உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1200512 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

சார்லி தன் கல்யாண வாழ்வில் ஒரு வலம் வருவானா? இந்த, டூ அண்ட் ஹாஃப் மென் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் முதாலாம் இடத்தில் உள்ள இத்தொடருக்கு திரும்புகின்றனர்.

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. இரண்டு ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களுடன் பாங்காக்கில் வார இறுதி நாட்கள்.

  22 நிமிடங்கள்3 அக்டோபர், 200416+சப்டைட்டில்

  சார்லி ஹார்பர் (தொடரின் நட்சத்திரம் சார்லி ஷீன்) ஒரு பணக்கார மணமாகாத ஆண். மெர்சிடீஸ் கார் வைத்திருப்பவன், பெண்களுடன் எளிதாய் பழகக்கூடியவன். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவனின் தண்டெலும்பு மருத்துவ சகோதரனான ஆலனும்(தொடரின் நட்சத்திரம் ஜான் ட்ரையர்), பத்து வயது மகன் ஜாக்கும்(தொடரின் நட்சத்திரம் ஏங்கஸ் டி. ஜோன்ஸ்) எதிர்ப்பாராத விதமாக வர சார்லியின் மாலிபு வாழ்க்கை மாறுகிறது.

 2. 2. ப்ரின்சிபல் கல்லாஜெர்'ஸ் லெஸ்பியென் லவர்

  22 நிமிடங்கள்10 அக்டோபர், 200416+சப்டைட்டில்

  ஜாக் பெரிய மார்புடைய தன் சக பள்ளித்தோழி படத்தை வரைந்தது குறித்து உடனே சந்தித்துப் பேச ஜாக்கின் தலைமை ஆசிரியர் ஆலனை அழைக்கிறார். ஆலன் சார்லியின் உதவியை கோரி தொலைப்பேசி செய்தி அனுப்புகிறான். ஆனால், சார்லி பதிலளிக்கவில்லை.

 3. 3. கார்ப்பெட் பெர்ன்ஸ் அண்ட் எ பைட் மார்க்

  22 நிமிடங்கள்17 அக்டோபர், 200416+சப்டைட்டில்

  ஆலனுடைய காதல் களியாட்டங்கள் அவனுடைய முன்னாள் மனைவி ஜூடித்துடன் என்பதை அறிந்ததும் சார்லி அதிர்ச்சியடைகிறான். ஆலனும் ஜூடித்தும் சமரசம் செய்து கொண்டால், ஜாக்கை தான் பார்ப்பது அரிதாகிவிடும் என்று அச்சம் கொள்ளும் சார்லி அனைத்தையும் செய்து, ஆலன் கவனத்தை மற்ற பெண்களிடம் ( போர்மமெர் பிளேபாய் பிளயமாட்ஸ் சாண்டி அண்ட் மாண்டி பென்ட்லி ) திருப்பும் முயற்ச்சியயும் சேர்த்து, அவர்களை பிரிக்க பார்க்கிறான்.

 4. 4. மார்பகங்களை பற்றிய உன்னுடைய அலட்சிய மனப்பான்மை

  22 நிமிடங்கள்24 அக்டோபர், 200416+சப்டைட்டில்

  ஆலன் பெர்த்தாவிற்கு கடற்கரை வீட்டில் இரண்டு நாள் தங்குவதற்கு அனுமதி கொடுத்தது சார்லியை சினமூட்டுகிறது. சார்லி ஆலனை கண்டித்து, அவன் அந்த வீட்டின் விருந்தினர் மட்டுமே என்றும் பெர்த்தாவை அங்கு தங்க வைக்க அவனுக்கு உரிமை இல்லை என்றும் கூறுகிறான். சார்லியின் பேச்சால் காயப்பட்ட ஆலன், ஜாக்குடன் தங்களுக்கு என்று ஒரு சொந்த இடத்திற்குப் போக முடிவு செய்கிறான்

