உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1200412 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலேயே மிகவும் சிறந்த நகைச்சுவைத் தொடரின் முகவரியான ஹார்ப்பரின் மாலிபு கடற்கரையோர வீட்டிற்கு உங்களை மீண்டும் வரவேற்கின்றோம். திடமான மணமாகாத ஆணான சார்லி, தற்பொழுது மேல் மாடியில் குளித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயரை நினைவுபடுத்த கடின முயற்சி செய்கின்றான்(ஆனால், அவ்வளவு கடினமாகயில்லை).

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. ஓரம் போ மேரி பாப்பின்ஸ்

  21 நிமிடங்கள்5 அக்டோபர், 200316+சப்டைட்டில்

  சார்லி ஹார்ப்பர் (தொடர் நட்சத்திரம் சார்லி ஷீன்) கடற்கரையில் வீடு, ஜாகுவார் கார்,பெண்களுடன் சல்லாபாம் என உல்லாசமாக வாழும் ஒரு பணக்கார பிரம்மச்சாரி. அவனுடைய இந்த இயல்பான உல்லாச மலிபு வாழ்க்கை, இருக்கமான அவனது சகோதரன் ஆலனும் (தொடர் நட்சத்திரம் ஜான் க்ரையர்), ஆலனுடைய மகன் ஜாக்கும் (தொடர் நட்சத்திரம் ஆகஸ்ட் ஜோன்ஸ் ) அவனுடன் தங்க வர, தடைப்படுகிறது

 2. 2. பூண்டு உருண்டைகளைச் சுவையுங்கள்

  21 நிமிடங்கள்12 அக்டோபர், 200316+சப்டைட்டில்

  சார்லியின் உந்துதலினால், ஆலன் தன் கடந்த காலத்தை மறக்க, விவாகரத்தின் பொழுது ஜூடித்திடமிருந்து வஞ்சகமாக எடுத்து வந்த செராமிக் ஒட்டகச்சிவிங்கியைத் திரும்பத் தருகிறான். ஆனால், ஜூடித்திற்கு அதைப் பற்றி ஞாபகமே இல்லை. மேலும், இப்பொழுது அவளுக்கு ஒரு புதிய அனுசரணையான காதலன், டாக்டர். மெல்னிக் (ரையான் ஸ்டைல்ஸ் - "தி ட்ரூ காரி ஷோ", "ஹூஸ் லைன் இஸ் இட் எனிவே") இருக்கிறார். அவர், ஜாக்கின் குழந்தைநல மருத்துவர்

 3. 3. ஒரு பை நிறைய ஜாவியா

  20 நிமிடங்கள்19 அக்டோபர், 200316+சப்டைட்டில்

  ஒரு பின்னிரவில், தன்னை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்ய முயர்ச்சித்த அவன் ஆசிரியை மிஸ்.பாஸ்டெர்னாக்கை நிர்வாணமாக சார்லியின் சமயலறையில் பார்க்கும் ஜாக் , அது கனவோ என்று நினைக்கிறான். மறு நாள் ஜாக் பள்ளிக்கு போக மறுக்க, மிஸ் பாஸ்டர்னாக் உடனான உறவினை முறித்துக்கொள்ள சார்லி ஒப்புக்கொள்கிறான். துரதிருஷ்டவசமாக, இதனால் மிஸ்.பாஸ்டெர்னாக கோபப்பட, சார்லியும் ஜாக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

 4. 4. அம்மாவின் உள்ளாடையினை போய்க் கொண்டு வா

  21 நிமிடங்கள்26 அக்டோபர், 200316+சப்டைட்டில்

  ஜூடித்தின் புதிய ஆண் நண்பனிடம் படகும் நீச்சல்குளமும் இருப்பதால் அவனை ஜாக் நேசிக்கிறான். ஸ்னார்கெல் மற்றும் ஸ்கூபா டைவ் எப்படி செய்வது என ஜாக்கிற்கு சொல்லித்தருவதாக அவன் கூறுகிறான். இதனால் ஆலன் தனது 11 வயது மகனுக்கு கார் ஓட்டக் கற்றுத்தருகிறார். ஆனால், ஜூடித்தின் ஆண் நண்பன் உறவை முறித்துக்கொள்கையில், ஜாக் தனது தாயிடம் சீற்றம் கொள்கிறான். மேலும் ஆலன் அவன் வருத்தப்படும் விதத்தில் ஒன்றை செய்கிறார்.

