எப்பிசோடுகள்
சீ1 எ1 - டால்டோரேவின் அச்சுறுத்தல் பாகம் 1
27 ஜனவரி, 202227நிமிவாக்ஸ் மாகினா என்று அழைக்கப்படும் சாகசக்காரர்களின் மாறுபட்ட குழு, இமான் புறநகரில் உள்ள கிராமங்களை யார் அழிக்கிறார் (அல்லது என்ன அழிக்கிறது) என்பதைக் கண்டறிய மகாராஜா யூரியலால் நியமிக்கப் படுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - டால்டோரேவின் அச்சுறுத்தல் பாகம் 2
27 ஜனவரி, 202228நிமிவாக்ஸ் மாகினா, பேரழிவு தரும் கிராமத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் கொடூரமான குற்றவாளியைப் பற்றி மகாராஜா யூரியலிடம் கூறுவதல்லாமல், அந்த உயிரினத்தை அதன் மறைக்கப்பட்ட குகையில் கண்டுபிடிக்கவும் செய்கின்றனர். இமானின் பாதுகாப்பிற்காக வாக்ஸ் மாகினா சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எழுந்து, கொல்ல சாத்தியமற்றதாகத் தோன்றும் ஒரு மிருகத்துடன் நேருக்கு நேர் மோத வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ராஜ்யங்களின் விருந்து
27 ஜனவரி, 202225நிமிஒரு முறையான இரவு விருந்திற்காக வாக்ஸ் மாகினா அரண்மனைக்கு அழைக்கப்பட, அங்கு பெர்சி தனது கடந்தகால கொலைகாரர்களைச் சந்திக்கிறான்: அது மர்மமான சைலஸ் பிரபு மற்றும் லேடி டிலைலா பிரையர்வுட். பிரையர்வுட்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் போது, ஒரு போர் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பெர்சியின் சித்திரவதைக்கு உள்ளான கடந்த காலம் அவனுக்குள் ஏதோ தீயதை விட்டுச் சென்றதைக் குழு கண்டறிகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - வாயிலில் நிழல்கள்
3 பிப்ரவரி, 202225நிமிமகாராஜா யூரியலின் ராஜ்ய இரவு உணவை அழித்த பின், வாக்ஸ் மாகினா வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். அவர்கள் சலிப்பைத் தடுக்கும் போது, பெர்சியின் இருண்ட வரலாற்றைப் பற்றி மனம்திறக்கும்படி கீலெத் சமாதானப்படுத்த, பைக் தன் தெய்வத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக அஞ்சுகிறாள். இதற்கிடையில், வாக்ஸ் மாகினாவை எதிர்கொள்ள ஒரு புதிய அச்சுறுத்தல் வருகின்றது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - விதியின் பயணம்
3 பிப்ரவரி, 202225நிமிவாக்ஸ் மாகினா பிரையர்வுட்களை எதிர்கொள்ளவும், பெர்சி தனது குடும்ப வீட்டை மீட்டெடுக்க உதவவும் வைட்ஸ்டோனுக்கு செல்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது, துப்புகளை வெளிக்கொணர டிலைலா பிரையர்வுட்டின் மர்மமான வசிய புத்தகத்தை ஸ்கேன்லன் ஆய்வு செய்கிறான். ஆனால் பிரையர்வுட்கள் தங்களது காணாமல் போன புத்தகத்தை மீட்கப் பயங்கரமான அரக்கர்களை அனுப்பும்போது அணியின் முதல் சாலைப் பயணம் தடைப்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - புரட்சியின் தீப்பொறி
3 பிப்ரவரி, 202225நிமிவாக்ஸ் மாகினா வைட்ஸ்டோனின் புனிதத் தலைவியான கீப்பர் யெனெனைக் கண்டுபிடித்தனர். அவர் வளர்ந்து வரும் கிளர்ச்சியைப் பற்றி அவர்களிடம் கூறுகிறார். பிரையர்வுட்களை தோற்கடிக்க, கிளர்ச்சித் தலைவரான ஆர்ச்சிபால்ட் டெஸ்னேயின் உதவி தேவை என்பதை அணி உணர்கிறது. ஆனால் முதலில் அவர்கள் துணிவான ஒரு சிறை உடைப்பை அரங்கேற்றி, பின் பிரையர்வுட்களின் கொடூரமான ஜெயிலர் கெரியன் ஸ்டோன்ஃபெல்லை எதிர்கொள்ள வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - ஸ்கேன்போ