 5. 5. நாங்கள் அதை திரு. பிங்கி என்று அழைத்தோம்

  21 நிமிடங்கள்7 நவம்பர், 200416+சப்டைட்டில்

  சார்லி உடலுறவு கொண்ட பெண் ஒருத்தி, அவன் மேல் காதல் கொண்டுள்ளதாகச் சொல்ல, அதற்கு அவன் பொருத்தமற்ற பதிலளித்து ஆண்மைக் குறைவால் அவதிப்படுகிறான். பின்னர், சார்லியால் நீண்ட கால உறவு வைத்துக் கொள்ள முடியாததிற்கு அவன் தாயுடன் அவனுக்கிருந்த தீர்க்கமுடியாத பிரச்சனைகள் தான் காரணம் என்று ரோஸ் விவரிக்கிறாள்.

 6. 6. ஹாய், மிஸ்டர் ஹார்ன்ட் ஒன்

  22 நிமிடங்கள்14 நவம்பர், 200416+சப்டைட்டில்

  சுதந்திரமான பாலியல் கட்டுப்பாடுகளற்ற ஒரு பெண்ணானான இஸபெல்லாவை (ஜோடி லின் ஒ'கீப் - "நாஷ் பிரிட்ஜெஸ்") டேட் செய்வது குறித்து சார்லி கிளர்ச்சியடைகிறான் - அவள் ஆவி வழிபாடு செய்யும் வினோதமான ஒருத்தி என்று ஆலன் சுட்டிக்காட்டும் வரை. இஸபெல்லா அவனது ஆண்மையின் மேல் சாபம் விடப்போவதாக அசச்சுறுத்தும் வரை சார்லி ஆலனின் எச்சரிக்கைகளைப் பற்றி கலக்கமடையவில்லை.

 7. 7. ஸ்லீப் டைட் புட்டிங் பாப்

  22 நிமிடங்கள்21 நவம்பர், 200416+சப்டைட்டில்

  சார்லி, தனது ஸ்டாக்கரான ரோஸின் பிறந்தநாளைக் கொண்டாடக் குடித்துவிட்டு மாலையில் அவளுடன் நேரம் செலவிடுகிறான். அப்பொழுது அவனும் ரோஸும் தவறான நிலையில் காணப்படுகிறார்கள். அதனால், அவளது தந்தை ஹார்வி (கோல்டன் க்ளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்றுள்ள மார்ட்டின் ஷீன் - "தி வெஸ்ட் விங்") சார்லியை எதிர்கொள்கிறார். அவர் ரோஸைக் குறித்தான அவனது உள்நோக்கம் என்னவென்று வற்புறுத்திக் கேட்கிறார்.

 8. 8. நான் செய்யும் சூனியம்

  21 நிமிடங்கள்28 நவம்பர், 200416+சப்டைட்டில்

  வசீகரமான பாலே நடன ஆசிரியை மியாவிடம் (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே -"ஸ்மால்வில்", "ஒன் ட்ரீ ஹில்","சா II"), சார்லியின் காதல் பிரஸ்தாபங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அப்போது சார்லி ஆலனிடம், அவனால் மியாவை இணங்கச் செய்து தன்னுடன் டேட் செல்ல வைக்க முடியுமென்று நிரூபிக்க முயற்சிக்கிறான்.

 9. 9. மேடமும் அவரது சிறப்பு நண்பரும்

  21 நிமிடங்கள்12 டிசம்பர், 200416+சப்டைட்டில்

  நோர்மா (அகாடமி விருது மற்றும் பல எம்மி விருதுகளை வென்றுள்ள க்ளோரிஸ் லீச்மேன் - "மால்கம் இன் தி மிடில்", "ஸ்பாங்லிஷ்"), என்கிற ஒரு வயதான பணக்காரப் பெண்மணி ஆலன் மீது காதல் ஆர்வம் கொள்கிறாள்.

