எல் ப்ரெசிடென்தே: கரப்ஷன் கேம்
prime

எல் ப்ரெசிடென்தே: கரப்ஷன் கேம்

சீசன் 1
["பல மொழிகளில்" அசல் ஆடியோ] ஜ்வாவ் அவிலாஞ்ச் என்ற ஜான்-மரி ஃபாஸ்டின் கோடெஃப்ராய்ட் டி அவிலாஞ்ச், கால்பந்து மற்றும் ஃபிஃபா வரலாற்றில் ஊழல் நிறைந்த நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அதிக நகைச்சுவை மற்றும் முரண்பாடுடன், எல் ப்ரெசிடென்தே: பிரேசில், அவிலாஞ்ச் வென்ற, தோற்ற, திருடிய, சூதாடிய, மேலும் இந்த அழகான விளையாட்டை அவர் எப்படி பணங்கொழிக்கும் இயந்திரமாக மாற்றினார் என்பதையும் காட்டுகிறது.
IMDb 7.220228 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - என்னை ஜுவாவ்னு கூப்பிடலாம்

    3 நவம்பர், 2022
    1 ம 2 நிமிடம்
    16+
    அமேசான் செர்ஹியோ ஹாதுவேவை ஃபிஃபாவின் பின்னணியில் உள்ள ஊழலின் மூல கதையைச் சொல்ல அமர்த்துகிறது. ’66 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட பிறகு, ஐரோப்பிய சக்தியை எதிர்த்து, கால்பந்தாட்ட வல்லரசின் உச்சிக்குத் தனது எழுச்சியைத் தொடங்க நட்பு நாடுகளைத் தேடும் ஜான்-மரி அவிலாஞ்சை இப்படித்தான் சந்திக்கிறோம். அதற்கு, ஜான்-மரி, ஜ்வாவாக மாற வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஆப்பிரிக்கா, இந்தோ வந்தேன்

    3 நவம்பர், 2022
    1 ம 1 நிமிடம்
    16+
    வாக்குகளைப் பெற ஐரோப்பியர்களால் கைவிடப்பட்ட நாடுகளுக்குச் செல்ல அவிலாஞ்ச் முடிவெடுக்கிறார். ஆப்பிரிக்கா வழியாக ஒரு சாத்தியமற்ற சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், பெலேவின் ஆதரவு அவருக்குத் தேவைப்படும். இதற்கிடையில், இசபெல், கதையில் ஒரு புதிய கதாபாத்திரமாக மாறிய பிறகு, தனது சொந்த பயணத்தைத் தொடங்குகிறாள். விதி அவளை காஸ்டோர் ஜ ஆண்ட்ராஜ்டன் நெருக்கமாக வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - தேர்தல்

    3 நவம்பர், 2022
    56நிமி
    16+
    ஃபிஃபாவின் தலைவர் தேர்தலின் தீர்க்கமான மணிநேரங்களை அவிலாஞ்ச் எதிர் கொள்கிறர் மற்றும் வாக்குகளுக்கான ஓட்டம் சூடு பிடித்துள்ளது. ஹாதுவே, டாஸ்லர்கள் மற்றும் அடிடாஸ் குடும்பத்தின் வரலாறு, வரவிருக்கும் எதிர்காலத்தில் முக்கிய உறுப்பினர்களை, நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்குச் சூதாட்டத்தின் மீதான ஆர்வம் மீண்டும் வந்த பின்.இசபெல் மற்றும் காஸ்டோருக்கு இடையேயான ஈர்ப்பு வளர்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஐரோப்பாவிற்கு நல்வரவு

