Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

சீ"ஸ் ஸ்வீட் அட்வென்சர்

சீ என்கிற உற்சாகம் நிறைந்த பூனைக்குட்டி திரும்பிவந்துவிட்டது.தன் நண்பர்களான கம்கம், ஆன், டெல்லி ஆகியோருடன் விளையாடுவதில் அந்த நாளை சந்தோஷமாக கழித்தாள்.ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு, ஒளிந்திருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, இப்படி நிறைய. புதிய கதாபாத்திரங்கள் இந்த புத்தம்புதிய தொடரில் அறிமுகமாகிறார்கள். கம்கம் ஒரு அறியாத புதிய ஊருக்கு சாகசப்பயணம் செல்லும் இந்த புதிய தொடரை காணத்தவறாதீர்கள்.
IMDb 8.2201725 எப்பிசோடுகள்
13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சீ அண்ட் தி கோல்டுபிஷ்
    7 ஏப்ரல், 2018
    12நிமி
    எல்லாம்
    உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்பட்ட அனிமே என்கிற இத்தொடர் மீண்டும் வந்து விட்டது. குடும்பத்தில் அனைவராலும் கொஞ்சப்படுகிற சீ-க்கு அதுவும் ஒரு நல்ல நாளாகவே அமைந்தது. அப்பொழுது யோஹியின் ஒன்றுவிட்ட சகோதரி ஜூலி அனுப்பிய பரிசு வந்து சேர்ந்தது. அது ஒரு அழகான தங்கமீனாகும். சீ மிகுந்த ஆர்வத்துடன் மீனுக்கு மிக அருகே செல்கிறாள்...குடும்பத்தின் புது அங்கத்தினரை சந்திக்க மிகுந்த ஆர்வம் கொள்கிறாள் சீ!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - சீ மீட்ஸ் எ பிஜியன்
    14 ஏப்ரல், 2018
    12நிமி
    எல்லாம்
    சீயும் கம்கம்மும் ஓய்வாக நடக்கும்போது ஒரு புறாவை சந்திக்கின்றனர். அதை துரத்த தீர்மானித்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக புறா சிக்கவில்லை. இயல்பாகவே புறாக்கள் மிக வேகமாக நழுவி செல்லக்கூடியவை, மற்றும் பிடிப்பதற்கு கடினமானவை. பொறுமை இழந்த ப்ளாக்கி புறாக்களை பிடிக்கும் விதம் பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்கிறாள். தாங்கள் புதிதாய் கற்றுக்கொண்ட ஆற்றலை பயன்படுத்தி இருவரும் மீண்டும் புறா பிடிக்க முயன்றனர்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - சீ கெட்ஸ் இன் டு மிஸ்சீஃப்
    21 ஏப்ரல், 2018
    12நிமி
    எல்லாம்
    சீ, கம்கம் மற்றும் சகோதரிகள் ஆன் டெல்லி அனைவரும் பூங்காவில் கூடுகிறார்கள். ஏதாவது குறும்பு செய்ய விரும்பி அங்குமிங்கும் நடை போடும் போது உறங்குகிற ப்ளாக்கியையும் மூதாட்டி காலிகோவையும் கண்டனர். குறும்பு செய்ய சரியான வாய்ப்பு அமைந்து விட்டது. பெரியவர்களை ஏமாற்றி விட்டு அந்த நான்கு பூனைக்குட்டிகளும் உல்லாசமாய் ஒரு பயணம் மேற்கொள்ள பூங்காவிற்கு வெளியே பாய்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - சீ ஸ்டால்க்ஸ்
    28 ஏப்ரல், 2018
    12நிமி
    எல்லாம்
    யமடா குடும்பத்தாரை தன்னுடைய பளபளக்கும் தோற்றத்தால் மயக்குகிறாள் ஃப்ளட்டர் என்கிற அந்த தங்கமீன். சீ ஃப்ளட்டரை தொடவும் அவள் நினைத்ததெல்லாம் செய்யவும் எண்ணுகிறாள்,ஆனால் அப்பாவும் யோஹியும் அதற்கு தடையாய் இருக்கிறார்கள். ஒரு வழியாக ஃப்ளட்டர் தனியாக இருக்கிறாள். இதுதான் ஃப்ளட்டரை நெருங்க சரியான சமயம் அவளுக்கு. ஐயோ, ஃப்ளட்டருக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகிறது....
