Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆஃப்டர் தி ரெயின்

சீசன் 1
அகிர டசிபன(17) ஓட்டப்பந்தயக் குழுவில் இருந்தவள், ஆனால் காயம் காரணமாக ஓடுவதை நிறுத்திவிட்டாள்.மசாமி கோண்டொ(45) அகிர பணிபுரியும் கார்டன் எனப்படும் உணவகத்தின் மேலாளர்.இது கடலோர நகரத்தில் நடக்கும் கதை, இது தன் இளம் வயதில் நிற்கும் ஒரு பெண்ணைப் பற்றியும், தனது வாழ்க்கையில் திருப்புமுனையை எட்டிய ஒரு ஆணை பற்றியும் கூறுகிறது.அவர்கள் உணர்ச்சிபெருக்கில் நிறைந்திருக்கும் கணம் அனைவருக்கும் தேவைபடுகிறது.
201812 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மழையின் சப்தம்
    10 ஜனவரி, 2018
    23நிமி
    எல்லாம்
    நடுத்தர வயதுள்ள மந்தமான மாசாமி கோண்டோ அகிரா வேலை செய்யும் உணவு விடுதியில் மேலாளராக இருக்கிறார். பணியாளர்களிடம் மரியாதை காட்ட முடியாத அவர் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்ட அவர்களிடம் குழைகிறார். கோண்டோவினால் எதையும் சிறப்பாக செய்யமுடியாததால் அகிரா அவரை முறைக்கிறார். அகிராவின் வெறுப்பு கோண்டோவை மனஅழத்தத்தில் தள்ளுகிறது. அவர்களுடைய பார்வை சந்தித்ததிலிருந்து அவர்கள் வாழ்க்கையும் மாற ஆரம்பித்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பச்சை இலைகளின் மீது மழைத்துளிகள்
    18 ஜனவரி, 2018
    23நிமி
    எல்லாம்
    வாடிக்கையாளர் மறந்த ஒன்றை கொடுக்கச் செல்லும் அகிராவின் காலில் காயம்பட, அவர் ஓய்வு எடுக்கிறார். அகிரா வலியைவிட கோண்டோ தன்னைத் தொட்ட போது ஏற்பட்ட உணர்வைப் பற்றியே சிந்திக்கிறார். தோட்டத்தில் அகிரா இல்லாத நேரத்தில், கோண்டோ அகிராவின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார். கோண்டோவின் வருகையினால் எதிர்பாராமல் அவர்கள் இருவரும் மட்டுமே இருக்க நேர, அகிரா திடீரென்று பேச ஆரம்பிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ரெயினிங் டியர்ஸ்
    25 ஜனவரி, 2018
    23நிமி
    13+
    அகிரா கோண்டோவிடம் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அவர் அதை காதலாக எடுத்துக் கொள்ளவில்லை. அகிரா தன்னுடைய டிரேக் குழுவிலிருக்கும் இளைஞர்களுடனும் சிறந்த நண்பர் ஹரூகாவுடனும் இணைந்து செயல்பட முடியாமை குறித்தும் வருத்தப்படுகிறார். கோண்டோவிடம் அகுரா “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்ல ஒருவழியாக 17 வயது பெண்ணின் உண்மையான உணர்வுகளை மதித்து கோண்டோ பேசத் துவங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - மென்மையான மழை
    1 பிப்ரவரி, 2018
    23நிமி
    13+
    அகிர தான் கோண்டொவுடன் வெளியே செல்வதை நினைத்து உற்சாகமாக இருந்தாள். ஆனால் தற்செயலாகக் கேசே கோண்டொ மீதான அகிரவின் உணர்வை அறிந்து கொண்டான். தன்னுடன் வெளியே வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவன் அதை இரகசியமாக வைப்பதாகக் கூறினான். அகிர கேசேவுடன் தயக்கத்தோடு வெளியே சென்றாள், பிறகு அவன் அவளுக்கும் கோண்டொவிற்க்கும் ஒத்து வராது எனக் கூறினான்.அதே நேரத்தில் அகிர கோண்டொவுடன் வெளியே செல்வதற்கான நாள் வந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - மழையின் மனம்
    8 பிப்ரவரி, 2018
    23நிமி
    எல்லாம்
    அகிர யுடொவை கோண்டொவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள், அனால் கோண்டொ வீட்டில் இல்லாததால் அவள் யுடொவுடன் காத்திருக்க வேண்டியதாயிருந்தது.அவன் அறையில் நிறைய புத்தகங்களும் பாதி எழுதிய நாவல்களும் இருந்தன, கோண்டொவின் இந்தப் புதிய பக்கத்தைப் கண்டதும் அகிரவின் இதயம் படபடத்தது. அவர்கள் கோண்டொவின் காலடி ஓசையைக் கேட்டதும் அகிர மறைந்து கொண்டாள், ஏனென்றால் யுடொ கோண்டொவை ஆச்சரியப்படுத்தவேண்டும் என கூறி இருந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - சன்னமான மழை
    17 பிப்ரவரி, 2018
    23நிமி
    எல்லாம்
