பட்டப் படிப்பை முடித்த ஹர்ப்ரீத் சிங் பேடி விற்பனைத் துறையில் ஒரு சவாலான வேலையில் அமர விரும்புகிறான். ஆனால் விரைவிலேயே, பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கான வேலையின் நிர்ப்பந்தங்களுக்கும், அவன் மனத்தின் விருப்பங்களுக்கும் இடையே சமநிலை பெறுவதைக் கடினமாக உணர்கிறான். ஒரு விநோதமான வழியைக் கண்டறிகிறான். அதனால் அவன் உலகம் தலைகீழாக மாறுகிறது.