


எப்பிசோடுகள்
சீ1 எ1 - மீட்பு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 201959நிமிவிளையாட்டின் மீட்கும் திறனை, கால்பந்தின் மூலம் சாத்தியமான நம்பற்கரிய புத்துயிர்வை, உலகின் மற்ற ரசிகர்களை பிரதிபலிப்பதாகத் தோன்றும் ருவாண்டன் ரெட்ஸ் எனும் லிவர்பூலின் அதீத ரசிகர்களின் கதையினூடே விரித்துரைக்கிறது. ஆனால், அவர்கள் அவரின் புன்னகைக்குப் பின், இனப் படுகொலையின் கலங்க வைக்கும் வேதனைகளும், இழப்பும் மறைந்துள்ளன. கால்பந்து மூலம் தங்கள் கனவையும், சமூகத்தையும் மீண்டும் கண்ட கதை இது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - நம்பிக்கை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 20191 ம 3 நிமிடம்16,000 பேர் பலியான இயற்கை சீற்றத்துக்கு மூன்று மாதம் பின், உலகக் கோப்பையில் பிரசித்தமான வெற்றி கண்ட ஜப்பானிய பெண்கள் கால்பந்து அணியின் கதை. பெணகள் ஆட்டம் பரவுவதை, கால்பந்து அமெரிக்காவை 1999ல் ஆட்கொண்ட விதத்தை ‘நம்பிக்கை’, காட்டுகிறது. ஜப்பானிய, அமெரிக்க பெண்கள் அணிகளுடன் வியத்தகு நெருக்கம் காட்டும் இப் படம், பெண்களுக்கான தடைகள், அநீதிகள், அவர்களை ஊக்கப் படுத்த தேவையான நம்பிக்கை இவற்றை ஆய்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - வாய்ப்பு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 20191 ம 3 நிமிடம்கால்பந்தில், தோற்றாங்குளிக்கும் வாய்ப்புண்டு. ஃபிராங்க்ஃபர்ட் 30 ஆண்டில் வென்ற முதல் கோப்பை, பேயெர்ன் ம்யூனிக் பயில்முறை குழுவாயிருந்து, உலகே வசமான பல கோடி டாலர் கிளப் ஆன விதம், பேயெர்னை 2012 சாம்பியன் லீகில் செல்ஸீ மேலாளர் தோற்கடித்த விதம் எனும் கதைகளைப் பின்னிய இந்தப் படம், கால்பந்தில் “வாய்ப்பு”, பற்றியும், ஏன் அது கோடிக் கணக்கானோர் ஆட்டத்தை நேசிக்கக் காரணமாக இருக்கிறது என்பதையும் அலசுகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - பெருமை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 201955நிமிதொழில் முறை லீக் ஏதும் இன்றி, ஒரு பகுதி நேர பல் மருத்துவர் பயிற்றுவித்து, எஃப்ஐஎஃப்ஏ உலகக் கோப்பை இறுதியை எட்டிய மிகச் சிறிய ஐஸ்லாந்து அணி, பயிற்சியாளர் ஹெமிர் ஹால்கிர்ம்ஸனுடன் ரஷ்யாவில் இறுதிப் போட்டித் தகுதி பெறும் பார்த்திரா சிறப்புக் காட்சிகளை நமக்குக் காட்டும் படம். தடை இருப்பினும் சாதிக்கும் பெருமிதம், நம்பிக்கையின் கதை. இதுவே கால்பந்தின் மிகப் பெரிய மேடையில் டேவிட் கோலியத்துடன் மோதுவது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - நேசம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 201956நிமிஅகிலத்தின் உலகளாவிய ஆட்டத்தின் அசத்தும் குறு ஓவிய தொகுதி. ஒவ்வொன்றும் மனித நிலையின் வெவ்வேறு நிலைகளைப் படம் பிடிப்பவை. இங்கிலாந்தின் பார்வையற்றோர் அணி துவங்கி, தென் ஆஃப்ரிக்காவின் மிக இளைய தொழில் முறை நடுவர், சீனாவின் கட்டட உச்சி கால் பந்து, இந்தியாவின் குடிசைப் பகுதி கால்பந்து, என விரியும் இந்தப் படம், உலகெங்கும் நம்மை அழைத்துச் சென்று, கால்பந்தின் ஒற்றுமையாக்கும் திறனைக் காட்சிப் படுத்துகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - அதிசயம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்1 ஆகஸ்ட், 201956நிமிலியனல் மெஸ்ஸியை, இன்றுள்ள கால்பந்து வீரர்களிலே, முதன்மையானவர் எனலாம். மக்கள் தொகை 720 கோடியில் ஒரு அதிசயப் பிறவி. உதைப்பதில் மேதாவி. உலகின் அழகிய, பெரிய போட்டியில் லியனலின் மேதாவித் திறமையின் ரகசியத்தைக் கண்டறிய திளைத்து, வழிகாட்டி பெப் கார்டியோலா, அர்ஜென்டினா அதிபர், புகழ் பெற்ற புள்ளியியல் விற்பன்னர்கள் என நீளும் பட்டியல் கொண்ட இந்தப் படம், மெஸ்ஸியின் தன்னிகரற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.இலவசமாகப் பாருங்கள்