 10. 10. உப்பான மற்றும் முறுக்கபட்ட ஏதோ ஒன்று

  22 நிமிடங்கள்2 ஜனவரி, 200516+சப்டைட்டில்

  ஆலனை "நல்ல மருத்துவர்" நல்ல அண்டை விட்டார்" மற்றும் "நல்லவன்" என்று ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டதைக் கொண்டாடுவதற்கு ஒரு குடும்ப இரவு விருந்து ஏற்பாடு செய்கிறான் ஆலன். ஆனால், தன் தாய் எவ்வளின் அதனால் ஈர்க்கப்படாததால் அவன் நொறுங்கிப் போகிறான்

 11. 11. சாண்டாவின் நரக கிராமம் (சான்டாஸ் வில்லேஜ் ஆப் தி டாம்ட்)

  22 நிமிடங்கள்16 ஜனவரி, 200516+சப்டைட்டில்

  ஆலன் சமையல் பயிற்றுநரான சாண்டியை (ஜோஸி டேவிஸ் - "பெவெர்லி ஹில்ஸ் 90210") டேட் செய்யும்போது, அவனும் சார்லியும் எடை கூடுகிறார்கள். ஆனால், சாண்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிந்தபின்னும் கூட, சார்லி அவளுடைய அற்புதமான உணவை இழக்க மனமில்லாமல், ஆலன் அவளிடமிருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கிறான்.

 12. 12. தட் ஸ்பெஷல் டக்

  22 நிமிடங்கள்30 ஜனவரி, 200516+சப்டைட்டில்

  சார்லியும் ஆலனும், ஜாக்கை ஒரு நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் சகோதரர்கள் இருவரும் தனியாக ஒரு திரைப்படத்துக்குச் செல்கிறார்கள். ஆனால், ஜாக் தன்னிடமிருந்து விலகித் தனியாக வார இறுதியைக் கழிக்க ஆவலாக இருக்கிறான் என்று நினைத்து ஆலன் பீதியடைகிறான். இதனால் சகோதரர்களின் இரவு பாழாகிறது.

 13. 13. அவமானம் ஒரு காட்சி ஊடகம்

  22 நிமிடங்கள்6 பிப்ரவரி, 200516+சப்டைட்டில்

  மியாவுடனானத் (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே) தன் உறவு தீவிரமடைகிறது என்று சார்லி சொல்லும்போது யாரும் அவனை நம்பவில்லை. மியாவும் அவனும் ஒரு மாதத்திற்கும் மேலாக டேட் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் தங்கள் உறவை நிறைவுசெய்யவில்லை(உடல் உறவு கொள்ளவில்லை) என்றும் அவன் ஒப்புக்கொள்ளும்போது, அனைவரும் அவன் பொய் சொல்கிறான் என்றே நினைக்கிறார்கள்.

 14. 14. காதல் குருடானது அல்ல வளர்ச்சி குன்றியது

  22 நிமிடங்கள்13 பிப்ரவரி, 200516+சப்டைட்டில்

  ஒன்றரை மாதங்களாக விலகியிருந்த பிறகு, சார்லி, மியாவுடனான (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே) தனது உறவை முழுநிறைவு செய்யவேண்டுமென்று ஆர்வத்துடன் இருக்கிறான். துரதிஷ்டவசமாக அதற்கு, பாலியலுணர்வு மிகுந்த (ஓவர்செக்ஸ்ட்) சார்லியின் முன்னாள் தோழி கண்டி (தொடரும் நட்சத்திர நடிகர் ஏப்ரல் பௌல்பி) மற்றும் மியாவின் பெற்றோர் உள்பட, இன்னும் பல தடைகள் இருக்கின்றன.

 15. 15. என் பேச்சு இனிமையானது

  22 நிமிடங்கள்20 பிப்ரவரி, 200516+சப்டைட்டில்

  சார்லியின் வாழ்க்கைமுறை மியாவுடன் (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே) இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் உறவில், மியா புகுத்தியுள்ள ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், சார்லி கராஜூக்குக்குள் சிகரெட்டு மற்றும் பியரை ரகசியமாக எடுத்துச் செல்கிறான் மற்றும் யாருக்கும் தெரியாமல் தனக்கு பர்கர் கொண்டுவர, ரோஸை ஏற்பாடுசெய்கிறான்.