 5. 5. கிளினிக்கிலிருந்து கெட்ட செய்தி?

  21 நிமிடங்கள்2 நவம்பர், 200316+சப்டைட்டில்

  சார்லி, ஷெர்ரி (ஜெரி ரையான் - "பாஸ்டன் பப்ளிக்," "ஸ்டார் ட்ரெக்: வாயேஜர்"), எனும் சுயஈர்ப்பு கொண்டுள்ள, தன்னையே நேசிக்கும் சூழ்ச்சியுடைய, சுருக்கமாக சொன்னால், -ஒரு பெண் சார்லியை விரும்புகிறான். ஆனால் ஷெர்ரி தன்னை நடத்தும் விதத்தினை சார்லி விரும்பவில்லை. இதனிடையே, தனது மகனின் வீட்டுப்பாட பழக்கங்களை மேம்படச்செய்ய, ஜாக்கிடம் சில ஒழுக்கங்களை உண்டாக்க ஆலன் முயல்கிறான்.

 6. 6. ஆரோக்கியமான ஈறுகளின் விலை தினந்தோறும் கண்காணிப்பதே

  21 நிமிடங்கள்9 நவம்பர், 200316+சப்டைட்டில்

  ஆலன் குழந்தையாக இருக்கையில் கடையில் ஒரு பொம்மையை திருடியதை ஜாக்கிடம் எவ்வளின் சொல்ல, அந்த மாதிரி நிகழ்ச்சி ஒரு போதும் நடந்ததேயில்லை என ஆலன் மறுக்கிறான். பொம்மையைத் திருடியது தனது தீய பக்கமான “கெட்ட ஆலன்” ஆக இருந்திருக்கலாம் என்றும் அது தனது நல்ல பக்கத்தை நசுக்குவதற்கு தினசரி செயல்படுகிறது என்றும் சார்லியிடம் கூறி இறுதியில் ஒப்புக்கொள்கிறான்.

 7. 7. ஃபோண்டானாவுக்கு வெளியே ஒரு கோஷர் இறைச்சிக்கூடம்

  21 நிமிடங்கள்16 நவம்பர், 200316+சப்டைட்டில்

  அண்மையில் தனது தாயிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளும் ஜாக்கிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் பொருட்டு, ரியல் எஸ்டேட் துறையில் சாதனைகள் நிகழ்த்தியதை கொண்டாட, தங்களது தாய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தி விருந்து தர சார்லியும் ஆலனும் முணுமுணுப்புடன் ஒப்புக்கொள்கின்றனர். பெர்த்தா, ஒரு கேட்டரிங் ஏஜன்சியை சொந்தமாக நடத்தும் தனது சகோதரியான டெய்ஸியை நியமிக்க அறிவுறுத்துகிறார்.

 8. 8. ஃபிரான்கென்ஸ்டீனும் தீராத தொல்லைதரும் கிராமத்தான்களும்

  21 நிமிடங்கள்23 நவம்பர், 200316+சப்டைட்டில்

  ஒரு மளிகை கடையில் ஷாப்பிங் செய்யும் போது ஆலன் சந்தித்த பெண் நான்சி (கெல்லி வெஸ்ட் ), அவளுடன் அவனுக்கிருந்த முதல் டேட்டிங் எதிர்ப்பார்ப்புக்களை எல்லாம் அவள் மிஞ்சி விட்டாள். ஆலனை, அவன் இதுவரை அறிந்திராத செக்ஸ் உலகத்திதிற்கு அறிமுகப்படுத்துகிறாள் நான்சி.

 9. 9. ஆம், பேரருட்திரு

  22 நிமிடங்கள்14 டிசம்பர், 200316+சப்டைட்டில்

  அவள் தன் திருமணம் வேரொருவருடன் நிச்சயிக்கப்பட்டதை அறிவிக்கும் வரை, அவள்தான் தனக்கானவள் என்று சார்லி நினைத்திருந்த லிசாவை (கௌரவ தோற்றம் டெனிஸ் ரிசெர்ட்ஸ், தொடரின் நட்சத்திரம் சார்லி ஷீனின் நிஜ வாழ்க்கை மணைவி) சந்திக்கிறான்.

