


எப்பிசோடுகள்
சீ1 எ1 - அத்தியாயம் ஒன்று
9 நவம்பர், 202351நிமிஜேம்ஸ் பாண்ட் படங்களின் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் 007: ரோட் டு எ மில்லியன், ஒன்பது ஜோடிகளை பின்தொடரும் ஒரு உலகளாவிய பாண்ட் வகை சாகசம். ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் கடினமான மலையேற்றத்தை எதிர்கொள்ளும் சகோதரர்கள் ஜேம்ஸ், ஜோயிக்கும், £1,000,000க்கும் இடையே பத்து கேள்விகள் உள்ளன. ஒரு பரிச்சயமான ரோல்ஸ் ராய்ஸ், வெனிஸ் வழியாக ஒரு பந்தயம் மற்றும் இத்தாலிய பலாட்ஸோவில் ஒரு வியத்தகு சந்திப்பு காத்திருக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - அத்தியாயம் இரண்டு
9 நவம்பர், 202349நிமிபோன் சகோதரர்கள் வெனிஸில் ஒரு மலைப்பாம்பிடமிருந்து தப்பிய பின், கேள்வியைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டியதைச் செய்தார்களா, கட்டுப்பாட்டாளரின் பணத்தில் £25,000 வங்கியில் பெற்றார்களா? கமாரா மற்றும் ஜாஷ் தம்பதியர் தங்கள் குடும்பத்திற்குச் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறார்கள், திகில் மற்றும் ஏறுதல் ஜாஷின் உயரங்களைப் பற்றிய பயத்தைச் சோதிக்கிறது. மேலும் £1,000,000 வெல்லும் அவர்களின் கனவு கானலாகலாம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - அத்தியாயம் மூன்று
9 நவம்பர், 202350நிமிஅடுத்து கட்டுப்பாட்டாளரின் பாண்ட்-ஈர்ப்பு உலகில் நுழைவது அவசரக்கால செவிலியர்களான பெத் மற்றும் ஜென். உலகெங்குமுள்ள மருத்துவமனைகள் மற்றும் போர் மண்டலங்களில் ஏற்பட்ட அதிர்ச்சிகளைக் கையாள்வதில் பல வருட அனுபவத்துடன், அவர்கள் கவனிக்க வேண்டிய சக்தி என்பதைத் துவக்கத்திலேயே நிரூபிக்கின்றனர். வெனிஸ் தடாகத்தில் £50,000 வங்கியில் ஈட்டியபின், போன் சகோதரர்கள் கடுமையான அமேசான் மழைக்காடுகளில் விடப்பட்டுள்ளனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - அத்தியாயம் நான்கு
9 நவம்பர், 202350நிமிஅட்டகாமா பாலைவனம், சிலி. பூமியில் மிகவும் கடினமான இடங்களில் ஒன்று மற்றும் கமாரா மற்றும் ஜாஷிற்கான கட்டுப்பாட்டாளரின் அடுத்த மிருகத்தனமான ஆடுகளம். £1,000,000 என்ற கேள்விக்கு ஒரு படி அருகில் செல்ல, £100,000 பெற ஆசைப்பட்டு, வெப்ப மூட்டத்தைத் தாண்டி வருகின்றனர். பயணம் உடல், மன ரீதியாக அவர்களின் உறுதிக்கும், வலிமைக்கும் சவால் விட்டு பாலைவன வழியில் எதிர்பாராத சாலைப் பயணம் மேற்கொள்ள வைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அத்தியாயம் ஐந்து
9 நவம்பர், 202349நிமிஇந்த அத்தியாயம் மீதி ஜோடிகளை உலகின் மிக சிறந்த இடங்களில் பார்க்கிறது. வெனிஸின் ரகசிய கூரைகளில் தொடங்கி இஸ்தான்புல்லின் பரபர பஜார்களுக்கு மேலே, மேலும் சிலி பாலைவன நகரும் ரயில்களில் மூச்சடைக்க வைக்கும் தாவல்களில். போன் சகோதரர்கள் ஜமைக்காவின் தங்க மணலில் ஒரு அரிய ஓய்வு தருணத்தை அனுபவிக்கின்றனர், ஒரு கப்பலை தேடி, £200,000 கேள்விக்கு முன்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - அத்தியாயம் ஆறு
9 நவம்பர், 202347நிமிதங்களின் ஊரிலிருந்து பல மைல்கள் தாண்டி, ஜமைக்கா கடற்கரையில் ஒரு கட்டுமரத்தில், போன் சகோதரர்கள் தங்களின் £200,000 கேள்வியை எதிர்கொள்கின்றனர். ஜேம்ஸும் சாமும் பாலைவனத்தில் ஆழமான ஒரு அழிந்து கொண்டிருக்கும் கைவிடப்பட்ட நகரத்திற்குச் செல்கின்றனர். எரிமலை சாகசத்தைத் தொடர்ந்து, கமாரா மற்றும் ஜாஷ் ஜமைக்காவின் கறுப்பு ஆற்றின் சதுப்புநிலம், முதலைகள் நிறைந்த நீரில் போராடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - அத்தியாயம் ஏழு
9 நவம்பர், 202339நிமிபாலைவனத்தில், £1,000,000 பரிசு ஆரம்பக்கால விண்வெளி ஆய்வு பற்றிய ஒரு ஜோடியின் அறிவின் மீது. ஜமைக்காவின் கிங்ஸ்டனில், தொலைந்து போன சரக்கு கப்பலைத் தேட ஒரு ஜோடி கடலுக்குள் செல்கிறது. மீதமுள்ள ஜோடிகள் £300,000 கேள்வியை எதிர்கொள்கின்றனர். ஜமைக்கா கடற்கரையின் தனியார் வில்லாவில், ஒரு சூதாட்ட விடுதிக்கு கட்டுப்பாட்டாளர் அவர்களை அழைக்கிறார். இன்னும் கடினமான கேள்விக்காக அவர்கள் பகடையை உருட்ட வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - அத்தியாயம் எட்டு
9 நவம்பர், 202360நிமி007: ரோட் டு எ மில்லியனின் இறுதி அத்தியாயத்தில் மூன்று ஜோடிகள் உள்ளன. சுவிஸ் ஆல்ப்ஸின் உச்சியில் இறக்கி விட்ட பின், இந்த ஜோடிகள் இடுப்பு ஆழ உறைபனி சரிவுகளில் தொலைதூர பனி ஏரிக்கு யாரும் பயணிக்காத கடும் பாதையை எதிர்கொள்கின்றனர். கட்டுப்பாட்டாளர், கேள்விப் பெட்டியை வெடிமருந்துடன் இணைத்ததைக் கண்டுபிடிக்கின்றனர். அது வெடித்து அவர்களின் பயணம் முடிவதற்குள் அதைச் சுட்டு வீழ்த்துவதே தொடர்வதற்கான ஒரே வழி.Prime-இல் சேருங்கள்