Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

ஹவாய் ஃபைவ்-0 5 வது சீசனில், மெக்கேரட் தனது தந்தையின் வழக்கையும், தாயின் கடந்தகாலத்தையும் முடிக்க முயல்கிறார். அதே நேரத்தில் 50 வது மாகாணத்திலிருந்து புல்லுருவிகளை ஒழித்துக்கட்ட ஃபைவ்-0 யூனிட் உறுதிபூண்டுள்ளது - தங்களுக்குள்ளே அவர்கள் கிண்டல் செய்துகொண்டாலும் சரி, சண்டைபோட்டுக்கொண்டாலும் சரி.
IMDb 7.4201025 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - ஆ ‘ஓஹே கஹி எ பே’ இ ஐ (ஒளியமுடியாது)
    25 செப்டம்பர், 2014
    44நிமி
    TV-14
    ஒவாஹூ குடிமக்களின் மீது ஆயுதம் தாங்கிய டிரோன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். அவர்களைப் பிடிப்பதற்காக ஃபைவ்-0 முயற்சிக்கிறது. இதனால் அந்தத் தீவில் உள்ள மக்கள் வீட்டின் உள்ளே பதுங்கியிருக்கின்றனர். இதனிடையே, ஐந்தாவது சீசனின் பிரீமியரில் மெக்கேரட்டும், டானோவும் உளவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து சிகிச்சை பெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - கா மகுவாகனே (குடும்ப நபர்)
    2 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    இரகசியப் பணியில் ஈடுபட்டு வரும் கடற்படை வீரரின் இளம் பெண் கடத்தப்படுகிறார். அதனை ஃபைவ்-0 விசாரணை செய்கிறது. இதனிடையே, சகோதரனின் வாழ்க்கைக்காக அவரைப் பிடித்து வைத்திருக்கும் நபர்களுக்கு $18.5 மில்லியன் தொகையை டானி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - கனாலு ஹோப் லோவா (கடைசித் திருப்பம்)
    25 செப்டம்பர், 2014
    44நிமி
    TV-14
    ஒரு சுற்றுலா செல்லும் பேருந்தில் உள்ள மூன்று திருடர்கள் தெரியாத ஒன்றைத் திருடிவிடுகின்றனர். அது ஒரு கடுமையான இலக்கை அடைவதற்கு ஃபைவ்-0 -வுக்கு உதவுகிறது. இதனிடையே, டானி தனது சகோதரனின் வாழ்க்கைக்காக, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான தொகையைத் தேடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - கா நோவா’அவ் (ஓவியர்)
    16 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    ஒவாஹூவிலுள்ள தெருக்களில் ஃபைவ்-0 குழுவினர் ஒருவரால் டெட்ராய்ட் கொலைகாரன் கூட்டிச் செல்லப்படும் போது, கொலைகாரனின் நோக்கங்களை அறிந்து குழுவினர் அதிர்ச்சியடைகின்றனர். இதனிடையே, தனது சகோதரனின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பணத்தைப் பெற டானிக்கு உதவும் நோக்கத்தில் சின் தனது வேலையைப் பணயமாக வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - ஹோ’ ஒலினா (பாரம்பரியம்)
    23 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    தனது தந்தையின் நான்காம் வருட நினைவு தினத்தன்று, அவரின் மறைவுக்கு முன்பு வேலை செய்த ஒரு தீர்க்கப்படாத வழக்கைத் திரும்ப விசாரிப்பதற்கு உதவிய ஒரு பெண்ணை மேக்கேரட் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - ஹோ’ ஓமா’ இகே (மறைக்கப்படாத)
    30 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    அது ஒரு ஹாலோவீன் தினம் மற்றும் ஒரு சைக்கோ கொலையாளி படத்தில் வருவது போன்று தொடர் கொலைகளைச் செய்யும் கொலைகாரனை ஃபைவ்-0 பிடிக்க வேண்டும். இதனிடையே, தாங்கள் தேடுகின்ற எதிர்களால் ஜெர்ரி கடத்தப்பட்டதால், அவரை மேக்கேரட் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - இனா பாகா (ஒருவேளை நடந்தால்)
    6 நவம்பர், 2014
    44நிமி
    TV-14
    100 வது எபிசோடில், வோ ஃபேட்டால் மெக்கேரட் கடத்தப்படுகிறார். குழுவினர் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் மெக்கேரட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்பது காட்டப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - கா ஹானு மாலு (வேலையின் உள்ளே)
    20 நவம்பர், 2014
    44நிமி
    TV-14
    கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்படுகின்றனர். அதில் மகனை முக்கியக் குற்றவாளியாக சந்தேகப்படுகின்றனர். மெக்கேரட்டின் அத்தை டேப் தனது புதிய எதிர்காலக் கணவருடன் தீவுக்குத் திரும்புவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - கே கோஹோ மாமாவ் அக்கு (லாங்ஷாட்)
    11 டிசம்பர், 2014
    42நிமி
    TV-14
