Prime Video
  1. உங்கள் கணக்கு

ஷின் சான்

5 வயது சிறுவன் ஷின் சான் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு தருகிறான்
IMDb 8.0200652 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - ஹிமாவாரியின் ஆடைகளை அணிந்தோம் நாங்கள்! / கேக் சாப்பிடும் ஷீரோ! / தொலைக்காட்சிப் போட்டியில் அப்பா!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஹிமாவாரியின் புது ஆடைகள் அணிந்து ஷின் சான், கசாமா, போ-சான், மசாவோ அங்காடிக்குப் போக, மிட்ஸி அவர்களைப் பார்த்து அதிர்கிறார். / ஷின் சான் ஷீரோவுக்கு சாப்பாடு வைக்க மறந்துவிட, பசியால் ஷீரோ, மீக்கி, யோஷிரின் கொடுத்த கேக்கை உண்கிறது. / ஒரு மில்லியன் பரிசு வழங்கும் போட்டியில் ஹேரி கலந்துகொள்ள; தன் பழைய ஸ்வெட்சூட்டை தேட அது நாற்காலி துடைக்கும் துணியாக மாறியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - அம்மா மற்றும் ஹிமாவாரி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் / இரண்டாவது ரகசிய பாதுகாப்பு தளம் அமைத்தல் / மட்சுஜாகா அவர்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடுதல்!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    7+
    மிட்ஸி தன் தோழியின் திருமணத்திற்கு செல்ல வீட்டை விட்டு கிளம்புகின்றாள். காஸுகாபே பாதுகாப்புக் குழு காட்டில் இரண்டாவது இரகசிய தளத்தை உருவாக்குகின்றது. கோபத்தில் நேனே-சான் தளத்தை உடைத்ததால், அவர்கள் யோசிநாகாவின் பால்கனிக்கு திரும்புகின்றனர். மட்சுசாகாவிடம் பணம் இல்லை. அவள் ஷின் சானுடன் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாள் அதனால் யோஷினாகாவிற்கு கூட்ட கட்டணம் செலுத்துவதை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கின்றாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - மாசௌவுடன் ஷாப்பிங் / நான் ஒரு புதுமையான விளையாட்டை இன்று விளையாடுவேன்
    31 டிசம்பர், 1991
    15நிமி
    TV-PG
    மாசௌவுடைய நண்பர்கள், அவனுக்கு மளிகை பொருட்கள் பல்பொருள் அங்காடியிலிருந்து வாங்க உதவுகிறார்கள். பணம் செலுத்தும் பொது, மாசௌ பணப்பையை தொலைத்துவிட்டதாக உணர்கிறான். ஆனால், மாசௌவின் அம்மா அவன் வீட்டில் மறந்த பணப்பையை அவனுக்குத் திரும்ப தருகிறார்கள். ரயுக்கோ புதிய வீட்டைத் தேட எண்ணி, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ஷின் சான் ஆவலுடன் ஒரு விளையாட்டை விளையாடி வாழ்க்கை பற்றிய பாடம் கற்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - அப்பாவுக்கு ஹிமாவாரியைத் தான் பிடிக்கும்! / நாங்கள் சுற்றுலா செல்கிறோம்! / காஸுகாபே தற்காப்புக்குக் குழு தன் சிறந்தது!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    தந்தையாக ஹேரி பாசத்தை ஹிமாவாரியிடம் வெளிப்படுத்த; ஹிமாவாரியோ அதை ஏற்க மறுத்து, பின் அப்பா என்று அழைக்கும்போது ஹேரி பூரிப்டைகிறார். / நோஹாரா குடும்பம் சுற்றுலா செல்ல; ஹேரி சில இளம் பெண்களை பின்தொடர்ந்து, மிட்ஸியிடம் அடி வாங்குகிறார். / காஸுகாபேவின் வளர்ச்சி பணி செய்யும் ‘காஸுகாபே பாதுகாவலர் குழு’ என்ற புதிய சமூக சேவகர் அணி, பள்ளிமுதல்வரைக்கண்டு பயந்துபோய் அழுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - என் தாதாக்கள் ஒரு ஆச்சரிய வருகை புரிந்தனர் ! / அப்பாவிடம் ஒரு புதிய செல்போன் ! / என் முயற்சிகளுக்கு சோகாசிப்ஸ் கிடைக்கும் !
