Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
GOLDEN GLOBES® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸ்

சீசன் 1
1977ல் டெய்ஸி ஜோன்ஸ் அண்ட் த சிக்ஸ் உலகின் உச்சியில் இருந்தனர். டெய்ஸி, பில்லி முன் செல்ல, இந்த பேண்ட் வளர்ந்து புகழடைந்தது. சிகாகோவின் சோல்ஜர் ஃபீல்டில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் வெளியேறினர். இப்போது, பல பத்தாண்டுகளுக்கு பிறகு, இந்த பேண்ட் உறுப்பினர்கள் கடைசியில் உண்மையை வெளியிட ஒப்பு கொண்டுள்ளனர். புகழின் உச்சியில் இருந்த ஒரு பேண்ட் உள்ளுக்குள்ளே வெடித்து சிதறியதை சொல்லும் கதை இது.
IMDb 8.1202310 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ட்ராக் 1: கம் அண்ட் கெட் இட்
    2 மார்ச், 2023
    47நிமி
    16+
    திருப்தியடையாத இளம்பெண் டெய்ஸி, சன்செட் ஸ்ட்ரிப் ராக் அமைப்பில் அர்த்தத்தை காண்கிறாள். புறநகர் பென்சில்வேனியாவில், தங்களின் சுற்றுச்சூழலிலிருந்து தப்பிக்க பில்லி தன் சகோதரன் க்ரஹாம், மற்றும் நண்பர்கள் வாரென், எட்டீ ஒரு பேண்டை தொடங்குகின்றனர். பில்லி-டெய்ஸி சந்திப்பில், அவளுடைய திறமையும் அவனுடைய லட்சியமும் இணைந்து அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற போகிறது, அது நல்லதோ கெட்டதோ தெரியாது. இது தான் நடந்தது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ட்ராக் 2: ஐ'ல் டேக் யூ தேர்
    2 மார்ச், 2023
    51நிமி
    16+
    தன் குரல் கிடைக்கப் பெற்றதும், டெய்ஸி தன் நெருங்கிய தோழி சைமன் மற்றும் தயாரிப்பாளர் டெட்டி ப்ரைஸின் வழிகாட்டுதலுடன் எல்ஏ இசைச் சூழலில் வலம் வருகிறாள். எல்ஏவில் டன் சகோதரர்கள், கீபோர்டிஸ்ட் கேரென் சிர்கோவுடன் இணைந்து தங்களுக்கான சவால்களை எதிர்கொள்கின்றனர். டெட்டியுடன் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து, பில்லியின் தீய பழக்கங்கள் அவனுடைய திறமையை குலைக்க முற்படுவதைக் கண்டு அந்த பேண்ட் வருந்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ட்ராக் 3: சம்ஒன் சேவ்ட் மை லைஃப் டுநைட்
    2 மார்ச், 2023
    49நிமி
    16+
    தெளிவு பெற்ற பில்லி தன் கலையார்வத்தையும் குடும்ப பொறுப்புகளையும் சமமாக கையாள முயற்சிக்கும் நேரத்தில், பேண்டை சேர்ந்த மற்றவர்கள் ஒரு மோசமான டூரில் இருந்து மீண்டு வருகிறார்கள். அதே நேரத்தில், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இசையமைக்க முடியாமல் டெய்ஸி திணறுகிறாள். பில்லி புதிய பாடல் எழுதுகிறான், அதைக் கேட்ட டெட்டி, இரண்டு பாடலாசிரியர்களும் இணைப்பது தான் பிரச்னைக்கு தீர்வு என்பதை உணர்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ட்ராக் 4: ஐ சா த லைட்
    9 மார்ச், 2023
    51நிமி
    16+
    டெய்ஸி இணைந்து பின் கிடைத்த வெற்றியின் மூலமாக, த சிக்ஸுக்கு அடைய நினைத்த வாழ்க்கை கிடைக்கிறது. இந்த வெற்றி, இரு பாடலாசிரியர்களுக்கு இடையே இருந்த விரிசலை சரி செய்வதற்கு பதிலாக, அதிகப்படுத்துகிறது. கமிலா தலையிட்டு அமைதி நிலைநாட்டுகிறாள். கேன்யன் ஹவுஸ் பார்ட்டியில் கேரனிடம் காதலை சொல்வதா வேண்டாமா என்று க்ரஹாம் தவிக்கிறான், ஒரு தவறான செய்கையால் பேண்டின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்று நினைக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ட்ராக் 5: ஃபையர்
    9 மார்ச், 2023
    49நிமி
    16+
    புதிதாக கிடைத்த புகழ்யை தொடர்ந்து, டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸ், தங்களுடைய முதல் ஆல்பத்தை பதிவு செய்ய தயாராகின்றனர். ஆனால், பில்லியும் டெய்ஸியும் ஒருவர் மற்றவரது படைப்பை பயன்படுத்த விரும்பாததால், புதிதாக ஒன்றை எழுதத் தொடங்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. எதிர்பார்த்ததை விட இது பெரிய சவாலாக மாறியது. அதே நேரத்தில், ஒரு பீச் ட்ரிப்பில், க்ரஹாமின் ஒரு புதிய முகத்தை பார்க்கிறாள் கேரன்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ட்ராக் 6: வாட்எவர் கெட்ஸ் யு த்ரூ த நைட்