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - சீ மீட்ஸ் ஜூலி
    5 மே, 2018
    12நிமி
    எல்லாம்
    யோஹியின் ஒன்று விட்ட சகோதரி ஜூலி, யோஹி வீட்டிற்கு விளையாட வருகிறாள். ஜூலி பண்ணையில் வளர்ந்த பெண்ணாதலால் துடிப்பாய் இருக்கிறாள். சீயை துரத்தி பிடிப்பதில் அவள் மிகுந்த சந்தோஷமடைகிறாள். ஜூலி ஒரு உயிருள்ள பெரிய நண்டை வெறும் கையால் பிடிப்பதை கண்ணுற்ற சீயும் யோகியும் ஆச்சரியத்தின் எல்லைக்கே செல்கிறார்கள், ஆனால் சீ விளையாட ஒரு சாமைக்கதிரை அவள் கொண்டு வந்த போது இன்னமும் அதிக வேடிக்கை ஏற்பட்டது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - சீ ப்ளேஸ் வித் ஜூலி
    12 மே, 2018
    12நிமி
    எல்லாம்
    ஜூலி யோகி சீ மூவரும் பூங்காவிற்கு விளையாட வருகிறார்கள்.மிருகங்களை மிகவும் விரும்பும் ஜூலி, ப்ளாக்கியுடன் நட்பு கொள்ள விரும்புகிறாள், ஆனால் ப்ளாக்கிக்கு அது பிடிக்கவில்லை. அதை பற்றி கவலைப்படாமல் ஜூலி பூங்காவில் உள்ள எல்லா பூனைகளுடன் நட்பு கொள்கிறாள்.ஜூலி யோஹி சீ அனைவரும் இணைந்து விளையாடுகிறார்கள். ப்ளாக்கி அவர்களின் வேடிக்கையை நிலைகொள்ளாமல் பார்க்கிறான்...
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - சீ கெட்ஸ் இன் தி வே
    19 மே, 2018
    12நிமி
    எல்லாம்
    அப்பா வீடு திரும்பும் போது ரிமோட் கொண்டு இயக்கும் ஒரு பொம்மை மகிழுந்தை கொண்டு வந்தார்.யோஹியும் சீயும் அதனுடன் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஆனால் கரடுமுரடாய் விளையாடி, சீ அந்த பொம்மையை உடைத்து விட்டாள். அதனால் சீயும் யோஹியும் சண்டையிட்டு, சமாதானம் ஆகாமலே தூங்கச் சென்றனர். படுக்கையிலும் ஒருவரின் வழியில் இன்னொருவர் குறுக்கிட்டதால் இருவரின் சண்டை தொடர்ந்தது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - சீ அண்ட் தி சீக்ரெட் திக்கெட்
    26 மே, 2018
    12நிமி
    எல்லாம்
    சீ பூங்காவிற்கு திரும்பி வரும் போது, அங்கே புட்கள் உயரமாக வளர்ந்திருந்தது. அங்கே ஒரு புதரில் சுரங்கம் போன்றதொரு அமைப்பு இருந்தது. கம்கம்,ஆன், டெல்லி இவர்களின் குரல் எங்கிருந்தோ ஒலிக்கிறது. ஒரு வழியாக குரல் கொடுத்து கூப்பிட்டு கொண்டே அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தனர். அதன் பின் அவர்கள் துரத்தி பிடித்து விளையாடினர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ2 எ9 - ட்ரிப் டு ஃப்ளஃபிலேண்ட் லெவல் 1
    9 ஜூன், 2018
    12நிமி
    எல்லாம்
    சீ யும் பிற பூனைக்குட்டிகளும் ஒரு மர்மமான ஓட்டையை ஒரு மரத்தின் அடியில் காண்கிறார்கள்.அங்கிருந்து பிரகாசிக்கும் மீன் பறந்து வருகிறது. அவர்கள் உள்ளே சென்று இதற்கு முன் காணாத உலகத்தை காண்கிறார்கள்.அங்கே அப்பங்களால் உருவாக்கப்பட்ட தீவுகளும் பறக்கும் மீன்களும் உள்ளன. எங்கு பார்த்தாலும் மெத்துமெத்தென்று, துள்ளலாக இருந்தது. ஃப்ளஃபிலாண்டுக்கு வரவேற்கிறோம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ2 எ10 - ட்ரிப் டு ஃப்ளஃபிலேண்ட் லெவல் 2
    16 ஜூன், 2018
    12நிமி
    எல்லாம்
    சீ யம் நன்கு பூனைக்குட்டிகளும் ஃப்ளஃபிலாண்டுக்கு வருகிறார்கள்.அங்கே திடீரென்று ஒரு ஜந்து வேகமாக பறந்து வந்து அவர்களை தாக்க முயற்சிக்கிறது. நால்வரும் இணைந்து இருக்க முயற்சித்தபோதும் , முடியாமல் தொலைந்து போகிறார்கள்.நால்வரும் என்ன செய்வதென்று தெரியாமல் சண்டையிட்டு கொள்கிறார்கள்.இதுவே அந்த விசித்திர ஃப்ளஃபிலாண்டில் அவர்களின் சாகச பயணத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  11. சீ2 எ11 - சீ கிளீன்ஸ்