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஷின் சானின் தாத்தாக்கள் ஒன்றாக ஆச்சரிய வருகை புரிந்தனர். அவர்கள் திரும்பியதும், ஷின் சானின் பாட்டிகள் வருகின்றனர். ஹேரி புது செல்ஃபோன் வாங்குகின்றான். முக்கியமான தொலைபேசி எண்களை அதில் பதிவு செய்கின்றான். ஷின் சான், அதில் வாடிக்கையாளரின் எண்ணை அழித்து விட்டு, மாசௌவின் எண்ணை பதிவு செய்கின்றான். தள்ளுபடி மற்றும் பரிசுப்பொருட்கள் பெறுவதற்காக ஹேரியின் பனிக்கால உடைகளை மிட்ஸி சலவைக்கு கொடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - இன்று எங்களுக்கு புகைப்படத்தொகுப்பு! / ஒரு புதிய பள்ளிக்கு வருகை புரிதல் ! / அம்மாவிற்கு மகரந்த ஒவ்வாமை!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-PG
    மிட்ஸி, ஷின் சான் மற்றும் ஹிமாவாரி தள்ளுபடி விலையில் தங்களின் புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். காஸுகாபே பாதுகாப்பு குழு செல்லும் பள்ளிக்கு ஷின் சானும் அவனது நண்பர்களும் செல்கின்றனர். கசாமா பள்ளியில் சேர ஆர்வம் காட்டுகின்றான். மிட்ஸி, தனக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாக நினைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்கின்றாள். ஆனால் அவளுக்கு இருப்பது சளி என மருத்துவர் உறுதிப்படுத்துகின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - ஹிமாவாரி அனைவரைப் போலவும் நடிக்கின்றாள் ! / அப்பா அண்டை வீட்டாரால் கஷ்ட்டப்படுத்தப்படுகிறார்! / தொலைந்த உறையை தேடுதல்
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-PG
    மிட்ஸி, ஷின் சான் மற்றும் ஹேரியின் நடவடிக்கைகளை ஹிமாவாரி நடித்து காட்டுகிறாள். யோஷிரின் வணிகப்பயணம் மேற்கொண்ட பொழுது, ஹேரி மிச்சியை பார்க்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கின்றான். அலார்ம்களால் மிச்சி ஹேரியை எரிச்சலடைய வைக்கின்றாள். மிட்ஸி தன்னுடைய மறைத்து வைக்கப்பட பணவுரையை தேடுகின்றாள். ஹேரி அந்த உறையை எடுத்த பின், ஹேரிக்காக புதிய சாக்ஸ் வாங்க அந்த பணத்தை வைத்திருந்ததாக மிட்ஸி பொய் சொல்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - உலக வெப்பமயம் ஆவதை எங்களை போல் தடுங்கள் / கசாமாவை குழந்தையை பராமரிக்க நியமிக்கிறேன் / நானகோவை நான் பார்த்துகொள்கிறேன்
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சிறிது பணம் சேர்க்கவும், மிட்ஸி மின்சாரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறாள். ஹிமாவாரியை கசாமா சிறிது நேரம் பார்த்துக்கொள்கிறான். அவன் அம்மாவையும் ஹிமாவாரி போல் தனக்கு ஒரு தங்கையை கொண்டு வருமாறு கேட்கிறான். நானாகோவிற்கு சளி பிடித்திருப்பதால், நானாகோவின் தந்தையும் ஷின் சானும் அவளை பார்க்க விரைகின்றனர். அங்கு ஷினோபுவை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - என்னை நானே காயப்படுத்திக்கொண்டேன் ! / அம்மாவின் புதிய வேலை இன்று தொடங்குகிறது! / அம்மாவின் புதிய வேலை கடினமானது!