உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1200612 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

தொலைக்காட்சியின் முன்னணி நகைச்சுவையில், தி எம்மி வின்னிங்கின் நான்காவது சீசன், அதிர்ச்சியுடன் தொடங்கி (ஆலனுக்கு மறுபடியும் விவாகரத்து ஆகின்றதா?) அதிரடியாக முடிவடைகின்றது (எவ்வளினின் (ஹொலண்ட் டேலர்) புதியக் காதலன், அவளது விரலில் வைர மோதிரத்தை அணிவிக்க விரும்புகிறான்).

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (24)

 1. 1. கலிகுலாவிற்காக வேலை

  22 நிமிடங்கள்2 அக்டோபர், 200516+சப்டைட்டில்

  கடற்கரையில் ஒரு வீடும், மெர்சிடஸ் காரும், பெண்களுடன் சல்லாபமும் கொண்ட ஒரு பணக்கார மணமாகாத ஆண்,சார்லி ஹார்பர்(தொடரின் நட்சத்திரம் சார்லி ஷீன்) ஆனால், அவனுடைய சகோதரனான ஆலன்( தொடரின் நட்சத்திரம் ஜான் ட்ரையர்) , அவனது பத்து வயது மகன் ஜாக்குடன்(தொடரின் நட்சத்திரம் ஏங்கஸ் டி. ஜோன்ஸ்) எதிர்ப்பாராத விதமாக அவனோடு தங்க வர சார்லியின் உல்லாச மாலிபு வாழ்க்கைக்கு குறுக்கீடு ஏற்படுகிறது

 2. 2. யார் இந்த வோட் கனொக்கர்ஸ்?

  22 நிமிடங்கள்9 அக்டோபர், 200516+சப்டைட்டில்

  சார்லி ஏன் மியாவுடன் உறவை முறித்துக்கொண்டான் என இறுதியாக கூறியபோது ஆலன் மிகவும் குற்ற உணர்ச்சிக்குள்ளாகிறான். அதாவது ஆலனும் ஜாக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மியா எதிர்ப்பார்த்ததாலேயே அவள் சார்லியை திருமணம் செய்து கொள்ளவில்லை

 3. 3. இந்த கடல் ஒரு கடுமையான எஜமானி

  21 நிமிடங்கள்16 அக்டோபர், 200516+சப்டைட்டில்

  ஒரு அழகான பெண்ணை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சார்லி நீர் சறுக்கு விளையாட்டை விளையாட முயற்சிக்க, அது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது . பின்னர், அவன் கிட்ட்த்தட்ட மூழ்கிவிட, அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் இறந்துபோன தந்தை அவனிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்ததாகவும் அதனை பூர்த்தி செய்ய அவனுக்கு விருப்பமில்லை எனவும் ஆலனிடம் சார்லி கூறுகிறான்.

 4. 4. எ பாட்-ஸ்மோக்கிங் மங்கி

  21 நிமிடங்கள்23 அக்டோபர், 200516+சப்டைட்டில்

  ஆலனும் கண்டியும், ஒரு வழக்கத்திற்கு மாறான குழப்பமாக, தங்களது நாயைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பிற்காக சண்டையிடுகின்றனர். கண்டி மற்றும் ஆலனின் பிரிவிற்குப் பின்னர், கண்டி, காண்டோமினியம் மற்றும் காருடன் வெளியேற, ஆலன், அவர்களது நாயைத் தன்னுடனே தக்கவைத்துக்கொள்ள தீர்மானமாக இருக்கிறான்.

 5. 5. எ லைவ் வுமன் ஆஃப் ப்ரூவென் ஃபெர்ட்டிலிட்டி

  25 நிமிடங்கள்6 நவம்பர், 200516+சப்டைட்டில்

  ஜூடித், தனது புதிய காதலன் ஹெர்பைத் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் ரியான் ஸ்டைலஸ் - "தி ட்ரியு கேரி ஷோ") திருமணம் செய்துக்கொள்வதால், தான் இனிமேல் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்பதை நினைத்து, மிகுந்த மகிழ்ச்சியடைகிறான் ஆலன்.

