Prime Video
  1. உங்கள் கணக்கு

பீட்லெஸ்

சீசன் 1
உலகத்தின் பெரும்பாலான தேவைகளை ஹைஸ் எனப்படும் மனிதவடிவ ரோபோக்கள் நிறைவேற்றும். ஒரு நாள் 17 வயதான அராடொ எண்டோ ஆண்ட்ராய்டு ரோபோவான லாசியாவை சந்தித்து அதன் உரிமையாளர் ஆகிறான். செயற்கை நுண்ணறிவு கொண்ட ஐந்து ஆண்ட்ராய்டு ரோபோக்களில் அவளும் ஒன்று. ஐந்து ரோபோக்களுக்கும் தனித்தனியான குறிக்கோள்களும் மற்றவையில் இருக்கும் திறனை சண்டையிட்டு பெறும் ஆற்றலும் உள்ளன.
201828 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒப்பந்தம்
    12 ஜனவரி, 2018
    24நிமி
    13+
    ஏப்ரல். இரண்டாவது ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவனான அரட்டோ தனது நண்பர்களான ர்யோ மற்றும் கென்கோவுடன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். அந்த இரவு வரை. ஷாப்பிங்கிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில், அரட்டோ ஒரு சிதைந்த எச்.ஐ.ஈ.யினால் தாக்கப்பட, லாசியா என்ற ஒரு அழகான எச்.ஐ.ஈ அவனைக் காப்பாற்றுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - அனலாக் ஹேக்கிங்
    18 ஜனவரி, 2018
    24நிமி
    13+
    அரட்டோவுடன் உரிமையாளர் ஒப்பந்தத்தைப் போட்ட பின்னர், லாசியா எண்டோவோடு வாழ வருகிறாள். அரட்டோவின் சகோதரி யூக்கா லாசியாவை முற்றிலும் ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு எஹ்.ஐ.ஈ மாடலிங்க் தேர்வுக்கு அனுப்புகிறாள். இதற்கிடையில், அரட்டோவால் தனது வயதை ஒத்த ஒரு அழகான பெண்ணோடு சேர்ந்து வாழ்வது பற்றிய பயத்தை மறைக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - நீ என்னுடையவனாக இருப்பாய்
    26 ஜனவரி, 2018
    24நிமி
    16+
    அனலாக் ஹேக்கிங் பற்றிய விழிப்புணர்வு இருந்தபோதிலும், அரட்டோவால் லாசியாவின் ஈர்ப்பிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இவை அனைத்திற்கும் இடையில், லாசியா யூக்காவின் கண் முன்னே "கடத்தப்படுகிறாள்". போலிஸின் மீதும், இதைச் சொத்து திருட்டிற்கு மாறாக வேறு எப்படியும் கருதாத அவர்களின் விருப்பமின்மையின் மீதும் வருத்தம் கொண்ட அரட்டோ, ர்யோ மற்றும் கென்கோவின் உதவியைப் பெற, அவர்கள் தாமே விசாரணை செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஆட்டோமெட்டிங் வெர்ல்டு
    2 பிப்ரவரி, 2018
    24நிமி
    13+
    கௌகா, லாசியாவின் முதல் சகோதரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் வன்முறை சார்ந்த ஒரு எச்.ஐ.ஈ ஆவாள். ஆன்டிபாடி நெட்வொர்க் மீதான தனது கட்டுப்பாட்டைக் கொண்டு, அவள் ஒரு கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிடுகிறாள். அவள் திட்டம் கென்கோவை ஆபத்தில் சேர்க்கும் என்பதை அரட்டோ அறிந்து கொள்ளும் போது, அவன் லாசியாவின் உதவியுடன் கென்கோவை காப்பாற்றக் கிளம்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - டூல்ஸ் ஆஃப் அவுட் சோர்ஸர்ஸ்
    9 பிப்ரவரி, 2018
    24நிமி
    13+
    ஆன்டிபாடி நெட்வொர்க்கின் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான தொழிற்துறை மேம்பாட்டு மையத்திற்கு அரட்டோ வந்து சேர்கிறான். அங்கு தனது தந்தை உருவாக்கிய ஆன்ட்ராய்ட் அரசியல்வாதியான மிகோட்டோவை பார்க்கிறான், இது அவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. விரைவில், கௌகா மற்றும் மற்றொரு லாசியாவின் வர்க்கத்தைச் சேர்ந்த எச்.ஐ.ஈ.யின் தலைமையில் பயங்கரவாத பிரிவு அங்கு வந்து சேர்கிறது. ஒரு பெரும் போரின் அறிகுறி தெரிகிறது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - இடைவேளை 1
    16 பிப்ரவரி, 2018
    24நிமி
    13+