    ஹவாயில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் ஃபைவ்-0 குழுவினர் பிக் ஐலேண்ட்டுக்கு செல்கின்றனர். ஒரு கவ்பாயின் உடலில் நச்சு ஏறியதால், தனது எதிரி மருத்துவருடன் மேக்ஸ் வேலை செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனிடையே, கிறிஸ்துமஸ் மரத்தைத் திருடியதாக டானி மீது மெக்கேரட் குற்றம்சாட்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - வாவாஹி மோவ் உஹானே (தொலைந்த கனவுகள்)
    1 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    இரகசியமாக எஸ்கார்ட்டாக பணிபுரிந்து வந்த ஓர் இளம் பெண்ணின் கொலையைத் துப்பறிவதற்காக, கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பிரைவேட் டிடெக்டிவுடன் ஃபைவ்-0 இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - உவா ஆய்ஹுவே (திருடப்பட்டது)
    8 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    திருடப்பட்ட வேனை தெரியாத்தனமாக ஓட்டிச் செல்லும் ஒரு பயணி கொல்லப்படுகிறார். ஒரு அண்டர்கவர் கோனோவான கோவும் சின்னும் கறுப்புச் சந்தைக்குள் நுழைந்தபோது பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றனர். மேலும், இறால் சமைக்கும் போட்டியில் செப் சாம் சாயை வெல்வதற்கு கமேகொனாவுக்கு பயிற்சியளிக்குமாறு அயர்ன் செப் மசாஹரு மோரிமொடோவை மெக்கேரட் கேட்டுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - போய்னா ஓலே (மறக்க முடியாது)
    15 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒரு அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு நியூரோசர்ஜன் மருத்துவர் தாக்கப்படுகிறார். ஃபைவ்-0 அதனைத் துப்பறியும்போது, 40 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நான்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் குழந்தைகளின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகர உண்மை வெளிவருகிறது. மேலும், மெக்கேரட்டின் மெர்க்குரி மார்க்விஸ் கார் ஒரு மோசமான குற்றவாளியால் திருடப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - லா போ’ஐனா (இறுதி நாள்)
    29 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    வேகமாகப் பரவக்கூடிய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து ஆயுதம் தயாரிப்பதற்காக குற்றவாளிகள் அவரைக் கடத்துகின்றனர். அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஃபைவ்-0 ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - போவேஹிவேஹி (இருட்டடிக்கப்பட்டது)
    5 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒரு மோசமான, மர்மமான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஃபைவ்-0 முயற்சிக்கிறது. அதற்கு இருக்கக்கூடிய ஒரே ஆதாரத்தை கோனோ பாதுகாக்க வேண்டும் மற்றும் அவர்களின் உண்மையான சுயரூபம் தெரியவரும்போது அவள் உயிருக்குப் போராடுகிறாள். மேலும், தனது குடும்பத் தொழிலில் ஊழல் நடந்துள்ளதால், தங்களின் எதிர்காலம் குறித்து ஆடமிடம் கோனோ கவலைப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - எய்மி போனோ (உண்மையைத் தேடி)
    12 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். இறந்து போனதாகக் கருதப்படும் காங்கோ போர்வீரர் ஒவாஹூவில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. அவரைக் கண்டறிய தங்களின் பழைய அறிக்கைகளை ஃபைவ்-0 தூசி தட்டை எடுக்க வேண்டியிருக்கிறது. மேலும், கிரேஸ் யதேச்சையாக செல்போனில் வந்த நபருக்கு உரை செய்தி அனுப்புகிறார். காதலர் தினம் வரவிருக்கும் தருணத்தில் டானி இதனைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - நானாஹூ (தணல்)
    19 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒவாஹூவில் வசிக்கும் தம்பதிகளின் மீது தீ வைக்க முயற்சிக்கும் தொடர் குற்றங்களை செய்யும் நபரைக் கண்டறிவதற்கு கலிபோர்னியா ATF ஏஜென்டின் உதவியை ஃபைவ்-0 நாடுகிறது. இதனிடையே, டானி ஒரு ரொமாண்டிக்கான இடத்துக்கு ஆம்பரை அழைத்துச் செல்கிறார். அவளின் முன்னாள் கணவர் அவர்களைப் பின்தொடர்ந்து, அவளைத் தன்னுடன் கூட்டிச் செல்ல முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - குகா அவாளே (ரோந்து)
    26 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    மேக்கேரட்டும், டானியும் தங்களின் உறவுகளைச் சரிசெய்ய முயல்கின்றனர். அதேசமயத்தில், ஒரு வைரக் கொள்ளையைத் தொடர்ந்து தப்பிச் சென்ற ஒரு பெண்ணின் அபார்ட்மென்ட்டை ரோந்து செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - போனோ கவுலைக் (அனைவரும் நியாயம்)
