வேன் ஹெல்சிங்கின் புதிர் கண்டுபிடிப்பு தாறுமாறாகிப்போக, டிராக்கும் அவன் தோழர்களும் மனிதர்களாக மாறிட, ஜானி மான்ஸ்டர் ஆகிறான்! டிராக்கும் ஜானியும் தங்களது பொருந்தாத உடல்களோடு, ஒன்று சேர்ந்து ஒரு நிவாரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். தங்களது மாற்றம் நிரந்தரமாகும் முன், மேவிஸ் மற்றும் டிராக்கின் தோழர்கள் உதவியோடு, பரபரப்பாக முன் போல் உருவத்தை அடைய வழி தேட முயல்கின்றனர்.