

க்ரொமன்யான்: த நைட் ஆஃப் த ஃபயர்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஒன்று.
7 நவம்பர், 202438நிமிஅது 2008. 22 வயதான மலேனா, தன் பயங்கரமான கடந்த காலத்தை ஒரு செய்தி நினைவுபடுத்தும் வரை, தன் வீட்டைவிட்டு தூரத்திலுள்ள நகரத்தில் தனியாக வாழ்கிறாள். 2004-ல் அவள் க்ரொமன்யான் என்ற இடத்தில் ராக் இசைநிகழ்ச்சிக்கு போனாள். தீ விபத்து ஏற்பட்டு, 194 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். தான் உயிர் பிழைத்ததால் குற்றவுணர்வோடு இருக்கும் அவளை அந்தச் செய்தி பாதித்து, தன் வாழ்க்கையையே மாற்றும் முடிவை அவளை எடுக்க வைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - இரண்டு.
7 நவம்பர், 202440நிமிஅது 2008. க்ரொமன்யான் வழக்கில் சாட்சி சொல்லும் கடினமான முடிவை மலேனா எடுக்கிறாள், கச்சேரியின்போது தொலைத்த ஒரு முக்கியமான பொருளோடு மறுபடியும் இணைகிறாள். அந்த உணர்ச்சிகரமான அதிர்ச்சி, தீ விபத்திற்கு முந்தைய நாட்களின் நினைவுகளை கிளறுகிறது. 2004-ல், அவளது நண்பர்களின் இசைக்குழுவான லோஸ் பேசிஸ் சீனோஸிற்கு கிட்டாரிஸ்டாக ஆடிஷன் செல்கிறாள், கொடுத்திருக்கக் கூடாத முத்தத்தின் குற்றவுணர்ச்சியில் அல்லாடுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - மூன்று.
7 நவம்பர், 202443நிமிஉணர்ச்சிகரமான மன உளைச்சலான ஒரு சந்திப்பு ஏற்படுவதால், மலேனா தனது பழைய பேக்பேக்கைத் திறக்கிறாள். அதில் அவள் கண்ட பொருட்கள், நடந்த மூன்று கயஹெரோஸ் நிகழ்ச்சிகளுள், முதலாவது நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தின, அங்கே தடை செய்யப்பட்ட காதலை மீண்டும் பற்றிக்கொள்ளும் பதட்டத்தை உணர்கிறாள். இதற்கிடையில், பிச்சிட்டோ ஹாவியரை சந்திக்கிறான், ஆபத்திற்கான முதல் அறிகுறி க்ரொமன்யானில் தென்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - நான்கு.
7 நவம்பர், 202438நிமிஅது 2008. மலேனா, வியா செலீனா மற்றும் அதன் தெருக்களைச் சுற்றி வரும்போது பார்த்த சுவரோவியம், இரண்டாவது கயஹெரோஸ் நிகழ்ச்சிக்கு சில மணிநேரம் முன் நடந்த நினைவுகளைத் தூண்டுகிறது. 2004-ல், நிகோவும் லூகாஸும் சண்டை போடுகிறார்கள், லூலிக்கு எதிர்பாராத செய்தி கிடைக்கிறது, ஹாவியருடன் பிச்சிட்டோவுக்கு அசௌகரியமான சம்பவம் நடக்கிறது. நிகழ்காலத்தில், நிகோவை பற்றிய ஒரு தகவலை ஒரு பழைய நண்பர் மலேனாவுக்கு கொடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - ஐந்து.
7 நவம்பர், 202438நிமிடிசம்பர் 30, 2004 அன்று இசை நிகழ்ச்சி முன், அனைவரும் அந்த கடைசி தருணத்தில் மகிழ்ந்திருந்தார்கள். மக்கள் க்ரொமன்யானுக்கு உள்ளே சென்றதும், தீப்பிடிக்கிறது, 194 இளைஞர்கள் இறக்கிறார்கள், ராக் இசை ரசிகர்களின் ஒரு தலைமுறையே சிதைந்துவிடுகிறது. மேலும், இந்தக் கொடுமை நடப்பதற்குச் சில நொடிகளுக்கு முன் வெளிவந்த ஒரு விஷயம் நிகோ, மலேனா, லூகாஸ் ஆகியோரை நிலைகுலயச் செய்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஆறு.
7 நவம்பர், 202436நிமிக்ரொமன்யானில் இருந்த இளைஞர்களின் பெற்றோருக்கு தீ விபத்து பற்றிய செய்தி தெரியவருகிறது, தங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க தீவிரமாக முயல்கின்றனர். அடுத்த சில மணிநேரங்கள், சில நாட்களில் மீண்டவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களின் இறப்பை எதிர்கொள்ள நேரிடும். உணர்ச்சி மிகுதியால், மலேனா ரொசாரியோ நகரத்திற்கு தப்பிக்கிறாள், க்ரொமன்யான் வழக்கில் கார்லோஸ் பீந்தர் தன்னை நீதித்துறையின் பிம்பமாக கட்டமைக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - ஏழு.
7 நவம்பர், 202441நிமி2008-ல், க்ரொமன்யான் வழக்கு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன், அரசியல், பெருநிறுவனப் பொறுப்புகள் பற்றிய விவாதம் திரும்பத் தொடங்கியது. மலேனா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறாள், நிகோ தலைமையேற்று நடத்தும் உயிர்பிழைத்தவர்களின் அமைப்பில் சேர்கிறாள், நிகோவை மறுபடியும் இசையில் ஆர்வம்கொள்ள ஊக்குவிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - எட்டு.
7 நவம்பர், 202433நிமிமலேனா தன் வாழ்வில் முக்கிய முடிவை எடுக்கத் துணிகிறாள். ரொசாரியோவிற்குத் திரும்பும் முன், நிகோவுடனான சந்திப்பு, தனது திட்டங்களைப் பற்றி அவளை யோசிக்க வைக்கிறது. முதன்முறையாக, எதிர்காலத்தில் தனக்கும் உயிர்பிழைத்த தன் நண்பர்களுக்குமான நம்பிக்கை ஒளிக்கீற்றைப் பார்க்கிறாள்.Prime-இல் சேருங்கள்