Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஈட். ரேஸ். வின்

சீசன் 1
ஈட் ரேஸ் வின். இது, டூர் த ஃபிரான்ஸ் என்ற உலகின் மிகப்பெரிய சைக்கிள் பந்தய பின்னணியில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகும். ஆண்டுதோறும், நடக்கும் இந்த பந்தயத்திற்கு உள்ளேயே, சமையல் ராணி ஹன்னா கிராண்ட், இன்னொரு பந்தயம் நடத்துகிறார். சைக்கிள் பந்தயம் நடக்கும் 21 நாட்களில், பல சிக்கல்களை சமாளித்து திறமையாக சமைப்பது எப்படி என்று ஹன்னா நமக்கு செய்து காட்டுகிறார்.
IMDb 7.120186 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வெற்றிபெற, முதலில் போட்டியில் பங்கேற்கனும்.
    26 ஜூலை, 2018
    31நிமி
    13+
    தலைமை சமையல்காரர் ஹன்னா, அவரது அணியை ''பந்தயத்திற்கு'' தயார்படுத்துகிறார்: 2017ம் ஆண்டு நடந்த டூர் த ஃபிரான்ஸ் சீசனில், அவர் ஆஸ்திரேலியாவின் ஓரிகா-ஸ்காட் அணிக்கு உணவு சமைத்துக் கொடுத்தார். அந்த அணியின் ஸ்போர்ட்ஸ் டைரக்டர் மேட் ஒயிட் மற்றும் அவரது வீரர்கள், அப்போது கடும் வானிலை சவால்களை சந்திக்க நேரிட்டதும் குறிப்பிடத்தக்கது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - கஷ்டப்பட்டேன்... பலன் கிடைத்தது.
    26 ஜூலை, 2018
    27நிமி
    13+
    அடுத்தடுத்து நிகழும் 2 சோதனைகளால், ஓரிகா-ஸ்காட் அணி, பரிசு வெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதிலும், அந்த அணியின் ''ஊழியர்'' ஒருவர் இறந்துவிடுகிறார். அதில் இருந்து, வீரர்கள் மீண்டுவந்து, வெற்றி நோக்கி முன்னேற உதவும் வகையில், சத்தான உணவை ஹன்னா சமைத்து தருகிறார். அதன்பின், தோல்வியை கண்டு அஞ்சாமல், போராடுவதே வெற்றி தரும் என்று, மொத்த அணியினரும் புரிந்துகொள்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - வெற்றிக்கான தாரக மந்திரம்: உணவே உன்னை தீர்மானிக்கிறது
    26 ஜூலை, 2018
    30நிமி
    13+
    ஓரிகா-ஸ்காட் அணி, பரிசு மேடையில் நிற்பதற்கான தங்கள் வாய்ப்பை தக்கவைக்க, பெரும் சவால்களை எதிர்த்து போராட நேரிடுகிறது. அதேசமயம், ஹன்னாவும், அவரது சமையல் குழுவினரும் மத்திய கால நகரமான ட்ராய்ஸ் சென்று, சிறந்த காய்கறிகளை வாங்குகின்றனர். அதன் அருகே உள்ள ஒரு பால்பண்ணை சென்று, தரமான பால்பொருட்களையும் வாங்கி வந்து, சமைத்து, சைக்கிள் வீரர்களுக்கு கண்கவர் விருந்து பரிமாறுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - லட்சியம் நிறைவேறாமல் ஓய்வு இல்லை
    26 ஜூலை, 2018
    29நிமி
    13+
    சைக்கிள் பந்தயத்தின் பாதி கட்டத்தில், மலைப் பகுதிகளில், ஓரிகா-ஸ்காட் அணி வீரர்கள், பலத்த காற்றை எதிர்த்து சைக்கிள் ஓட்ட வேண்டியுள்ளது. அத்துடன், பலர் கீழே விழுந்து காயம்படுகின்றனர். இதற்கிடையே, ஃபிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட, பைரனீஸ் பகுதியில் இருந்து நல்ல தரமான இறைச்சியை ஹன்னா வாங்கி வருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - இந்த நொடியே நான் வீட்டுக்குப் போகனும்
    26 ஜூலை, 2018
    27நிமி
    13+
    ஹன்னாவும், அவரது சமையல் குழுவினரும், இயற்கை சார்ந்த உயிர்-இயக்க சூழல் பண்ணையை கண்டுபிடிக்கின்றனர். அதில், விளையும் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. அதேசமயம், ஓரிகா-ஸ்காட் அணியின் ரோட் கேப்டன், மேத்யூ ஹேமன் பந்தயத்தை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறார். இதனால், அந்த அணிக்கு புது சிக்கல் எழுகிறது. இதை சமாளிக்க, அனைவரும் கருத்து வேறுபாடை மறந்து ஒன்றுசேர்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - இரவு என்ன சாப்பிடலாம்?
    26 ஜூலை, 2018
    25நிமி
    13+
    ஓரிகா-ஸ்காட் அணியும், ஹன்னா மற்றும் குழுவினரும் விடைபெறும் நேரம் இது. அணி வீரர்களுக்கு, இறுதி விடை தரும் நோக்கில், அன்றைய இரவு, ஃபிரெஷ்ஷான சூரை மீன் சமைத்துத் தர ஹன்னா முடிவு செய்கிறார். அந்த மீன்பிடிக்க, கடலுக்குள் அவர் பயணம் போக, மறுபுறம், மேட் ஒயிட் தனது அணியை இறுதிச் சுற்றுக்கு தயார்படுத்துகிறார். அவ்வளவுதான், எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుTürkçe中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
Christof Bove
நடித்தவர்கள்
ஹன்னா கிராண்ட்மேத்யூ ஒயிட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.