    23 ஜூன், 2018
    12நிமி
    எல்லாம்
    அம்மா வீட்டை மிக முழுமையாக சுத்தம் செய்ய தொடங்கினாள். எந்த தூசியும் விடாமல், தன்னால் முடிந்த அளவுக்கு சக்தியை திரட்டி வீட்டை சுத்தமாக்க விரும்பினாள். அவரின் செயலில் ஆர்வம் கொண்ட சீ, தானும் உதவ எண்ணினாள். சீவிற்கு மிகவும் பிடித்த சுத்தப்படுத்தும் இயந்திரமும் வெளியேவருகிறது. தேவை இல்லாத குப்பைகள் வெளியேற்றப்பட்டு. சுத்தம் செய்வதும் மிக குதூகலமாக நடந்தது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  12. சீ2 எ12 - சீ மிஸண்டர்ஸ்டாண்ட்ஸ் டாடி
    30 ஜூன், 2018
    12நிமி
    எல்லாம்
    அப்பா அழகான சீயை மிகவும் விரும்புகிறார். ஆனால் அவரின் உணர்வுகள் சீ க்கு புரியவில்லை. சீயை எப்படியாவது தன்னை விரும்ப வைக்க வேண்டும் என்று கருதி தன் கூட வேலை செய்யும் ஆடமிடம் ஆலோசனை கேட்கிறார். ஆடம், எப்படி பூனைகள் நம்மை விரும்பும் என்பது பற்றி சில குறிப்புகள் தருகிறார். ஆனால் நிஜமாகவே அப்பாவால் சீயை நெருங்க முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  13. சீ2 எ13 - கம் கம்’ஸ் டெஸிஷன்
    7 ஜூலை, 2018
    12நிமி
    எல்லாம்
    கம் கம்மிற்கு நீண்டநாள் முன் தொலைந்து போன தம்பி இருந்தான். அவனுக்கு கொடுத்த வாக்கின் படி, தினமும் பூங்காவில் காத்திருந்தான் கம்கம். ஒரு நாள் எங்கோ அலைந்து திரிந்த பொது ஒரு வெள்ளை பூனைக்குட்டியை கண்டதாக சொன்னாள் ஆன். அது வைட்வைட்டாக இருக்ககூடும்! கம்கம்மிற்கு அது ஒரு விதிவசமான சாகச நாளாய் இருந்தது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  14. சீ2 எ14 - கம்-கம் மீண்டும் இணைகிறான்
    14 ஜூலை, 2018
    12நிமி
    எல்லாம்
    அயலார் ஒருவரின் ஜன்னலில் தெரியும் வெள்ளை பூனைக்கூட்டி ஒயிட்-ஒயிட்டா? அவன் அருகில் வருகையில் கம்-கம்முக்கு ஒரே நேரத்தில் நம்பிக்கையும் அச்சமும் உண்டாகிறது. ஆனால், செல்லப் பிராணியாக ஒயிட்-ஒயிட் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்ததும், கம்-கம் மிகவும் வேதனை அடைந்து, நகரை விட்டே ஓடிப்போகிறான். கனத்த இதயத்துடன் கம்-கம் எங்கே போவான்? இது கம்-கம்மின் சாகசங்களைச் சொல்லும் இரண்டாம் அத்தியாயம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  15. சீ2 எ15 - கம் கம் செட்ஸ் அவுட்
    21 ஜூலை, 2018
    12நிமி
    எல்லாம்
    ஒரு ரயில்வண்டியில் ஏறி, இரவு நேரத்தில் ஊரை அடைகிறான் கம் கம். அவன் ஒரு அட்டைப்பெட்டியில் மறைந்துகொள்கிறான், ஆனால் அவன் ஆழ்ந்து தூங்கும்போது ஒரு துறைமுக நகரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.போக்கிடமும் தெம்பும் இல்லாமல், சோர்ந்து போய் மயக்கமாகிறான் அவன், அப்போது அவன் முன்னே ஒரு பெரிய பூனை அதிரடியாய் தோன்றியது. இதுவே கம் கம்மின் சாகசத்தை மூன்றாம் பாகமும், ஒரு புதிய பயணத்தின் தொடக்கமும் ஆகும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  16. சீ2 எ16 - கம்-கம்மின் மலையேற்றம்
    28 ஜூலை, 2018
    12நிமி
    எல்லாம்
    டிப்லோ என்ற பூனைப் பயணியின் அழைப்பை ஏற்று பயணம் செல்லும் கம்-கம், மலை ஏறும் சவாலை மேற்கொள்கிறான். ஆரம்பத்தில் டிப்லோவின் நோக்கம் என்ன என்று புரியாமல் கம்-கம் குழம்புகிறான். ஆனால் முற்றிலும் சோர்ந்து போனவனாக மலைச் சிகரத்தை அடையும் போது… கம்-கம்மின் பயணத்தில் ஒரு புதிய தென்றல் வீசும் நான்காம் அத்தியாயம் இது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  17. சீ2 எ17 - சீயும் இருள் நிறைந்த இரவும்.