    5 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    கடந்தகால குற்றங்களுக்காக டானியும் சின்னும் கைது செய்யப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜோவின் உதவியை மெக்கேரட் நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - கஹானியா (நெருக்கமான ஷேவ்)
    12 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    ஒரு கூட்டத்தினரால் இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வரும்போது ஓடெல்லின் முடிவெட்டும் கடையில் வைத்து மெக்கேரட்டும், ஓடெல்லும் அந்த இளைஞரைக் காப்பாற்றுகின்றனர். அந்தக் கூட்டம் கடையைச் சுற்றி முற்றுகையிடுகிறது. மேலும், வீடு புகுந்து செய்யும் தொடர் திருட்டுக்காக ஜெர்ரி தவறாகக் குற்றம்சாட்டப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - ‘இகே ஹனாவு (உள்ளுணர்வு)
    2 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    குரோவர் தனது பழைய நெருங்கிய நண்பரைச் சந்திக்கிறார். அவர் குரோவரிடம் தனது மனைவி மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகவும், அதனைப் பார்த்ததாகவும் கூறுகிறார். ஆனால் குரோவரின் மனதில் அது விபத்து இல்லை என்று தோன்றுகிறது. மேலும், பிரேதப் பரிசோதனை செய்யவேண்டிய உடலுடன் டானியும், டாக்டர் ஷாவும் லிப்டில் மாட்டிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - உவா ஹெலீலீ இ கா ஹோகு (வீழும் நட்சத்திரம்)
    9 ஏப்ரல், 2015
    42நிமி
    TV-14
    எல்விஸ் இம்பெர்ஸனேட்டர்களின் மாநாட்டின் போது ஒரு நடிகர் கொல்லப்பட்டு அவரின் உடல் திருடப்படுகிறது. இறந்து போன நபரின் உடையின் உள்ளே வைரக்கற்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளதை அறிந்து இந்தத் திருட்டை மேற்கொண்ட நபர்களை ஃபைவ்-0 குழுவினர் தேடுகின்றனர். மேலும், தீவில் இருந்து வெளியே செல்ல உதவுமாறு சின்னிடம் கேப்ரியேல் வெயின்கிராப்ட் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - ஹோ’ அமாவ்னோ (நேற்றைய நாளைத் தேடுதல்)
    23 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    ஹோட்டல் சூட்டில் வைத்து ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்த ஹோட்டலில் மூன்று திருமணமான ஆண்கள் தங்கியுள்ளனர். அவர்களின் போதையைத் தணித்து, முந்தைய நாள் இரவில் நடந்தவற்றை அறிவதற்காக ஃபைவ்-0 முயற்சிக்கின்றனர். மேலும், ஒவாஹூவின் தெருக்கில் வைத்து ஒரு பெண் கடத்தப்படுவதை ஜெர்ரி காண்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - மோ’ஓ ஒலேலோ பு (பாரம்பரியத்தைப் பகிர்தல்)
    30 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    தனது அம்மாவின் நினைவாக ஹவாய் தீவைச் சுற்றி கோனோ படகுப் பயணம் சென்றிருக்கும் போது, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலை ஏற்படுகிறது. ஃபைவ்-0 குழுவினர் கோனோவை தேடுகின்றனர். தனது மகனின் உயிருக்கு மிரட்டல் வந்ததால் போதை மருந்து தயாரித்ததாக கூறுகின்ற ஒரு நபரை அவர்கள் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - லுவாபோ’இ (இரை)
    7 மே, 2015
    44நிமி
    TV-14
    ஓர் ஆள்கடத்தல்காரரின் கொலையை ஃபைவ்-0 விசாரிக்கின்றனர். அதன்பின்னர் அவன் ஹவாயில் தஞ்சம் புகுந்துள்ளதாக சந்தேகிக்கின்றனர். ஒரு சிக்கலான விஷயம் குறித்த நீண்டகால இரகசியத்தை டானியிடம் ரேச்சல் கூறுகிறார். மேலும், ஐந்தாவது சீசன் ஃபைனலில் கோனோவின் திருமணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. யாஸுகாவுடன் ஆடம் இன்னும் வேலை செய்வதை நினைத்து மெக்கேரட்டிடம் சின் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - எ மேக் காவுவா (நாம் இறக்கும் வரை)
    7 மே, 2015
    44நிமி
    TV-14
    கோனோ, ஆடமின் திருமணத்தன்று மாலையில், திருடப்பட்ட அணு வெடிகுண்டு தீவில் எங்கேயோ வைக்கப்பட்டுள்ளதாக ஃபைவ்-0 அறிகிறது. அதனை செயலிழக்கச் செய்யும் பொறுப்பு அவர்களிடம் வருகிறது. மேலும், ஐந்தாவது சீசன் ஃபைனலில் கேத்தரின் ஹவாய்க்கு திரும்பியதைக் கண்டு மெக்கேரட் ஆச்சரியப்படுகிறார். ஆடம் மற்றும் யகுசாவின் நீண்டநாள் தொடர்பை சின் எதிர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் கக்கன்ஹெய்ம்பீட்டர் லெங்காவ்
நடித்தவர்கள்
டேனியல் டே கிம்க்ரேஸ் பார்க்அலெக்ஸ் ஓ லாஃப்லின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.