 10. 10. என் ஸ்வெட்டரின் கீழ் சால்மன்

  21 நிமிடங்கள்4 ஜனவரி, 200416+சப்டைட்டில்

  ஜாக்கின் அபிமான சித்திரக்கதையை சார்ந்த புதிய கார்ட்டூனுக்கு தீம் பாடலை சார்லி எழுதுகிறான். ஆனால் ஜாக் அப்பாடலை வெறுக்கிறான். தன்னை விட ஜாக்கிற்கு அந்த கதையைப் பற்றி நன்கு தெரியும் என்பதை உணரும் சார்லி, அவனது உதவியைக் கோருகிறான். இதனிடையே, ரோஸ், ஆலனை ஒரு திரைப்படத்திற்கு அழைத்து சென்று தன் அறிவுத்திறமை கொண்டு அவனை வியப்பூட்டுகிறாள்.

 11. 11. அந்த டாட்டூக்களை பார்க்க கடைசி வாய்ப்பு

  21 நிமிடங்கள்11 ஜனவரி, 200416+சப்டைட்டில்

  பாரில் கெய்ல் (ஜொடி லின் ஓ'கீஃபே - "நாஷ் பிரிட்ஜஸ்"), என்ற பெண்னுடன் சார்லி சல்லாபிக்கும் போது, அவள் அவனுடைய அணுகுதல்களை நிராகறிக்கிறாள். மேலும், ஊரில் உள்ள பெண்கள் அவன் பல பெண்களுடன் பழகுவதை குறித்து பேசிக்கொள்வதைப்பற்றி கூறுகிறாள். பின்னர், சார்லியின் பெயர் குறித்து இணையத்தில் அவன் தேடியதாகவும், அதில் சில சுவாரஸ்யமான விஷயங்களை கண்டுபிடித்ததாகவும் ஜாக் குறிப்பிடுகிறான்.

 12. 12. ஒரு நுரையீரல் முழுதும் ஆலன்

  21 நிமிடங்கள்1 பிப்ரவரி, 200416+சப்டைட்டில்

  ஜேமி (பஜெட் ப்ரூஸ்ட்டர் - "ஹஃப்," "ப்ரெண்ட்ஸ்"), ஆலனின் நெருங்கிய உயர்நிலை பள்ளி தோழியான அவள் ஆலனை வீட்டில் சந்திக்கிறாள் . அவர்கள் டீனேஜ் -ல் இருக்கும்போது சார்லி, ஜேமியை கேலி செய்வான். ஆனால் அவள் இப்போது அழகாகவும் கவர்ச்சியாகவும் மாறியிருப்பதை பார்க்கும் இரு சகோதரர்களும் அவளின் அன்பிற்காக போட்டிப் போடுகிறார்கள். ஆனால், ஜேமி தனக்கென்று ஒரு திட்டம் வைத்துள்ளாள் .

 13. 13. தள்ளிப்போ காத்துவரட்டும்

  20 நிமிடங்கள்8 பிப்ரவரி, 200416+சப்டைட்டில்

  ஒரு பூகம்பத்தால் ஜூடித் வீட்டில் குழாய்களில் சேதம் ஏற்பட, ஆலன் அவளை தற்காலிகமாக கடற்கரை வீட்டில் தங்க அனுமதிக்கிறான் .இது சார்லிக்கு பிடிக்கவில்லை.ஒரு சில நாட்களுக்கு மேல் சார்லி, ஜாக் இருவராலும் ஜூடித் அங்கு தங்கியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆலன் இயல்பாக இருப்பது போல் நடித்தாலும் ஜூடித் வேறு ஒரு நபருடன் டேட்டிங் செல்லும்போது பொறாமைபடுகிறான்.

 14. 14. தேங்காயின் அந்த பெரிய இளஞ்சிவப்பு பொருட்கள்

  21 நிமிடங்கள்15 பிப்ரவரி, 200416+சப்டைட்டில்

  எவ்வளின், ஜாக் கடினமாக உழைத்து வாங்கியிருந்த அதிக மதிப்பெண்ணை சிறுமைப்படுத்திப்பேசி ஜாக்கின் தன்னம்பிக்கையை குறைக்க, ஆலன் அவளை தங்கள் வாழ்க்கையிலிருந்து வெட்டிவிட முடிவு செய்கிறான். சார்லியும் ஆலனும் எவ்வளின் மருத்துவமனையில் இருப்பதாக செய்தி கேட்டவுடன் அது, எவ்வளின் அவர்களுடைய வாழ்க்கையில் திரும்பி வருவதற்கான சூழ்ச்சியே என அறிந்துகொள்கிறார்கள்.