 16. 16. எர்கோ, தி பூட்டி கால்

  22 நிமிடங்கள்6 மார்ச், 200516+சப்டைட்டில்

  ஆலன், தன் வயதில் பாதி வயதுடைய ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருப்பதை நினைத்து வெட்கப்பட்டு, எவ்வளினிடம் அவளை அறிமுகம் செய்யத் தயக்கம் கொள்கிறான். இதனால், தன்னுடைய 22வயதுக் காதலி கண்டியை (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் ஏப்ரல் பௌல்பெ), ஜாக்கின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து வருவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். இதற்கிடையில், ரோஸ், மறைமுகமாகச் சார்லியை கவரும் தன் முயற்ச்சியை தொடருகிறாள்.

 17. 17. தி அன்ஃபார்ச்சுனேட் லிட்டில் ஷினாசர்

  21 நிமிடங்கள்20 மார்ச், 200516+சப்டைட்டில்

  சார்லி, விளம்பர விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறான். பல ஆண்டுகளாக, தன்னுடைய போட்டியாளர் ஆர்ச்சியிடம் (ஜான் லொவிட்ஸ் - "சாட்டர்டே நைட் லைவ்")தோற்றுக்கண்டிருப்பதால், விருது விழாவின் விருந்தினைப் புறக்கணிக்கிறான் சார்லி. அவனை, ஒரு வழியாக கலந்துக்கொள்ளச் செய்த பின், ஆலன், எவ்வளின் மற்றும் ஜாக், ஆதரவுக்காகச் சார்லியுடன் செல்கின்றனர். பின், அவர்களுக்கு ஆர்ச்சியைப் பற்றித் தெரிய வருகிறது.

 18. 18. தி ஸ்பிட்-கவர்ட் காப்ளர்

  21 நிமிடங்கள்17 ஏப்ரல், 200516+சப்டைட்டில்

  ஆலன், தன் இளம் காதலி கண்டிக்குச் செலவு செய்து கொண்டேயிருப்பதால், பணச்சிக்கலில் மாட்டுகின்றான். கண்டியின் பழையக் கார் பழுதடைய, ஒரு புதுக் காரை குத்தகைக்கு எடுக்கிறான். ஆலனை அவளுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு சார்லி எச்சரிக்கிறான். ஆனால் ஆலன், மிஞ்சியிருக்கும் பணத்தையும் , கண்டியின் பல் சிகிச்சைக்குச் செலவு செய்துவிட்டு, ஜூடித்தின் ஜீவனாம்சத்திற்குப் பணமில்லாமல் இருக்க,சார்லி அவனுக்கு உதவுகிறான்.

 19. 19. கோல்லி மோசெஸ், ஷி'இஸ் எ மஃப்ஃபின்

  22 நிமிடங்கள்1 மே, 200516+சப்டைட்டில்

  கண்டி (சிறப்பு நட்சத்திரம் ஏப்ரல் பௌல்பெ), ஆலன் மற்றும் சார்லியின் வீட்டில் தங்க வருவதால் , அங்குப் பதற்றம் நிலவுகிறது. நீண்டக் காலமாக பெண்களுடன் சல்லாபிக்காமல் ஒரு வரண்ட நிலையில் இருக்கும் சார்லி இதனால் இன்னும் எரிச்சலடைகிறான்,. எனினும், ஜூடித்தும் கண்டியும் நட்பாகி, ஒரு சிறப்பு வருகையாளர், அவர்கள் வீட்டுக் கதவைத் தட்ட,சார்லியின் மனநிலை மேம்படுகிறது..

