உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1201112 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல டூ அண்ட் ஏ ஹாஃப் மென் நகைச்சுவைத் தொடரின் 9வது காலத்தொடரில், சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூகதளங்களில் வெற்றி வாகையிட்ட பிரபலம் ஏஷ்டன் கட்சர் தொடரில் இணைந்துள்ளார். ஆண்கள், நகைச்சுவை, பெண்கள், செக்ஸ், டேடிங், விவாகரத்து, தாய்மார்கள், ஒற்றைப் பெற்றோர், வாடகைத்தாய் குடும்பங்கள், பணம் மற்றும் முக்கியமாக காதல் என அனைத்தும் இந்த கால தொடரிலும் நிகழ்கின்றன.

நடித்தவர்கள்
Jon Cryer, Ashton Kutcher, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, வால்டன் ஷ்மித்

  21 நிமிடங்கள்23 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  மனம் உடைந்த இணையதள பணக்காரனான வால்டன் ஷ்மித்தாக , ஏஷ்டன் கட்சர் ஒன்பதாவது காலத் தொடரின் ஆரம்பத்தில் இந்த தொடரில் இணைந்த பொழுது, அனைத்து விஷயங்களும் வெளிப்படுகின்றன.

 2. 2. கதவுத் துவாரத்தை விரும்பும் சில மனிதர்கள்

  21 நிமிடங்கள்30 ஏப்ரல், 201416+சப்டைட்டில்

  ஒன்பதாவது காலத்தொடரின் அரேங்கேற்ற பகுதியின், இரண்டாவது பாகத்தில், சிறப்பு நட்சத்திரம் ஜூடி க்ரீர் வால்டனின் முன்னாள் மனைவி பிரிட்ஜிட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

 3. 3. வளர்ந்த பெண்கள் சாப்பாட்டை வீணாக்க மாட்டார்கள்

  20 நிமிடங்கள்7 மே, 201416+சப்டைட்டில்

  ஆலன், பிரிட்ஜிட்டுடனான டேட்டுக்கு வால்டனைத் தயார் செய்கிறான். அதே நேரம் ஜேக், வால்டனைப் பின்பற்றி பள்ளியிலிருந்து நிரந்தரமாக வெளியேறத் திட்டமிடுகிறான்.

 4. 4. நைன் மேஜிக் ஃபிங்கர்ஸ்

  21 நிமிடங்கள்23 செப்டம்பர், 200716+சப்டைட்டில்

  தனது சமீபத்திய பிரிவிலிருந்து மீண்டு வரும் முயற்சியில், வால்டன் தனக்கான கட்சிதமான துணையைத் தேடிப் போகிறான். விட்டு விட்டுத் தன்னோடு இருக்கும் தோழியான லிண்ஸியுடன் (சிறப்பு நட்சத்திரம் கோர்ட்னீ தார்ன் ஸ்மித்) சமரசமாகும் வாய்ப்பு ஆலனுக்குக் கிடைக்கிறது.

 5. 5. சுற்றோவைக் கையில் பிடித்திருக்கும் ஒரு மிகப்பெரிய பூனை

  20 நிமிடங்கள்30 செப்டம்பர், 200716+சப்டைட்டில்

  லிண்ஸியின் ஆபாசத் திரைப்படப் பின்னணியைக் குறித்து சமரசத்திற்கு வர ஆலன் போராடிக்கொண்டிருக்கிறான். அவனை உற்சாகப்படுத்துவதற்காக வால்டன், வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்கிறான்.

 6. 6. தி ஸ்க்வாட் அண்ட் ஹோவர்

  21 நிமிடங்கள்7 அக்டோபர், 200716+சப்டைட்டில்

  பிரிட்ஜிட்டிடமிருந்து வால்டனுக்கு விவாகரத்துப் பேப்பர்கள் வருகின்றன. ஆனால் பிரிட்ஜிட்டைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தவுடன் அவன் தனது மன அழுத்தத்தை மறக்கிறான்.

 7. 7. அப் பகட்டான ஜப்பானிய கழிப்பறைகள்

  19 நிமிடங்கள்14 அக்டோபர், 200716+சப்டைட்டில்

  ஜேக் தனது கெமிஸ்ட்ரி ஆசிரியரின் மேல் ஈர்ப்புக் கொள்கிறான் (சிறப்பு நட்சத்திரம் மேசி க்ருதேர்ட்)... ஆனால் அவருக்கு வால்டனின் மேல் ஈர்ப்பு. இதற்கிடையில், ஆலன், தன் சகோதரன் அவனது உயிலில் தனக்கு விட்டுச்சென்று இருக்கும் ஜர்னலைப் பற்றிய எண்ணத்தோடே இருக்கிறான்.

