ஆன் அன்னோன் எனிமி

ஆன் அன்னோன் எனிமி

மெக்சிகோவின் இரகசியப் போலீசான டிஎன்எஸ் தலைவர் ஃபெர்னாண்டோ பர்ரியன்டோஸ், நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைய முயல்கிறார். வழியில், அவர் கையாள, ஏமாற்ற, கொல்ல வேண்டுமானாலும், அதைச் செய்யத் தயாராக இருக்கிறார். இருப்பினும், பாதை தடைகள் நிறைந்ததாக இருக்கும். அதிகாரத்திற்கான அவரது மொத்த தேடலில் விட்டுச்செல்லும் குழப்பத்திலிருந்து சொந்த குடும்பம் உட்பட யாரும் தப்ப மாட்டார்கள்.
IMDb 7.920188 எப்பிசோடுகள்X-RayUHD18+
முதல் எப்பிசோடு இலவசம்

விதிமுறைகள் பொருந்தும்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கமாண்டர்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    1 அக்டோபர், 2018
    52நிமி
    16+
    கமாண்டர் பர்ரியன்டோஸ் தலைமையிலான டிஎன்எஸ் ஆபத்தில் உள்ளது. மெக்ஸிகோ நகரின் ரீஜன்ட், கொரோனா டெல் ரோஸால், ஜனாதிபதி பதவிக்குத் தனது முக்கிய எதிரிகளில் ஒருவரை அகற்ற விரும்புகிறார்: அது உள்துறை செயலாளர், எசெவர்ரியா. பிழைப்பதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பர்ரியன்டோஸ், டிஎன்எஸ்-ஐ காப்பாற்றி எசெவர்ரியாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்கிறார்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - மாணவர்கள்

    1 அக்டோபர், 2018
    44நிமி
    16+
    அமைப்பு இல்லாத போதிலும் மாணவர்களின் குரல் ஓங்குகிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை அமைதியான முறையில் நடத்துவதே தலையாய கடமையாக இருக்கும் ஜனாதிபதிக்கு அழுத்தம் தர பர்ரியன்டோஸிற்கு அவர்கள், வலுவான, ஒருங்கிணைந்த சக்தியாக மாறுவது அவசியம்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - தெருவில்

    1 அக்டோபர், 2018
    52நிமி
    18+
    மாணவர்கள் தேசிய வேலைநிறுத்தக் குழுவை (சிஎன்எச்) நிறுவுகின்றனர். ஒரு இரகசிய முகவரின் உதவியுடன், அவர்கள் நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர். ஜனாதிபதி டியாஸ் ஆர்டாஸின் அரசாங்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொரோனா டெல் ரோஸாலுக்கு சதி செய்து சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உதவ சிஐஏ விரும்புகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - துப்பாக்கிகள்

    1 அக்டோபர், 2018
    48நிமி
    16+
    மாணவர் இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. ஜனாதிபதி டியாஸ் ஆர்டாஸுக்கு சக்திவாய்ந்த எதிரிகளாக அவர்கள் மாற வேண்டுமாகையால், பர்ரியன்டோஸ் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார். மாணவர்களிடையே ஒரு இரத்தக்களரி சம்பவத்திற்குப் பிறகு, அரசாங்க ஊடுருவல் யார் என்பதை அலிஸியா கண்டுபிடிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - முற்றுகையிட்ட நிலை

    4 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி டியாஸ் மாணவர்களைக் கையாள லூயிஸ் எசெவர்ரியாவை அமர்த்துகிறார். சந்திப்பின் போது, உள்துறை செயலாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான எமிலியோ மார்டினெஸ் மனாத்து, மாணவர்களின் தார்மீக தலைவரான டீன் பாரோஸ் சியராவுடனான தன் நல்லுறவைச் சூழ்நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - மௌனம்

    11 அக்டோபர், 2018
    41நிமி
    16+
    தேசிய வேலைநிறுத்தக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட "மௌன ஊர்வலம்" அணிவகுப்பில், ​​கொரோனா டெல் ரோஸால், இரகசிய முகவர்களைப் பயன்படுத்தி அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியை வற்புறுத்துகிறார். அவர் திட்டங்களை முறியடிக்க பர்ரியன்டோஸ் விரும்புகிறார், ஆனால் மாணவர்களின் சிறப்பான சீரமைவைக் கண்டு, தன் செயல்முறைகளை எங்கு, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நிறுத்தி மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - இறுதி தீர்வு

    18 அக்டோபர், 2018
    43நிமி
    16+
    ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், இராணுவம் யுஎன்ஏஎம்-ஐ கைப்பற்றுகிறது. டீன் பாரோஸ் சியெரா ராஜினாமா செய்கிறார். ஜனாதிபதியை மாணவர்களோடு உரையாடக் கட்டாயப்படுத்த மார்டினெஸ் மனாத்து இதைப் பயன்படுத்துகிறார். இதற்கிடையே, பர்ரியன்டோஸ் மற்றும் சிஐஏ, வன்முறை மற்றும் கலவரத் திட்டத்தைத் தீட்டி, ஜனாதிபதிக்கு வழியின்றி மாணவர் பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் கட்டளையிடும் கட்டாயத்தில் தள்ளுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - காலியானா நடவடிக்கை

    25 அக்டோபர், 2018
    42நிமி
    16+
    மாணவர்களுக்கும், அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேறி வருகிறது. இருப்பினும், அக்டோபர் 2 ஆம் தேதி ட்லாடெலோல்கோ சதுக்கத்தில் நடைபெறும் பேரணியில் தேசிய வேலைநிறுத்த குழுவின் அனைத்து தலைவர்களையும் கைது செய்ய கொரோனா டெல் ரோஸால் மற்றும் இராணுவம் திட்டமிட்டுள்ளது. நடவடிக்கையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பர்ரியன்டோஸ் சதுக்கத்தைச் சுற்றி ஸ்னைப்பர்களை வைத்துள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியாது.
    Prime-இல் சேருங்கள்