    4 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    திடீரென ஏற்படும் மின்வெட்டினால் யமாடா குடும்பம் இருளில் தள்ளப்படுகிறார்கள். யோஹேய் பயப்படுகிறான். ஆனால் சீக்குக்கு இருள் பிடித்துள்ளது. கண்கள் மினுமினுக்க இருண்ட அறையில் அவளது சாகசங்கள் தொடங்குகின்றன. பளிச்சிடும் வெளிச்சத்தை முழு வேகத்தில் அவள் பின்தொடர்ந்து துரத்துகிறாள். அது சீக்கிற்கு இருண்ட, அற்புதமான இரவாக அமைகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  18. சீ2 எ18 - ஃப்ளப்பிலான்டுக்கு பயணம் நிலை 3
    11 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    கம்-கம்மை தேடிக் கொண்டு சீ, ஆன் மற்றும் டெல்லி ஃப்ளப்பிலான்டை வந்தடைகிறார்கள். அவர்கள் பால் நீரூற்றின் அருகே ஓய்வெடுக்கும் போது, சீக்கிற்கு பிடித்த வாத்து பொம்மை, பிரம்மாண்டமாக உருவெடுத்து துரத்துகிறது! மணல் குழியில் உள்ள ஆமையும் பெரியதாகி விட, பிரச்சினைக்கு உள்ளாகின்றன பூனைக்குட்டிகள். சரியாக அந்த நேரத்தில் யார் வர வேண்டுமோ, அவர்... இது ஃப்ளப்பிலான்டில் அவர்களது பயணத்தின் மூன்றாம் அத்தியாயம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  19. சீ2 எ19 - கம்-கம்மின் சோகம்
    18 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    காற்று அழைத்துச் செல்லும் பாதையில் கம்-கம்மும் டிப்லோவும் பயணத்தை தொடருகிறார்கள். பயணம் மேற்கொள்ளும் சக பூனைகளை சந்தித்தபின், தான் விட்டுவிட்டு வந்த ஒயிட்-ஒயிட் மற்றும் தன் வீட்டின் நினைவுகள் கம்-கம்முக்கு வருகின்றன. சோகம் பெருக்கடுத்த நிலையில், டிப்லோ சொல்லும் ஒரு வார்த்தையை கவனிக்காமல் கம்-கம் ஓடிப் போகிறான். கம்-கம்மின் பயணத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் புதிய ஆபத்துகள் காத்திருக்கின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  20. சீ2 எ20 - சீ, தங்க மீன் மற்றும் திருட்டுப் பூனைகள்
    25 ஆகஸ்ட், 2018
    12நிமி
    7+
    தங்க மீனான ஃப்ளட்டரை நேசிக்கிறாள், சீ! அவளை மீண்டும் எப்படியாவது தொட முயற்சிக்கும் சீ, துரத்தி விடப்படுகிறாள். அந்த நேரத்தில், யமாடா இல்லத்துக்குள் இரு திருட்டுப் பூனைகள் நுழைகின்றன! சீ இதை கவனிக்கவில்லை. ஃப்ளட்டர் ஆபத்தில் இருக்கிறாள். சீயை இதை கவனிக்க வைக்க அவள் முயலுகிறாள், ஆனால்...