10 பிப்ரவரி, 202225நிமிபல ஆண்டுகள் முன் பெர்சி செய்த பழிவாங்கும் ஒப்பந்தத்தைப் பற்றி வாக்ஸ் மாகினா மேலும் கண்டுபிடிக்க, கீலெத் சன் ட்ரீயோடு மந்திர சக்தியால் இணைய முயல்கிறாள். அதன் வலியும், வைட்ஸ்டோன் நகருக்கு கீழே ஒரு தீய சக்தியையும் அவள் உணர்கிறாள். குறைத்து மதிப்பிடப்படுவதாக எண்ணும் ஸ்கேன்லன், பெர்சியின் சகோதரி கசாண்ட்ராவை வாக்ஸ் மாகினா மீட்க, டியூக் வெட்மயரின் மாளிகைக்குள் ஊடுருவி அவர்கள் கவனத்தை சிதற முன்வருகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - வெள்ளி நாக்கு
10 பிப்ரவரி, 202225நிமிவாக்ஸ் மாகினா தீய பேராசிரியன் ஆண்டர்ஸ் மற்றும் அவனது தனித்துவ மாயாஜால திறன்களுடன் போரிடும் அதே சமயம் டிலைலா பிரையர்வுட் மந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு பேய் படையை, நம் ஹீரோக்களுக்கு எதிராக எழச் செய்கிறாள். இதற்கிடையில், பைக் தனது தெய்வத்துடன் மீண்டும் இணைவதற்கான வழியைத் தேடுகிறாள், அது தன் உயிரே பணயமாக இருந்தாலும் கூட.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - எலும்பின் அலை
10 பிப்ரவரி, 202225நிமிடிலைலா கிசுகிசுக்கப்படுவதோடு தன் ஒப்பந்தத்தை வெளிப்படுத்த, பிரையர்வுட்களின் தீய கடந்த காலம் நிகழ்காலத்தோடு இணைகிறது. இரத்தம் தோய்ந்த வைட்ஸ்டோன் தெருக்களில், வாக்ஸ் மாகினா, சாவைக் கடந்த கூட்டத்தோடு தங்கள் உயிர்களைக் காக்கப் போரிடுகின்றனர். ஆனால், அனைத்தும் தொலைந்து போனதாகத் தோன்றும் போது, எதிர்பாராத ஒரு மூலத்திலிருந்து அணிக்கு உதவி கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - வஞ்சனையின் ஆழம்
17 பிப்ரவரி, 202225நிமிபெர்சி தன் பழைய எதிரியான டாக்டர் ஆன்னா ரிப்லியை எதிர்கொண்ட பிறகு, ஒரு பலவீனமான கூட்டாண்மை போடப்படுகிறது. அவளை நம்ப முடியாது என்று பெர்சியின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், வாக்ஸ் மாகினா, ரிப்லியை உடன் அழைத்து வருகின்றனர். அவள் கோட்டையின் கீழ் உள்ள பொறிகளின் வழியாக அவர்களை வழிநடத்துகிறாள், ஆனால் விரைவில் அந்த அணி அவர்களுள் ஒருவராலேயே வஞ்சிக்கப் படுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ11 - சிகுராட்டில் கிசுகிசுக்கிறது
17 பிப்ரவரி, 202224நிமிவாக்ஸ் மாகினா சிகுராட்டின் மேல் உள்ள பிரையர்வுட்களுக்கு எதிராக இறுதித் தாக்குதலை நடத்துகின்றனர். டிலைலாவின் இருண்ட மாயாஜாலத்தையும் சைலஸின் காட்டேரி வலிமையையும் எதிர்த்துப் போராடி, தங்கள் உடன்பிறப்புகளைக் காப்பாற்றக் கவலையில் உள்ள வெக்ஸ் மற்றும் நிலை தடுமாறிய பெர்சி முயல்கின்றனர். ஆனால் பிரையர்வுட்களின் இரகசிய சடங்குகள் முடிவடையும் போது, அவர்களின் சிறந்த முயற்சிகள் கூட போதுமானதாக இருக்காது.Prime-இல் சேருங்கள்சீ1 எ12 - உள்ளே குடியிருக்கும் தீவினை
17 பிப்ரவரி, 202227நிமிவாக்ஸ் மாகினா பிரையர்வுட்களின் தீய சடங்கை நிறுத்தினர், ஆனால் பெருஞ்செலவில். தங்களில் ஒருவரைக் காப்பாற்றுவதற்காகக் குழு சிகுராட்டில் இருந்து தப்பி ஓடும்போது, பெர்சி அவர்களது கைதியான டிலைலா பிரையர்வுட்டை பழிவாங்க ஆர்வமாக இருக்கிறான். ஆனால் வெறுப்பையும் பழிவாங்கலையும் கைவிடுமாறு வெக்ஸ் பெர்சியிடம் கெஞ்சும்போது, அவன் இறுதியாக தனக்குள் இருக்கும் இருளை எதிர்கொள்ள வேண்டும்.Prime-இல் சேருங்கள்