ஷ்ருதி (அனுஷ்கா ஷர்மா) இருபதுகளில் உள்ள உறுதியான, லட்சிய நோக்குள்ள ஒரு பெண். இதற்கு மாறாக, பிட்டு (ரண்வீர் சிங்) வாழ்வில் குறிக்கோள்கள் இல்லாதவன். இருவரும் 'வெட்டிங் பிளானிங் கா பிசினஸ்' என்ற தங்கள் நிறுவனத்தில் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அவர்கள் நட்புடம், தொழிலும் டில்லியின் ஆடம்பரத் திருமணங்களின் ஏற்ற இறக்கங்களுடன் வளர்கிறது.. இருவரும் தங்களை உணர்வதுடன், ஒருவரை ஒருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.