மிஸ்கினா லா புவர்
prime

மிஸ்கினா லா புவர்

முப்பது வயதில், வேலையின்றி, வசிக்க இடமின்றி, காதலனின்றி, கடுமையான கிட்டப்பார்வை கொண்ட ஃபாராவின் கதை. பாட்டி, அம்மா, மற்றும் சகோதரி 24/7 நேரமும் படுத்திக் கொண்டிருக்க, தன் கதைகளைத் தானே நம்புவதா அல்லது உண்மையை இறுதியாக எதிர்கொள்வதா என்பதற்கு இடையே தீர்மானிக்க வேண்டிய கட்டம். வாழ்க்கை தொடர்ந்து முகத்தில் அறைந்தால், ​​பாவப்பட்ட ஜீவனாக இருப்பதை நிறுத்தி கட்டுப்பாட்டைக் கையிலெடுக்க வேண்டும்.
IMDb 6.220228 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வாழ்த்துக்கள்

    29 செப்டம்பர், 2022
    33நிமி
    16+
    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட ஃபாரா, தனது சகோதரி சஃபியா மற்றும் அவரது மாப்பிள்ளை மேக்ஸிம் ஆகியோரின் திருமணத்தை ஏற்பாடு செய்வதில் தன்னால் இயன்றவரைப் பங்களிக்கிறாள். இதற்கிடையில், அவர்களின் பாட்டி ரானியா, விழாவில் கலந்து கொள்ள விருப்பமின்றி சமையலறையை விட்டு வெளியேற மறுக்கிறார். ஒரு குடும்ப நாடகத்தைத் தவிர்ப்பதற்கு, ஃபாரா, என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பசியை சமாளித்தல்

    29 செப்டம்பர், 2022
    24நிமி
    13+
    மேக்ஸிம் திருமணத்திற்குப் பின் தன் புதிய ஆன்மீகப் பாதையை முழுமையாகத் தழுவியிருந்தாலும், சஃபியா தன் சகோதரி மீது மிகவும் கோபமாக இருக்கிறாள். வீட்டிற்குத் திரும்ப விரும்பினால், செய்த சேதத்தைச் சரி செய்ய வேண்டும் என ஃபாராவுக்குத் தெரியும். ஆனால், இதை எதிர்கொள்வது, குறிப்பாக, ரமலான் மத்தியில் ஒருமுறையாவது ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கும் இவ்வேளையில் தனக்கும் மீறிய கடுமையான பணியாகும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - கிவி நோய்க்குறி

    29 செப்டம்பர், 2022
    24நிமி
    13+
    நசீமுக்கும் ஷெரிஃபாவுக்கும் இடையில் விஷயங்கள் தீவிரமாகி வருகின்றன, இதனால் ஃபாரா மேலும் மேலும் பொறாமைப்படுகிறாள். மரியம் தனது உணர்வுகளை நசீமிடம் வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகிறாள், ஏனென்றால் அவள் இன்னும் தனக்கு இருக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆனால் முதலில், அவள் டேமியனுடன் ஜங்க்யார்டுக்கு சென்று தனது உணவு டிரக்கை மீட்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஒன்று இரண்டு மூன்று

    29 செப்டம்பர், 2022
    28நிமி
    13+
    மாலையில் பிரான்ஸ்-அல்ஜீரியா போட்டிக்காக நண்பர்கள் குழுவோடு சேர ஃபாரா தயங்குகிறாள். 1975 இல் இளம் பெண்ணாக நாம் காணும் நஜெத் தன் மகள்களின் தந்தையான கதேரை சந்தித்ததை, இந்நிகழ்வு அவளுக்கு நினைவூட்டுகிறது. கடந்த காலத்தைத் தோண்டி எடுத்து நிகழ்காலத்தில் என்ன தவறு நடந்தது என்பதை நன்கு புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - கோழியா, முட்டையா

    29 செப்டம்பர், 2022
    27நிமி
    13+
    நள்ளிரவில், டேமியன் சமையலறை தரையில் ரானியா படுத்திருப்பதைக் காண்கிறான். மருத்துவமனையில் இருக்கையில் அவரை அனைவரும் பார்க்க வர, அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைத் தீர்க்க அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஃபாராவுக்கு, இது உண்மையின் தருணமாக, பிரிந்த தன் தந்தையைத் தேடிச் செல்லும் முடிவைத் தூண்டுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - பிரகாசமான ஓரான்

    29 செப்டம்பர், 2022
    28நிமி
    16+
    ரானியாவின் பாரம்பரிய ரொட்டி பாத்திரத்துக்கான மாற்றைக் கண்டுபிடிக்க, ஃபாரா, சஃபியா ஓரானில் இரு நாட்கள் இருக்கிறார்கள். ஃபாரா தன் அல்ஜீரிய குடும்பத்தையும் நாட்டையும் அறிந்து கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறாள். இது சஃபியாவை எரிச்சலூட்டுகிறது, அவள் அடுத்த விமானத்தில் திரும்புவதற்குக் காத்திருக்கிறாள். ஆனால் அவர்கள், உள்ளூர் வழிகாட்டியாகும் ஆரிஸை சந்திக்கையில் விஷயங்கள் திருப்பம் எடுக்கக்கூடும்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - அமெஸீக் மக்கள்

    29 செப்டம்பர், 2022
    34நிமி
    16+
    ரானியாவின் ரொட்டி பாத்திரத்தை ஒத்தவை கபிலியா வழியாகச் சென்றால் கிடைக்கும் என ஆரிஸ் உறுதியளித்ததாக சஃபியா அவனோட போக ஃபாராவை சம்மதிக்க வைக்கிறாள். இயற்கைக் காட்சிகள் பிரமிக்க வைத்தாலும், சஃபியா தங்களது கபிலி வழிகாட்டியால் குழம்புகிறாள். ஆனால் அந்த இரண்டு சகோதரிகளிடம் அவனது நோக்கம் என்ன?
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - இடிர் பூனை

    29 செப்டம்பர், 2022
    34நிமி
    13+
    ஃபாராவும் சஃபியாவும் ஏற்கனவே பிரான்சில் தரையிறங்கும் போது பரிதாப நிலையில் உள்ளனர், உடனடியாக ரானியாவின் இறுதிச் சடங்கை எதிர்கொள்கின்றனர். முழுக் குடும்பமும் ஆலாஉய் வீட்டில் ஒன்று கூடுகிறது, அங்கு ஃபாரா எல்லா பதட்டங்களுக்கும் மையமாகத் தன்னைக் காண்கிறாள். அவளது பாட்டியின் நினைவாக, அவள் தனது வாழ்க்கையில் முதல் முறையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்