 15. 15. குடை தாங்கியை முகர்ந்துப் பார்

  21 நிமிடங்கள்22 பிப்ரவரி, 200416+சப்டைட்டில்

  ஒரு சலிப்பான,மழை பெய்யும் வார இறுதியில், சார்லி ஆலனை ஜாக்குடனும், தன்னுடனும் லாஸ் வெகாஸிற்கு வர சம்மதிக்க வைக்கிறான். வரவிருக்கும் கொலொனோஸ்கோபி பரிசோதனை குறித்து பயந்திருந்த ஆலன், மனதை திசை திருப்ப இந்த பயணம் உதவும் என ஒப்புக்கொள்கிறான். ஆலன் ஏராளமான உடுப்புக்களையும் பெட்டிகளையும் எடுத்துக்கொண்டபிறகு , அவர்கள் கிளம்பத் தயாராக ஜாக்கிற்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.

 16. 16. மரப் பற்களைக் கொண்டு மனித மாமிசத்தை உன்னால் சாப்பிட முடியுமா?

  21 நிமிடங்கள்1 மார்ச், 200416+சப்டைட்டில்

  ஜாக்கை ஆலனிடம் விட்டுவிட்டு ஜூடித் விடுமுறைக்குச் செல்கிறாள். அதே சமயம் ஆலன் வரி விதிப்புத் துறையினால் விசாரிக்கப்படுகிறான். இந்தக் கடைசி நிமிஷ துரதிருஷ்டத்தால், ஆலன் வேறு வழியில்லாமல், சார்லியின் பொறுப்பற்ற கவனிப்பில் ஜாக்கை விடுகிறான். ஜாக்கை ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்கு சார்லி அனுப்புவான் என்ற நம்பிக்கையுடன்.

 17. 17. ஊ-ஹோ, ஹெர்னியா சோதனை!

  21 நிமிடங்கள்21 மார்ச், 200416+சப்டைட்டில்

  ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கையில், தன் முதுகைச் சுளுக்கிக் கொள்ளும் சார்லி, சிரோபிராக்டரான ஆலனைத் தனக்கு உதவி செய்ய அனுமதி மறுக்கிறான். ஆலன், சார்லியை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல, அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட, அவர் இடத்தில் ஒரு அழகான் பெண் மருத்துவர் மிஷெல் டாமேட்ஜ் (அலிஷியா கொப்போலா - "புல் ") இருப்பதைக் கண்டு சார்லி ஆச்சரியப்படுகிறான். பெர்த்தா ஜாக்கிற்கு ஒரு பாடம் கற்பிக்கிறாள்.

 18. 18. அது “மேம்”, மாம்

  21 நிமிடங்கள்18 ஏப்ரல், 200416+சப்டைட்டில்

  விளம்பர ஏஜன்சியின் உரிமையாளனான ஓரினச்சேர்க்கையாளன் எரிக் (டேவிட் ஸ்டார்ஸிக்), அதிக ஜிங்கிள்ஸ் பாடல்களை எழுத தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தரவேண்டும் என்பதற்காக, சார்லி தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளனாக காட்டிக் கொள்கிறான். மேலும், தனது ஓரினச்சேர்க்கை துணைவராக பாவனை செய்யுமாறு ஆலனை சமாதானப்படுத்தி, எரிக் கொடுக்கும் விருந்தில் பங்கேற்க வைக்கிறான்.

 19. 19. தொண்டையில் ஒலிக்கின்ற குறைந்தளவு நாக்கு புரளும் சத்தம்

  21 நிமிடங்கள்2 மே, 200416+சப்டைட்டில்

  சார்லியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனை டேட்டிங் செய்த ஷெர்ரியை (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜெரி ரையான் – “பாஸ்டன் பப்ளிக்”) ஒரு காஃபி கடையில், ஆலனும் சார்லியும் சந்திக்கிறார்கள். ஆலன் அவளது அழகில் மயங்கி விட, அப்பெண்ணால் தான் இளவயதில் நிராகரிக்கப்பட்ட நினைவுகளை அலட்சியப்படுத்தி விட்டு அவளை டேட்டிங்கிற்கு அழைக்குமாறு ஆலனை சார்லி ஊக்கப்ப்டுத்துகிறான்.

 20. 20. மொட்டையடிக்கப்பட்ட ஒரு குரங்கு வேண்டும் என்று எனக்கு ஆசை.