    வெப்பமான கோடை இடைவெளி. தன்னை செம்மையாக்கும் வகுப்புக்கு செல்லும் அகிரா டிராக் குழுவின் தலைவர் ஹரூகாவை சந்திக்க இருவரும் முதல் முறையாக இணைந்து பள்ளிக்கு செல்கின்றனர். ஹருகா தங்கள் நட்பின் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்ப, அதற்குள் பஸ் வர அவர்கள் தத்தம் வழியில் செல்கின்றனர். திடீரென்று பெய்த மழையில் அகிரா நூலகம் செல்ல யதேச்சையாக கோண்டோவை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஹெவி ரெயின்
    22 பிப்ரவரி, 2018
    23நிமி
    எல்லாம்
    சிஹிரோ எழுதிய புதினத்தை பற்றி கோண்டோவால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அகிரா கோண்டோவைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை பற்றி பேசுகிறார் அகிராவின் உற்சாகத்திற்கு எதிராக, கோண்டோ மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு அவர் அகிராவை ஒதுக்குகிறார். அகிரா அதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார், அவர் சளியினால் படுக்கையில் இருக்கும் கோண்டோவை பற்றி நினைத்து ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - அமைதியான மழை
    1 மார்ச், 2018
    23நிமி
    7+
    ஒரு கடும்புயலின் போது கோண்டு ஹருகாவை கட்டிப்பிடித்தான், ஆனால் அவள் கோண்டு அவர்களின் நண்பர்கள் எனக் கூறியதால் மனசோர்வுடன் இருந்தாள். அகிரா அவர்கள் நட்பை ஒரு காதல் உறவாக மாற்ற விரும்பினாள், ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ரெயின் ஆஃப் சாரோ
    10 மார்ச், 2018
    23நிமி
    16+
    அகிரா ஹருகாவை கோடை கோலாகலத்திற்கு அழைக்கிறார். இருவரும் நட்பாக இருந்தாலும் அடக்கி வைத்த உணர்வு வெளியேற சண்டையில் முடிகிறது. அதே நேரம், கோண்டோ 10 ஆண்டுகள் கழித்து சிஹிரோவை சந்திக்க இருவரும் தங்கள் கல்லூரி நாட்களில் எழுதிய புதினங்களைப் பற்றி நினைக்கின்றனர். கோண்டோ தன் நண்பரை சந்திக்க. அகிரா தன் தோழியிடமிருந்து விலக இருவரும் வித்தியாசமான வலியை அனுபவிக்க, தோட்டத்தில் சந்திக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - சடன் ஷவர்
    17 மார்ச், 2018
    23நிமி
    13+
    அகிராவும் கோண்டோவும் பழைய புத்தகங்களின் கண்காட்சிக்கு வர அங்கு கோண்டோ புத்தகங்களை பார்த்த மகிழ்ச்சியில் அகிராவை ஒதுக்கிவிடுகிறார். எப்போதுமே இலக்கியத்தின் பால் நாட்டத்தினால் கொண்டு, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார். திரும்ப அதையே செய்வதை நினைத்து தன்னைத் தானே வெறுத்துக் கொள்கிறார். இந்நிலையில் அகிரா நேரிடையாக கோண்டோவை முறைத்து விட்டு இவ்வாறு சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பாஸிங் ஷவர்
    22 மார்ச், 2018
    23நிமி
    13+
    டிராக் குழு ஒரு மாணவி அகிராவைப் போலவே காயமடைந்து குணமடைந்து வந்திருப்பதை பேசுகிறது். வீட்டிற்கு போகும் வழியில், அகிரா மழைக்காக ஒதுங்கியிருக்கும் ஹரூகாவைக் கடந்து செல்கிறார். அகிராவை நெருங்க முடியாத, ஹரூகா பெரிய செயலைச் செய்கிறார். கோண்டோ சிஹிரோவிடம் பேசியபிறகு புதினங்களைப் பற்றிய தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்கிறார். அகிராவும் கோண்டோவும். இந்த மட்டி பாத்தில் முன்னால் வருபவர் யாராக இருக்கும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - ஆஃப்டர் தி ரெயின்
    29 மார்ச், 2018
    23நிமி
    13+
    தன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிவிட தான் மட்டுமே பின் தங்கிவிட்டதாக அகிரா நினைக்கிறார். நிறுவனத்தின் ரெஸ்டாரெண்டில் வேலையாக இருக்கும் கோண்டோ தான் எழுதியவற்றை இரவில் படிக்கிறார். அகிராவும் கோண்டோவும் ஒருவர் மற்றொருவரைப் பற்றி சிந்திக்கின்றனர். அவர்களுடைய எண்ணங்கள் குறுக்கிட, நாளை ஏதோ நடக்கவிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ayumu Watanabe
நடித்தவர்கள்
ஹிரோக்கி ஹிரடாஎமி மியாஸிமாஹருக்கா ஃகுகூரா
ஸ்டுடியோ
After the Rain The Animation Committee (Fuji Television Network, Inc., Aniplex Inc., DMM pictures, DENTSU, INC.)
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.