    லாசியாவை சந்தித்ததில் இருந்து அரட்டோவின் வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் மாறிவிட்டது. சேர்ந்து வாழும் உற்சாகத்தோடு, ஒரு உயர்மட்ட செயல்பாட்டு எச்.ஐ.ஈ யின் உரிமையாளராக இருக்கும் அனுபவமும் இணைந்து இருந்தது. கடத்தல் போன்ற நிகழ்வுகள் ஒருபுறம் இருந்தாலும், மற்றவற்றில் அவன் லாசியாவின் உதவியோடு தானே விரும்பி ஆபத்தில் மாட்டிக்கொண்டான். இப்போது நம் கதை அடுத்த கட்டத்திற்கு முன்னேறப் போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஹிக்கின்ஸ் கிராமம்
    23 பிப்ரவரி, 2018
    24நிமி
    13+
    தொழிற்துறை மேம்பாட்டு மையத்தில் நடக்கவிருந்த பேரழிவிலிருந்து கென்கோவை அரட்டோ காப்பாற்றிவிடுகிறான். இருப்பினும், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பி வந்தபோதும், ஆழ்ந்து கொண்டே போகும் புதிர்களால் சூழப்படுகிறான். இதற்கிடையில் மீம்ஃப்ரேம் கார்ப்பரேஷனின், ஒரு குழுவைச் சேர்ந்த சர்ச்சை அதிகரிக்கிறது. கிளர்ச்சியின் இடையே, லாசியாவின் வர்க்கத்தைச் சேர்ந்த எச்.ஐ.ஈ தனது வேலையை காண்பிக்கப் போகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பாய் மீட்ஸ் ப்ரோனோகிராப்பி
    2 மார்ச், 2018
    24நிமி
    13+
    லாசியாவிற்கு ஒரு புதிய மாடலிங் நிகழ்ச்சியில் இடம் கிடைத்துள்ளது. இது, எச்.ஐ.ஈ.க்களுக்கும், எதிர்பாலின எச்.ஐ.ஈ.க்களை சம பங்காளிகளாகக் கருதும், மனிதர்களுக்கும், இடையேயான ஒரு புதிய வகை உறவை ஊக்குவிக்கும் ஒரு பட ரீதியான விளம்பரமாகும். "ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்திக்கிறான்" என்று இந்தப் பிரச்சாரம் அழைக்கப்பட, சமுதாயத்திற்கே சவால் விடும் இந்தத் தைரியமான விளம்பரக் கருத்து அரட்டோவை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - அவெக்கிங் ஆஃப் ஸ்லீப்பிங் ப்யூட்டி
    9 மார்ச், 2018
    24நிமி
    13+
    மெத்தோட் விளம்பர படப்பிடிப்பில் இருக்கும்போது திடீரென லாசியாவைத் தாக்குகிறாள். அரட்டோ மற்றும் லாசியாவை சுற்றியுள்ள சூழ்நிலைகள் மீண்டும் மாற்றப்போகும்போது, ஒரு புதிய பரிமாற்ற மாணவர் அரட்டோவின் உயர்நிலைப் பள்ளிக்கு வருகிறார். 21 -ம் நூற்றாண்டில் பிறந்த உறங்கும் இளவரசி எரிகா பர்ரோஸ், இடைநிறுத்தப்பட்ட அனிமேஷனில் இருந்து இப்போது தான் எழுந்திருக்கிறாள், அரட்டோ அவளிடம் இருந்து விரோதத்தை உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ஒய் வேர் அப்பௌட்ஸ்
    16 மார்ச், 2018
    23நிமி
    13+
    ஷியோரி தனது திட்டத்தைச் செயல்படுத்துகிறாள். இப்படியே போனால், அரட்டோ லாசியாவின் உரிமையை இழந்துவிடுவான். "திரு.அரட்டோ தயவு செய்து, நான் உங்களோடு இருப்பதை அனுமதிக்கவும்" லாசியாவின் இந்த எதிர்பாராத வேண்டுகோள் அரட்டோவை உணர்ச்சிவசப் பட வைக்க, அவன் ஷியோரியை நிறுத்த சுபு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - இடைவேளை_2
    23 மார்ச், 2018
    24நிமி
    13+
    கௌகா, ஸ்னோட்ராப், மெத்தோட்... சிவப்பு பெட்டிகள் என்று கூட்டாக அறியப்படும், இந்த உயர் செயல்பாட்டு லாசியாவின் வர்க்க எச்.ஐ.ஈ.க்களின் சந்திப்பு அரட்டோ மற்றும் லாசியாவின் உறவை என்ன செய்யப் போகிறது, என்ன வரவிருக்கிறது? மெதுமெதுவாக ஆனால் நிச்சயமாக, அரட்டோவின் உலகம் மாறத் தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - டிவெல்லிங் அண்ட் சரவுண்டிங்
    30 மார்ச், 2018
    24நிமி
    13+
    மெத்தோடிற்கும் லாசியாவிற்கும் இடையிலான சண்டையினால் அரட்டோ இரண்டு வாரம் இடைநீக்கப்படுகிறாள். 4.5 மில்லியன் யென் நஷ்டஈடு செலுத்தியபின் பின் லாசியா அரட்டோவை விட்டுப் பிரிந்து செல்கிறாள். தனது தந்தை கோஸோவிடம் மன்னிப்பு கேட்கும் பொருட்டு அரட்டோ, லாசியா, யூக்கா மற்றும் ர்யோவை தன்னுடன் அழைத்துக் கொண்டு பெரிய அளவிலான எச்.ஐ.ஈ பரிசோதனை நடத்தப்படும் சுகுபாவிற்கு செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - டிஸ்டோபியா கேம்