  21 நிமிடங்கள்9 மே, 200416+சப்டைட்டில்

  எவ்வளின் தன்னை கூப்பிடாததால் சார்லிக்கு தொல்லை தர, ஜூடித் ஜாக்கிற்கு வாங்கிய விலையுயர்ந்த காலணிகளுக்கான பில்களை ஆலனை கட்டச் சொல்கிறாள். தங்களின் வாழ்வில் உள்ள பெண்களின் மீதான தங்களின் கோபத்தினை வெளிப்படுத்தவியலாத சார்லியும் ஆலனும் ஒருவருக்கொருவர் வசை பாடுகின்றனர். நடத்தை உளவியலில் கேள்விக்குரிய பின்னணியைக் கொண்டுள்ள ரோஸ், இரு சகோதரர்களுக்கும் அவர்களது உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ள உதவுகிறாள்.

 21. 21. அழுவதற்கு ஒரு ஆறுதலான இடம்

  21 நிமிடங்கள்16 மே, 200416+சப்டைட்டில்

  சொத்துக்கள் ஏதாவது விற்பனைக்கு வருகிறதா என்று பார்க்க, இறந்தவர்களின் விவரங்களைத் தேடுகையில், தன்னுடைய இரண்டாவது கணவன் ஹாரி இறந்துவிட்டார் என்று எவ்வளினுக்குத் தெரிய வருகிறது. ஈமச்சடங்கிற்கு ஆலன் அவளுடன் வரச் சம்மதித்தது, எவ்வளினுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஆலன் கடந்த வருடங்களில் ஹாரியுடன் தொடர்பில் இருந்திருக்கிறான் என்பது அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது.

 22. 22. அந்த வயதானவளே என் அம்மா

  21 நிமிடங்கள்23 மே, 200416+சப்டைட்டில்

  ஒரு போர்ஷ கார் வாங்க எவ்வெளினிடம் ஆலன் கடன் வாங்க, அதற்குச் சார்லி, ஆலன் தன் ஆன்மாவைச் சாத்தானிடம் விற்றுவிட்டதாகக் கூறுகிறான். அவன் கூறியதுக்கு ஏற்ப, எவ்வளின் ஆலனை ட்ரூடியுடன் (க்ளோயி வெப் - "சைனா பீச்", "ஸிட் அண்ட் நான்ஸி") டபிள் டேட் போகக் கட்டாயப்படுத்துகிறாள். ட்ரூடியின் தந்தையைத் தன்னுடைய காதலனாக்கிக்கொள்ள வேண்டும் என்பது எவ்வெளினின் திட்டம்.

 23. 23. ஸ்க்வாப், ஸ்க்வாப், ஸ்க்வாப், ஸ்க்வாப், ஸ்க்வாப்

  20 நிமிடங்கள்19 செப்டம்பர், 200416+சப்டைட்டில்

  ஜாக் அவனுடைய விடுமுறை முழுவதையும் தன்னுடைய மற்றொரு தாத்தா பாட்டியுடன் கழித்தான் என்பதை அறிந்த எவ்வளின், ஜாக் தன்னுடன் ஒரு இரவு தங்க அனுமதிக்கும்படி ஆலனைக் கட்டாயப்படுத்துகிறாள். தங்கள் வாழ்க்கையை அழித்தமாதிரி ஜாக்கின் வாழக்கையையும் எவ்வளின் அழித்துவிடுவாள் என்று கவலைப்படும் ஆலனும் சார்லியும் வேண்டாவெறுப்பாக, ஜாக்கை எவ்வளின் வீட்டில் விட்டுவிட்டு, சார்லிக்குப் பிடித்த பாருக்கு விரைகின்றனர்.

 24. 24. இது உனக்கு வேடிக்கையாய் இருக்கிறதா ?

  20 நிமிடங்கள்26 செப்டம்பர், 200416+சப்டைட்டில்

  சார்லி மிக அழகான இளம் பெண் நட்டாலியுடன் (கரேன் ட்ரெல்லா) உடலுறவு கொள்கிறான், அவள் மிகவும் வயதான நார்மனின் (ஆர்ஸன் பீன் - "Dr. க்வின், மெடிசின் பெண்மணி") மணைவி என்று தெரியாமலேயே. பள்ளியில், ஜாக் தனது வார இறுதி பற்றிய ஒரு அறிக்கையை ஐந்தாம் வகுப்பில் கொடுக்கவேண்டும்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Melanie Lynskey, Conchata Ferrell, Holland Taylor