 6. 6. அபாலஜீஸ் ஃபார் ஃப்ரிவலிடி

  20 நிமிடங்கள்13 நவம்பர், 200516+சப்டைட்டில்

  கடுகடுப்பாக பேசி, பொறுமையுடன் காணப்பட்டாலும், மூர்க்கத்தனமாகச் சிந்திக்கும் தன் தாயுடன் ஒத்துப் போகவில்லை என்றாலும், தன் தாயை போலவே குணமுடைய - பொன்னிற முடி மற்றும் உயர்ந்த நிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் முகவர் லிடியாவிடம் ( திரும்பத் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் கதிரின் லானாஸா - "ஜஸ்டிஸ்") சார்லி ஈர்க்கப்படுகிறான்

 7. 7. ரிப்பீடெட் ப்லோஸ் டு ஹிஸ் அன்ஃபாம்ட் ஹெட்

  21 நிமிடங்கள்20 நவம்பர், 200516+சப்டைட்டில்

  பெர்த்தா, தன் மகள் நயோமியைக் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் சாரா ரூ) கர்ப்பமடையைச் செய்த, அந்தத் திருமணமான மனிதனைப் பழிவாங்க சபதம் கொண்டு, சார்லியைக் கட்டாயப்படுத்தி, அவளுடன் அழைத்துச் செல்கிறாள். இதற்கிடையில், நயோமி, பெர்த்தாவின் வீட்டு வேலையில் உதவி செய்கிறாள். மேலும், ஆலன், தனக்கு இருக்கும் ஒரு விசித்திரமான பித்தினை வெளிப்படுத்துகிறான்.

 8. 8. ரிலீஸ் தி டாக்ஸ்

  22 நிமிடங்கள்27 நவம்பர், 200516+சப்டைட்டில்

  ஆலன் இரவில் தூக்கம் வராமல் தவிக்க, சார்லியின் பரிந்துரையின்படி, கடற்கரையில் ஓடுகிறான். அவனது இந்த ஓட்டம், எதிர்மறையான விளைவுகளைத் தர, தன் தூக்கமின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து போக்குவதற்காக, ஒரு மனநல மருத்துவரிடம் செல்கிறான்.

 9. 9. காரி'ஸ் பீன் டெட் ஃபார் அன் ஆர்

  21 நிமிடங்கள்18 டிசம்பர், 200516+சப்டைட்டில்

  சார்லியும் ஆலனும் தங்களது காதலிகளோடு வெளியில் சென்றபோது, ஆலன், அடுத்து வரும் கட்டணங்களைத் தாம் செலுத்துவதாகக் கூறிக்கொண்டே, எல்லா செலவிற்கும் தன்னிடமே பணம் வாங்கிக்கொண்டிருந்ததால், மிகுந்த எரிச்சலடைகிறான் சார்லி. இரவு உணவிற்குப் பின், ஆலன், வழக்கம்போலவே சார்லியிடம் நடந்துக்கொண்டதால், சார்லி, அவனது ஆட்டத்தை வைத்தே அவனைத் திருப்பியடிக்க முயற்சி செய்கிறான்.

 10. 10. கிஸ்ஸிங் ஏப் லிங்கன்

  22 நிமிடங்கள்8 ஜனவரி, 200616+சப்டைட்டில்

  சார்லியின் காதலி லிடியாவும் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் கேத்ரின் லனாஸ்ஸா) பெர்த்தாவும், ஒருவருக்கொருவர் எல்லை மீறி விட்டதாக நினைத்துக் கொண்டு சார்லியின் ஆதரவுக்காக சண்டையிட்டுக்கொள்கின்றனர், அவர்கள் இருவரில் ஒருவரை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 11. 11. வால்நட்ஸ் அண்ட் டீமெரல்

  21 நிமிடங்கள்22 ஜனவரி, 200616+சப்டைட்டில்

  சார்லி, அவனதுக் காதலியுடன் இணைந்து, ஒரு இன்பமான கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவனது நண்பர்களும் குடும்பத்தினரும் ஒவ்வொருவராக வந்தடைகின்றனர். எனவே, ஒரு திட்டமிடப்படாத, தேவையற்ற விடுமுறை கொண்டாட்டத்தை சார்லி தன் வீட்டில் அவர்களுக்கு வழங்க வேண்டிவருகிறது.

 12. 12. மொன்டனாவில் ஆட்டின் உறுப்பை அறுத்தல்

  21 நிமிடங்கள்5 பிப்ரவரி, 200616+சப்டைட்டில்

  ஆலன் தன் மகள் நவோமியுடன்(தொடர் சிறப்பு நட்சத்திரம் சாரா ர்யூ) இரகசியமாக பழகி வருகிறான் என பெர்த்தாவிற்கு தெரியவர, ஆலன் பிரச்சினைகளை எதிர்ப்பார்க்கிறான். ஆனால், பெர்த்தாவின் எதிர்செயல் ஆச்சரியமானதாகவும் , ஆலன் எதிர்ப்பார்த்ததை விட மோசமானதாகவும் இருக்கிறது.