    3 நவம்பர், 2022
    57நிமி
    16+
    வாக்கு வரையறுக்கப்படுகிறது: அதிர்ஷ்டத்தால், ஜ்வாவ் வெற்றி பெற்று ஃபிஃபாவின் தலைவராகிறார். அவர் இசபெலுடன் சுவிட்சர்லாந்திற்குச் செல்கிறார், ஆனால் அவள் சூரிக்கிலோ அல்லது ஜ்வாவின் மனைவியாகவோ தன்னை உணரவில்லை. கேசெர், தனது வளர்ச்சித் திட்டங்களில் நிலையான தடையாக இருக்கிறார். பழைய ஐரோப்பிய நடைமுறைகளின் உலகத்தை எதிர்கொண்டு, அவிலாஞ்ச் தனது அதிகாரத்தைப் பலப்படுத்த முயல்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ஆட்டு மந்தையை ஆண்டவர் காக்கட்டும்

    3 நவம்பர், 2022
    55நிமி
    16+
    அர்ஜன்டினாவில், அவிலாஞ்ச் திட்டமிட்ட மாபெரும் உலகக் கோப்பை, ராணுவ அரசின் சதிப்புரட்சியால் ஆபத்தில் உள்ளது. கேசெர் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து, இடமாற்றத்தைத் திட்டமிடுகிறார், மேலும் கோப்பையை யாரும் காப்பீடு செய்யாதிருக்கப் பார்த்துக் கொள்கிறார். சட்டத்திற்கு எதிராகவும் இசபெலுடனான தன் திருமணத்தைப் பணயம் வைத்தும், தலைவராக தன் முதல் உலகக் கோப்பைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - மனிதர்களும் உரிமைகளும்

    3 நவம்பர், 2022
    58நிமி
    16+
    ஃபிஃபா தலைவராக அவிலாஞ்ச் உலகக் கோப்பையை எதிர்கொள்ள, அது குழப்பமாக முடிகிறது. இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான வீடியோ கசிந்து அர்ஜன்டினாவின் ஏற்பாடுகள் பேரழிவாக உள்ளது. அவிலாஞ்சின் திருமணமும் முறிகிறது. அடிடாஸ் உடன்பிறப்புகளின் அழுத்தம் மற்றும் அர்ஜன்டினா சர்வாதிகாரியின் அச்சுறுத்தலால், ஜ்வாவ் போட்டியில் சதியிட்டு, தான் மிகவும் விரும்பும் கால்பந்தை கறைப்படுத்துவாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - நான் ஃபிஃபாவுக்காக வாழ்கிறேன்

    3 நவம்பர், 2022
    54நிமி
    16+
    ஜ்வாவ் புதிய தலைமையகத்தை உருவாக்குகிறார். திடீர் குடும்ப இழப்பு அவரது தருணத்தை மறைக்கிறது. ஜப்பான் ’79 இளைஞர் உலக கோப்பை நடக்கும்போது, ​​அவர் கட்டியெழுப்பிய அனைத்தையும் அழிக்க அச்சுறுத்தும் கட்டுப்பாடு இல்லாத ஒரு சுழலில் மூழ்குகிறார். இசபெல், காஸ்டோரிடமிருந்து பிரிகிறாள். ஹாதுவே தன் படைப்பை காதலிக்கிறார். எல்லாம் சிதைந்து போன நிலையில், கேசெர், ஃபிஃபாவிலிருந்து அவிலாஞ்சை வெளியேற்றத் தயாராகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - ஊழல்னா என்ன?

    3 நவம்பர், 2022
    59நிமி
    16+
    1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையின் போது, ​​கேசெர் மற்றும் காஸ்டோர் கூட்டணி, ஜ்வாவ் ஊழலில் ஈடுபட்டதாக, ஃபேயின் உதவியுடனும், வலுவான ஆதாரங்களுடனும் குற்றம் சாட்டினார்கள். சிக்கிக் கொண்ட ஜ்வாவ் , தலைவராக இருக்க, இசபெலை நம்ப வேண்டியுள்ளது, மேலும் கதை தனக்குச் சாதகமாகச் சொல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
    Prime-இல் சேருங்கள்