 8. 8. உடலுறவுக்கு நன்றி!

  21 நிமிடங்கள்21 அக்டோபர், 200716+சப்டைட்டில்

  வால்டன், பீச் ஹவுஸை மறு அலங்காரம் செய்யத் தொடங்கும்போது, ஆலன் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விளிம்பிலிருந்து கீழே விழும்' நிலைமைக்கு ஆளாகிறான்.

 9. 9. ஃப்ரோடோஸ் ஹெட்ஷாட்ஸ்

  21 நிமிடங்கள்28 அக்டோபர், 200716+சப்டைட்டில்

  ஆலன் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தவுடன், தனது சமாளிக்கும் திறனைச் சோதிக்கும் விதமாக, கேரி பூசி உட்பட வரிசையாகப் பல சவால்களைச் சந்திக்கிறான்...

 10. 10. ஒரு கிண்ணம் நிறையக் கண்ணாடிக் கண்கள்.

  21 நிமிடங்கள்4 நவம்பர், 200716+சப்டைட்டில்

  வால்டன் ஒரு அழகான இளம் பிரிட்டிஷ் பெண்ணுடன் (சிறப்பு நட்சத்திரம் சோஃபி விங்கில்மேன்) இணக்கமாகிறான், ஆனால் அவன் டேட்டிங் உலகிற்குத் திரும்பிச் செல்லத் தயாராக இருக்கிறானா என்பதில் இருவருக்குமே உறுதியில்லை.

 11. 11. ஓர் அழகிய இறங்கு தளம்

  20 நிமிடங்கள்11 நவம்பர், 200716+சப்டைட்டில்

  தனது புதிய காதலியான ஸோயீயை ஈர்க்க, வால்டன் தன்னால் முடிந்தவற்றைச் செய்கிறான். அதே நேரம் பிரிட்ஜிட் அவன் வாழக்கையில் மீண்டும் தோன்றுகிறாள். மெலனி லின்ஸ்கி ரோஸாகத் திரும்பிவருகிறார்.

 12. 12. ஒரு தவறான நகர்வு, ஜிம்பாப்வே!

  21 நிமிடங்கள்18 நவம்பர், 200716+சப்டைட்டில்

  வால்டனின் அம்மா ராபின் (சிறப்பு நட்சத்திரம் மிமி ரோஜர்ஸ்) வருகிறார். ஆலனை மிகுந்த கவலையில் ஆழ்த்தும் விதமாக, அவர் வால்டனின் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு இரகசியத்தை வெளிப்படுத்திய பிறகும் கூட; ஆலன் அவர் மென்மேலும் மனசோர்வடைகிறார்.

 13. 13. மெதுவாகவும் வட்டமிடும் விதமாகவும்

  20 நிமிடங்கள்25 நவம்பர், 200716+சப்டைட்டில்

  வால்டனின் முன்னாள் மனைவியும், அவன் அம்மாவும், அவனது நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அவனை நிர்வாகக்குழுவிலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார்கள். வால்டன், இந்த நிர்வாகக்குழு சண்டைகளுக்கு, ஆலனைத் தனது கூட்டாளியாக்குகிறான்.

 14. 14. வேதிய சிகிச்சையில் ஒரு போஸ்ஸம்

  20 நிமிடங்கள்16 மார்ச், 200816+சப்டைட்டில்

  ஸோயீ, வால்டனை முடி வெட்டிக்கொள்ளவும் ஷேவ் செய்துகொள்ளவும் கட்டாயப்படுத்துகிறாள். ஆலன் லிண்ஸியுடனானத் தன் உறவைப் புதுப்பிக்கிறான்.

 15. 15. சோர்ந்து போன சீமாட்டி

  21 நிமிடங்கள்23 மார்ச், 200816+சப்டைட்டில்

  பெர்த்தாவின் "விசேஷ" சாக்லேட் பிரௌனீக்கள் சிலவற்றை ஸோயீயிடம் பகிர்ந்து, வால்டன் அவளை ஆசுவாசப்படுத்த முயற்சிக்கிறான். சிறப்பு நட்சத்திரம் மாத்யூ மார்ஸ்டென், ஸோயீயின் முன்னாள் கணவன் நைஜல்லாக வருகிறார்.

 16. 16. குடி, பாடல் மற்றும் கூடல்

  19 நிமிடங்கள்30 மார்ச், 200816+சப்டைட்டில்

  காதலர் தினத்தன்று ஒரு பெரிய புயல் காரணமாக வால்டன், ஆலன், ஸோயீ மற்றும் லிண்ஸி வீட்டிற்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அதன் விளைவாக உறவுச் சிக்கல்கள் மற்றும் பெண்களிடையே சண்டை ஆகியவை நடக்கின்றன.