 13. 13. டோண்ட் வொர்ரி ஸ்பீட் ரேசர்

  21 நிமிடங்கள்26 பிப்ரவரி, 200616+சப்டைட்டில்

  ஜாக், சார்லி மற்றும் ஆலெனிடம், ஜூடித்தும் அவளது வருங்கால கணவன் ஹெர்ப்பும் உடலுறவு கொள்ளும் சத்தத்தை தான் அடிக்கடி கேட்பதாக கூறி, தன் தாய் எதற்கு ஹெர்ப்புக்கு ( திரும்பத் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் ரியான் ஸ்டைல்ஸ்) உடலுறவின் வழிமுறைகளைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதற்கு ஒரு கோட்பாட்டையும் உருவாக்குகிறான்.

 14. 14. அது கோடைகால ஸாசேஜ், ஸலாமி அல்ல

  22 நிமிடங்கள்5 மார்ச், 200616+சப்டைட்டில்

  சார்லி, தன் அண்டை வீட்டில் இருக்கும் கவர்ச்சியான டானியிலுடன் ( புரூக் ஷில்ட்ஸ் - " நிப்/ டக்," " சடன்லி சூசன்") பழகியப்பின், அவளும் ஆலன்னும் பொதுப்படையான ஆர்வங்கள் உடையவர்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறான்

 15. 15. மை டேம் ஸ்டாக்கெர்

  22 நிமிடங்கள்12 மார்ச், 200616+சப்டைட்டில்

  ரோஸ் தான் நிரந்தரமாக லண்டனுக்குக் குடிபெயர்வதை சொன்ன போது, சார்லி முதலில் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவளைப் பற்றிய தன் உண்மையான உணர்வுகளை அவன் எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கடைசியில் உணர்கிறான். இதற்கிடையில், ஆலன் ஆன்லைன் டேட்டிங்கை முயற்சி செய்ய, அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

 16. 16. இளைஞர்களுக்கும் கபம் இருக்கும்

  21 நிமிடங்கள்19 மார்ச், 200616+சப்டைட்டில்

  சார்லி டேட்டிங் செய்துக் கொண்டிருக்கும் ஒரு கவர்ச்சியான இளம்பெண், ஒரு புதிய கிளப்பிற்குச் செல்வதற்கும், அங்கு அவளின் தோழியை சந்திப்பதற்காக ஆலனையும் அழைத்து வர செய்வதற்க்கும் சார்லியிடம் கொஞ்சிப் பேசி சம்மதிக்கவைக்கிறாள். ஆனால், அவர்கள் அங்கு வரும் போது, பார்ட்டிக்கு வந்தவர்கள் அவர்களை வயதானவர்கள் என்று எண்ணுவதை அறிந்த சார்லி மற்றும் ஆலன் திகைப்படைகின்றனர்.

 17. 17. நான் ஒரு காமீயுடன் தூங்கினேன்

  22 நிமிடங்கள்9 ஏப்ரல், 200616+சப்டைட்டில்

  எவ்வளினின் இறப்பிற்கு,அவளுடைய நண்பர்கள் எவரும் வருந்த மாட்டார்கள் என்று ஆலனும் சர்லியும் கூற, அவர்களை அவள் சில வாரங்களுக்குக் கடுமையாக புறக்கணிக்கிறாள். இதன் பிறகு எவ்வளின் தனக்குத் தெரிந்தவர்களுடன் கனிவாக நடந்து கொள்வதற்கு பதிலாக, புதிய நண்பர்கள் கூட்டத்தை சேர்க்கிறாள். அவர்களுக்குள் இரண்டு ஆண்களும் ஒரு அழகான பையனும் சார்லி, ஆலன் மற்றும் ஜாக்கை போலவே இருக்கின்றனர்

 18. 18. ஹூட்டர்வில்லேவில் எப்போதும் மழை பெய்வதில்லை

  21 நிமிடங்கள்23 ஏப்ரல், 200616+சப்டைட்டில்

  கவர்ச்சிப்பெண்களின் சுவரொட்டிகளைக் கொண்டு ஜாக் தனது சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கும் போது, தனது மகன் கிட்டத்தட்ட வளர்ந்து பெரியவனாகி விட்டான் என ஆலன் உணர்கிறான். ஜாக்கின் மிச்சம் இருக்கும் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க விரும்பும் ஆலன், தந்தை-மகன் உறவுப்பிணைப்பில், கடைசி நிமிட முயற்சிகளை மேற்கொள்கிறான். இதனிடையே, கண்டி ஒரு நடிகையாக, புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.