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஷிரோவிற்காக ஒரு உணவு புட்டியை திறக்கும்பொழுது, ஷின் சான் அவனது விரலை வெட்டிக்கொள்கிறான். விலையுயர்ந்த ஆடை வாங்குவதற்காக மிட்ஸி ஒரு புதிய வேலையில் சேர்கிறாள். அவளது குடும்பத்தை சமாதானப்படுத்தி, ஹிமாவாரியை ஒரு தின குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்து விடுகிறாள். ஆயினும், அவளின் பணி முதல்வரும் மேற்பார்வையாளரும் அவளிடம் தவறாக நடந்ததால் மிட்ஸி அவளின் பொறுமையை இழந்து வேலையை இராஜினாமா செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - அம்மாவுடன் பேப்பர்-கல்-கத்தரி விளையாட்டு! / காப்பீடு செய்தல் நல்ல பழக்கம்! / அப்பா சைவத்திற்கு மாறிவிட்டார்.!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஷின் சானும் மிட்ஸியும் பேப்பர்-கல்-கத்தரி விளையாட்டு விளையாட, ஷின் சான் அதிர்ஷ்டவசமாக ஒரு சுற்றில் வெற்றியடைகிறான். பள்ளி ஆசிரியர்களை காப்பீடு வாங்க வைப்பதில் ஜிங்க்கோ தோல்வியடைய, மட்சுஸாகாவும் ஜிங்க்கோவும் பள்ளி நண்பர்கள் என்று தெரிந்த பின் அவரின் காப்பீட்டு திட்டம் விற்கிறது. சக்கரை நோயால் ஹேரி சைவத்திற்கு மாற, ஷின் சானும் மிட்ஸியும் ஒரு டப்பா நிறைய மாமிசத்தை வெளுத்துக்கட்டுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - நேனே-சான் வீட்டில் ஒரு புதிய குழந்தை! / மட்சுஸாகா மேடம் மற்றும் எனக்கு அடிப்படுகிறது! / மீண்டும் ஒரு முறை மட்சுஸாகா மேடத்திற்கு அடிப்படுகிறது!
    31 டிசம்பர், 1991
    18நிமி
    TV-PG
    நேனே-சானின் அம்மா கருவுற்றிருப்பதாக மிட்ஸி யூகிக்கிறாள். மட்சுஜாகா கீழே விழுந்து காயமேற்பட, டாக்டர் டொகுருவினை சென்று பார்த்து அவர் மீது மையல் கொள்கிறாள். ஆனால், ஷின் சானும் தனது சுளுக்கிற்கு சிகிச்சை பெற அங்கு செல்கிறான். டாக்டர் டொகுரு தனிப்பட்ட முறையில் மட்சுஜாகாவிற்கு அவளது மருத்துவ அட்டையினை தருகிறார். உற்சாகத்தில், மட்சுஜாகா கால் தவறி மீண்டும் கீழே விழுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - காஸுகாபே பாதுகாப்பு பயிற்சி பயனளித்தது! / மட்சுஜாகா மேடம் மருத்துவமனையில் அனுமதி! / மட்சுஜாகா மேடம் மற்றும் நான் மருத்துவமனையில் அனுமதி!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-PG
    ஹிமாவாரியை காப்பாற்றும் போது ஷின் சானுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. யோஷினாகாவும் பள்ளி முதல்வரும் மருத்துவமனைக்கு சென்று மட்சுஜாகாவினை பார்க்கிறார்கள். டாக்டர் டொகுருவுடன் தனது சகோதரிகள் அரட்டை அடிப்பதைக் கண்டு மட்சுஸாகாவிற்கு கோபம் ஏற்படுகிறது. மருத்துவர் டொகுருவை உளவு பார்க்குமாறு ஷின் சானிடம் வேண்டுகோள் விடுக்கிறாள் மட்சுஜாகா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - மருத்துவமனையிலிருந்து நான் ஓட்டம்! / மருத்துவமனையில் மேலும் ஒரு நாள்! / மட்சுஜாகா மேடமும் மருத்துவரும் இப்போது நண்பர்கள்!