 20. 20. என்றுமே மணப்பெண்ணின் தோழி பொதி கழுதை அல்ல

  21 நிமிடங்கள்8 மே, 200516+சப்டைட்டில்

  சார்லி இப்போது கண்டியின் அம்மா மண்டியை டேட் செய்கிறான் . ஜூடித், ஆலனுக்கு எதிராகக் கண்டியை மூளைச்சலவை செய்வதால் அவள் ஆலனை விட்டுவிட்டு ஜூடித்தின் வீட்டில் போய் தங்குகிறாள். இதனால் ஆலன் மனச்சோர்வுக்குள்ளாகிறான். மண்டியின் வற்புறுத்துதலின்பேரில் ஆலன், ஜூடித் வீட்டிற்குச் சென்று கண்டியைத் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்கிறான்.

 21. 21. அண்ட் தி பிளாட் மாய்சன்ஸ்

  21 நிமிடங்கள்15 மே, 200516+சப்டைட்டில்

  ஜாக் வகுப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதால், அதைப்பற்றிப் பேச, ஜேக்கின் ஆசிரியர் ஃபிரான்ஸீன் (ஜூலியா காம்ப்பெல்) ஆலனையும் ஜூடித்தையும் வகுப்பிற்கு அழைக்கிறார். மந்த புத்தியுள்ள தன் தோழியான கண்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அதே நேரம், அறிவுள்ள ஒருவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருக்கும் ஆலன் ஃபிரான்ஸீனின் மேல் ஆர்வம் காட்டுகிறான் - இச்சைகளற்ற விதமாக (பிளடானிக்).

 22. 22. சோஃபி அத்தையுடன் ஒரே ஓரு முறை

  22 நிமிடங்கள்22 மே, 200516+சப்டைட்டில்

  ஜாக்கின் பள்ளியிலுள்ள ஒரு அழகான பெண் ஜாக்கை பார்ட்டிக்கு அழைக்க, தனது மகனுடனான ஆலனின் ஒரு திருப்புமுனைத் தருணத்தைப், பெண்களைக் குறித்த தன் சொந்த யோசனைகள் மூலம் சார்லி கெடுத்துவிடுகிறான். ஆலன் லேசாகப் பொறாமைப்பட்டாலும், தன் மகன் பெண்களிடம் நற்பெயர் வாங்குவதற்குத் திடமான யோசனைகளைப் பெறுகிறான் என்றுணர்ந்து, தன் சகோதரன் தனக்கும் இதையெல்லாம் கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று அவனுக்கு தோன்றுகிறது.

 23. 23. ஆர்க்யுமெண்ட்ஸ் பார் தி க்விக்கி

  22 நிமிடங்கள்18 செப்டம்பர், 200516+சப்டைட்டில்

  தன் முன்னாள் காதலியான மியா (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே) தனது நடனக்குழுவுடன் நகரத்துக்கு வந்திருக்கிறாள் என்றும் சார்லி தனது நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்று அவள் விரும்புகிறாள் என்றும் சார்லி தெரிந்து கொள்கிறான். தனக்கு மியாவின் மேல் ஈர்ப்பு இல்லை என்று காட்டிக்கொள்ள முயலும் விதமாக, சார்லி நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்கிறான்.

 24. 24. தட் பிஸ்டல்-பேக்கிங் ஹெர்மாஃப்ரோடைட்

  21 நிமிடங்கள்25 செப்டம்பர், 200516+சப்டைட்டில்

  சார்லியும் மியாவும் (சிறப்பு நட்சத்திரம் இம்மான்யுஎல் வௌஜெ), தங்கள் திருமண ஏற்பாடுளை செய்கின்றனர், இருவரது குடும்பத்தாரும் சந்திக்க, பிறகு நடப்பவையாவும் மோசமாகிறது. சார்லியின் நிச்சயதார்த்ததினால் மனம் வெதும்பும் ரோஸ்,சில சுவாரஸ்யமானத் திட்டங்களை தீட்டுகிறாள். மேலும் , சார்லி மியாவின் திருமணத்திற்குப் பின், ஆலனும் ஜாக்கும் எங்குத் தங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகிறது.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, Holland Taylor