 17. 17. நாட் இன் மை மௌத்

  19 நிமிடங்கள்13 ஏப்ரல், 200816+சப்டைட்டில்

  மரணத்தையொத்த ஒரு அனுபவத்தை இருவரும் சந்தித்த பின்னர், வால்டன் மற்றும் ஸோயீயின் உறவில் சில உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன. வால்டன் தனது உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறான். இதற்கிடையில், லிண்ஸிவிற்கு அதீத குடிப்பழக்கம் உள்ளதோ என்று சந்தேகிக்கிறான்.

 18. 18. பற்குழிகளுக்கு எதிரான போர்

  21 நிமிடங்கள்20 ஏப்ரல், 200816+சப்டைட்டில்

  வால்டனின், பிரிந்து சென்ற முன்னாள் தொழில் பங்குதாரர் பில்லி (சிறப்பு நட்சத்திரம் பேட்டன் ஓஸ்வால்ட்), பணம் சம்பாதிக்கும் திட்டத்தோடு ஒரு கோடாலியைப் புதைத்துவைக்க வருகிறான். அப்போது மாலிபு வீட்டில் பதட்டமான சூழ்நிலை உருவாகிறது.

 19. 19. பால்ம்டேல், ஏஹ்

  21 நிமிடங்கள்27 ஏப்ரல், 200816+சப்டைட்டில்

  ஆலனும் லிண்ஸியும் தங்கள் அம்மாக்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்துகிறார்கள். இதற்கிடையில், ஜேக்கும் எல்ட்ரிட்ஜும் தங்கள் பள்ளிப்பருவ நண்பர்கள் நடத்தும் பார்ட்டிக்குத் தங்களைக் கூட்டிச்செல்ல வால்டனை ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 20. 20. கிராண்ட் பை

  21 நிமிடங்கள்4 மே, 200816+சப்டைட்டில்

  வால்டன், தனது முன்னாள் மனைவியுடன் பிசினஸில் இறங்கப்போகும் விஷயத்தை ஸோயீயிடம் கூறுகிறான். இதற்கிடையில், ஆலன் மற்றும் லிண்ஸி தங்கள் அம்மக்களின் புதிய உறவைக் குறித்து சமரசமாகிறார்கள்.

 21. 21. மிஸ்டர் ஹோஸ் சேஸ் ‘எஸ்’

  21 நிமிடங்கள்11 மே, 200816+சப்டைட்டில்

  ஒரு பரிசோதனை முயற்சியாக, ஸோயீயும் அவள் மகளும் வால்டனுடன் தங்க வருகிறார்கள். அப்பொழுது வால்டனின் பொறுப்புணர்வு சோதனைக்குள்ளாகிறது. இதற்கிடையில், ஆலன் லின்ஸியுடன் வாழ ஆரம்பிக்கிறான். அங்கு எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே அவனுக்குக் கிடைக்கிறது.

 22. 22. நாம் ஏன் கைவிட்டோம் பெண்ணே

  21 நிமிடங்கள்18 மே, 200816+சப்டைட்டில்

  அகாடெமி அவார்ட் வென்ற கேத்தி பேட்ஸ் சார்லி ஹார்ப்பரின் ஆவியாக, சிறப்பு நட்சத்திரமாக வருகிறார். ஆலனுக்கு மைனர் ஹார்ட் அட்டாக் வந்தபோது அந்த ஆவி, மருத்துவமனையில் ஆலனின் கட்டிலருகே வந்து சந்திக்கிறது.

 23. 23. எனது டோனட்டின் ஓட்டையிலுள்ள ஒரு ஸ்ட்ரா

  21 நிமிடங்கள்18 செப்டம்பர், 201116+சப்டைட்டில்

  200ஆவது அத்தியாயத்தில், மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும் ஆலனின் மேல் அன்பும் பாசமும் பொழியப்படுகிறது, ஆனால், ஆலன் அதற்கு தகுதியானவனா என்று ஸோயீக்கு உறுதியாகத் தெரியவில்லை. செயின்ஃபீல்டின் ஜேசன் அலெக்சாண்டர் சிறப்பு நட்சத்திரமாக வருகிறார்.

 24. 24. ஐயோ! அல்-கொய்தா!

  21 நிமிடங்கள்25 செப்டம்பர், 201116+சப்டைட்டில்

  ஒன்பதாவது காலத்தொடர் இறுதி பகுதியில் ஜேக் தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். நகைச்சுவை நடிகர் பாட்டன் ஓஸ்வால்ட், வால்டனின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான பில்லியாகத் திரும்பி வருகிறார்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Conchata Ferrell, Holland Taylor, Marin Hinkle, Ryan Stiles, Courtney Thorne-Smith, Judy Greer