    31 டிசம்பர், 1991
    19நிமி
    TV-PG
    தன்னை நனாகோ சந்திக்கவில்லையென்பதற்காக ஷின் சான் கோபம் அடைகிறான். தனது பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு திரும்புகிறான். மிட்ஸி ஹிமாவாரியை மட்சுஜாகாவிடம் விட்டுவிட்டு ஷாப்பிங் செல்கிறாள். ஹிமாவாரி விளையாட்டுத் தனமாக மருத்துவமனையை சுற்றித் திரிவதனால் டாக்டர்களும் நர்சுகளும் வருத்தமடைகின்றனர். மருத்துவர் டொகுரு ஆண்கள் விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பதாக மட்சுஜாகா சந்தேகம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - நான் மருத்துவமனையிலிருந்து விடுவிப்பு! / நான் நடக்க முயற்சி ! / என் கால் இன்னும் வலிக்கிறது!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஷின் சான் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மிட்ஸியுடன் வீடு திரும்புகிறான். மிட்ஸி ஷின் சானிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறாள். ஹிமாவாரி பிளாஸ்டரை நீக்கிவிட்டு ஷின் சானால் நடக்க முடியுமென அவனுக்கு உணர்த்துகிறாள். ஷின் சான் அவனது காலில் ஏற்பட்டுள்ள வலி குறித்து பொய் சொல்கிறான் என மிட்ஸி ஐயம் கொள்கிறாள். எனவே, மிட்ஸி ஒரு உபாயம் செய்து ஷின் சானின் பொய்யை வெளிக் கொணர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - ஷின் சான் பள்ளியில் மீண்டும் சேர்தல்! / மாசுமி மேடம் தனது வேறுபட்ட முகத்தை காட்டுதல்! / பரிசுப் பெட்டியில் என்ன உள்ளது?
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    ஷின் சான் பள்ளியில் மீண்டும் சேர்கிறான். மட்சுஸாகாவிற்கு மாற்றாக மாசுமி சேர்வதுடன் குழந்தைகளை அவள் பார்க்கையில் பதற்றமடைகிறாள். ஆனால் அவள் தனது மூக்குக்கண்ணாடிகளை கீழே போடுவதுடன் கோபத்தையும் வெளிக்காட்டுகிறாள். மிட்ஸி, ஷின் சான் மற்றும் ஹிமாவாரி தங்களது விருப்பமான பரிசுகளை பெறாததால் வேதனை அடைகின்றனர். ஆனாலும் ரூ. 10, 000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - மசுமியின் முக்குக் கண்ணாடிக்கு பின் இருக்கும் ரகசியம் /நோஹாரா வீட்டில் ஒரு போர் /அம்மா அப்பாவுடன் வருத்தம்
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-PG
    மசுமி தன் மூக்குக் கண்ணாடி பற்றிய ரகசியத்தை யோஷினாகவுடன் பகிர்கிறாள். ஷின் சான் ஹிமாவாரியை ஒப்பனை மேசையிலிருந்து விலகியிருக்க செய்ய எல்லைகள் அமைத்தான். ஹிமாவாரியோ தடைகள் தாண்டி, ஒப்பனைப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். மிட்ஸி ஹேரியுடன் கோபித்துக்கொண்டு ஹிமாவாரியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் உணவகத்தில் மிச்சியுடன் பழச்சாறையும் உணவையும் ருசிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - பள்ளியில் முகாம்! / நாங்கள் மிக்சி மற்றும் யோஷிரின் வீட்டிற்கு செல்கிறோம்!
    31 டிசம்பர், 1991
    15நிமி
    TV-PG
    கஸாமாவின் படுக்கையை நனைக்கும் பழக்கத்தால், அவன் ஒரு டைப்பரை பள்ளி முகாமுக்கு போகும் போது எடுத்து செல்கிறான். ஷின் சான் அதை பார்த்து குப்பைக்கூடையில் போட்டு விட்டு கஸாமாவிற்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறான். / மிச்சியும் யோஷிரினும் ஹிமாவாரி மற்றும் ஷின் சானை பார்த்துக் கொள்ளும் வேலையை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஹிமாவாரியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - ஐஸ் தின்பண்டங்களை தின்னுதல்! / ஏசியில் பழுது!