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  21. சீ2 எ21 - மீண்டும் புறாவை குறிவைக்கும் சீ
    31 ஆகஸ்ட், 2016
    12நிமி
    எல்லாம்
    பூங்காவில் புறாக்கள் சிலவற்றை பிடிக்க சீ முயற்சிக்கிறாள். ஆனால் மீண்டும் மீண்டும் தோற்கிறாள். முதியவரான காலிகோ இதைப் பார்த்துவிட்டு, சீக்கு வேட்டையாடுவது பற்றி கற்றுத்தர முடிவு செய்கிறார். மிமிக்ரி உதவியுடன் சிலவற்றைப் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் நெருங்கி வருகிறார்கள், ஆனால் அது பலன்தரவில்லை. இதற்கு மேலும் இதை பார்க்க முடியாத ப்ளாக்கி புதர்களுக்குள் இருந்து வெளியே குதித்து...
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  22. சீ2 எ22 - கம்-கம் மாமியை சந்திக்கிறான்
    8 செப்டம்பர், 2018
    12நிமி
    எல்லாம்
    குளத்தின் அருகே மயங்கிக்கிடக்கும் கம்-கம் மற்றும் டிப்லோவை காப்பாற்றுகிறாள், பல்கலைக்கழக மாணவியான மாமி. அவர்களுக்கு அவள் உணவும், கதகதப்பான படுக்கையும் தருகிறாள். அவளிடம் ஒருவழியாக தன் இதயத்தை திறக்கிறான், கம்-கம். இதனிடையே, தன் பழைய உரிமையாளர்களை சந்திக்க ஏங்குகிறான் டிப்லோ. கம்-கம்மின் பயணத்தின் ஆறாவது அத்தியாயம், அவனுக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் நிரம்பியதாக உள்ளது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  23. சீ2 எ23 - கம்-கம்மின் பதில்
    15 செப்டம்பர், 2018
    12நிமி
    எல்லாம்
    ஒருவழியாக தனக்கான வீட்டை கண்டுபிடித்துவிட்டான், கம்-கம். ஆனால் தன் கனவுகளில் ஒயிட்-ஒயிட்டை சந்திக்கிறான். மாமியுடன் புதிய வீட்டில் தொடர்ந்து வசித்தால், இனி ஒயிட்-ஒயிட் அல்லது சீயை அவனால் சந்திக்கவே முடியாது. அவனுக்கு எது முக்கியம் என்று டிப்லோ கேட்ட பிறகு, கம்-கம் ஒரு முடிவை எடுக்கிறான். தன் பயணத்தின் கடைசி அத்தியாயத்தில் தனக்கு எது முக்கியம் என்பதை உணருகிறான், கம்-கம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  24. சீ2 எ24 - ஃப்ளப்பிலான்டில் சாகசங்கள் கடைசி நிலை
    29 செப்டம்பர், 2018
    12நிமி
    எல்லாம்
    கம்-கம் தன் வழக்கமான படுக்கையில் கண்விழிக்கிறான். அவனுக்காக சீ, ஆன் மற்றும் டெல்லி காத்திருக்கிறார்கள். கம்-கம் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவர்கள் ஃப்ளப்பிலான்டில் மீண்டும் விளையாடும் போது, கம்-கம்முக்கு டிப்லோ மற்றும் மாமியின் நினைவு வந்து, நன்றி உணர்வு ஏற்படுகிறது. அவர்கள் பூங்காவுக்கு திரும்பும் நிலையில், அங்கே அவர்களுக்காக ப்ளாக்கி காத்திருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  25. சீ2 எ25 - சீக்கு மகிழ்ச்சி
    29 செப்டம்பர், 2018
    12நிமி
    எல்லாம்
    அம்மா தற்செயலாக ஒரு பெரிய முழு சல்மோன் மீனுக்கு ஆர்டர் தந்துவிடுகிறார். அப்பா தான் பணியாற்றி வந்த கோப்பை தவறுதலாக அழித்துவிடுகிறார். யோஹேய்க்கு கால்பந்தாட்டத்தில் புதிய தந்திரங்களை கற்பது சிரமமாக உள்ளது. ஆனால் சீ சிரிப்பதை பார்க்கும் போது அவர்கள் அனைவருக்கும் மீண்டும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
日本語
சப்டைட்டில்
EnglishDeutschEspañol (Latinoamérica)Español (España)FrançaisItaliano한국어Português中文(繁體)
இயக்குநர்கள்
கிமிநோரி குசானோ
நடித்தவர்கள்
மாயா சகமோடோரிகியா கொயாமாமகாடோ யசுமுறா
ஸ்டுடியோ
TV TOKYO
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.