வதந்தி
prime

வதந்தி

சீசன் 1
புத்திபூர்வமான காவல்துறை அதிகாரியான விவேக்,வசீகரமான இளம் பெண் வெலோனியின் கொலை வழக்கு விசாரணையில் பொறுப்பேற்கிறார். நேர்மையற்ற மற்றும் பரபரப்பான ஊடகங்கள் வெலோனியின் தனித்தன்மையை மீட்கமுடியாத அளவுக்கு களங்கப்படுத்துவதால், விவேக் தன்னிடம் இருக்கும் பாதி உண்மைகளையும் குழப்பமான ஆதாரங்களையும் கொண்டு இவ்வழக்கை முடிக்க வேண்டும். இத்தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கியுள்ளார்,புஷ்கர் & காயத்ரி தயாரித்துள்ளனர்.
IMDb 8.020228 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி டெட் ஸ்டார்

    1 டிசம்பர், 2022
    46நிமி
    16+
    ஒரு இளம்பெண்ணின் பிணம்,பிரபலமான ஒரு திரைப்பட நாயகியென அடையாளம் காணப்படுகிற நிலையில் அந்த செய்தி பெரும் விளம்பரத்தைப் பெறுகிறது.கடந்த காலத்தில்,  வசீகரமான இளம் பெண், வெலோனி, அவளது ரகசிய நண்பனான டோனி மற்றும் அவரது பொறாமை கொண்ட வருங்கால கணவரான விக்னேஷ் ஆகியோருக்கு இடையே அவளது வாழ்வின் விருப்பங்கள் சிதைவுக்குள்ளாகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - விவேக் டேக்ஸ் சார்ஜ்

    1 டிசம்பர், 2022
    53நிமி
    13+
    வழக்கில் எஸ்ஐ விவேக் நியமிக்கப் பட்டதால் கொலை வழக்கு விசாரணை புதிய வேகமெடுக்கிறது. டோனி மற்றும் விக்னேஷை சந்தேகப்படும் விவேக் ஒத்தப்பாறை எனும் இடத்தை கொலையுடன் இணைத்து ஒரு வயதான பெண்மணியை விசாரணை செய்கிறார். கடந்த காலத்தில்,நாவலாசிரியர் கீ.செபாஸ்டின் வெலோனியின் அம்மா நடத்தும் ஏஞ்சல் விடுதிக்கு செல்கிறார்.வெலோனி அவரை உபசரிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பிறதர்ஸ் ன் க்ரைம்

    1 டிசம்பர், 2022
    51நிமி
    13+
    பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் பால்ராஜ்,வெலோனியின் கொலையில் அந்த மூதாட்டியின் மூன்று மகன்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறார்.இதனால் விவேக் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். விக்னேஷின் போன் பதிவுகள் மற்றும் வெலோனியின் நண்பர்களுடனான விசாரணையின் அடிப்படையில் மீண்டும் விக்னேஷ் மீதே சந்தேகம் படிகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - க்லோஸ்டு பட் அன்ரிசால்வ்டு

    1 டிசம்பர், 2022
    38நிமி
    13+
    காவல்துறையினர் விக்னேஷ் மீது கொலைக் குற்றத்தை பதிவு செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவருகின்றனர்.அவர்களின் இந்த அவசர மூடிவு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பாக மாறுகின்றன.இதனால் சமாதானமடையாமல் பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத்தர விரும்பும் விவேக் விடுதியின் உதவியாளரான ஜோன்ஸ் பற்றிய விபரங்களை அலசுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - இன்டலெக்டுயள் கில்லர்

    1 டிசம்பர், 2022
    43நிமி
    13+
    தேவாலயத்தின் வெளியே  வெலோனி  நல்ல உயரமுள்ள கட்டுமஸ்தான மனிதனை  சந்தித்ததைப் பற்றி,ரூபி விவேக்கிடம் கூறுகிறாள். கீ.செபாஸ்டின் விவேக்கை நேராகச்  சந்தித்து வழக்கை தீர விசாரித்து வெலோனியின் வாழ்வில் படிந்துள்ள அவதூறைக் களையும்படி தாழ்மையாய் வேண்டுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஃபிரம் பேட் டு வோர்ஸ்

    1 டிசம்பர், 2022
    51நிமி
    16+
    ஒத்தப்பாறையிலுள்ள மூதாட்டியின் வாக்குமூலம் மீண்டும் மூன்று சகோதரர்களையே அடையாளம் காட்டுகிறது. வெலோனியை ஒரு வக்கிர நிலையில் வைக்கிறது அவளது குழப்பமான கதை. ஒரு புதிய சந்தேகத்துக்குறிய நபராக, உயரமுள்ள கட்டுமஸ்த்தான ஒரு மனிதன் புலப்படுகிறான். அதனடிப்படையில் விவேக் மூன்று சகோதரர்களையும் பிடிக்க அதிகம் இழக்க வேண்டியுள்ளது. வெலோனியின் அவதூறான சித்திரம் மீண்டும் பொது வெளியில் அதீத கவனம் பெறுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ஃபிக்டியஸ் ஃபாக்ட்

    1 டிசம்பர், 2022
    50நிமி
    16+
    கீ.செபாஸ்டின், வெலோனியின் கரைபடிந்த சித்திரத்தை மாற்றி அழகூட்ட, வெலோனியின் வாழ்க்கை புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். அவளுடைய குழந்தைப் பருவத்திலிருந்து அவள் ஒரு கட்டுமஸ்த்தான மனிதன் பிடியில் விழுவது வரையிலும் விவரிக்கிறது. அவர் அந்த மனிதனை கொலைகாரன் என்று அடையாளம் காட்டுவதால் அவரது வாசகர்கள் அந்நூலை வாங்குகிறார்கள். மூன்று சகோதரர்கள் வளன் குறித்து கொடுத்த வழிகாட்டுதலில் விவேக் வழக்கை தொடர்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - தி வதந்தி கன்ட்னியுஸ்

    1 டிசம்பர், 2022
    1 ம 2 நிமிடம்
    16+
    வளனை எந்த ஆதாரமும் கொலையுடன் இணைக்கவில்லை என்றாலும், விவேக் தனது உள்ளுணர்வை பின்பற்றி வளனை தொடர்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வழக்கை கைவிட முடிவு செய்கிறார். ஒரு வாய்ப்பாகத் துலங்கும் துப்பு விவேக்கின் மனதை ஒரு நிலையின் வெளிப்பாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் வெலோனியின் பாரம்பரிய மாண்பைக் காப்பாற்ற மிகவும் தாமதமாகிவிட்டதா?
    Prime-இல் சேருங்கள்