    6 ஏப்ரல், 2018
    24நிமி
    16+
    லாசியாவின் கண் முன்னே யூக்காவை மெத்தோட் கடத்துகிறாள். அரட்டோவும் ர்யோவும் அவளை காப்பாற்றப் புறப்படுகிறார்கள், ஆனால் சோதனை நகரத்தில் ஜிங்கா வடராயினால் பாதிக்கப்பட்டு ஜோம்பிகள் போலச் செயல்படும் அனைத்து எச்.ஐ.ஈ.க்களும் அவர்களை வழி மறிக்கிறார்கள். எச்.ஐ.ஈக்கள் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கு, அரட்டோவும் ர்யோவும் நிர்வாக மையத்திற்குச் செல்கின்றனர், ஆனால்...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ஸ்லம்பர் ஆஃப் ஹியூமன்
    13 ஏப்ரல், 2018
    24நிமி
    13+
    ஜிங்கா வடராயின் மரணம், சோதனை நகரத்தின் இந்த சம்பவத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறது. இந்தக் குழப்பங்களின்போது, அரட்டோ லாசியாவிடம் தன் மனதைத் திறக்க அவளும் ஏற்றுக் கொள்கிறாள். வீட்டிற்குள் நடக்கும் இந்த புதிய இணைப்பைப் பற்றி யூக்காவிற்கு ஒரு குழப்பமான உணர்வு ஏற்படுகிறது. இதற்கிடையில், பாதுகாப்பு போலிஸ் மற்றும் லாசியா-வர்க்க தலைவர்கள் இந்தச் சூழ்நிலைக்கு பதிலளிக்கத் தொடங்குகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - தி பிரேயர் வித்இன்
    27 ஏப்ரல், 2018
    24நிமி
    13+
    பர்ரோஸ் தோட்டத்திற்கு எரிக்காவினால் வரவழைக்கப்பட்ட பிறகு, லாசியா-வர்க்க எச்.ஐ.ஈ.க்களின் சண்டை அடுத்த கட்டத்திற்கு நுழைந்தது. ஒவ்வொருவரும் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி சிந்திக்கையில், பாதுகாப்புப் போலிஸால் சுபு விமான நிலைய குண்டு வெடுப்பின் சந்தேக நபராக தான் பின்தொடரப்படுவதால், கௌகா விரைவிலேயே தனது எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் குறைவதை உணர்ந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ஏன் ஆன்சர் டு சர்வைவ்
    4 மே, 2018
    24நிமி
    13+
    கௌகா தானாகவே அடுத்த தலைமுறைக்கான சமூக ஆராய்ச்சி மையத்தின் மேல் ஆன்டிபாடி நெட்வொர்க் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்கிறாள். கௌகாவின் மிகுதியான அழிவு சக்தி உலகம் முழுவதும் பரவ, அது மக்களிடம் பயத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இது கௌகாவின் எதிர்காலத்திற்கான பாதையாக இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - இடைவேளை_3
    11 மே, 2018
    24நிமி
    16+
    உலகம் மாறுகிறது. லாசியா-வர்க்க எச்.ஐ.ஈ.க்கள் உண்மையில் எதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்? எதிர்காலத்திற்கான சாத்தியக்கூறுகள் மெதுமெதுவாக வடிவமைக்கப் படுகின்றன. மனிதக்குலத்திற்கு என்ன காத்திருக்கிறது?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - எட்ஜ் லைன்
    18 மே, 2018
    24நிமி
    13+
    கௌகாவின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கென்கோ பாதுகாப்புப் போலிஸால் கைது செய்யப்படுகிறான். கென்கோவைக் காப்பாற்ற அரட்டோ முடிவு செய்கிறான். மேலும் லாசியாவிற்கு ஆணையிடுகிறான். அவள் திட்டத்தைத் தொடர்ந்து, அரட்டோ, கௌகாவை அழிக்கக் காரணமாக இருந்த இராணுவக் குழுவான பி.எம்.சி "ஹூ" வை நேர்முகமாகச் சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - பிளஸ் ஒன்
    25 மே, 2018
    24நிமி
    13+
