, 201416+சப்டைட்டில்

  ஜாய்ஸுடன் பணம் பற்றிய ஒரு கணிசமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மைக், மாலி இருவரும் பெக்கியின் மைக்கின் குழந்தைப்பருவ அறையில் குடியேறுகிறார்கள்.

 11. 11. டிப்ஸ் & சல்சா

  Not available18 நிமிடங்கள்2 பிப்ரவரி, 201416+சப்டைட்டில்

  ஒரு சல்சா வகுப்பில் மாலியின் நடனக் கூட்டாளியாகத் தன்னை மாற்றுமாறு மைக் கார்லிடம் கேட்டுக்கொள்கிறான். ஆனால் அவர்கள் மிகவும் ஜாலியாக இருப்பதை உணர்ந்துகொண்டவுடன் பொறாமை கொள்கிறான்.

 12. 12. மாலி பற்றி கவனம்

  Not available21 நிமிடங்கள்23 பிப்ரவரி, 201416+சப்டைட்டில்

  மைக்கின் வற்புறுத்தலால் மாலி முணுமுணுத்துக்கொண்டே ஒரு சிகிச்சையாளரிடம் (கௌரவ வேடம் ஜான் மைக்கேல் ஹிக்கின்ஸ்) செல்கிறாள்.

 13. 13. ஓபன் மைக் நைட்

  Not available18 நிமிடங்கள்2 மார்ச், 201416+சப்டைட்டில்

  நம்பிக்கை மிகுந்த மாலி சாமுவேலுக்கு தன் அறிவுரையை அளிக்கிறாள். அவன் இப்போது ஒரு ஸ்டான்ட்-அப் காமிக்காக இருக்க விரும்புகிறான். இதற்கிடையில், ஹாரிக்கு மாலி அளித்த அறிவுரை அவனைத் தன் பாதுகாப்புணர்வு மிகுந்த தாய்க்கு சவால் விடச் செய்கிறது.

 14. 14. பணக்கார மனிதன், ஏழைப் பெண்

  Not available19 நிமிடங்கள்9 மார்ச், 201416+சப்டைட்டில்

  விக்டோரியா வீட்டிற்கு ஒரு புதிய நண்பன் ஜேம்ஸை (கௌரவ வேடம் மாதர் ஸிக்கெல்) அழைத்துவருகிறாள். கடைசியில் "அவன்" இவன்தானோ என்று மொத்த குடும்பமும் சிந்திக்கிறது.

 15. 15. மூன்று பெண்கள் மற்றும் ஒரு தாழி

  Not available19 நிமிடங்கள்16 மார்ச், 201416+சப்டைட்டில்

  பெக்கியின் சிறுவயது தோழி கே மெக்கினோன் (கௌரவ வேடம் காத்தி பேட்ஸ்) நகரத்திற்கு வந்தபோது மாலி தான் கனவு கண்டுவந்த சிறந்த தோழியை அவளில் காண்கிறாள். ஆனால் பெக்கிக்குப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் இல்லை.

 16. 16. டைஸ் லேடி வருகிறாள்

  Not available18 நிமிடங்கள்23 மார்ச், 201416+சப்டைட்டில்

  மாலியும் மற்ற தோழிகளும் வார இறுதியில் ஒரு படகுச் சூதாட்ட நிலையத்திற்குச் செல்கிறார்கள். அங்கு மாலி சிறிது பணம் வெல்லலாம் என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மைக், வின்ஸ் இருவரும் தோழர்களுடன் கல்லூரி கூடைப்பந்து விளையாடி மகிழ முயல்கிறார்கள்.

 17. 17. மெக்மில்லனும் அம்மாவும்

  Not available20 நிமிடங்கள்13 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  கார்ல், மைக், சாமுவேல் மூவரும் முதன்முறையாக கார்லின் தாயைச் சந்திக்க மெம்ஃபிஸிற்கு ஒரு சாலைப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

 18. 18. மைக்கின் பலவகைப்பட்ட விதி

  Not available18 நிமிடங்கள்20 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  மைக் தனது கார் சேதமடைந்த பின்னர் ஒரு பாடம் கற்றுக்கொள்கிறான். அதைச் சரிசெய்ய கார்டலிமிருந்து கடன் பெறுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

 19. 19. ஜே.சி.ஸ்மாலைக் கண்டு அஞ்சுவது யார்

  Not available21 நிமிடங்கள்27 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  மைக் மற்றும் கார்ல் மாலியின் இலக்கியக் கதாநாயகனான ஜே.சி.ஸ்மாலை (சூசன் சாரான்டன்) (மதுவின்) மயக்கத்தில் வாகனம் ஓட்டியதற்காகக் கைதுசெய்கிறார்கள்.

 20. 20. செக்ஸ், பொய்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்

  Not available19 நிமிடங்கள்4 மே, 201416+சப்டைட்டில்

  விக்டோரியாவின் அறையிலிருந்து இரவு வெகு நேரத்திற்குப் பின் வெளிவரும் கார்லை மாலி மடக்கிப் பிடிக்கிறாள். அவள் இதுபற்றி மைக்கிடம் கூறுவாளா இல்லையா என்ற கேள்வியோடு அவளை விட்டுச் செல்கிறாள்.

 21. 21. பழைய பெக்கி

  Not available18 நிமிடங்கள்11 மே, 201416+சப்டைட்டில்

  பெக்கியின் குளியல்தொட்டி விட்டத்தை வழியே விழுகிறது. இதைத் தொடர்ந்து பெக்கி ஒரு மருத்துவரைச் சென்று காணவேண்டும் என்று மைக் விரும்புகிறான்.

 22. 22. எட்டு போதும்

  Not available19 நிமிடங்கள்18 மே, 201416+சப்டைட்டில்

  நான்காவது சீசன் முடிவில், மோலி அயோவாவில் நடைபெறும் ஒரு கௌரவமிக்க எட்டு வார எழுத்தாளர் பட்டறையில் பங்கேற்பாளராக ஏற்றுக்கொள்ளப்படுகிறாள். ஆனால் மைக் அவளைப் போகவேண்டாம் என்று கூறும்பொழுது ஒரு முக்கிய தீர்மானத்தை எதிர்கொள்கிறாள்.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Katy Mixon, Nyambi Nyambi, Cleo King, Louis Mustillo, Rondi Reed, Swoosie Kurtz