

சுழல் - தி வோர்டெக்ஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - கொடியேற்றம்
16 ஜூன், 202256நிமிவட்டே சிமெண்ட்ஸ் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் தொடர் ஆரம்பமாகிறது. யூனியன் லீடரான சண்முகம் நிர்வாகத்திற்கு சவால் விடுகிறார். அன்றைய இரவே ஆலையில் தீவிபத்து ஏற்படுகிறது. சண்முகத்தை கைது செய்கிறது காவல் துறை. மாயமான தன் பதின்வயது மகளை நினைத்து துயரில் வாடிக்கொண்டிருக்கிறார் சண்முகம். தன் தங்கையை உடனடியாக கண்டுபிடிக்குமாறு காவல்துறையிடம் முறையிடுகிறாள் நந்தினி.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - கூத்து
16 ஜூன், 202245நிமிசண்முகத்தின் தனிப்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த ரெஜினா, களத்தில் குதிக்கிறார். இன்சூரன்ஸ் கம்பெனி சார்பாக, தீ விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வருகிறார் கோதண்டராமன். திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு நடுவே குற்றவாளியை தேடுகிறான் சக்கரை. ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது. சந்தேகிக்கப்படும் குற்றவாளி யாரென அறிந்தவுடன் அனைவருக்கும் தூக்கிவாரிப் போடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஊர்வலம்
16 ஜூன், 202242நிமிசந்தேகிக்கப்படும் குற்றவாளியின் குடும்பத்தாரிடம் ஆவேசமாக சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள் சண்முகம் குடும்பத்தினர். ரெஜினாவும், முன் எச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் எடுக்கிறார். கோதண்டராமனின் பொறுமை சோதிக்கப்படுகிறது.ரெஜினா சண்முகத்தின் பகை, உச்சம் அடைந்து வெடிக்கும் நிலைக்கு செல்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - குளத்தில் இறக்குதல்
16 ஜூன், 202248நிமிசக்கரையும் நந்தினியும் சரியான நேரத்தில் ஊருக்கு வருகிறார்கள். தங்கள் குழந்தைகளின் காதல் அத்தியாயத்தை கேட்டறிந்து ரெஜினாவும்,சண்முகமும் பல்வேறு விதமான நிலைக்கு உள்ளாகிறார்கள். ஊரைப் பற்றிய தங்களின் பார்வையை பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள் சக்கரையும் நந்தினியும். முந்தைய வருட அம்மன் சிலையை பக்தகோடிகள் குளத்தில் வீசுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - சூறை
16 ஜூன், 202246நிமிசண்முகம் ரெஜினாவின் குடும்பத்தை இருள் சூழ்ந்துள்ளது. உடற்கூராய்வறிக்கை மூலம் அறியப்படாத உண்மையை குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறார் மருத்துவர். ஆலையின் பராமரிப்பில் சந்தேகம் எழுப்புகிறார் கோதண்டராமன். நிலாவின் சமூக வலைதள பக்கத்தை சர்க்கரையும் நந்தினியும் ஆராய்கிறார்கள். இளஞ்சோடியைப் பற்றிய திடுக்கிடும் தகவல்களைக் கேட்க கேட்க சக்கரை அதிர்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - சுழலாட்டம்
16 ஜூன், 202244நிமிதங்கள் குழந்தைகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கிறார்கள் குடும்பத்தினர். எரிந்த ஆலையில் விசாரணை மேற்கொள்கிறார் கோதண்டராமன். சக்கரையும் ரெஜினாவும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்கிறார்கள். அவர்களின் முந்தைய கேள்விக்கான விடை, விசாரணையின் முடிவில் தெரியவருகிறது. சக்கரை அதிர்கிறான். மரபணு ஆய்வறிக்கையின் முடிவு, நந்தினியை நிலைகுலையச் செய்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - தீ மிதித்தல்
16 ஜூன், 202242நிமிநிலா அதிசயம் வழக்கை தொடர்ந்து விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள் காவல்துறையினர். நந்தினிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை என மருத்துவர் பரிந்துரைக்க, சண்முகம் அதனை ஆட்சேபிக்கிறார். கோதண்டராமன் விடாது முயற்சித்து துப்பு சேகரிக்கிறார். சக்கரை விதிகளை மீறி குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றான். ரெஜினாவும் சண்முகமும் பழி தீர்க்கும் ஆவேசத்தில் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - மயான அமைதி
16 ஜூன், 202246நிமிதீ விபத்து ஆய்வறிக்கைக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கோதண்டராமன் வசம் இப்போது உள்ளது. தங்கள் திட்டம் அனைத்தும் பலிக்காமல் போனதை எண்ணி மனமுடைந்து போகிறார். முகேஷ் வட்டே. மயான கொள்ளையின் இறுதிநாள் சடங்கில் ஊரே கூடியிருக்க ஒரு உருவம் மட்டும் தனியே மலையுச்சியில் நிற்கிறது. தன் வேலையை முடித்தவுடன், சாந்தமாக ஊஞ்சலில் துயில் கொள்கிறாள் அம்மன்.Prime-இல் சேருங்கள்