    கௌகாவின் அழிவினால் பாதிக்கப்பட்டு, ஸ்னோட்ராப் தன் சொந்த திட்டங்களை மேன்மைபடுத்தி, ஒரு நிலையான எரிசக்தியைப் பெற மிடாகா மின்மாற்றி துணை நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, சுற்றுப்புறத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துகிறாள். அரட்டோவும் லாசியாவும் அவளைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் மெத்தோடும் ர்யோவும் அவர்களை வழிமறிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - இடைவேளை_4
    1 ஜூன், 2018
    24நிமி
    13+
    லாசியா என்பது என்ன? மனிதக்குலத்தால் என்றாவது ஒரு பதிலை வழங்க முடியுமா? மிகவும் அறிவார்ந்த ஏ.ஐ.யினால் உருவாக்கப்படும் ஒரு புதிய சகாப்தம் இது. இந்த கொந்தளிப்பிற்கு நடுவே, அரட்டோ குறை மனதோடு லாசியாவின் கரம் பிடிக்கிறான். அவனது முடிவு மனிதக்குலத்தின் இறுதிக்கு வழிவகுக்குமா? அல்லது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பத்திற்கா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ஏ ரீசன் டூ ஓன்
    8 ஜூன், 2018
    24நிமி
    16+
    லாசியாவின் இரகசியம் வெளிப்படுகிறது. அரட்டோவால் அதைக் கையாள முடியவில்லை. மேலும் அவன் லாசியாவிடமிருந்து விலகுகிறான். தனியாகப் பாதுகாப்பற்றவனாகி, ர்யோ மற்றும் மெத்தோடால் கைப்பற்றப்பட, அங்கு அவன் ஸ்னோட்ராப் அழிவின் விதைகளைப் பரப்புவதை மானிட்டரில் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவனாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - நெறிமுறை காதல்
    15 ஜூன், 2018
    24நிமி
    13+
    ஷியோரி மற்றும் யுக்காவினால் கட்டாயப்படுத்தப்பட்டு, அரட்டோ லாசியாவை மீண்டும் சந்திக்க முடிவு செய்தான். அவனது கடைசி ஆணை செயல்பாட்டில் இருந்தால், லாசியா ஸ்னோட்ராப்பை நிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த எண்ணத்தோடு அரட்டோ மிடாகாவை நோக்கிச் செல்கிறான், ஸ்னோட்ராப்பின் சக்தியால் அந்த இடமே அடையாளம் தெரியாத நிலப்பரப்பாக மாறியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - காகித புலி
    22 ஜூன், 2018
    24நிமி
    13+
    மிடாகாவில் அந்தச் சோக சம்பவங்கள் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. உலகம் சிறிது இயல்பு நிலைக்குத் திரும்பியது, அரட்டோவும் லாசியாவும் அடுத்தடுத்து வரக்கூடியவற்றை எதிர் நோக்கும் தயார் நிலையில் மறைவில் உள்ளன. இருப்பினும், மிக அறிவார்ந்த ஏ.ஐ ஆஸ்ட்ராயியாவினால் தொடர்பு கொள்ளப்பட, அந்த மகிழ்ச்சியான குறுகிய காலம் குலைக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - அவர் எரோர்ட் வெர்ல்டு
    29 ஜூன், 2018
    24நிமி
    13+
    மிக அறிவார்ந்த ஏ.ஐ, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அரட்டோ மற்றும் லாசியாவைச் சுற்றியுள்ள போராட்டம் தீவிரமடைகையில், பழைய காவல் தலைவர்கள் தங்கள் சொந்த இலாபங்களை எப்படி அதிகரிக்க முடியும் என்பது பற்றி விவாதிக்கின்றனர். பங்கேற்பாளர்களின் மத்தியில், எரிக்கா பர்ரோஸ் மட்டுமே அவர்களின் முட்டாள்தனத்தைக் குறித்து கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - Higgins' Silo
    25 செப்டம்பர், 2018
    24நிமி
    13+
    The super intelligent AI Higgins. The core of Memeframe, one of the keys to humanity's future, and the creator of Lacia. Arato and Lacia traverse through a giant underground facility in order to contact Higgins. There they will find a future far beyond the human imagination...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 28 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
சேஜி மிசுஷிமா
நடித்தவர்கள்
ஷினோ ஷிமோஜிதாகுடோ யோசினிகாமிசாகோ டேமியோகா
ஸ்டுடியோ
BEATLESS Production Committee
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.