    31 டிசம்பர், 1991
    16நிமி
    TV-PG
    ஷின் சானும் அவனது நண்பர்களும் சேர்ந்து மிட்ஸி இல்லாத நேரத்தில் ஐஸ் தின்பண்டங்களை தயாரிக்கினறனர். மிட்ஸி மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்து ஷின் சான் வீட்டை குப்பைக் கூளமாக்கி வைத்திருப்பதைக் கண்டு கோபம் கொள்கிறாள். / ஏசி துவாரங்களின் மூலம் சூடான காற்றை வெளியேற்றுவதால் ஹேரி விழித்தெழுந்து வெறுப்படைகிறான். ஏசியினை சோதிக்கும் போது, அதை சரி செய்ய 2-3 நாட்களாகும் என மெக்கானிக் ஹேரியிடன் சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - அம்மாவின் மறதிக் குணம்! / விக்கல்கள் நிற்பதில்லை! / குடும்ப விளையாட்டை ஆடுதல்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    மிட்ஸி வீட்டில் சோப்பினை தேடுகிறாள். ஹிமாவாரிக்கும் மிட்ஸிக்கும் விக்கல் ஏற்படுகிறது. அவர்களது விக்கல்களை நிறுத்த சில முறைகளை ஹேரி கையாள்கிறான். அவர்களது விக்கல்கள் நின்ற பிறகு, ஹேரிக்கு விக்கல் ஏற்படுகிறது. நேனே சான், மாசௌ மற்றும் ஷின் சானுடன் குடும்ப விளையாட்டினை விளையாடுகிறான். நேனே சான் இந்த விளையாட்டினை தீவிரமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாளும் கூட அதை தொடர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - நான் எந்த பொம்மையை வாங்கவேண்டும்? / நான் சரியாய் ஹிமாவாரியை பழிவாங்குவேன் / ஹிமாவாரி கதவை பூட்டிவிட்டாள்!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஒரு சிறிய பொம்மை கடையில் பொம்மை வாங்க ஒரு பெண்மணி ஷின் சான் மற்றும் அவனின் நண்பர்களின் உதவியை பெறுகின்றாள். ஷின் சானுக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி கேக்கை ஹிமாவாரி சாப்பிடுகின்றாள். அவளை ஷின் சான் பழிவாங்குகின்றான். இறுதியில், மிட்ஸி அவனுக்கு பெரிய கேக்கை வாங்கித்தருகின்றாள்/ பால்கணி கதவை ஹிமாவாரி சாத்திவிட்டு மிட்ஸியை வெளியே விடுகின்றாள். மிட்ஸி. கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் நூழைக்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - ஹிமாவாரி பியானோ கலைஞர் ஆவாளா? / மிக்சி எங்களுடைய எதிர்காலத்தை கணிப்பாள் / பட்டாசு வெடிக்கின்றோம்!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    ஹிமாவாரி பிரபலமாவாள் என்ற நம்பிக்கையில் அவளுக்காக ஒரு பெரிய பியானோ வாங்குமாறு மிட்ஸி ஹேரியை வற்புறுத்துகிறாள். / மிக்சி, டரோட் கார்டுகளை நம்பி , ஆபத்தை எதிர்ப்பார்ப்பதால், நொஹாரா குடும்பத்துடன் தங்குகின்றாள். ஹேரி பற்றிய அவளின் டரோட் சீட்டுகள் உண்மையாகின்றன. / நொஹாரா குடும்பம் பட்டாசுகளை வெடிக்கின்றது. ராக்கெட்டை வெடித்த பின், குடும்பம் தடுமாறி தண்ணீரில் விழுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - இன்று நான் அமைதியான பிள்ளை! / சுழல் துடைப்பத்துடன் விளையாட்டு! / மட்சுஸாகா மேடத்தை பார்க்கப்போறோம்!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    தான் வேலை பார்க்கும்போது அமைதியாக இருக்குமாறு ஹேரி குடும்பத்தினரிடம் கூற, ஷின் சான் அமைதியாக இருப்பதாகக்கூறி செய்கையில் சேட்டை செய்கிறான். சுழல் துடைப்பத்தை வைத்து ஷின் சான் விளையாட, ஹிமாவாரி அதைப் பிடுங்கி மிட்ஸி மீது விட, மிட்ஸி ஷின் சானின் மேல் அளவு கடந்த கோபம் கொள்கிறாள். ஷின் சானும் நண்பர்களும் மட்சுஸாகாவை மருத்துவமனையில் காணச் சென்று, தாங்கள் அவரை சந்தித்ததின் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - மசுமி மேடமை ஊக்கப்படுத்துவோம்! / விடியோ பிளேயர் வேலை செய்யவில்லை!