    9 மார்ச், 2023
    49நிமி
    16+
    தங்களின் முன்னோடி ஆல்பமான "அரோரா"வை பதிவு செய்கிறது, பில்லி மற்றும் டெய்ஸிக்கும் இடையில் உள்ள சிக்கலான வெற்றிகரமான கூட்டுமுயற்சி அதன் மையமாக உள்ளது. தொழில் சார்ந்த உறவு தீவிரமாகும் வேளையில், அவர்களின் தனிப்பட்ட உறவு முழுமையாக வெடித்து சிதறும் அபாயம் ஏற்படுவதால், டெய்ஸி உணர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அதே நேரத்தில், கமிலாவின் மனதில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - ட்ராக் 7: ஷி'ஸ் கான்
    16 மார்ச், 2023
    47நிமி
    16+
    பெர்னி உடன் தனக்கு ஒரு ஆழமான உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில், நியூ யார்க் நகரத்தில் புதிதாய் தோன்றிய டிஸ்கோ சூழலில் தன் திறமையை வெளிப்படுத்தும் சைமன் தன்னுடைய சுய அடையாளத்தை புரிந்து கொள்ள போராடுகிறாள். டெய்ஸிக்கு பிரச்னை என்று ஒரு தந்தி மூலமாக தெரிய வந்ததும், தன் வேலையை அப்படியே விட்டு விட்டு அவளை காப்பாற்ற செல்கிறாள். ஆனால் அங்கே எதிர்பாராத ஒரு காட்சியை காண்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ட்ராக் 8: லுக்ஸ் லைக் வி மேட் இட்
    16 மார்ச், 2023
    46நிமி
    16+
    டெய்ஸி மீண்டும் இணைந்ததும், அரோரா பயணத்தை தொடங்கும் இந்த பேண்ட் வெகு விரைவாக சூப்பர்ஸ்டார் நிலைக்கு உயர்ந்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பில்லிக்கும் டெய்ஸிக்கும் இடையேயான உறவு எப்போதும் இல்லாத பதற்ற நிலையை அடைந்திருக்கும் நிலையில், பில்லியின் ஏமாற்றம் பொங்கி வழிகிறது; தன்னை தானே அழித்துக் கொள்ளும் டெய்ஸியின் பழக்கங்கள் சோகத்தில் முடிகிறது. அதே நேரத்தில் கேரன் க்ரஹாமின் ரகசியம் வெளியாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - ட்ராக் 9: ஃபீல்ஸ் லைக் த ஃபர்ஸ்ட் டைம்
    23 மார்ச், 2023
    48நிமி
    16+
    எஸ்என்எல் நிகழ்ச்சியில் பாட முடியாமல் கஷ்டப்படும் டெய்ஸி, எதிர்பாராத நபரிடமிருந்து ஆறுதலும் பாதுகாப்பும் பெறுகிறாள். வெற்றியுடன் சொந்த ஊரான பிட்ஸ்பர்க்குக்கு திரும்பும் பேண்டுக்கு ஒரு பெரும் வரவேற்பளிக்கப்படுகிறது. குழுவினருக்கிடையே ஏற்பட்டிருக்கும் விரோதம் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. அதே நேரத்தில், கேரன் எடுக்க வேண்டிய ஒரு முடிவால், க்ரஹாம்-கேரன் காதலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ1 எ10 - ட்ராக் 10: ராக்'ன்' ரோல் சூய்சைட்
    23 மார்ச், 2023
    1 ம 6 நிமிடம்
    16+
    சிகாகோ, இல்லினாயின் சோல்ஜர் ஃபீல்டில் அத்தனை டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்த ஒரு கூட்டத்தின் முன்னிலையில் டெய்ஸி ஜோன்ஸ் & த சிக்ஸ் தங்களின் கடைசி நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அந்த முக்கியமான நாளால் ஏற்பட்ட பின்விளைவுகள் அவர்களுடைய வாழ்வை நிரந்தரமாக மாற்றியதைப் பற்றிய கதை இது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishไทยRomânăहिन्दीMagyarالعربيةTiếng Việtಕನ್ನಡעבריתČeštinaBahasa MelayuCatalàTürkçeIndonesiaPortuguês (Brasil)తెలుగుItalianoFilipinoFrançais (Canada)Português (Portugal)മലയാളംEspañol (España)日本語DeutschΕλληνικάEspañol (Latinoamérica)NederlandsPolskiFrançais (France)
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜேம்ஸ் போன்ஸோல்ட்ந்சிங்கா ஸ்டீவர்ட்வில் க்ரஹாம்
தயாரிப்பாளர்கள்
ஸ்காட் ந்யூஸ்டாட்டர்மைக்கேல் ஹெச். வெபர்ரீஸ் விதர்ஸ்பூன்லாரென் ந்யூஸ்டாட்டர்வில் க்ரஹாம்ப்ராட் மென்டெல்சோன்ஜேம்ஸ் போன்ஸோல்டஷார்மெய்ன் டிக்ராட்டெசூசன் காய்ன்லிஸ் கோஜென்னி க்ளெய்ன்மைக்கேல் நெல்சன்ந்சிங்கா ஸ்டீவர்ட்ஆஷ்லீ ஸ்ட்ரம்வாஸர்ஜுடலினா நீராஹாரிஸ் டனோஅமாண்டா கே ப்ரைஸ்டெய்லர் ஜென்கின்ஸ் ரீட்ஜோஸி க்ரேவன்ஸ்டேசி ட்ராப்ப்ளேக் மில்ஸ்
நடித்தவர்கள்
ரைலி கியோசாம் க்ளாஃப்ளின்கேமிலா மொரோன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.