


எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
11 டிசம்பர், 202348நிமி1980-களில் ஆஸ்கர் தனக்கான இடத்தைத் மாட்ரிட்டில் தேடுகிறான். அனாதையாக கடினமான சூழலில் வளர்ந்த அவனுக்கு, 27 வயதில், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் தான் முன்னேற வேண்டும் என்று ஒரே ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. மர்மமான மற்றும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாரா ஃபராட்-ஐ சந்தித்த நாளன்று, அவளாலும் அவளது குடும்பத்தாலும், அவனுக்கு ஆடம்பர மற்றும் சந்தோஷமான வாழ்க்கைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கிறது...Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - அலுச்சேவிலிருந்து மார்பெல்லா வரை
11 டிசம்பர், 202348நிமிஆஸ்கர் மார்பெல்லாவில் ஃபராட் குடும்பத்தோடு தங்குகிறான். ஒரே வாரத்திற்குள், அவன் அலுச்சேவிலுள்ள தனது வீட்டிற்கு வாடகை கட்ட முடியாமல் இருந்த நிலையிலிருந்து, சாரா குடும்பத்தின் ஆடம்பரமான மாளிகையில் வாழ்கிறான், தனது மோட்டார் சைக்கிளில் நகரத்தைச் சுற்றியவன் கப்பலில் கோஸ்டா டெல் சோலைச் சுற்றிப் பயணிக்கிறான். ஆனால், எல்லாமே இவ்வளவு சுலபமாக கிடைக்காது: ஒரு ஃபராட் ஆக இருக்க, அவன் தன்னை நிரூபிக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - சிங்கங்களும், மாமனார் குடும்பமும்
11 டிசம்பர், 202350நிமிமார்பெல்லாவில் தனது புதிய ஜிம்மைத் திறந்து, ஆஸ்கர் தனது எல்லா கனவுகளையும் வெகு விரைவில் அடைகிறான். ஆனால் லியோ ஃபராட், அவன் வெறும் மருமகன் மட்டுமல்ல, அவனிடம் திறமையும் உள்ளதென அறிந்து, ஒரு முக்கியமான வியாபார டீலை முடிக்க அவனையும் தன்னோடு ஒரு வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார். அதே சமயம் லியோவின் ஒரு மகள் செய்த கண்டுபிடிப்பு, உடன்பிறப்புகள் குடும்பத்தில் தங்களுடைய இடத்தை பரிசீலிக்க வைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - பெரஸ்ட்ரோய்கா
11 டிசம்பர், 202352நிமிசாராவை மணந்த பின், ஆஸ்கர் இப்படிச் சொல்லலாம்: முறைப்படி நான் இப்போது ஒரு ஃபராட். அதில் பல விஷயங்கள் அடங்கும்: விசுவாசம், நம்பிக்கை... அதோடு குடும்ப பிரச்சனைகளை சமாளிப்பதும் அடங்கும். லியோ தன் மகன் ஹியூகோவை சரியான வழிக்கு கொண்டு வர, ஆஸ்கர் உதவ முயற்சித்து, தனது பிரச்சனைக்குரிய மைத்துனருடன், கடல் பயணம் செய்கிறான்: அவர்கள் மிக முக்கியமான, ரகசிய ஆயுதங்களை பாதுகாப்பான துறைமுகத்திற்கு கொண்டு போகணும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - தீவிரவாதிகளின் கையேடு
11 டிசம்பர், 202353நிமிலியோ ஃபராட் இதைத் தவிர எல்லா விஷயத்திலும் சமரசம் செய்வார்: தன் குடும்பத்தின் பாதுகாப்பு. அவரது மகள் டான்யா அந்நியர்களால் தாக்கப்பட்ட பிறகு, லியோவின் மொத்த கோபமும் அவரது எதிரியான மவாட்-ஐ நோக்கி திரும்புகிறது. குடும்பங்களுக்கிடையே போர் மூண்ட நிலையில், மற்றொரு செய்தி பதட்டத்தை அதிகரிக்கிறது: ஃபராட்டின் பாலஸ்தீன கூட்டாளியன காலித், ஒரு ஹோட்டலைத் தாக்கி, டஜன் கணக்கில் மக்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - கெட்டதை கவனிக்காதே
11 டிசம்பர், 202349நிமிலியோவிற்கு மவாட்-இன் தலை வேண்டும், அதற்காக அவர் எதுவும் செய்வார்... அமெரிக்கர்களிடம் கூட டீல் பேசுவார். ஆஸ்கரும் சாராவும் தங்களது முதல் மகனின் பிறப்பை வரவேற்கையில், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் டான்யாவை இசைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற சாக்கில் செக்கோஸ்லோவாக்கியாவிற்கு விமானத்தில் செல்கின்றனர். ஆனால், லியோவின் உண்மையான நோக்கம் வேறு விதமாக உள்ளது...Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - புதிய வகை ஃபராட்
11 டிசம்பர், 202348நிமிஅங்கோலாவில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்கரும் சாராவும், பீரங்கி ஒப்பந்தத்தை முடிக்க லியோவோடு போர் நடக்கும் பகுதிக்கு செல்கின்றனர். முதல் முறையாக, ஆயுத வணிகம் எப்படிப்பட்டது என ஆஸ்கர் புரிந்துகொள்கிறான். இதற்கிடையில், மார்பெல்லாவில், மவாட் உடனான பிரச்சினையை ஒட்டுமொத்தமாக முடிக்கத் தன்னால் முடியும் என்று, தன் குடும்பத்திடம் தனது திறமையை வெளிப்படுத்த ஹியூகோ உறுதியோடு இருக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - இறுதித் தீர்மானம்
11 டிசம்பர், 202345நிமிமவாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போட நேரம் வந்துவிட்டது என கார்மென் கருதுகிறார், அதாவது: இனி குடும்பத்தில் யாரையும் இழக்க அவள் தயாராக இல்லை. ஆனால், மீண்டும் ஒரு முறை இரத்தம் சிந்தப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை முடிக்க முடியும். ஒரு "ஃபராட்டாக" இருப்பது எப்படி இருக்கும் என்பதையும், அதன் அனைத்து விளைவுகளுடனும் ஆஸ்கர் எதிர்கொள்ள வேண்டிய வரையறுக்கப்பட்ட தருணம் வந்துவிட்டது.Prime-இல் சேருங்கள்