 19. 19. கென் பொம்மையை போல மென்மையானது

  21 நிமிடங்கள்30 ஏப்ரல், 200616+சப்டைட்டில்

  ஜூடித் மற்றும் ஹெர்பினுடைய (தொடர் சிறப்பு நட்சத்திரம் ரையான் ஸ்டைல்ஸ்) திருமண நாள் நெருங்க, ஜூடித்தின் நகைச்சுவையுணர்வு மிக்க சகோதரியான மைராவுடன்(தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜூடி க்ரீர் – "அர்ரஸ்டட் டெவலப்மெண்ட்”) சார்லிக்கு நெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் சார்லியின் இந்த சல்லாபம் ஜூடித்திற்கு பிடிக்கவில்லை. சார்லி மைராவை தொடர்வதை நிறுத்தச்செய்யுமாறு ஆலனுக்குக் கட்டளையிடுகிறாள்.

 20. 20. அத்தை மைரா அதிகமாக சிறுநீர் கழிப்பதில்லை

  21 நிமிடங்கள்7 மே, 200616+சப்டைட்டில்

  ஜூடித்தின் திருமணத்திற்கு ஜாக்கினை ஆலன் தயார்ப்படுத்தும் வேளையில், சார்லி, ஹெர்பின் (தொடர் சிறப்பு நட்சத்திரம் ரையான் ஸ்டைல்ஸ்) சகோதரியான மைராவுடன் (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஜூடி க்ரீர்) தனது சல்லாபத்தை தொடர்கிறான். இந்த உறவு பற்றிய ஜூடித்தின் மறுப்பு தவிர, தான் உண்மையிலேயே அவளை விரும்புவதாக சார்லி ஒப்புக்கொள்ள, மைராவிடமிருந்து சார்லிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

 21. 21. டக்ட், டேப்ட் மற்றும் கார்ஜியஸ்

  22 நிமிடங்கள்14 மே, 200616+சப்டைட்டில்

  ஆலனுடன் நிறைய நேரம் செலவழிக்கும் ஆலனின் ஆதரவாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒற்றைத் தந்தையான கிரெக் (மாட் ராத்), தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை வெளிப்படுத்த, கிரெக்கிற்கு ஆலன் மீது ஈர்ப்பு இருப்பதாக சார்லி சந்தேகிக்கிறான்.

 22. 22. திரு. மெக்குளூவின் உணவு பை

  22 நிமிடங்கள்21 மே, 200616+சப்டைட்டில்

  ஜாக்கை சார்லி ஒரு பந்தயக்களமான ரேஸ்டிராக்கிற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவனுக்கு எதிர்பாரா அதிர்ஷ்ட அனுபவம் ஏற்படுகிறது. இதனிடையே, நரகம் போன்ற மோட்டார் வாகனத் துறை அலுவலகத்தில் சிக்கிக் கொள்கிறான் ஆலன். தொடர் நட்சத்திரம் ஜோன் க்ரையர் இந்த அத்தியாயம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சிறப்பு நட்சத்திரம் ஜோயல் முர்ரே (தர்மா & கிரெக்) பீடேவாக நடிக்கிறார்.

 23. 23. எறும்புத்தின்னிகள். அவைகள் கிறுக்கான தோற்றமுடையவை

  21 நிமிடங்கள்17 செப்டம்பர், 200616+சப்டைட்டில்

  சார்லியின் வீட்டில் பணிபுரியும் ஃபெர்னாண்டோ (கிராம்மி விருது பெற்ற ஒலிப்பதிவு கலைஞர் என்ரிக் இக்ளேசியஸ்) என்னும் எடுபிடி வேலை செய்யும் அழகான இளைஞனிடம் தான் டேட்டிங் செய்யும் பெண்ணை சார்லி இழக்கிறான்.

 24. 24. விலைமாதுகள் மற்றும் ஜெலடோ

  20 நிமிடங்கள்24 செப்டம்பர், 200616+சப்டைட்டில்

  எவ்வளினின் புதிய காதலன் டெடி (ராபர்ட் வாக்னர் - ஹார்ட் டு ஹார்ட்) அவனுடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தில் லாஸ் வேகாஸுக்கு செல்ல சார்லி மற்றும் ஆலனை அழைத்த போது, அவர்கள் தங்களுடைய "அப்பா சிக்கல்களை" எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஹியூகோவாக சிறப்பு நட்சத்திரம் மைக் கான்னர்ஸ் ("மான்னிஸ்) நடிக்கிறார்

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, April Bowlby, Holland Taylor, Melanie Lynskey