    31 டிசம்பர், 1991
    16நிமி
    TV-PG
    மசுமி தன் கருப்பான நிறத்தை நினைத்து தாழ்வுமனப்பான்மை கொள்ள, யோஷினாகாவும் குழந்தைகளும் அவளுக்கு வாழ்கையின் மீது நம்பிக்கையூட்டுகின்றனர். / ஒரு ஆபாச படத்தை வாங்கி வரும் ஹேரி, மிட்ஸியும் ஹிமாவாரியும் ஷாப்பிங் போன தருணத்தில் பார்க்க முயற்சி செய்கிறான். துரதிஷ்டவசமாக, பிளேயர் வேலைசெய்யாமல் நின்றுவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - கொசுக்களோடு சண்டை! / வயதான அத்தையைப் பார்க்கப்போறோம்! / ஷீரோவைத் தேடி... அம்மாவும் நானும்!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-PG
    கொசுக்களை விரட்ட, கொசுவர்த்தி வாங்க இரவு நேரத்தில் கடை கடையாக ஏறி இறங்குகிறார் மிட்ஸி. / ஷின் சானும் நண்பர்களும் தன்னை இளமையானவள் என்று நினைக்கும் சக்குராகோ என்ற ஒரு வயதான பெண்ணை சந்திக்க, அவர் அவர்களை வீட்டை சுத்தம் செய்ய வைக்கிறார். / ஷின் சான் ஷீரோவை எங்கோ மறந்து விட்டுவிட, மிட்ஸியும் ஷின் சானும் ஷீரோவை எங்கெங்கோ தேடி, கடைசியில் பக்கத்துவீட்டில் கண்டுபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ6 எ25 - அப்பாவும் நானும் விமான விளையாட்டு விளையாடப்போறோம்! / உலகம் ஆபத்தில் இருக்கிறது! / இன்று மருத்துவமனையை வீட்டு போய்விடலாம்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-PG
    செய்த சத்தியத்தின்படி தன்னோடு விமான விளையாட்டு விளையாடுமாறு ஹேரியை வற்புறுத்துகிறான் ஷின் சான். / விண்கற்களால் பயந்து கசாமாவும், குழந்தைகளும் உணவினை எதிர்காலத்திற்கு பாதுகாக்க பதுங்குக்குழிகளை தோண்ட, அதில் செடி வளர்க்குமாறு பள்ளிமுதல்வர் கூறுகிறார். / மட்சுஸாகாவின் சகோதரிகள் அவள் மீது பொறாமையடைய, மருத்துவமனையிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளையும் டோக்குரோவையும் சேர்த்து வைக்கிறான் ஷின் சான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Z. Charles BoltonMinetarô HiraiKeiichi HaraMitsuru Hongô
தயாரிப்பாளர்கள்
Laura BaileyJustin CookGen FukunagaCarly HunterTakahiro KishimotoHitoshi Mogi
நடித்தவர்கள்
Laura BaileyCynthia CranzColleen Clinkenbeard
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.